தந்தான தந்த தந்தான தந்த
தந்தான
தந்த தனதான
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத
மொன்ற நினையாமல்
அன்பால்
மிகுந்து நஞ்சாரு கண்க
ளம்போரு
கங்கள் முலைதானும்
கொந்தேமி
குந்து வண்டாடி நின்று
கொண்டாடு
கின்ற குழலாரைக்
கொண்டேநி னைந்து மன்பேது மண்டி
குன்றாம
லைந்து அலைவேனோ
மன்றாடி
தந்த மைந்தாமி குந்த
வம்பார்க
டம்பை அணிவோனே
வந்தேப ணிந்து
நின்றார்ப வங்கள்
வம்பே
தொலைந்த வடிவேலா
சென்றேயி டங்கள் கந்தாஎ னும்பொ
செஞ்சேவல்
கொண்டு வரவேணும்
செஞ்சாலி
கஞ்ச மொன்றாய்வ ளர்ந்த
செங்கோட
மர்ந்த பெருமாளே
-177 -
திருச்செங்கோடு
பதம் பிரித்து உரை
அன்பாக வந்து உன் தாள் பணிந்து
ஐம்பூதம் ஒன்ற நினையாமல்
அன்பாக வந்து = அன்புடன் வந்து உன் தாள் பணிந்து = உனது திருவடியைப் பணிந்து ஐம்பூதம் ஒன்ற = (மண், நீர், தீ, காற்று, வான்
ஆகிய) ஐம்பூதங்களும் ஒருமைப்பட்டு நினையாமல் = உன்னை நினையாமல்
.
அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள்
அம்போருகங்கள் முலை தானும்
அன்பால் மிகுந்து = காதல் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் = விடம் நிறைந்த கண்களும் அம் போருகங்கள்
= தாமரை மொட்டுகள் போன்ற.
முலைதானும் = கொங்கைகளும்.
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
கொண்டாடுகின்ற குழலாரை
கொந்தே மிகுந்து=பூங்கொத்துக்கள் நிறைந்து வண்டு ஆடி நின்று
= வண்டுகள்
விளையாடி கொண்டாடுகின்ற குழலாரை = மகிழ்கின்ற கூந்தலும் உள்ள பொது மகளிரை
கொண்டே நினைந்து மன் பேது மண்டி
குன்றா மலைந்து அலைவேனோ
கொண்டே நினைந்து = மனத்தில் கொண்டு நினைந்து மன் = மிகவும் பேது = அறியாமை
(அல்லது வருத்தம்) மண்டி= நிறைந்து குன்றா = குன்றிப்போய் மலைந்து = சோர்வடைந்து (மனம் ஒன்றாமல்) அலைவேனோ = மன
அலைச்சல் உறுவேனோ
மன்று ஆடி தந்த மைந்தா மிகுந்த
வம்பு ஆர் கடம்பை அணிவோனே
மன்று ஆடி = சபையில் நடம் புரியும் (நடராஜராகிய சிவபிரான்) தந்த = பெற்ற மைந்தா= குமரனே மிகுந்த = நிறைந்த வம்பு ஆர் = வாசனை பொருந்திய கடம்பை = கடப்பமாலையை அணிவோனே= அணிபவனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா
வந்தே பணிந்து நின்றார் = உன்னை வணங்கி நிற்கும் அடியார்களுடைய பவங்கள் = பிறப்புக்களின் (துயரத்தை) தொலைந்த = நீக்கிய (களைந்த) வடிவேலா = கூரிய வேலனே
சென்றே இடங்கள் கந்தா எனும் போ
செம் சேவல் கொண்டு வரவேணும்
சென்றே இடங்கள்
= செல்லும் இடங்களில்
எல்லாம் கந்தா எனும் பொது = கந்தா என்று நான் அழைக்கும் போது செம் சேவல் கொண்டு
வரவேணும் = செவ்விய
சேவலை ஏந்தி என் முன் வரவேண்டும்.
செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த
செங்கோடு அமர்ந்த பெருமாளே.
செம் சாலி = செந் நெல் பயிரும் கஞ்சம் = தாமரையும் ஒன்றாய் வளர்ந்த = ஒன்றாக வளரும் செங்கோடு = திருச்சேங்கோட்டில் அமர்ந்த பெருமாளே
= வீற்றிருக்கும்
பெருமாளே.
