F

படிப்போர்

Showing posts with label நக்கீரர். Show all posts

Sunday, 21 July 2013

232.பிறவியான

“
232
சிறுவை
(சின்னம்பேடு, சிறுவரம்பேடு)

ஆலயத்தின்  கொடி மரம் தாண்டி சதுரமான கூண்டில் மரகதப் பச்சை மயில் சிலா ரூபமாக கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இத்தகைய மரகதப் பச்சை மயில் வாகனத்தை உலகில் வேற எங்கும் காண முடியாது

       தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
       தனன தான தனன தந்த          தனதான

பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
      பிணிக ளான துயரு ழன்று                      தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
     பிடிப டாத ஜனன நம்பி                           யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
      நளின பாத மெனது சிந்தை                       யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
     நலன தாக அடிய னென்று                   பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
     பொருநி சாச ரனைநி னைந்து                வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
     புளக மேவ தமிழ்பு னைந்த                    முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிய தாதி கொடுபொ ருஞ்சொல்
     சிலையி ராம னுடனெ திர்ந்து                      சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
      சிறுவை மேவி வரமி மிகுந்த                  பெருமாளே

பதம் பிரித்து உரை
     
     பிறவியான சடம் இறங்கி வழியி(ல்)லாத துறை செறிந்து
பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி

பிறவியான = பிறப்புக்கு ஏற்பட்ட சடம் இறங்கி = உடலில் புகுந்து வழி இல்லாத துறை = நல் வழியல்லாத வழிகளில் செறிந்து = நெருங்கிப் போய் பிணிகளான = நோய் முதலிய துக்கங்களில் உழன்று = வேதனைப்பட்டு தாடுமாறி = தடுமாற்றம் அடைந்து.

பெருகுதீய வினையில் நொந்து கதிகள் தோறும் அலை பொருந்தி
பிடி படாத ஜனன(ம்) நம்பி அழியாதே

பெருகு = வளர்ந்து பெருகும் தீய வினையில் நொந்து = கெட்ட வினைகளின் பயனால் துயர் அடைந்து கதிகள் தோறும் = பிறவிகள் தோறும் அலை பொருந்தி = அலைச்சல் அடைந்து பிடி படாத = உண்மைத் தனம் விளங்காத ஜனனம் நம்பி = பிறப்பை விரும்பி அழியாதே = நான் அழியாமல்.

நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த
நளின பாதம் எனது சிந்தை அகலாதே

நறை விழாத = தேன் நீங்காத மலர் முகந்த = மலர் நிரம்பக் கொண்டுள்ளதும் அரிய = அருமையான. மோன வழி திறந்த = மெளன வழியைத் திறந்து காட்டிய நளின பாதம் = தாமரைத் திருவடி எனது சிந்தை அகலாத = என் மனதை விட்டு நீங்காமல்.

நரர் சுர அதிபரும்  வணங்கும் இனிய சேவை தனை விரும்பி
நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ

நரர் = மனிதரும் சுர அதிபரும் = தேவர்கள் தலைவர்களும் வணங்கும் = துதிக்கும் இனிய சேவை தனை விரும்பி = இனிமையான தரிசனத்தை விரும்பி நலன் அதாக = நன்மை பெறும்படியான அடியன் = அடியேனாகிய நான் என்று பெறுவேனோ = என்று பெறுவேனோ?

பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று
பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி

பொறி = ஐம்பொறிகளும் வழாத = தீய வழியில் போகாத வண்ணம் காத்திருந்த முநிவர் = நக்கீரர் தங்கள் நெறி வழாத = தமது நித்திய அனுட்டான நெறியைத் தவறுதல் இல்லாமல் நின்று பிலன் உழன்று = குகையில் மன அலைச்சல் உற்று பொரு நிசாசரனை = (அகப்பட்டவர்களைக் கொல்ல நினைத்த) அரக்கனை நினைந்து = (அந்த அரக்கனிடமிருந்து பிழைக்கும் வழியை) நினைந்து வினை நாடி = பிழைக்கும் வழியை நாடிய நாடிய போது.

