F

படிப்போர்

Friday, 30 November 2012

169.வேத வெற்பிலே

               தான தத்த தான தத்த தான தத்த      தனதான

வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு        மபிராம
   வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை        முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி             புயநேய
   ஆத ரத்தொ டாத ரிக்க ஆன புத்தி       புகல்வாயே
காது முக்ர வீஅர பத்ர காளி வெட்க          மகுடாமா
   காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி   யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்தா         முநிநாண
   ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த  பெருமாளே

-169திருக்கழுக்குன்றம்
(கதலிவனம், வேதகிரி, பக்ஷிதீர்த்தம்)

பதம் பிரித்து உரை

வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம
வேடுவச்சி பாத பத்மம் மீது செச்சை முடிதோய

வேத வெற்பிலே = வேத கிரி என்னும் திருக்கழுக் குன்றத்திலும் புனத்தில் = (வள்ளி மலைத்) தினைப் புனத்திலும் மேவி நிற்கும் = விரும்பி வீற்றிருக்கும் அபிராம = அழகனே வேடுவச்சி = வேடப் பெண்ணாகிய (வள்ளியின்). பாதம் பத்மம் மீது = பாத தாமரையின் மேல் செச்சை = வெட்சி மாலை அணிந்த முடி தோய = உனது திருமுடி தொடும்படி.

ஆதரித்து வேளை புக்க ஆறு இரட்டி புய நேய
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே

ஆதரித்து = அன்பு வைத்து. வேளை புக்க = (ஆட் கொள்ளத்) தக்க சமயம் இது என்று அறிந்து (அவள் இருந்த தினைப் புனத்தில்புகுந்த ஆறு இரட்டி = பன்னிரண்ட புய நேய = புயங்களை உடைய நண்பனே ஆதரத்தோடு = அன்புடன ஆதரிக்க = உன்னை வழிபாடு செய்ய ஆன = உரிய புத்தி புகல்வாயே = உபதேச மொழியைச் சொல்லி அருளுக.

காதும் உக்ர வீர பத்ர காளி வெட்க மகுடம்
ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை

காதும் = பகைத்து வந்த உக்ர = கோபம் கொண்ட பத்ர காளி வெட்க = வீரமுள்ள பத்ர காளி நாணும்படி மகுடம் = கிரீடம் ஆகாசம் = ஆகாயத்தை முட்ட = முட்டும்படி வீசி = (உயரமாக) வீசி விட்ட = ஆடிய காலர் = பாதத்தர் பத்தி = பக்தி உள்ள இமையோரை = தேவர்களுக்கு (வேதத்தை).

ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முநி நாண
ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே.

ஒதுவித்த = கற்பித்த நாதர் = தலைவராகிய சிவபெருமான் கற்க = உன்னிடம் பாடம் கேட்கவும் ஓதுவித்த = (சிவபெருமானால்) ஓதுவிக்கப்பட்ட முநி = பிரமன் நாண = வெட்கம் அடையவும் ஓர் எழுத்தில் = ஓரெழுத்தாகிய ஓம் என்னும் பிரணவத்தில் ஆறு எழுத்தை = (ஓம் நமசிவாய என்னும்) ஆறு எழுத்தும் (அடங்கி உள்ளது என்பதை விளக்கிக் காட்டி ஓதுவித்த = (அந்தச் சிவனுக்கு) உபதேசம் செய்த பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

திருக்கழுக்குன்றத்திலும், வள்ளி மலைத் தினைப் புனத்திலும், விரும்பி வீற்றிருக்கும் அழகனே. வேடப் பெண் வள்ளியின் பாத தாமரைகளின் மீது உனது வெட்சி அணிந்த முடிகள் தொடும்படி, அன்பு வைத்து, அந்தத் தினைப் புனத்துக்குள் சமயம் பார்த்துச் சென்ற பன்னிரு கரங்கள் கொண்ட நண்பனே. அன்புடன் நான் உன்னை வழிபாடு செய்வதற்கு உரிய உபதேச மொழியைச் சொல்லி அருள்க.

