218
காசி
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன
தான தத்தன தான தானன தனதான
தார ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயிறு மதிமோக
தாப மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடிய நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினை யேயு மாறருள் புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போது மேவிய
மாய வற்கித மாக வீறிய மருகோனே
வாழு முப்புற வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த
மாம திப்பிறை வேணி யாரருள் புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதிய கதிர்வேலா
கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறை பெருமாளே.
பதம் பிரித்தல்
தாரணிக்கு அதி பாவியாய் வெகு
சூது மெத்திய மூடனாய் மன
சாதனை களவாணியாய் உறும் அதி மோக
தாரணிக்கு = (இந்தப்) பூமியில் அதி
பாவியாய் = மிகவும் பாவச் செயல்களை செய்பவனாய்
வெகு சூது மெத்திய = மிக்க வஞ்சகம்
நிறைந்தவனாய் மூடனாய் = முட்டாளாய் மனசாதனை
= மனத்தால் எண்ணுவதில் களவாணியாய் = போலியாய் உறும் =
இருக்கும் அதி = மோக = மிக்க காம மயக்கில்.
தாப(ம்) மிக்கு உள வீணனாய் பொரு
வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள்
தாம் உ(ய்)ய செ(ய்)யும் ஏது தேடிய நினைவாகி
தாபம் மிக்கு உள
வீணனாய் = விரகம் மிகுந்துள்ள பயனற்றவனாய் பொரு
வேல் விழிச்சியர் ஆகும் = சண்டைக்கு உற்ற வேல் போன்ற
கூரிய கண்களை உடையவர்களான மாதர்கள் = பொது
மகளிர்கள் தாம் உய்ய = தாம் பிழைக்கும்படி செய்யும் = உதவும் ஏது தேடிய நினைவாகி
= செல்வத்தை தேடித் தரும் நினைவைக் கொண்டு.
பூரண சிவ ஞான காவியம்
ஓது(ம்) தற்ப உணர்வான நேயர்கள்
பூசும் மெய் திரு நீறு இடா இரு வினையேனை
பூரண = எங்கும் நிறைந்த சிவ ஞான காவியம் அது = சிவதத்துவ நூல்களை ஓதும் தற்ப உணர்வான = ஓதுகின்ற தன்மையை
உடைய நேயர்கள் = அடியார்கள் மெய்ப் பூசும் = உடலில் இடுகின்ற திரு நீறு இடா = திரு நீற்றை உடலில் இடாத இரு வினையேனை = பெரிய தீ வினைகளை உடையவனாய் (திரியும் என்னை).
பூசி மெய் பதமான சேவடி
காண வைத்து அருள் ஞானம் ஆகிய
போதகத்தினையே ஏயும் மாறு அருள் புரிவாயே
பூசி = (அத்திரு நீற்றை) அணியச் செய்து மெய்ப் பதமான = உண்மையான
நிலையாகிய சேவடி காண வைத்து அருள் =
திருவடியைக் காணும்படிச் செய்து அருளிய ஞானமாகிய போதகத்தினையே = ஞான அறிவை ஏயும் மாறு
= நான் அடையும்படி
அருள் புரிவாயே = அருள் புரிவாயாக.
வாரணத்தினையே கராவும் மு(ன்)னே
வளைத்திடு போது மேவிய
மாயவற்கு இதமாக வீறிய மருகோனே
வாரணத்தினையே = (கஜேந்திரனாகிய) யானையை கராவும் = முதலையும் முன்னே =
முன்னொரு நாளில் வளைத்திடு போது =
(காலைப்பற்றி) வளைத்த போது மேவிய மாயவற்கு =
சென்று உதவிய மாயவனாகிய திருமாலுக்கு இதமாக =
இன்பம் தரும்படி வீறிய மருகோனே = மேம்பட்டு
விளங்கும் மருகனே.