பொரு இலாமல் அருள் புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து
புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே

பொரு இல்லாமல் = ஒப்பில்லாத வகையில் அருள் புரிந்து = அருள் கூர்ந்து மயிலில் ஏறி = மயிலின் மேல் ஏறி. நொடியில் வந்து = ஒரு நொடிப் பொழுதில் வந்து (அவரை மீட்டு) புளகம் மேவ = அவர் புளகாங்கிதம் கொள்ளுமாறு தமிழ் புனைந்த = திருமுருகாற்றுப் படையை ஏற்றுப் புனைந்த முருகோனே = முருகனே.

சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரு சொல்
சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி

சிறுவர் ஆகி இருவர் = சிறுவரான லவ குசர் என்னும் இருவரும் அந்த கரி பதாதி கொடு = அந்த யானைப் படை, காலாட் படை இவைகளைக் கொண்டு. பொரும் = போரிடையே (சொல்லும்). சொல் = சொற்களுடன் சிலை இராமனுடன் = வில் ஏந்திய இராமனுடன் எதிர்ந்து சமர் ஆடி = எதிர்த்துப் போர் செய்து.

செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த
சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே.

செயம் அதான = வெற்றி கொண்ட. நகர் அமர்ந்த = நகரமான.  அளகை போல = அளகாபுரி போல. வளம் மிகுந்த = வளப்பம் மிக்கதான. சிறுவை மேவி = சிறுவாபுரியில் வீற்றிருந்து. வரம் மிகுந்த பெருமாளே = வரங்களை நிரம்பத் தரும் பெருமாளே.

சுருக்க உரை

பிறப்புக்கு ஏற்பட்ட உடலில் புகுந்து, தீய நெறிகளில் ஒழுகி, நோய் வாய்ப்பட்டு, வேதனை அடைந்து, பிறப்புகள் தோறும் அலைச்சல் உற்று, மீண்டும் பிறப்பை விரும்பி நான் அழிந்து போகாமல், அருமையான மவுன வழியைத் திறந்து காட்டிய உனது தாமரைத் திருவடிகள் என் மனத்தை விட்டு நீங்காமல், மனிதரும் தேவர்களும் வணங்கும் உன் தரிசனத்தை விரும்பும் பாக்கியத்தை என்று நான் பெறுவேனோ?

ஐம்பொறிகளும் வழுவா வண்ணம், எப்போதும் தியானத்தை மேற்கொண்ட நிலையில் இருந்த நக்கீரர் குகையில் அரக்கனிடமிருந்து பிழைக்கும் வழியை நாடியவுடன், மயில் மேல் ஏறிச் சென்று அவருக்கு உதவி செய்து, அவர் திருமுருகாற்றுப் படையைப் புனையச் செய்த முருகனே, சிறுவர்களான லவ குசர், இராமனிடம் போர் செய்து வெற்றி பெற்ற சிறுவை என்னும் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் கமல பாதங்களை என்று காணப் பெறுவேனோ?

விளக்கக் குறிப்புகள்

1. சிறுவராகி யிருவர் அந்த...
இராமனின் புதல்வர்களாகிய லவ குசன் என்னும் சிறுவர்கள், இரமனுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற தலம் சிறுவை ஆகும். ஆதலின் இத்தலம் சிறுவர் அம்பெடு (சிறுவரம்பேடு) எனப் பெயர் பெற்றது.

2. பொறி வழாத முநிவர்....
(மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழி திறந்த செங்கை வடிவேலா)......திருப்புகழ் (முலைமுகந்தி).
(பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கொ தைக்கிடை
புலவரில் நக்கீ ரர்க்குத வியவேளே)......திருப்புகழ் (அகல்வினை).

3. சடம் இறங்கி....
சடம் என்பது கர்பத்திலிருந்து பிறக்கும் போது சூழும் வாயு சடம் என்பதாக  சொல்லப் படுகிறது. சடம் என்ற வாயு சூழ்வதால் மாயை சூழ்ந்து முன் பிறவி மறந்து இப்பிறவிக்கான வினைகளில் மூழ்கி விடுகிறது. 

