F

படிப்போர்

Sunday, 19 May 2013

213.விந்துபேதித்த

213
கந்தனூர்

(புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. இத்தலம் கந்தன் குடி என கொண்டால் பேரளம் காரைக்கால் மார்கத்தில் இருக்கும் ஸ்தலாமாகும். குமரக்குடி என்றும் அழைக்கப்படுகிறது)

ஞான பதவி வந்து தா
     
  தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
  தந்தனா தத்ததன            தந்ததான

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
         மின்சரா சர்க்குலமும்                     வந்துலாவி
விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு
          மிஞ்சநீ விட்டவடி                       வங்களாலே
வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
         வந்துதா இக்கணமெ                     யென்றுகூற
மைந்தர்தா விப்புகழ் தந்தைதா யுற்றுருகி
         வந்துசே யைத்தழுவல்                   சிந்தியாதோ
அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
        மங்கிபார் வைப்பறையர்                   மங்கிமாள
அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்
         அண்டரே றக்கிருபை                  கொண்டபாலா
எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்
        எந்தைபா கத்துறையு                        மந்தமாது
எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
        எந்தைபூ சித்துமகிழ்                           தம்பிரானே

-    213 கந்தனூர்

பதம் பிரித்து உரை

விந்து பேதித்த வடிவங்களாய் எத்திசையும்
மின் சர அசர குலமும் வந்து உலாவி

விந்து = சுக்கிலம் பேதித்த = வெவ்வேறான வடிவங்களாய் = உருவங் களாய் எத்திசையும் = எல்லாத் திக்குகளிலும் மின் = ஒளி பெறும் சர அசர குலமும் = அசையும் பொருள், அசையாப் பொருள் என்னும் கூட்டமாய் வந்து உலாவி = வந்து (இவ்வுலகில்) காலம் கழித்து.

விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும்
மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே

விண்டு போய் விட்ட உடல் = (பின்னர்) அழிந்து போய் உடலை விடுவதை சிந்தை தான் உற்று அறியும் = (என்) மனம் ஆய்ந்து அறியும் மிஞ்ச = (இங்ஙானம்) நிரம்ப. நீ விட்ட வடிவங்களால் = நீ எனக்கு அளிக்கும் பிறப்புக்களில் உள்ள வடிவங்களில்.

வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி
வந்து தா இக்கணமே என்று கூற

வந்து = (நான்) வந்து நாயிற் கடையன் = நாயினும் கீழ்ப்பட்டவனாய் நொந்து = மனம் வருந்தி ஞானப் பதவி = ஞான நிலையை வந்து தா இக்கணமே = இந்தச் சமயத்திலேயே வந்து கொடு என்று கூற = உன்னிடம் முறையிடும் போது.

மைந்தர் தாவி புகழ தந்தை தாய் உற்று உருகி
வந்து சேயை தழுவல் சிந்தியாதோ

மைந்தர் = பிள்ளைகள் தாவிப் புகழ = தாவி நின்று புகழ்ந்தால் தந்தை தாய் உற்று உருகி = தந்தையும் தாயும் ( அம்மொழிகளைக் கேட்டு) மனம் உருகி வந்து = (அருகில்) வந்து சேயைத் தழுவல் = அக்குழந்தைகளைத் தழுவிக் கொள்வதை சிந்தியாதோ=உன் உள்ளம் நினைக்காதோ?

அந்தகாரத்தில் இடி என்ப வாய்விட்டு வரும்
அங்கி பார்வை பறையர் மங்கி மாள

அந்தகாரத்தில் = பேரிருளில் இடி என்ப = இடி இடிப்பது போல் வாய் விட்டு வரும் = கூச்சலிட்டு வருகின்ற அங்கிப் பார்வை பறையர் = தீப்போன்ற கண்களை உடைய இழி குலத்தோராகிய அசுரர்கள் மங்கி மாள = ஒடுங்கி அழிய.

