F

படிப்போர்

Saturday, 4 August 2012

2. பக்கரை

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
   பட்சியெனு முக்ரதுர                                              கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய     
   பட்டுருவ விட்டள்கை                                         வடிவேலும் 
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு     
   சிற்றடியு முற்றியப                                             னிருதோளும்     
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு     
   செப்பெனஎ னக்கருள்கை                                மறவேனே     
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்      
   எட்பொரிய வற்றுவரை                                  இளநீர்வண்     
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள       
   ரிப்பழமி டிப்பல்வகை                                        தனிமூலம்     
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு      
   விக்கிநச மர்த்தனெனும்                                    அருளாழி     
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்     
   வித்தகம ருப்புடைய                                       பெருமாளே.பதம் பிரித்தல்

பக்கரை விசித்திர மணி பொன் (ல்)லணை இட்ட நடை       
பட்சி எனும் உக்ர துரகமும் நீப 

பக்குவ மலர் தொடையும் குவடு  பட்டு ஒழிய   
பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்

திக்கு அது மதிக்க வரு(ம் குக்குடமும் ரட்சை தரும்     
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு     
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே

இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்     
எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு 

எச்சில்  பயறு அப்ப வகை பச்சரிசி பிட்fடு வெளரி
பழம் இடி  பல்வகை  தனி மூலம்

மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு
விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி

வெற்ப குடில சடில  வில் பரமர் அப்பர் அருள்      
வித்தக மருப்பு உடைய பெருமாளே.

பதம் பிரித்தல்

பழம் இடிபல்வகை  தனி மூலம்

பத உரை

பக்கரை = அங்கவடி. { குதிரைக்கு முதுகில ஏறி உட்காருவதற்காக போடப்படும் அணி}

விசித்ர மணி = பேரழகான மணி.

பொன் கல்லணை இட்ட = பொன் நிறமான சேணம் (இவைகளைப் பூண்டு).

நடை = நடக்கும்.

பட்சி எனும் = பறவையாகிய.

உக்ர = மிடுக்குள்ள.

துரகமும் = (மயிலாகிய) குதிரையையும்.

நீப = கடம்ப (மரத்தின்).

பக்குவ மலர்த் தொடையும் = தக்க மலர் மாலையையும்.

= அந்த.

குவடு = (கிரௌஞ்ச) மலை.

பட்டு ஒழிய = அழிந்து ஒழியும்படி.

பட்டு உருவ = அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லும்படி.

விட்டு அருள் = விட்டருளிய.

கை = கையில் உள்ள.

வடிவேலும் = கூர்மையான வேலையும்.

திக்கு அது = திக்குகள்.

மதிக்க வரும் = மதிக்கும்படி எழுந்துள்ள.

குக்குடமும் = சேவலையும்.

ரட்சை தரு = காத்தளிக்கும்.

சிற்றடியும் = சிறிய திருவடிகளையும்.

முற்றிய = திரண்ட, வலிமைப்பெற்ற

பன்னிரு தோளும் = பன்னிரண்டு தோள்களையும்.

செய்ப்பதியும் = வயலூரையும்.

வைத்து = வைத்து.

உயர் திருப்புகழ் = உயர்ந்த திருப்புகழை.

விருப்பமொடு செப்பு என = விருப்பமோடு சொல்லுக என்று.

எனக்கு அருள்கை மறவேனே = எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.

இக்கு = கரும்பு. அவரை = அவரை.

நல் கனிகள் = நல்ல பழங்கள்சர்க்கரை = சர்க்கரை. பருப்புடன் நெய் = பருப்பு நெய். எள் பொரி = எள், பொரி.

அவல் = அவல். துவரை = துவரை.

இள நீர் = இள நீர். வண்டு எச்சில் = தேன்.

பயறு அப்ப வகை = பயறு, அப்ப வகைகள்.

பச்சரிசி பிட்டு = பச்சரிசி, பிட்டு.

வெ(ள்)ளரிப்  பழம் = வெள்ளரிப்பழம்.

இடி = மாவு.

பல் வகை = பல வகையான.

தனி = ஒப்பற்ற.

மூலம் = கிழங்குகள்.

மிக்க அடிசில் = சிறந்த உணவு (வகைகள்).

கடலை = கடலை (இவைகளை).