” tag:

Saturday, 8 September 2012

48. மூப்புற் று

“

மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
     மூச்சுற் றுச்செயல்           தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
     மூக்குக் குட்சளி              யிளையோடும்
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
     கூட்டிற் புக்குயி              ரலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
     கூட்டிச் சற்றருள்            புரிவாயே
காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
     காப்பைக் கட்டவர்          குருநாதா
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
     காப்புக் குத்திர               மொழிவோனே
வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
     வாய்க்குச் சித்திர            ருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
     வாய்க்குட் பொற்பமர்      பெருமாளே.

- திருச்செந்தூர்
பதம் பிரித்து உரை

மூப்பு உற்று செவி கேட்பு அற்று பெரு
மூச்சு உற்று செயல் தடுமாறி

மூப்பு உற்று = முதுமை எய்தி செவி கேட்பு உற்று = காது கேட்கும் சக்தியை இழந்து (செவிடாகி) மூச்சு உற்று = பெருமூச்சு விட்டுக் கொண்டு செயல் தடுமாறி = செயல்கள் தடுமாற்றம் அடைந்து.

மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட
மூக்குக்கு உள் சளி (ஈ)ளையோடும்

மூர்க்க = கொடிய கோபமான சொல் குரம் காட்டி = சொற்கள் வரும் குரலைக் காட்டி கக்கிட = வெளிப்படுகின்ற மூக்குச் சளி = மூக்குச் சளியும் ஈளையோடும் = (நெஞ்சுக்) கோழையும்.

கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு
கூட்டில் புக்கு உயிர் அலையா முன்

கோப்புக் கட்டி = கோத்தது போல ஒன்று சேர்ந்து இனா பிச்சு = துன்பம் உண்டாகி செற்றிடு கூட்டில் = வருத்தும் இவ்வுடலில்  புக்கு = புகுந்து  உயிர் அலையா முன் = (என்) உயிர் அலைவதற்கு முன்பாக.

கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல்
கூட்டி சற்று அருள் புரிவாயே

கூற்றுத் தத்துவம் = நமன் என் உயிரை விடுவிக்கும் செயல் அமைப்பை. நீக்கி = நீக்கி  பொன் கழல் = (உனது) அழகிய திருவடியில்  கூட்டி = (என்னைச்) சேர்த்து  சற்று அருள் புரிவாயே = சற்று அருள் புரிவாயாக.

காப்பு பொன் கிரி கோட்டி பற்று அலர்
காப்பை கட்டவர் குருநாதா

காப்பு = (பூமி நிலைத்து நிற்க) காவலாக இருக்கின்ற பொற்கிரி = பொன் மலையாகிய மேருவை. கோட்டு = வளைத்து  பற்று அலர் = பகைவர்களுடைய  காப்பை = அரணை  கட்டவர் = களைந்தவராகிய சிவபெருமா னுக்கு  குரு நாதா = குரு நாதனே

காட்டுக்குள் குறவாட்டிக்கு பல
காப்பு குத்திரம் மொழிவோனே

காட்டுக்குள் = காட்டுக்குள்  குறவாட்டிக்கு = குறவர் மகளாகிய வள்ளியிடம்   பல = பலவாறாக  காப்புக் குத்திரம் = காத்துப் புரப்பதைக் குறிக்கும் வஞ்சகச் சொற்களை  மொழிந்தவனே = சொன்னவனே.

வாய்ப்பு உற்ற தமிழ் மார்க்க திண் பொருள்
வாய்க்கு சித்திர முருகோனே

வாய்ப்பு உற்ற = செழிப்புற்ற  தமிழ் மார்க்க = தமிழ் அகப் பொருள் துறையின்  திண் பொருள் =  உறுதி யான பொருளின்  வாய்க்கு = உண்மை விளக்கத்துக்கு  சித்திரம் = இரகசியத்தை (உருத்திரசன்மராக வந்து) உதவிய. முருகோனே = முருகனே.

