F

படிப்போர்

Wednesday, 14 December 2016

286.விழுதாதெனவே

“
286
நாகபட்டினம்
          
                     இறைவா எதுதா அதுதா தனையே
என வேண்டுகோள்

                   தனனா தனனா தனனா தனனா
                   தனனா தனனா            தனதான

விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே                      புரிதாக
விருதா வினிலே யுலகா யதமே
     லிடவே மடவார்                      மயலாலே
அழுதா கெடவே அவமா கிடநா
     ளடைவே கழியா                  துனையோதி
அலர்தா ளடியே னுறவாய் மருவோ
     ரழியா வரமே                          தருவாயே
தொழுதார் வினைவே ரடியோ டறவே
     துகள்தீர் பரமே                       தருதேவா
சுரர்பூ பதியே கருணா லயனே
     சுகிர்தா வடியார்                 பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
     லிறைவா எனையா             ளுடையோனே
இறைவா எதுதா வதுதா தனையே
     இணைநா கையில்வாழ்          பெருமாளே.

பதம் பிரித்தல்

விழு தாது எனவே கருதாது உடலை
வினை சேர்வதுவே புரிதாக
விழு தாது எனவே - விழுகின்ற சுக்கிலம் என்று. (தாது – ரசா,  இரத்தம், எலும்பு, சுக்கிலம், தசை, தோல், மூளை,  ஆகிய சப்த தாதுக்கள் எனவும் கொள்ளலாம்) கருதாது உடலை - உடலைக் கருதாமல். வினை சேர்வதுவே - வினை பெருகுவதையே. புரிதாக - விரும்புவதாய்.

விருதாவினிலே உலகாயதம் மேல்
இடவே மடவார் மயலாலே
விருதாவினிலே - வீணாக. உலகாயதம் மேல் இடவே
- போகம், மோட்சம் என்னும் புத்தி மேலிட்டதனால். மடவார் மயலாலே - மாதர்களின் மோகம் காரணத்தால்.

அழுது ஆ கெடவே அவமாகிட நாள்
அடைவே கழியாது உனை ஓதி
அழுது ஆ கெடவே - அழுது ஐயோ கெட்டுப் போயும். அவமாகிட - வீணாக. நாள் அடைவே - என் வாழ் நாள் முழுமையும். கழியாது - நான் காலத்தைக் கழிக்காமல். உனை ஓதி - உன்னைப் புகழ்ந்து துதித்து.

அலர் தாள் அடியேன் உறவாய் மரு ஓர்
அழியா வரமே தருவாயே
அலர் தாள் - மலர் உற்ற உன் திருவடியே. அடியேன் உறவாய் - அடியேனுக்கு உற்ற பற்றுக்கோடாய். மரு - கூட்டிவைக்கும். ஓர் - ஒப்பற்றதும். அழியா வரமே தருவாயே - அழியாததுமான வரத்தைத் தந்து அருளுக.

தொழுதார் வினை வேர் அடியோடு அறவே
துகள் தீர் பரமே தரு தேவா
தொழுதார் - தொழுகின்ற அடியார்களுடைய. வினை - வினையின். வேர் - வேர். அடியோடு அறவே - அடியோடு அற்றுப் போக. துகள் தீர் - குற்றமற்ற. பரமே தரு தேவா - மேலான பதவியைத் தருகின்ற தேவனே.

சுரர் பூபதியே கருணை ஆலயனே
சுகிர்தா அடியார் பெரு வாழ்வே
சுரர் பூபதியே - தேவர்களின் அரசே. கருணை ஆலயனே - கருணைக்கு இருப்பிடமானவனே. சுகிர்தா - புண்ணியனே. அடியார் பெரு வாழ்வே - அடியார்களுடைய பெரு வாழ்வே.

எழுதா மறை மா முடிவே வடி வேல்
இறைவா எனை ஆளுடையோனே
எழுதா மறை - வேதத்தின். மா முடிவே - சிறந்த முடிவுப் பொருளே. வடி வேல் - கூரிய வேலை ஏந்தும். இறைவா - இறைவனே. என்னை ஆளுடையோனே - என்னை ஆட்கொண்டுள்ளவனே.

இறைவா எதுதா அதுதா தனையே
இணை நாகையில் வாழ் பெருமாளே.

இறைவா - கடவுளே. எதுதா அதுதா - நீ எதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயோ அதைக் கொடுத்து அருளுக (எனக்கென்று ஒரு விண்ணப்பமும் இல்லை). தனையே இணை - தனக்குத் தானே இணை - நிகரான. நாகையில் வாழ் பெருமாளே - நாகபட்டினத்தில் வாழ்கின்ற பெருமாளே.

