252
திருப்புக்கொளியூர்
(அவிநாசிக்கு அருகில் உள்ளது)
தத்தன
தானான தத்தன தானான
தத்தன
தானான தனதான
பக்குவ வாசார லட்சண சாகாதி
பட்சண மாமோன சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
பற்றுநி ராதார நிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞான வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
னற்புத சீர்பாத மறவேனே
உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
வுற்பல வீராசி மணநாற
ஒத்திநி லாவீசு நித்தல நீராவி
யுற்பல ராசீவ வயலுரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகார அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள்
சீரான
புக்கொளி யூர்மேவு பெருமாளே.
பதம் பிரித்தல்
பக்குவ ஆசார லட்சண சாக ஆதி
பட்சணமாம் மோன சிவ யோகர்
பக்குவ
= (உடலுக்கு
ஏற்றதான) தக்கதான ஆசார லட்சண = தூய்மை
நிலையில் நின்று ஏற்றதான சாக ஆதி பட்சணமாம் = பச்சிலை
முதலான உணவையே உண்டு (சைவ
உணவு) மோன = மவுன
நிலையில் நிற்கும் சிவ யோகியர் = சிவயோகிகள்.
பத்தியில் ஆறாறு தத்துவ(ம்) மேல் வீடு
பற்று நிராதார நிலையாக
பத்தியில
= பக்தி
நிலையில் ஆறாறு தத்துவம் மேல் வீடு = முப்பத்தாறு
தத்துவங்களுக்கு மேற்பட்டதான முத்தி வீட்டை பற்று
= பற்றுவதும்
நிராதார = எல்லாப்
பற்றுக்களும் அற்றதுமான நிலையாக = நிலையை நான் அடைவதாய்
அக்கணமே மாய துர்க்குணம் வேறு ஆக
அ படையே ஞான உபதேசம்
அக்கணமே
= அந்த
நிலையை அடைந்தவுடனேயே மாய துர்க்குணம் வேறாக = மாயமாக
வந்து (என்னைப் பற்றியுள்ள) கெட்ட குணங்கள் எல்லாம் என்னை விட்டுப் பிரிய
அப்படையே ஞான உபதேசம் = அந்த
ஞான உபதேசமே எனக்கு உதவும் படையாக.
அக்கு அற வாய் பேசு(ம்) சற்குரு நாதா
உன்
அற்புத சீர் பாதம் மறவேனே
அக்கு
அற = பாசத்தின்
உரிமை எல்லாம் அற்றுப் போகும்படி வாய் பேசும் = (உபதேச
மொழியை) வாய்விட்டு உரைத்த குரு நாதா = குரு
நாதரே உன் அற்புத சீர் பாதம் மறவேனே = உனது
அற்புதமான அழகிய திருவடியை நான் மறக்க மாட்டேன்.
உக்கிர ஈறாறு மெய் புயனே நீல
உற்பல வீரா ராசி மண(ம்) நாற
உக்கிர = ஊக்கம் மிக்க
ஈறாறு மெய்ப்புயனே = பன்னிரண்டு திருப்புயங்களை
உடைய வனே நீல உற்பல
வீ = நீலோற்பல
மலர்களின் ராசி = கூட்டங்களின் மணம்
நாறும் = நறு
மணம் வீசும்.
ஒத்த நிலா வீசு(ம்) நித்தல நீர் வாவி
உற்பலம் ராசீவ(ம்) வயலூரா
ஒத்த = பொருந்தியுள்ளதும் நிலா
வீசும் = நிலவொளி வீசுவதும்
நித்தில = முத்துப்
போல் தெளிவு உள்ளதுமான நீர்
வாவி = நீர் நிலைகள்
உற்பல = குவளை
மலரையும் ராசீவம் = தாமரையையும்
கொண்ட வயலூரா = வயலுர்ப் பெருமாளே.
பொக்கம் இலா வீர விக்ரம மா மேனி
பொன் ப்ரபை ஆகார அவிநாசி
பொக்கம்
இலா = பொய்
இல்லாத வீர = வீரனே
விக்ரம = வலிமை
சாலியே மா மேனி = அழகிய
உடல் பொன் ப்ரபை = பொன்னொளி வீசும் ஆகார
= உடலை
உடையவனே அவிநாசி = அவிநாசி
என்னும் தலத்தில்.
பொய் கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான
புக்கொளியூர் மேவு பெருமாளே.
பொய்க்கலி
போமாறு = (என்னுடைய)
நிலையில்லாமை நீங்குமாறு மெய்க்கு அருள் = இறைவனுடைய
திருவருளின் சீரான = புகழ்
ஓங்கி விளங்கும் புக்கொளியூர் மேவு பெருமாளே = திருப்புக்கொளியூரில் வீற்றிருக்கும்
பெருமாளே.