பட்சணம் எனக் கொள்  = பட்சணமாகக் கொள்ளும்.

ஒரு = ஒப்பற்ற.

விக்கிந சமர்த்தர் = வினைகளை நீக்க வல்லவர்

என்னும் = என்று சொல்லப்படும்.

அருள் ஆழி = அருட் கடலே.

வெற்ப = (அருள்) மலையே.

குடில = வளைந்த. ( குடிலம் என்றால் குரா மலர் என்றும் பொருள் உண்டுதொகுப்பாசிரியர்கள் )

சடில = சடையையும்.

வில் = (பினாகம்) என்னும் வில்லையும் (கொண்ட).

பரமர் அப்பர் அருள் = மேலான அப்பர் பெற்றருளிய.

வித்தக = திறலோனே.

மருப்பு உடைய பெருமாளே = (யானைக்) கொம்பு உடையபெருமாளே.

சுருக்க உரை

அங்கவடி, அழகிய மணி, சேணம் இவைகளைப் பூண்டு நடக்கும், மிடுக்கான மயிலான குதிரையையும், கடம்ப மரத்தின் மலர்களையும், கிரௌஞ்ச மலை பொடிபடச் செலுத்திய, கரத்தில் ஏந்திய வேலையும், திக்குகள் மதிக்கும் சேவலையும், வயலு\ரையும் வைத்துத் திருப்புகழ் பாடுக என்று எனக்கு அருள் செய்ததை நான் மறவேன்.

கரும்பு, அவரை, அப்பம் முதலிய உணவு வகைகளைப் பட்சணமாகக் கொண்டு விக்கின சமர்த்தர் என்று பெயர் கொண்ட அருள் கடலே, அருள் மலையே. வளைந்த சடையைக் கொண்ட சிவபெருமான் அருளிய திறலோனே. யானைக் கொம்பு உடைய பெருமாளே. திருப்புகழ் பாடுக எனக்குச் செப்பியதை நான் மறவேன்.

விளக்கக் குறிப்புகள்

இப்பாடல் விநாயகர் துதிப் பாடல்.

முத்ததை தரு என்ற பாடல் அடி எடுத்துக்கொடுத்த பிறகு அருணகிரியார் பாடிய முதல் பாடல் இதுதான். கைத்தல என்பது வழி வழியாக முதல் பாடலாக இருந்தாலும் அருணகிரியார் பாடிய முதல் பாடல் இதுதான்

எப்படிப் பாடுவது?” என்று கேட்ட அருணகிரியை வயலூருக்கு வரச்சொல்லிவிட்டார். அங்கு சென்ற அருணகிரி மீண்டும் முருகனிடம் கேட்டபோது, தம்முடைய மயில், வேல், சேவல், மலர்மாலை, தம்முடைய திருவடி, பன்னிரு தோள்கள், தாம் அமர்ந்துள்ள பதி ஆகியவற்றை வைத்துப் பாடுமாறு கூறினார். ஆகவே, முதல் பாடலை விநாயக வணக்கமான பாடலாக அமைத்து அதிலேயே,

