F

படிப்போர்

Monday 26 November 2012

162.எழுதிகழ்

               தனதன தனன தனதன தனன
                 தனதன  தனன தனதான

எழுதிகழ் புவன நொடியள வதனி
     லியல்பெற மயிலில்                  வருவோனே 
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
     மடிவுற விடுவ                       தொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
     வழிபட மொழியு                        முருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
     மயல்கொடு தளர்வ                    தழகோதான்
முழுகிய புனலி லினமணி தரள
     முறுகிடு பவள                           மிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
     முதுமலை யழக                          குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்
     படிபவ ரிதய                       முறுகோவே
பருவரை துணிய வொருகணை தெரிவ
     பலமலை யடைய                      பெருமாளே
-162குன்றுதோறாடல்

பதம் பிரித்தல், பதம் பிரித்து உரை

எழு திகழ் புவனம் நொடி அளவு தனில்
இயல் பெற மயிலில் வருவோனே

எழு திகழ் = ஏழு என விளங்கும் புவனம் = பூமிகளை
ஒரு நொடி அளவு தனில் = ஒரு நொடிப் பொழுதில்       
இயல் பெற = அழகு விளங்க. மீது வருவோனே மயிலில் வருவோனே = மயில்

இமையவர் பரவி அடி தொழ அவுணர்
மடிவு உற விடுவது ஒரு வேலா

இமையவர் = தேவர்கள் பரவி = போற்றி செய்து அடி தொழ = (உனது) திருவடிகளைத் தொழவும் அவுணர் = அசுரர்கள் மடிவு உற = மாளும்படி விடுவது = செலுத்திய
ஒரு வேலா = ஒப்பற்ற வேலனே. 

வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை
வழி பட மொழியும் முருகேசா

வழுதியர் = பாண்டியர்கள் (போற்றி வளர்த்த) தமிழின் = தமிழில் ஒரு பொருள் அதனை = ஒப்பற்ற அகப் பொருள் இலக்கணத்தை வழிபட = சங்கப் புலவர்கள் வழிபட மொழியும் = ஆய்ந்து உரைத்த. முருகேசா = முருகேசனே.

மலர் அடி பணியும் மட மகள் பசலை
மயல் கொடு தளர்வது அழகோ தான்

மலர் அடி பணியும் = (உனது) மலரடியை வணங்கும் மட மகள் = அறியாமை கொண்ட இந்தப் பெண் பசலை மயல் கொ(ண்)டு = காம மயக்கத்தால் உற்ற நிற வேறுபாட்டுடன் தளர்வது  தளர்ச்சி அடைதல்                            
அழகோ தான் = நியாயமோ?

 முழுகிய புனலில் இன மணி தரளம்
 முறுகிடு பவனம் மிக வாரி

முழுகிய புனலில் = நீரில் முழுகி இன மணி = கூட்டமான மணிகளையும் தரளம்= முத்துக்களையும் முறுகிடும்=கொடி போல் பின்னிய பவளம்=பவளத் தையும் மிக வாரி = நிரம்ப வாரி                        

முறை ஒடு குறவர் மட மகள் சொரியும்
முது மலை அழக குருநாதா

முறையொடு = (வாங்குங்கள் என்னும்) முறை யீட்டோடு குறவர் மட மகள் = குறப் பெண்கள் சொரியும் = சொரிகின்ற முது மலை அழக = விருத்தாசலத்தில் உறைகின்ற அழகனே குரு நாதா = குரு நாதனே.

பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவர் இதயம் உறு கோவே

பழகிய வினைகள் = என்னுடன் கூடவே பழகி வருகின்ற வினைகள் பொடிபடி = எல்லாம் பொடிபடும்படி அருளில் = உனது திருவருளில் படிபவர் = மனம் தோய்பவருடைய இதயம் = உள்ளத்தில் உறு கோவே = வீற்றிருக்கும் தலைவனே

பரு வரை துணிய ஒரு கணை தெரிவ
பல மலை உடைய பெருமாளே.

பருவரை = பருத்த கிரொஞ்ச மலை துணிய = துணிபடும்படி ஒரு = ஒப்பற்ற கணை தெரிவ= வேலாயுதத்தைத் தெரிந்து எடுத்துச்                                                                           செலுத்தியவனே பல மலை உடைய = பல மலைகளுக்கும் அதிபதியான பெருமாளே =
பெருமாளே

சுருக்க உரை

ஏழு உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் மயில் மீது ஏறி வலம் வந்தவனே, தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி அவுணர்கள் மாளும்படி வேலைச் செலுத்தியவனே, சங்கப் புலவர்களுக்கு அகப் பொருள் விளக்கத்தை உரைத்தவனே.

உனது மலரடி பணியும் இந்த மட மகள் மயல் கொண்டு வருந்தலாமோ? நல்ல முத்துக்களைக் குறச்சிறுமிகள் வாரி வழங்கும் முதுகிரியில் உறைகின்ற குருநாதனே, வினைகள் அழியும்படி அடியார்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் தலைவனே, கிரௌஞ்ச மலை பொடிபட வேலாயுதத்தைச் செலுத்தியவனே, இந்தப் பெண் மயல் கொண்டு தளர்வது அழகோ தான்?

விளக்கக் குறிப்புகள்

1 தமிழில் ஒரு பொருள் அதனை.... 
   இறையனார் அகப் பொருளுக்குச் சங்கப் புலவர் பலரும் செய்து வந்த
   உரைகளைத் தனித்தனியே கேட்க, மதுரையில் ஊமைப் பிள்ளையாய் உருத்ர
   சன்மன் என்ற பெயருடன் தோன்றிய முருகவேள், நக்கீரர் செய்த உரையை
   மட்டும் கேட்டு வியந்தார்.
2. முறையொடு குறவர் மடமகள் சொரியு முதுமலை...
     மணித் தரளங்கள் வரத் திரண்டங் 
    கெழிற் குறவர் சிறுமிமார்கள் 
    முறங்களினாற் கொழித்து மணி செல விலக்கி 
    முத்துலைப் பெய் முதுகுன்றமே) --சம்பந்தர் தேவாரம்.
3. வழுதியர்... 
     பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழ்.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published