சுருக்க உரை
நான் ஐம்புலன்களும்
ஒருமைப்பட்டு, உன்னை நினையாமல், விடம் நிறைந்த கண்களும், தாமரை மொட்டு போன்ற கொங்கைகளும்
உடைய பொது மகளிரை நினைந்து, மனம் குலைந்து அலைச்சல் உறுவேனோ கூத்தப் பெருமான் அருளிய
குமரனே. உன்னை வணங்கும்
அடியார்களுடைய
பிறவித் துன்பங்களைத் தொலைக்கும் கூரிய வேலை ஏந்தியவனே. நான் செல்லும் இடங்களிலெல்லாம்
கந்தா என்று அழைத்த போது உன் செஞ் சேவலுடன் என் முன் வரவேண்டும். நெல்லும் தாமரையும் ஒன்றாக வளரும் திருச்செங்கோட்டில் வீற்றிருப்பவனே, நான் விலை மாதர் இன்பத்தில் மனம் அலைச்சல் உறுவேனோ?.
ஐம்பூதங்களும்
ஒன்று பட்டால் அதன் சூட்சுமமான ஒளி, ஊறு ,ஓசை
நாற்றம் என்ற ஐம்புலன்களும் ஒன்று சேரும் என,
உணர்த்தப்படுகிறது.
குகஸ்ரீ ரசபதி விரிவுரை
புனித சிதம்பரம் பொன்னம்பலம். வியன் மிகு மதுரை வெள்ளி
அம்பலம். தரணி புகழ் திருநெல்வேலி தாமிர
அம்பலம். திருக்குற்றாலம் சித்திர அம்பலம். திரு ஆலங்காடு ரத்தின அம்பலம். இந்த ஐந்து
சபைகளிலும் தங்கி தாண்டவம் செய்கிறார் தற்பரர். இது அண்ட தாண்டவம் எனப்படும்.
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்று உற்று பார்க்க ஒளி விடும் மந்திரம்
பற்றுக்குப்
பற்றாய் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே -
என்று அருள் மூலம் அறிந்த திருமூலர் புருவ
நடுவிலும் நிமலர் திருக்கூத்து நிகழ்கிறது என்கிறார். இது பிண்டத் திருச்சிற்றம்பலம்
எனப்பெறும். குமரா, அவர் சொரூபமாக அவதரித்த நீரும் புருவ நடுவில்
இருந்து அதி ரகசிய திருக்கூத்து ஆடுகிறீர்.
எந்தைப் பிரானுக்கு அங்கு இருமூன்று வட்டமாய், தந்தை தன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்திங்கிருத்தலால் மைந்தன்
இவன் என்ன மாட்டிக் கொள்ளிலீரே
அறிவை இழந்து வேறு எதிலும் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். சிவகுமரனுக்கு
சிக்கல் பெருமான் என்று ஓர் பெயர் உளது. அவரிடம் சிக்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கிறது
இந் திய்வத் திருமந்திரம்.
இதய தகராசத்திலும் நடராஜர் இன்ப தாண்டவம் செய்கிறார். சிறந்த
இதய குகைக்கு சிதம்பரம் என்பது ஒரு திருப்பெயர். அதன் நடுவில் ஞானவெளியனாகி அருள் நாடகம்
ஆடும் உம்மை தகராகாச தண்டவன் என்று அரி நூல்கள் அறிவிக்கின்றன. அந்த அருமைகளை
அறிந்து மன்றாடி தந்த மைந்தா என்று உம்மை ஏத்தி மொழிகிறது எமது மனம்.
முறை துறை இல்லா மும்மல நாற்றம் உலக வாசனை எனும் போலிப் போர்வையில்
புகுந்துளது. மோசமான அதனை மோந்து கொள்ளும் காலம் வரை உருப்படாது இந்த உயிர். முகந்தறியா
அருள் மணத்தை முகருமாறு அதன் வழியே உலக வாசனையைக் கடக்குமாறு அளவிலாது எழும் தெய்வ
மணக் கடம்பு அணிந்தனை. - உரள் பூம் தண் தார் புரளும் மார்பினன் - என்று திருமுருகாற்றுப்படையும் அதை உணர்ந்துளது.