வாழும் முப்புர(ம்) வீறதானது
நீறு எழ புகையாகவே செய்த
மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே
வாழும் = வாழ்ந்திருந்த முப்புரம் வீறதானது = முப்புரங்களின் பொலிவு
நீறு எழ = சாம்பலாகும்படி புகையாகவே
செய்த = (நெற்றிக் கண்ணால்) எரித்த மா மதிப்
பிறை = சிறந்த பிறைச் சந்திரனை வேணியர் அருள் = சடையில் தரித்த சிவ பெருமான் ஈன்றருளிய புதல்வோனே = மகனே.
காரண குறியான நீதியர்
ஆனவர்க்கு மு(ன்)னாகவே நெறி
காவிய சிவ நூலை ஓதிய கதிர்வேலா
காரணக் குறியான = (அனைத்துக்கும்) மூல காரணனாகிய நீதியரானவர்க்கு = பெற்றியை உடைய சிவபெருமானுக்கு முன்னாகவே = பண்டை நாளில் நெறி காவியச் சிவ நூலை = சிவநூலாகிய தேவாரத்தை
ஓதிய = (சம்பந்தராக வந்து) ஓதிய கதிர்
வேலா = ஒளி வீசும் வேலாயுதனே.
கானக குற மாதை மேவிய
ஞான சொல் குமரா பராபர
காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே.
கானகக் குற மாதை = காட்டில் வாழ்ந்த குறப் பெண்ணாகிய வள்ளியை மேவிய = நாடிச் சென்ற ஞான சொல் குமரா = ஞான குருவாகிய குமரனே பராபர = தயாள குணமுடையவனே காசியில் = காசி என்னும் தலத்தில் பிரதாபமாய் உறை = புகழ் கொண்டு வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.
சுருக்க உரை
பூமியில் பெரிய பாபம் செய்பவனாக, வஞ்சனைகளில் மிக்கவனாக, மூடனாக, தீய எண்ணங்கள் உடையவனாக, காமமும், தாபமும் நிறைந்தவனாக, கூரிய கண்களை உடைய விலை மாதர்களையே நினைக்கும்
இழி குணம் உடையவனாக இருக்கும் என்னை, சிவ ஞானத்தில் மிக்க அடியார்களிடம் சேர்த்து, திரு நீற்றை அணியும்படி செய்து, சிவ ஞான தத்துவங்களை உபதேசித்து அருள்
செய்ய வேண்டுகின்றேன்.
முன்னொரு நாளில் தன் காலைப்
பற்றிய கஜேந்திரனை முதலையிடமிருந்து காக்க விரைந்து சென்ற திருமாலின் மருகனே, வலிய
முப்புரங்களை எரித்தவனும், பிறைச் சந்திரனைச் சடையில் தரித்தவனுமாகிய சிவ பெருமானின் மகனே,
மூல காரணனாகிய சிவபெருமானின் சந்நிதிகளில் தேவாரத்தைச் (சம்பந்தராக வந்து) ஓதிய குமரனே,
தயாளனே, காசியில் புகழுடன் வீற்றிருப்பவனே , தீய நெறியில் வாழும் என்னை அடியார்களோடு
சேர்த்து ஞான உபதேசம் செய்து அருள வேண்டுகின்றேன்.
விளக்கக் குறிப்புகள்
பூரணச் சிவஞான காவியம் ஓது...
தேவார திருவாசக நூல்களைக் குறிக்கும்.
ஒப்புக
1. வாரணத்தினை யேக ராவுமு...
திவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபுரிந்திட ...திருப்புகழ்,பகர்தற்கரி
ஆனைமடு வாயிலன்று மூலமென வோல மென்ற ..... திருப்புகழ்,சாலநெடு
கடகரி அஞ்சி நடுங்கி................................. திருப்புகழ், சருவியிகழ்ந்து
வரலாறு பாடல் 225 விள்க்கத்தில் பார்க்கவும்
2, வாழுமுப்புர வீற தானது...
அரிய திரிபுர மெரிய விழித்தவன்………………………….... திருப்புகழ், குருவியெனப்பல.

No comments:
Post a Comment
Your comments needs approval before being published