பத்ர காளி நாணும்படி தமது மகுடத்தை ஆகாய அளவுக்கு வீசி விட்ட பாதங்களை உடைய சிவபெருமான் வேதத்தைத் தேவர்க்ளுக்குக் கற்பித்தவர். அத்தகையவர் உன்னிடம் பாடம் கேட்கவும், சிவபெருமானால் ஓதுவிக்கபட்ட பிரமன் வெட்கமடையவும், ஓரெழுத்தாகிய ஓம் என்னும் பிரணவத்தில், ஆறு எழுத்தாகிய ஓம் நமச்சிவாய என்னும் ஆறெழுத்தும் அடங்கியிள்ளது உளது என்று அந்தச் சிவனுக்கு உபதேசம் செய்த பெருமாளே.

விளக்கக் குறிப்புகள்

1. காதும் உகர பத்ர காளி வெட்க....

மகிடாசுரனைக் காளி அழித்தவுடன் பெருஞ் செருக்குண்டு உலகை அழிக்கத் தொடங்கினாள். அவள் செருக்கை அடக்கச் சிவன் அவளை வெல்லும் பொருட்டுத் திருவாலங் காட்டில் நடனம் செய்ய, அவளும் உடன் ஆட, சினபெருமான் தன் காதில் சுழன்ற குண்டலம் தானே சேர்ந்திடுமாறு காலைக் காதளவும் தூக்கி நடனம் புரிய, பெண் பாலான அவள் அங்ஙனம் காலைத் தூக்க நாணுற்றுத் தோற்று செருக்கு அடங்கி நின்றாள்.
கொடிய வெஞ்சினக் காளியிக் குவலா முழுதும்...
அடைய அஞ்சலும் அவள் செருக் கழிவுற அழியாக்
கடவுள் ஆடலால் வென்றதோர் வடவனம் கண்டான்.........................கந்த புராணம்

2. பத்தி இமையோரை ஓதுவித்த....
தேவர்களுக்கு வேதத்தைச் சிவபெருமான் திருவோத்தூரில் உபதேசித்தார்.

3. ஓதுவித்த முநி....
வேதத்தைச் சிவபெருமான் பிரமனுக்கு ஓதுவித்தார்.
(மாலினொடு அருமாமறை வல்ல முநிவனும்
கோலினர் குறுக சிவன் சேவடி கோலியும்)...சம்பந்தர் தேவாரம்.

4. நாதர் கற்க முருகவேள் ஓதுவித்தார்...
மைந்த எமக்கருள் ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன்)...கந்த புராணம்

5. ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே...
ஓரெழுத்து = ஓம் என்னும் பிரணவப் பொருள்.

ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி...................................திருமந்திரம்
மறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான் நின்றதோர் தனி மொழி...கந்த புராணம்

ஓம் என்பது அ, , ம என்னும் மூன்றெழுத்தாய், அம்மூன்றும் கூடி ஓம் என்று எழுதும் போது, விந்துவாயும், ஓம் என்று உச்சரிக்கும் போது நாதமாக விரியும். அ, ,
என்னும் மூன்று எழுத்தும், விந்து நாதங்களாகிய வரிவடிவும், ஒலி வடிவும் கூடி, ஐந்தெழுத்தாயிற்று. ஆகவே பிரணவமே (ஓம் என்பதே) பஞ்சாக்ரமாம் இந்த ஓரெழுத்தோடு நமசிவாய என்னும் பஞ்சாக்கரம் கூட ஆறெழுத்து விரியும்.
பஞ்சாக்கர (சிவாயநம) விளக்கம்...
சி = சிவம். வ = அருட் சத்தி. ய = ஆன்மா. ந = திரோதானம் (மறைக்கை). ம = ஆணவ மலம்.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published