வார்த்தை  சிற்பர தீர்த்த சுற்று அலை
வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே.

வார்த்தை = சொல்லுதற்கும்  சிற்பர = அறிவுக்கும் எட்டாத கடவுளே  தீர்த்த = (புனித) தீர்த்தமாய் சுற்று = சுற்றியுள்ள  அலை = கடலின்  வாய்க்குள் = கரையில்  பொற்பு அமர் = அழகுடன் அமர்ந்துள்ள பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

முதுமை அடைந்து, செவிடாகி, பெரு மூச்சு விட்டுக் கொண்டு, நிலை தடுமாறி, கோபம் அதிகமாகும்படி பேசி, நெஞ்சில் கோழை மிகுந்து, துன்பம் உண்டாகி வருத்தும் இவ்வுடலில் புகுந்து, என் உயிர் அலைவதற்கு முன், நமன் செயலினின்று என்னை விடுவித்து, உனது திருவடியில் சேர்த்து அருள் புரிவாயாக.

பூமிக்குக் காவலாயிருக்கும் மேரு மலையை வளைத்து, பகைவர்களின் அரண்களை அழித்த சிவபெருமானுக்குக் குரு நாதனே. காட்டுக்குள் வள்ளி நாயகியிடம் வஞ்சகச் சொற்களைப் பேசித் தன்னை காத்தருள வேண்டிக் கொண்டவனே. செழிப்பான தமிழ் அகப் பொருள் துறையின் உறுதியான உண்மை விளக்கத்துக்கு உருத்திர சன்மராய் வந்து உதவிய முருகனே. சொல்லுக்கும் அறிவுக்கும் எட்டாத கடவுளே. கடலால் சூழப்பட்ட திருச்செந்தூரில் அழகுடன் அமர்ந்துள்ள பெருமாளே. கூற்றத் தத்துவம் நீங்கி உன் திருவடியில் என்னைச் சேர்த்துக் கொள்க.

விளக்கக் குறிப்புகள்

அ. இனா பிச்சு ஏற்றிடு = துன்பம் உண்டாக்கி வருத்தும்.

ஆ. கூற்றத் தத்துவம்....
உடல் வேறு, உயிர் வேறாகக் கூறுபடுத்தும் யம வேதனை.

இ. காப்புப் பொற்கிரி = மேரு. இந்த மலை பூமிக்கு இருசு எனப்படும்.

ஈ. மார்க்கம் = அகப் பொருள் துறை. (இலக்கண விளக்கம் 583). இறையனார் அகப் பொருளுக்கு உரை கண்டு, தாம் தாம் எழுதிய பொருளே சரி என்று சங்கப் புலவர்கள் கலகமிட, முருகன், சிவபெருமான் ஆணைப்படி, உருத்திர சன்மர் என்னும் பெயருடன் ஊமைப் பிள்ளையாக வணிகர் குலத்தில் தோன்றிச் சங்கத்தில் வீற்றிருந்து புலவர்களின் உரையைக் கேட்டார். நக்கீரர் உரையை மட்டும் வியந்து முருகன் புலவர்களுக்கு அதைத் தெளிவு படுத்தினார்.
(தமிழ்த் த்ரயமத் திலகப் பொருள் வ்ருத்தியினைப்
பழுதற் றுணர்வித் தகசற் குருநாதா).............................................திருப்புகழ் (கடலைச்சி).
(ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர  குருநாதா)............................................திருப்புகழ் (சீரானகோல).
(உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
மதித்திட் டுச்செறி நாற் கவிப்பணர்
ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை பெருமாளே)........................திருப்புகழ் (வழக்குச்சொற்).

உ. சித்திரம் = இரகசியம்.

ஊ. காப்புக் குத்திரம் மொழிவோனே..
வள்ளியிடம் இங்ஙனம் முருகவேள் வஞ்சகமாகக் கூறியது.
(மமதை விட்டு ஆவி உய்ய அருள் பாராய்).......................................திருப்புகழ் (ஆனாதபி).