உண்மை தான். வம்பும் தும்பும் ஆன வழக்காற்றை மறக்க அந்த வம்பார்
கடம்பு வழி காட்டும். இவைகளை எல்லாம் எண்ணி, மிகுந்த வம்பு ஆர் கடம்பை
அணிவோனே ஓதும் போதே உரிய அம் மணம் வருவது போல தெரிகிறதே.
இதுவரை செய்திருக்கும் பிறவிக்கு உரிய எண்ணில்லாத சாயா உருவம்
எய்தியுள. தக்க சமயம் பார்த்து அவைகள் வந்து வந்து தாக்கும் அவைகளை அடியவர் அறிந்துளர்.
மாபெரும் அம்மோதல்களை மறந்திருக்க வாழ்விக்கும் உன் திரு முன் காலம் தோறும் வருகிறார்கள்.
எட்டு உருப்பும் நிலம் பாய இறைஞ்சுகிறார்கள். வணங்கும் ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொன்றாக வன்மை குன்றி சாய்கின்றன காமச்
சாயைகள். அதனுடன் அவைகளின் சேட்டைகளையும் தொலைந்து போகச் செய்கிறது தொன்மையான ஞான சக்தி.
வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடிவேலா (பவங்கள் = பிறவி நிழல்கள், வம்பு = உலக போக வாசனைகள்.). இந்த அருமையை அறிந்து - தாழ்ந்தவர் வரியர் ஆகார் - என்று உம்ASமப் புகழ்ந்து போற்றுகிறது புனிதர்கள் திருவாய்.
பயிர்கள் பல வகை. அவைகளுள் செந்eiற்பயிர்களே மிகச் சிறந்தவை. மலர்கள் பல வகை. அவைகளுள் தாமரை
மலர்க்குத் தான் தனிப் பெரும் சிறப்பு.செந்நெர்பயிரும் கமலக்கழையும் நிறைந்த ஏராளமான
நன்செய் நிலங்கள் திகழும் பெருமையது திருச்செங்கோடு. அது செந்நிறமான மலை ஆதலின் செங்கோடு
எனப் பெயர் பெறும். கொடிமாடச் செங்குன்று\ர் என்றும் இப்பதிக்கு பழையதொரு பெயர் உளது. ஆளுடைய்ர் பதிகம்
பெற்ற இப்பதி பாம்பு ஒன்று படுத்திருப்பது போன்று தோற்றம் பெற்றிருத்தலின் நாக கிரி
என்றும் நவிலப் பெறும்.
இந்த அற்புதத் தலத்தில் உடம்பெல்லாம் கண்ணாகி சேவித்தாலும் காண
இயலாத கட்டழகு செல்வராய் காட்சி தரும் உம்மை செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த செங்கோ
டமர்ந்த பெருமாளே என்று ஏத்தி போற்றி இறைஞ்சுவம்.
பெரும, வினையத்தேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளும். ஆளுடைய நம்பிகள்
சிறந்த ஒரு அன்பர். அடியேற்கு அடியேன் என்று பாடி உள் நெகிழ் பணிவும் கொண்டவர். ஐந்து
பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணக்கள் நான்கும் சிந்தையே ஆக குணம் ஒரு மூன்றும்
சாத்வீகனே ஆக - அவர்க்கு நேர்ந்த சிதம்பர ரகசிய அனுபவத்தை அருள்மொழி தேவர் அறிவிக்கிறார்.
அசட்டுத் தன்ம இல்லார்க்கு அன்பும் பணிவும் எளபதில் அமையும்.
அவைகளால் பல முகம் ஆன பவ பலம் காயும். புத, பொறி, கரண , புலன், குணம் அனைத்தும் ஒருமுகமாகும். சிறந்த இந்நிலையர்க்கு முத்தி சித்தக்கும். அன்பாக வந்து
உ ன்றாள் பணிந்து ஐம்பூத மொன்ற நினையாமல் பாவையரை அல்லவா தேடித் திரிகிறது பாவ மனம்.கண்டதை
எல்லம் விரும்பும் காரிகையர் கண்களில் கனலுகின்றன. ஆசைப் பெருகிற்கு அன்பு என்று பெயரிடுதல், மேற்பூச்சான பேச்சு.
