F

படிப்போர்

Friday 24 August 2012

8. கனகந்திரள்

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு        கதியோனே
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடு         முருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை
        கடல்முன்புக டைந்தப ரம்பரர்
        படரும்புயல் என்றவர் அன்புகொள்       மருகோனே
பலதுன்பம்உ ழன்றுக லங்கிய
        சிறியன்புலை யன்கொலை யன்புரி
        பவமின்றுக ழிந்திட வந்தருள்           புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
        புரமுந்திரி வென்றிட இன்புடன்
        அழலுந்தந குந்திறல் கொண்டவர்       புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
        டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
        அரிர்கின்றிட அண்டநெ ரிந்திட           வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
        உடலுங்குட லுங்கிழி கொண்டிட
        மயில்வென்றனில் வந்தரு ளுங்கள்     பெரியோனே
மதியுங்கதி ருந்தட வும்படி
        உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
        வளமொன்றுப ரங்கிரி வந்தருள்        பெருமாளே.

-திருப்பரங்குன்றம்

பதம் பிரித்தலும் பதவுரையும்

கனகம் திரள்கின்ற பெரும் கிரி
தனில் வந்து தகன் தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே

கனகம் திரள்கின்ற = பொன் கொழிக்கின்ற. பெரும் கிரி தனில் = பெரிய மலையாகிய மேரு மலையை. வந்து = வந்தடைந்து. தகன் தகன் என்றிடு = தகன் தகன் என்று.(தக தக என மின்னி) கதிர் மிஞ்சிய = ஒளி அதிகமாக வீசிய. செண்டை = தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவியை. எறிந்திடு கதியோனே = எறிந்து (பொன் பெற்ற திருவிளையாடலைப் புரிந்த) சிறப்பு வாய்ந்தவனே.

கடம் மிஞ்சி அநந்த விதம் புணர்
கவளம் தனை உண்டு வளர்ந்திடு
கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே

கடம் மிஞ்சி = மதம் அதிகரித்து. அநந்த விதம் புணர் = பலவிதமாகப் புணர்ச்சியை மேற்கொண்டு. கவளம் தனை உண்டு = வாயளவு கொண்ட உணவை உண்டு. வளர்ந்திடு = வளர்ந்த. கரியின் துணை என்று = யானையாகிய விநாயகனின் துணைவன் என்று. பிறந்திடு = பிறந்திட்ட. முருகோனே = அழகு வாய்ந்தவனே.

பனகம் துயில்கின்ற திறம் புனை
கடல் முன்பு கடைந்த பரம்பரர்
படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே

பனகம் துயில்கின்ற = பாம்பாகிய ஆதி சேடன் மேல் அரிதுயில் கொள்ளும். திறம் புனை = தன்மையைக் கொண்ட. கடல் முன்பு கடைந்த = திருப்பாற் கடலை முன்பு கடைந்த. பரம்பரர் = கடவுளும். படரும் புயல் என்றவர் = விரிந்த மேக வண்ணனுமாகிய திருமால். அன்பு கொள் மருகோனே = அன்புகொண்ட மருகனே.

பல துன்பம் உழன்று கலங்கிய
சிறியன் புலையன் கொலையன் புரி
பவம் இன்று கழிந்திட வந்து அருள் புரிவாயே

பல துன்பம் உழன்று = பலவிதமான துன்பங்களால் அலைச்சல் உற்று. கலங்கிய = மனக் கலக்கம் அடைந்த. சிறியன் = சிறியேனும். புலையன் = புலைத் தொழிலைக் கொண்டவனும். கொலையன் = கொலைத் தொழிலைச் செய்பவனும் ஆகிய நான் செய்யும். பவம் இன்று கழிந்திட = பாவம் இன்று ஒழிந்திட. வந்து அருள் புரிவாயே = வந்து திருவருள் செய்வாயாக

அனகன் பெயர் நின்று உருளும் திரி
புரமும் திரி வென்றிட இன்புடன்
அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே

அனகன் பெயர் = தூயவன் என்ற பெயர் வாய்ந்து. நின்று உருளும் = நின்று உருண்டு. திரி புரமும் திரி = முப்புரங்களையும் உலாவி. வென்றிட = வெல்லும்படி. இன்புடன் = இன்ப நிலையில். அழல் உந்த = தீ வெளிப்பட. நகும் = சிரித்த. திறல் கொண்டவர் = திறல் கொண்டவராகிய சிவபெருமானின். புதல்வோனே = மகனே.