சுருக்க உரை

விழுகின்ற சுக்கிலம் என்று மட்டுமே உடலைக் கருதாமல், வினைகள் பெருகுதலையே விரும்புவாய், வீணாக உலகாயதம் என்னும் புத்தி மேலிட்டதால், ஏற்படும் மாதர்கள் மோகத்தால், ஐயோ, நான் வாழ் நாளைக் கழித்து அழியாமல், உன்னைப் புகழ்ந்து துதித்து, உன் திருவடியே எனக்கு உற்ற உறவாகக் கூட்டி வைக்கும் ஒப்பற்ற வரத்தைத் தந்து அருளுக.

தொழும் அடியார்களின் வினைகளை வேரோடு அறுத்து மேலான பதவியைத் தரும் தேவனே, தேவர்களுக்கு அரசே, கருணைக்கு இருப்பிடமானவனே, அடியார்களுடைய பெரு வாழ்வே, வேதங்களின் நிறைந்த முடிவுப் பொருளே, என்னை ஆட்கொண்டுள்ளவனே, நீ எதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறாயோ அதையே கொடுத்து அருளுக. எனக்கு என்று ஒரு விருப்பமும் வேண்டாம். நிகரற்ற நாகையில் வாழும் பெருமாளே, எனக்கு வேண்டுவதை நீயே முடிவு செய்து அருள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்

உலகாயதம் மேல் இடவே...
உடலே ஆத்மா, போகமே மோட்சம் என்ற கொள்கை உடைய மதம்.

எழுதா மறை மா முடிவே...
எழுதா மறை - வேதம். எழுதப்படாமல் வாய் மூலமாகவே தலை முறை தலை முறையாக வந்தது. எழுதும் மறை தேவாரத்தை உணர்த்தும்.

எதுவாவது தா தனையே....

ஒப்புக

மனதாலே இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர இசைவாயே....... .திருப்புகழ்,விடுங்கைக்கு.

வேண்டியவற்கு

வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ.                      ..திருவாசகம் (குழைத்தபத்து)

” tag:

285.ஓலமிட்டிரைத்த

“
285
நாகப்பட்டினம்

          தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
            தான தத்த தத்த தந்த                            தனதான

ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
        ஊர்மு கிற்ற ருக்க ளொன்று               மவராரென்
 றும ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
       ஊன ரைப்ர புக்க ளென்று                மறியாமற்
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
       கோடி யிச்சை செப்பி வம்பி            லுழல்நாயேன்
கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
        கூடு தற்கு முத்தி யென்று                   தருவாயே
வாலை துர்க்கை சத்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
        மாது பெற்றெ டுத்து கந்த                 சிறியோனே
வாரி பொட்டெ ழக்fர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
       வாகை மற்பு யப்ர சண்ட                    மயில்வீரா
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
       நார ணற்க ருட்சு ரந்த                      மருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
       நாக பட்டி னத்த மர்ந்த                         பெருமாளே.

பதம் பிரித்து உரை

ஓலம் இட்டு இரைத்து எழுந்த வேலை வட்டம் இட்ட இந்த
ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று
ஓலம் இட்டு - ஓலம் செய்யும் அபயக் குறியுடன் இரைத்து - பேரொலி செய்து. எழுந்த வேலை - எழுகின்ற கடல் வட்டமிட்ட - வட்டத்துக்குள் உள்ள இந்த ஊர் - இந்த (உலகில்) உள்ள ஊர்களில் முகில் ஒன்று - மேகம் போல் (கைம்மாறு கருதாது கொடுக்கும் வள்ளல்கள்) தருக்கள் - (கற்பக மரம்) போன்றவர்கள் அவர் ஆர் என்று - யார் இருக்கின்றார்கள் என்று தேடிப் போய்

ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும்
ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல்

ஊமரை - பேசுவதற்கும் வாய் வராதவர்களை ப்ரசித்தர் என்றும் - புகழ் வாய்ந்தவர்கள் என்றும் மூடரைச் சமர்த்தர் என்றும் - முட்டாள்களைப் புத்திசாலிகள் என்றும் ஊனரைப் - உடல் ஊனம் உற்றவரை ப்ரபுக்கள் என்றும் - பெருங் கொடையாளிகள் என்றும் அறியாமல் - எனனுடைய அறிவீனத்தால்

கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த
கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன்

கோல - அழகுள்ள. முத்தமிழ் ப்ரபந்தம் - முத்தமிழ் நூல்களைக் கொண்டு மாலருக்கு - உலக மாயையில் சிக்குண்டவர்களுக்கு உரைத்த - சொல்லுகின்ற அநந்த கோடி - அளவில்லாத கோடிக்கணக்கான இச்சை செப்பி - என் விருப்பங்களைத் தெரிவித்து உழல் நாயேன் - வீணாகத் திரிகின்ற அடி நாயேன்.

கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து
கூடுதற்கு முத்தி என்று தருவாயே

கோபம் அற்று - சினத்தை விடுத்து மற்றும் - பின்னும் அந்த மோகம் அற்று - அந்த ஆசைகளையும் ஒழித்து உனைப் பணிந்து - உன்னை வணங்கி கூடுதற்கு - உன் (திருவடியைச்) சேர்வதற்கு முத்தி என்று தருவாயே - முத்தியை என்று தந்தருள்வாய்.

வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே

வாலை - (என்றும்) இளமை வாய்ந்த துர்க்கை, சத்தி, அம்பிகை  - துர்க்கை, சக்தி, அம்பிகை, ஆகிய பெயர்களுடன் லோக கத்தர் பித்தர் - உலக நாயகரும் பித்தருமான சிவபெருமான் பங்கில் - இடது பக்கத்தில் உள்ள மாது - உமா தேவி பெற்று எடுத்து - ஈன்றெடுத்து உகந்த சிறியோனே - மகிழ்ந்த இளையவனே.

வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த
வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா

வாரி - கடல். பொட்டு எழ - வற்றிப் போக க்ரவுஞ்சம் வீழ - கிரௌஞ்ச மலை அழிய நெட்ட அயில் துரந்த - கூரிய வேலைச் செலுத்தி வாகை - வெற்றி பொருந்திய மற் புய - மற் போருக்குத் தக்கதான புயங்களை உடைய ப்ரசண்ட - உடல் வலிமை வாய்ந்த மயில் வீரா - மயில் வாகனத்தை உடைய வீரனே.

ஞாலம் வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற
நாரணற்கு அருள் சுரந்த மருகோனே

ஞால வட்டம்  - பூமி மண்டலம். முற்ற - முழுவதையும். உண்டு - உட்கொண்டு. நாக மெத்தையில் - ஆதி சேடன் என்னும் பாம்பாகிய படுக்கையில் துயின்ற - உறங்கும். நாரணற்கு - நாராயணனுக்கு அருள் சுரந்த - திருவருளைப் பொழிந்த. மருகோனே - மருகனே.

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனை களைந்த
நாக பட்டினம் அமர்ந்த பெருமாளே.

நாலு திக்கும் - நான்கு திசைகளிலும் வெற்றி கொண்ட - வெற்றியை அடைந்த சூர பத்மனைக் களைந்த - சூரபதுமனை அழித்த நாகப் பட்டினத்து அமர்ந்த பெருமாளே - நாகப் பட்டினத்தில் வீற்றீருக்கும் பெருமாளே.

சுருக்க உரை
பேரொலி செய்யும் கடல் சூழ்ந்த உலகில் உள்ள ஊர்களில், கைம்மாறு கருதாது கொடுக்கும் வள்ளல்கள் யார் உளர் என்று தேடிப் போய், ஊமையர்களையும், முட்டாள்களையும், குற்றம் மிகுந்தோரையும் புகழ்ந்து, அழகிய முத்தமிழ் நூல்களைச் சொல்வதுடன், என்னுடைய விருப்பங்களையும் தெரிவிக்கும் அடியேன். நான் சினம் தணிந்து, ஆசைகளை ஒழித்து, உன் திருவடிகளைக் கூடுவதற்கு முத்தியை என்று தந்தருள்வாய் ?

சிவ பெருமான் இடப் பக்கத்தில் அமர்ந்துள்ள உமா தேவி பெற்றெடுத்த இளையவனே. கடல் வற்ற, கிரௌஞ்ச மலை அழிய, வேலைச் செலுத்திய மயில் வாகனனே. ஆதிசேடன் மீது துயிலும் நாராணனுக்கு அருள் புரிந்தவனே. சூர பதுமனை அழித்தவனே. எனக்கு முத்தியை என்று தருவாயோ ?

விளக்கக் குறிப்புகள்
ஊமரைப் ப்ரசித்தர்......
கற்றிலாதானை, கற்று நல்லனே, காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை, முற்றனே, என்று மொழியினும் கொடுப்பார் இலை- சுந்தரர் தேவாரம்

நாரணற்கு அருள் சுரந்த மருகோனே....

முருகன் ஞானசம்பந்தராக அவதாரம் செய்துற்ற போது சிவ சாரூபம் வேண்டிக் கச்சியில் தவம் செய்த விஷ்ணுவுக்கு சம்பந்தர் சிவ சாரூபம் அளித்த வரலாற்றைக் குறிக்கும்.

கொண்டற்குச் சித்தி அளிக்கும் பெருமாளே     --- திருப்புகழ்,  செறிதரும்
உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே -- நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் திருவாய் மொழி

 நாக மெத்தையில் துயின்ற...

நாகம் ஏறி நடுக்கடலுள்
துயின்ற நாராயணனே.. ---நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்,  திருவாய் மொழி