முருகனுடைய மயில்பக்கரை விசித்ர மணி பொற்கலனை இட்ட நடை

பட்சி எனும் உக்ர துரகம்,

மலர்மாலைநீபப் பக்குவ மலர்த் தொடை

வேல்அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேல்

சேவல்திக்கு அது மதிக்க வரும் குக்குடம்

முருகனுடைய திருவடிரக்க்ஷ தரு சிற்றடி

பன்னிரு தோள்முற்றிய பன்னிரு தோள்

முருகனுடைய திருப்பதிசெய்ப்பதி வைத்து உயர் திருப்புகழ்

விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே

முருகன் குறிப்பிட்ட அனைத்தையுமே அமைத்துப் பாடிவிட்டார். தாம் பாடுவது திருப்புகழ் என்று பெயரையும் குறிப்பிட்டுவிட்டார். அவர் இந்த அமைப்பில் பாடிய பதினாறாயிரம் பாடல்களும் திருப்புகழ் என்ற பெயரைப் பெற்றன. இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. விநாயகப் பெருமானுக்கு உகந்த நைவேத்தியங்களையெல்லாம் வரிசையாகப் பட்டியல் போட்டிருக்கிறார்.
இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள்பொரி, அவல், இளநீர், வண்டெச்சில்=தேன், பயறு அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், இடியப்பம் வகையறா, தனிமூலம் மிக்க அடிசில், கடலை..
இந்தப் பாடலை அருணகிரிநாதர் பாடியபோது விநாயகர் அதில் மிகவும் லயித்துப்போய், ரசித்து தலையை அசைத்துக் கேட்டாராம். திருப்புகழ் நூலுக்கு அதிகாரபூர்வமாகப் பாடப்பட்ட முதற்பாடல் வயலூர் விநாயகரைத் துதித்து முருகனின் சிறப்பம்சங்களை அமைத்து முருகன் ஆணையிட்டது போலப் பாடியபக்கரை விசித்ரமணிதிருப்புகழ் பாடல்தான்.

விரிவுரை குகஸ்ரீ ரசபதி

23 வகையதான, நிவேதனப் பொருள்களை அன்பர்கள் மேன்மேலும் இடுகின்றனர். உலகம் அனைத்தையும் தன் பெருத்த தொந்தியில் வைத்து காக்கும் பெருமாற்கு அவைகள் பட்சணம் என்னும் சிற்றுண்டி அளவுதான். அதற்காக நாம் சும்மா இருந்து விடலாமா? மலையத்தனை சுவாமிக்கு கடுகத்தனை கற்பூரம் என்பது பழைய பழமொழி. அது போல் நம்அன்பின்
அறிகுறியாக நாம் விரும்பும் பொருள்களை நம்பனிடம் சமர்ப்பிப்போம் என்பது சிறந்த பக்தர்களின் சிந்தனை.
வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தார் ஒருவர். அதையே சிறிது கிள்ளி  நிவேதித்தார் அவர். அவர் உள்ளம் அறிந்து அதையும் மகிழ்ந்தார் ஆனைமுகர். – எள்ளரே ஆயினும் யாவர் ஒன்று எண்ணுதல் முன்னரே உனது தாள் முடியுறப் பணிவரேல்  அள்ளர் தம் சிந்தை போல் ஆக்குதி அலது உனை உள்ளலார் செய்தியை ஊறு செய்திடு நீ என்று அந்த ஓங்கார மூர்த்தியின் உளத்தில் உணர்த்தினார் சிவபிரான். அந்த நாள் முதல் விக்கினங்களை ஆக்க வல்லார், வந்த விக்கினங்களை போக்க வல்லார் விநாயகர் என்று உணர்ந்து வழிபட்டு உய்கின்றார் மேலோர்.

மும்மல அழுக்கில் மூழ்கிய உயிர்களை கழுவிக் காக்கும் அருட் கடலே, மேலேற்றும் அருள் மலையே, சிவனார் அருளி அருளாளர், இமையவர் இடர் தவிர்க்கும்  ஒற்றைக் கொம்பால் ஆணவ யானையை அடர்ப்பவனே, தடத்த நிலையில் கம்பீரா, சொரூப நிலையில் ப்ரம்ம சைத்தன்யமாக பிரகாசிப்பவனே, மோசமான உலக வாழ்வில் நாசமாகதபடி  என்னையும் பொருளாகக் கொண்டு என் முன் எழுந்தருளினை.

அருணகிரி, அமுதினும் இனிக்கும் பழமைத் தமிழால் ஓங்கார மயிலின் பெருமையைப் பாடு. சிவபோகம் தரும் கடப்ப மாலையை  கனிவு கொண்டு பாடு. சாதுக்களை சாய்த்த வஞ்சக் க்ரவுஞ்ச பகை அழிய ஊடுருவி பாய்ந்து அயை ஒழித்த ஞான சக்தியாம் வேற்படைப் பாடு. அகில உலகமும் அன்போடு பாரட்டும் நாதச் சேவலை பாடு. பரிபூரண ஞானம் பாலிக்கும் பரம குமரன் இளம் திருவடிகளைப் பாடு. வரத முருகன் வயலு\ர் வாசியைப் பாடு. பாடிக் கொண்டே இரு. என்று கணேசா, நீர் செய்த மா பெரும் உபதேசத்தை மறக்கவே மாட்டேன். உமது வாக்கு  என் நாக்கில் வாழுகிறது என்று மூத்த பிள்ளையாரை அருணகிரியார் ஏத்திய பாடல் இது.
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published