அம் கை வேல் விட்டு அருளி இந்திர லோகத்தில் மகிழ்
அண்டர் ஏற கிருபை கொண்ட பாலா

அம் கை வேல் விட்ட = அழகிய திருக்கையில் ஏந்திய வேலைச் செலுத்தி அருளி = அருள் செய்து இந்திர லோகத்தின் மகிழ் = இந்திர லோகத்தில் மகிழ்ச்சியுடன் அண்டர் ஏற = தேவர்கள் குடியேற கிருபை கொண்ட பால = அருள் புரிந்த குமரனே.

எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வை சடையர்
எந்தை பாகத்து உறையும் அந்த மாது

எந்தன் ஆவிக்கு உதவு = என்னுடைய ஆவிக்கு உதவி செய்தவரும் சந்த்ர சேர்வைச் சடையர்= சந்திரனைச் சடையில் சேர்த்து வைத்துள்ளவரும் எந்தை = எனது தந்தையுமாகிய சிவ பெருமானின் பாகத்து உறை = (இடது) பாகத்தில் உள்ள அந்த மாது = அந்தப் பார்வதியும்.

எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ்
எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே.

எங்குமாய் நிற்கும் = எங்கும் நிறைந்து வீற்றிருக்கும். ஒரு = ஒப்பற்ற கந்தனூர் சத்தி = கந்தனூரில் உள்ள தேவி புகழ் = புகழும். எந்தை = எந்தையாகிய சிவபெருமான் பூசித்து மகிழ் தம்பிரானே = பூசித்து மகிழ்ந்த தம்பிரானே.

சுருக்க உரை

சுக்கிலத்தில் வெவ்வேறான உருவங்களாய் அசையும் பொருள், அசையாப் பொருள் என்னும் கூட்டமாய் இவ்வுலகில் வந்து காலம் கழித்து, மடிந்து, உடலை விட்டுப் பிரிந்து விடுவதை நன்கு ஆராய்ந்து, எனக்கு நீ அளிக்கும் பிறப்புக்களில், நாயினும் கீழ்ப்பட்டவனாக நான் பிறந்து, உன்னிடம் வந்து முறையிடும் போது, பெற்றோர்களைப் பிள்ளைகள் வந்து புகழ்ந்தால், அவர்கள் எங்ஙனம் தாவி, மனம் உருகி தழுவிக் கொள்வார்களோ, அவ்வாறே என்னை ஆதரிப்பாய் என்னும் எண்ணம் உன் மனதில் நிலை பெறாதோ?

பேரிருளில் இடி இடிப்பது போல் கூச்சலிட்டு வரும் இழி குலத்தோராகிய அசுரர்கள் ஒடுங்கி மாள வேலைச் செலுத்தி, தேவர்கள் குடி ஏற அருள் புரிந்த குமரனே, என் ஆவிக்கு உதவிய சடைப் பெருமானாகிய சிவபெருமானும், அவர் இடப் பாகத்தில் உறையும் உமையும் உள்ள கந்தனூரில் சிவ பெருமான் மகிழ்ந்து பூசித்த தம்பிரானே, இந்த அடியவனுக்கும் ஞான பதவி தந்து அருள வேண்டும்.

விளக்கக் குறிப்புகள்

1. மைந்தர் தாவில் புகழ.....சிந்தியாதோ.....
மைந்தனோடிப் பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது சிந்தியாதோ   .......            .திருப்புகழ், ஏதுபுத்தி.

2. என்தன் ஆவிக்கு தாவு சந்த்ரசேர் வைச்சடையர்....

அருணாசலேசுரரும் அருணகிரிநாதரை ஆட்கொண்டனர் என்பதைப் பின் வரும் பாடல்களால் அறியலாம்.

கரிநெ டும்புலி தோலுடை யாரெனை
யடிமை கொண்டசு வாமி சதாசிவ கடவுள் ......                திருப்புகழ்,எகினினம்பழி

அடியேன் துயர் தீர்ந்திட வெண்
தழல் மாபொடி யருள்வோரடல் மான்துடி        .........        திருப்புகழ், தமிழோதிய.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published