F

படிப்போர்

Wednesday, 14 December 2016

286.விழுதாதெனவே

286
நாகபட்டினம்
          
                     இறைவா எதுதா அதுதா தனையே
என வேண்டுகோள்

                   தனனா தனனா தனனா தனனா
                   தனனா தனனா            தனதான

விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே                      புரிதாக
விருதா வினிலே யுலகா யதமே
     லிடவே மடவார்                      மயலாலே
அழுதா கெடவே அவமா கிடநா
     ளடைவே கழியா                  துனையோதி
அலர்தா ளடியே னுறவாய் மருவோ
     ரழியா வரமே                          தருவாயே
தொழுதார் வினைவே ரடியோ டறவே
     துகள்தீர் பரமே                       தருதேவா
சுரர்பூ பதியே கருணா லயனே
     சுகிர்தா வடியார்                 பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
     லிறைவா எனையா             ளுடையோனே
இறைவா எதுதா வதுதா தனையே
     இணைநா கையில்வாழ்          பெருமாளே.

பதம் பிரித்தல்

விழு தாது எனவே கருதாது உடலை
வினை சேர்வதுவே புரிதாக
விழு தாது எனவே - விழுகின்ற சுக்கிலம் என்று. (தாது ரசா,  இரத்தம், எலும்பு, சுக்கிலம், தசை, தோல், மூளை,  ஆகிய சப்த தாதுக்கள் எனவும் கொள்ளலாம்) கருதாது உடலை - உடலைக் கருதாமல். வினை சேர்வதுவே - வினை பெருகுவதையே. புரிதாக - விரும்புவதாய்.

விருதாவினிலே உலகாயதம் மேல்
இடவே மடவார் மயலாலே
விருதாவினிலே - வீணாக. உலகாயதம் மேல் இடவே
- போகம், மோட்சம் என்னும் புத்தி மேலிட்டதனால். மடவார் மயலாலே - மாதர்களின் மோகம் காரணத்தால்.

அழுது ஆ கெடவே அவமாகிட நாள்
அடைவே கழியாது உனை ஓதி
அழுது ஆ கெடவே - அழுது ஐயோ கெட்டுப் போயும். அவமாகிட - வீணாக. நாள் அடைவே - என் வாழ் நாள் முழுமையும். கழியாது - நான் காலத்தைக் கழிக்காமல். உனை ஓதி - உன்னைப் புகழ்ந்து துதித்து.

அலர் தாள் அடியேன் உறவாய் மரு ஓர்
அழியா வரமே தருவாயே
அலர் தாள் - மலர் உற்ற உன் திருவடியே. அடியேன் உறவாய் - அடியேனுக்கு உற்ற பற்றுக்கோடாய். மரு - கூட்டிவைக்கும். ஓர் - ஒப்பற்றதும். அழியா வரமே தருவாயே - அழியாததுமான வரத்தைத் தந்து அருளுக.

தொழுதார் வினை வேர் அடியோடு அறவே
துகள் தீர் பரமே தரு தேவா
தொழுதார் - தொழுகின்ற அடியார்களுடைய. வினை - வினையின். வேர் - வேர். அடியோடு அறவே - அடியோடு அற்றுப் போக. துகள் தீர் - குற்றமற்ற. பரமே தரு தேவா - மேலான பதவியைத் தருகின்ற தேவனே.

சுரர் பூபதியே கருணை ஆலயனே
சுகிர்தா அடியார் பெரு வாழ்வே
சுரர் பூபதியே - தேவர்களின் அரசே. கருணை ஆலயனே - கருணைக்கு இருப்பிடமானவனே. சுகிர்தா - புண்ணியனே. அடியார் பெரு வாழ்வே - அடியார்களுடைய பெரு வாழ்வே.

எழுதா மறை மா முடிவே வடி வேல்
இறைவா எனை ஆளுடையோனே
எழுதா மறை - வேதத்தின். மா முடிவே - சிறந்த முடிவுப் பொருளே. வடி வேல் - கூரிய வேலை ஏந்தும். இறைவா - இறைவனே. என்னை ஆளுடையோனே - என்னை ஆட்கொண்டுள்ளவனே.

இறைவா எதுதா அதுதா தனையே
இணை நாகையில் வாழ் பெருமாளே.

இறைவா - கடவுளே. எதுதா அதுதா - நீ எதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயோ அதைக் கொடுத்து அருளுக (எனக்கென்று ஒரு விண்ணப்பமும் இல்லை). தனையே இணை - தனக்குத் தானே இணை - நிகரான. நாகையில் வாழ் பெருமாளே - நாகபட்டினத்தில் வாழ்கின்ற பெருமாளே.

சுருக்க உரை

விழுகின்ற சுக்கிலம் என்று மட்டுமே உடலைக் கருதாமல், வினைகள் பெருகுதலையே விரும்புவாய், வீணாக உலகாயதம் என்னும் புத்தி மேலிட்டதால், ஏற்படும் மாதர்கள் மோகத்தால், ஐயோ, நான் வாழ் நாளைக் கழித்து அழியாமல், உன்னைப் புகழ்ந்து துதித்து, உன் திருவடியே எனக்கு உற்ற உறவாகக் கூட்டி வைக்கும் ஒப்பற்ற வரத்தைத் தந்து அருளுக.

தொழும் அடியார்களின் வினைகளை வேரோடு அறுத்து மேலான பதவியைத் தரும் தேவனே, தேவர்களுக்கு அரசே, கருணைக்கு இருப்பிடமானவனே, அடியார்களுடைய பெரு வாழ்வே, வேதங்களின் நிறைந்த முடிவுப் பொருளே, என்னை ஆட்கொண்டுள்ளவனே, நீ எதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறாயோ அதையே கொடுத்து அருளுக. எனக்கு என்று ஒரு விருப்பமும் வேண்டாம். நிகரற்ற நாகையில் வாழும் பெருமாளே, எனக்கு வேண்டுவதை நீயே முடிவு செய்து அருள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்

உலகாயதம் மேல் இடவே...
உடலே ஆத்மா, போகமே மோட்சம் என்ற கொள்கை உடைய மதம்.

எழுதா மறை மா முடிவே...
எழுதா மறை - வேதம். எழுதப்படாமல் வாய் மூலமாகவே தலை முறை தலை முறையாக வந்தது. எழுதும் மறை தேவாரத்தை உணர்த்தும்.

எதுவாவது தா தனையே....

ஒப்புக

மனதாலே இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர இசைவாயே....... .திருப்புகழ்,விடுங்கைக்கு.

வேண்டியவற்கு

வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ.                      ..திருவாசகம் (குழைத்தபத்து)

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published