கண்கள் வெளுப்பு. வெளுப்பின் நடுவில் கருப்பு. கருப்பின் நடுவில்
காள விடம். அதனில் மயங்குகிறது ஆண் உலகம். கமல மொட்டுப் போல் எடுப்பாக குயங்கள் இருக்கின்றன.
அவைகளைக் கண்ட அளவில் வெருட்சி கோர தாண்டவம் செய்து கொக்கரிக்கின்றது. கண்களில் தங்கி
குயங்களில் வெருண்ட அவைகள் பரவிய கூந்தலைப்
பார்கின்றது. தலையில் மலர்களைச் சூடுவர் அத்தையலர். மலரும் பருவ மலர்களின் தேனை உருஞ்சிப்
பருக வண்டுகள் ஓடி வருகின்றன. வட்டமிட்டு பறக்கின்றன. பாடுகின்றன.
இந்த ஆடல் பாடல் அசைவுகளால் அரும்புகளின் சிறு வாய்கள் சிறிது
சிறிதாக திறக்கின்றன. உள் நுழைந்து வண்டுகள் தேனை உண்கின்றன. கோதையர் விருந்தளித்தார்
என்று புகழ்ந்து கொண்டாடுகின்றன. அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும் கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடு
கின்ற குழலார் அவர்.
இயற்கை அழகுள்ள மாதர்கள் செயற்கைக் கோலம் வேறு செய்து கொள்வர். இயற்கை செயற்கை இரண்டிலும் இறை இருப்பைக் காண்பது
அறிவுடையாருக்கு அழகு. காண்பார் மன நிலைக்குத் தக்கபடி ஆக்கமும் அழிவும் அதிகரிக்கும்.
மலரில் உள்ள தேனைப்பருக தலைமேல் ஆடிப்பாரும் அக்ரிணை வண்டு.
அறிவுடைய ஆண்மகனோ உயர் திணை. ஆ, கண்களோ கருவிடம் .குயங்களோ மலர் மொட்டுகள், வண்டு பாடி ஆடும் நேச வனிதா மணிகள் என்று அவர்கள் கோலத்தை நெஞ்சில்
கொண்டு கொண்டதை நீள நினைந்து நினைந்து மலைந்து
நோக்கி நோக்கி என்றும் ஆடவர் பேதமை எய்துவர். மன்
பேது மண்டி மலைந்து இதன் பயனாக மேனி மெலிந்து கண்கள் இருண்டு செவிகள் இரண்டும்
செவிடாகி, சீ சீ என்ன சங்கடமான சூழ்நிலை.
அலைகள் தரையை நோக்கி ஆரவாரித்து வரும். கரையில் மோதி உடைந்து
கரைந்து திரும்பும். ஒருநாளும் ஓய்ந்தது இல்லை இந்த நிலை. இதே நிலையில் காரிகையர் முன்
ஆரவாரித்து அணுகல் ,அடுத்து குன்றிய நிலையில் அகலல், மீண்டும் நெருங்கல், மெலிந்து பின் வாங்கல், இப்படியே குன்றி மலைந்து நிலை குலைகிறது
உலகம். அடியேன் அங்ஙனம் ஆகேன்.
காந்த சக்தி போல் தம்மைக் கவரும் தலைவியரை காந்தாமணி, காந்தை என்று அழைப்பர் ஆடவர். காந்தா, வந்தேன் வந்தேன் என்று வருவர் வனிதையர்.
இருவரும் உறவு பூண்டு அலைந்து மலைந்து குன்றுவது அனுபவம். அவர்கள் எப்படியானாலும் போகட்டும்.
காந்தா காந்தா என்று
அழைத்துக் கொள்ளும் அவர்கட்கு மாறாக
அடியேன் கந்தா கந்தா என்று ஆர்வமோடு உம்மையே அழைப்பன். அந்த அழைப்பு முடியும்
முன் வெற்றிக்கு உடையவன் அடியேன் எனலை அகில உலகும் அறியுமாறு அரள் நாத வெற்றிச் சேவலுடன்
எளிய என் முன் எழுந்தருள் பெரும, இன்பருள் என்று வினயம் கொண்டு விண்ணப்பித்த
படி

No comments:
Post a Comment
Your comments needs approval before being published