சுருக்க உரை
தகுந்த ஆசார நிலையில் நின்று, சைவ உணவு உண்டு, மவுன நிலையில் நிற்கும் சிவ
யோகிகள் தங்களுடைய பத்தி நிலையில் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த, வீட்டுப் பேற்றைப் பற்றுவதானதும், எல்லா பற்றுக்களும் அற்றதான நிலையை நான் அடைந்தவுடன், என்னைப் பற்றியுள்ள துர்க்குணம் எல்லாம் என்னை விட்டொழிய, அந்த ஞான உபதேசமே எனக்குப் படையாகவும், பாசம் ஒழியவும், உபதேசத்தை வாய் விட்டு உரைத்த
சற்குரு நாதரே, உன் அழகிய திருவடிகளை நான் என்றும் மறவேன்.
ஊக்கம் மிக்கனவும், உண்மை நெறியைக் காட்டுவனவும் ஆகிய பன்னிரு புயங்களை உடையவனே,
நீலோற்பலம், தாமரை ஆகிய மலர்களின் நறு மணம் வீசுவதும், நிலவொளி வீசுவதும், முத்துப் போல் தெளிவு உள்ளதுமான வயலூர்ப் பெருமானே, வீரக் கழல்கள்
அணிந்தவனே, பொன்னொளி வீசும் உடல் அழகனே, திருப்புக்கொளியூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும்
பெருமாளே, என் பொய்யான நிலை நீங்கி,
மெய்யான உன் அற்புதத் திருவடிகளை
எனக்குத் தருவாயாக.
விளக்கக் குறிப்புகள்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான....
இது நிகழ முடியாத ஒரு அற்புதம்.
முதலை உண்ட பிள்ளையை அதன் வாயினின்றும் மீட்டதைக் குறிக்கும். சுந்தரர் காலத்தில் நிகழ்ந்தது.
ஒப்புக
கொங்கிலுயிர் பெற்று வளர்
தென் கரையி லப்பரருள்
கொண்டுஉட லுற்றபொரு ளருள்வாயே ... திருப்புகழ்,ஐங்கரனை
புரைக்காடு சோலைப் புக்கொளியூர்
அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச் சொல்லு காலனையே
....
சுந்தரர் தேவாரம்
ஆறாறு தத்துவம் மேல் வீடு...
தத்துவங்கள் 36. (அசுத்த தத்துவம் 24, சுத்த தத்துவம் 5, சுத்தா சுத்த தத்துவம் 7). இவைகளைக் கடந்தால் பேரின்ப
நிலை கிட்டும்.
ஒப்புக
ஆறாறையும் நீத்து அதன் மேல்
நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ .. கந்தர் அநுபூதி
ஆறாறுக் கப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக் கப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக் கப்பால் அரனினி தாமே .... திருமந்திரம்
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
. திருப்புகழ்,அதலவிதல
2. நிராதார நிலையாக...
ஆதாரத்தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல உந்தீபற
விமலற் கிடமதென் றுந் தீபற ... திருவுந்தியார்
3. அப்படையே ஞான உபதேசம்....
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யென துபகை தீர நீயும் அருள்வாயே ... திருப்புகழ்,ஒருவழிபடாது
முதலையுண்ட வரலாறு: ஐந்து வயது நிரம்பப் பெற்ற
அந்தணச் சிறுவர் இருவர்,
இங்குள்ள நீர் நிலையில் குளித்தபோது
ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று. மற்றொருவன் அதன்வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம்
சேர்ந்தான். நிகழ்ந்ததைக் கேட்ட பெற்றோர் மிக்க துயருற்றனர். இது நிகழ்ந்து சில ஆண்டுகளான
நிலையில் உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர்.
அவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம்
மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனங் கலங்கி
இருந்த நேரம் சுந்தரர் அத்தலத்துக்கு வந்தார்.
சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள்
நாயனாரின் அழைப்பினை ஏற்று,
அவரைச் சந்திக்கத் சோழநாடு
கடந்து, கொங்கு நாட்டு போய்க் கொண்டிருந்தார். அவிநாசி என்னும் இத்தலத்திற்கு
வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து இவ்வாறு நிகழக்
காரணம் என வினவினார். நிகழ்ந்ததை அவ்வூர் வேதியர்கள்
உரைத்தனர். மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார்.சிறந்த சிவபக்தராகிய
இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி `எற்றான் மறக்கேன்` என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.
தாரசுரம் கோயில் சிற்பம் -http://poetryinstone.in
அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.அவனது பெற்றோரும்
மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார். இந் நிகழ்ச்சியை நினைவு கூறுகிறார்
அருணகிரி பெருமான்