அடல் வந்து முழங்கி இடும் பறை
டுடுடுண்டுடு.....................என 
    அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர்

அடல் வந்து = வலிமையுடன். முழங்கிடும் பறை = முழங்குகின்ற பறை வாத்தியங்கள். டுடுடுண்டுடு.... என = இவ்வொலியுடன். அதிர்கின்றிட = அதிர்ந்த. அண்டம் நெரிந்திட = அண்டங்கள் நெரிந்து போகும்படி. வரு சூரர் = வருகின்ற அசுரர்களுடைய.

மனமும் தழல் சென்றிட அன்று அவர்
உடலும் குடலும் கிழி கொண்டிட
மயில் வென் தனில் வந்து அருளும் கள் பெரியோனே

மனமும் தழல் சென்றிட = மனத்தில் எரி பாயவும். அன்று = அப்போது. அவர் = அவர்களுடைய. உடலும் குடலும் கிழி கொண்டிட = உடலும், குடலும் கிழியும்படி. மயில் = மயிலின். வென் தனில் = முதுகில். வந்தருளும் = வந்து அருளிய. கள் பெரியோனே = பெருமை வாய்ந்த பெரியோனே.

மதியும் கதிரும் தடவும்படி
உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே.

மதியும் = சந்திரனும். கதிரும் = சூரியனும். தடவும்படி = தடவிச் செல்லும் அளவுக்கு. உயர்கின்ற = உயர்ந்துள்ள. வனங்கள் பொருந்திய = சோலைகள் பொருந்தியுள்ள. வளம் ஒன்று(ம்) = வளமை பொருந்திய. பரங்கிரி வந்து அருள் பெருமாளே = திருப்பரங்கிரியில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

பொன் திரண்டுள்ள மேரு மலையை ஒளி வீசும்படி செண்டை எறிந்து திருவிளையாடல் புரிந்த திறலோனே. மதம் மிகுந்துப் பல வகையாகப் புணர்வதும், கவளமாக உண்டு வளருவதுமான யானை உருவம் கொண்ட விநாயகனின் துணைவனே. பாம்பின் மேல் துயில்பவரும், கடலைக் கடைந்தவரும் ஆகிய திருமாலுக்கு அன்பான மருகனே. பல துன்பங்களில் சுழற்சி உற்று கலங்கிய சிறியேனும், புலையனும், கொலைஞனுமாகிய அடியேனுடைய பாவம் இன்று நீங்க வந்து அருள் புரிவாயாக. 
தூயவனாகிய சிவனின் மகனே. பறைகள் முழங்க வரும் சூரர்களை அழித்து மயில் மேல் வந்தருளிய பெருமை வாய்ந்தவனே. சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படி உயர்ந்த சோலைகள் மிகுந்த திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. என் பாவம் ஒழிய வந்து அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்
அ. செண்டை எறிந்திடு கதியோனே...
பாண்டிய நாட்டில் மழையில்லாமையால், சொக்க நாதர் கனவில் சொன்னபடி, உக்கிர பாண்டியன், மேரு மலையைச் செண்டாகிய பிரம்பால் அடித்துப்  பொன் பெற்ற திருவிளையாடலைக் குறிக்கும்.

[செண்டு என்பது ஒரு நுனியில் இரண்டு வளவுகளுடன் இருக்கும் ஒரு வித ஆயுதம். மாயூரத்திற்கு அருகில் இருக்கும் ஆறுபாதி ஊரில் இருக்கும் ராஜகோபலஸ்வாமி பெருமாளின் கையில் இருக்கும் ஆயுதம் செண்டே ஆகும். மன்னார்குடியில் செண்டலங்காரப் பெருமாள் கையில் இருப்பதும் செண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் கையில் வைத்திருக்குகம் ஆயுதமும் இதுவேதான்.  புதுவண்டி பாளையம் கடலூர் சிவ சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஸ்வாமி சிவனிடமிருந்து மேருவை அடிப்பதற்காக செண்டு வாங்க்கும் திருவிழா இன்றும் நடைபெருகிறது]
ஆ. பனகம் துயில்கின்ற திறம்....
    பனகம் = பாம்பு (ஆதிசேடன்).
இ. மயில் வென் தனில்.....
    வென் = முதுகு. 
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published