F

படிப்போர்

Thursday, 13 December 2012

181.புற்புதமென

                  தத்த தனதான தத்த தனதான
                  தத்த தனதான                தனதான

    புற்பு தமெனாம அற்ப நிலையாத
       பொய்க்கு டில்குலாவு             மனையாளும்
    புத்தி ரரும்வீடு மித்தி ரருமான
       புத்தி சலியாத                         பெருவாழ்வு
    நிற்ப தொருகோடி கற்ப மெனமாய
       நிட்டை யுடன்வாழு              மடியேன்நான்
    நித்த நினதாளில் வைத்த தொருகாதல்
       நிற்கும் வகையோத                  நினைவாயே
    சற்ப கிரிநாத முத்த மிழ்விநோத
       சக்ர கதைபாணி                       மருகோனே
    தர்க்க சமண்மூகர் மிக்க கழுவேற
       வைத்த வொருகாழி                 மறையோனே
    கற்ப வழுவாது வெற்ப டியின்மேவு
      கற்றை மறவாணர்                   கொடிகோவே
    கைத்த அசுரேசர் மொய்த்த குலகால
      கற்ப தருநாடர்                         பெருமாளே
-181 திருச்செங்கோடு

பதம் பிரித்தல்

   புற்பதம் என நாம அற்ப நிலையாத
   பொய் குடில் குலாவும் மனையாளும்

புற்பதம் என = நீர்க் குமிழி என்னும்  நாமம் = பேர் படைத்து அற்ப = சிறிதளவும் நிலையாத = நிலைத்திராத பொய்க் குடில் = இவ்வுடலுடன் குலவும் = விளங்கும் மனையாளும் = மனைவியும்.

   புத்திரரும் வீடு மித்திரருமான
   புத்தி சலியாத பெரு வாழ்வு

புத்திரரும் = புத்திரரும் வீடு மித்திரரும் ஆன = வீடு, நண்பர்கள் ஆகிய (சூழலில்) புத்தி சலியாத = மனம் சோர்வு அடையாமல் பெரு வாழ்வு = இந்தப் பெரு வாழ்வு.

   நிற்பது ஒரு கோடி கற்பம் என மாய
   நிட்டையுடன் வாழும் அடியான் யான்

நிற்பது = நிலைத்து நிற்பது ஒரு கோடி கற்பம் என = ஒரு கோடி காலம் என்னும் மாய = மாய மயக்க நிட்டையுடன் = தியான நிலையில் வாழும் அடியேன்
நான் = வாழ்கின்ற அடியேனாகிய நான்.

   நித்த(ம்) நின தாளில் வைத்தது ஒரு காதல்
   நிற்கும் வகை ஓத நினைவாயே

நித்த(ம்) = தினந்தோறும் நின தாளில் =  உனது திருவடியில் வைத்த = வைத்த ஒரு காதல் = ஓர் ஆசை நிற்கும் வகை = நிலைத்து நிற்கும் வழியை ஓத = (அடியேனுக்கு) உபதேசிக்க நினைவாயே = நினத்தருள வேண்டுகின்றேன்.

   சற்ப கிரி நாத முத்தமிழ் விநோத
   சக்ர கதை பாணி மருகோனே

சற்பகிரி நாத = பாம்பு மலையாகிய திருச்செங் கோட்டு நாதனே முத்தமிழ் விநோத = முத்தமிழில் மகிழ்பவனே சக்ர கதை பாணி = சக்கரம், கதை இவைகளைக் கரத்தில் கொண்ட (திருமாலின்) மருகோனே = மருகனே.

   தர்க்க சமண் மூகர் மிக்க கழு ஏற
   வைத்த ஒரு காழி மறையோனே

தர்க்க சமண் = வாது செய்த சமணர்களாகிய மூகர் = ஊமைகளை மிக்க கழு ஏற = நிறைந்த கழுவில் ஏற வைத்த வைத்த ஒரு   ஒப்பற்ற  காழி மறையோனே = சீகாழியில் அந்தணனாகிய ஞான சம்பந்தராக அவதரித்தவனே.

   கற்பு வழுவாது வெற்பு அடியில் மேவு
   கற்றை மற  வாழ்நர் கொடி கோவே

கற்பு வழுவாது = கற்பு நிலை தவறாமல் வெற்பு அடியில் = (வள்ளி) மலை அடிவாரத்தில் மேவு = இருந்த கற்றை = கூட்டமான, மற வாணர் = வேடர்களின் கொடி கோவே = கொடி போன்ற மகளான வள்ளியின் தலைவனே
   கைத்த அசுரேசர் மொய்த்த குல கால
   கற்ப தரு நாடர் பெருமாளே.

கைத்த = (தேவர்கள்) வெறுத்த. அசுரேசர் = அசுரத் தலைவர்களின் மொய்த்த = நெருங்கிய குல கால = குலத்துக்குக் காலனாக இருந்தவனே கற்ப தரு நாடர் = கற்பக மரங்கள் உள்ள நாட்டில் வாழும் தேவர்கள் பெருமாளே = பெருமையில் மிகுந்தவரே.

சுருக்க உரை

நீர்க் குமிழி என்று பேர் படைத்து, சிறிதளவும் நிலைத்து இல்லாத இவ்வுடல்,வீடு,
நண்பர், மனைவி என்னும் மயக்கத்தில் வாழும் நான் இவைகளை நிலையாக இருப்பவை அல்ல என்பதை உணர்ந்து, நாள் தோறும் உனது திருவடியில் ஆசையை நிலைத்து நிற்கும் வழியை அடியேனுக்கு உபதேசம் செய்ய வேண்டுகின்றேன்.

திருச்செங்கோட்டு நாதனே. முத்தமிழில் மகிழ்பவனே. சக்கரம், கதை இவைகளைக்
கையில் ஏந்திய திருமாலின் மருகனே. வாது செய்த சமணர்களைக் கழுவில் ஏற்றி வைக்க, சீகாழியில் சம்பந்தராக அவதரித்த மறையோனே. வள்ளி மலை அடிவாரத்தில் இருந்த வேடர்களின் பெண்ணாகிய வள்ளியின் தலைவனே. அசுரத்
தலைவர்களை அழிக்க யமனாக இருந்தவனே. கற்பக மரங்கள் உள்ள தேவர்கள் பெருமாளே. உன்னை எப்போதும் நினைக்க அருள் புரிவாயாக.

விளக்கக் குறிப்புகள்

 கற்பம் = பிரமனது ஒரு நாள் 432 கோடி ஆண்டுகள் ஆகும் என்பர்.

ஒப்புக
முத்தமிழ் விநோதன்.....
அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும்
தமிழ்த்ரய விநோதக் கலாதரனும்)...                                     வேடிச்சி காவலன் வகுப்பு.
    
பொற்பலகை மீதமர் தமிழ் த்ரய விநோதக் காரனும்
                                                                                   ...     திருவேளைக்காரன் வகுப்பு  
முத்தமிழ் விநோதா கீதா..                                                .திருப்புகழ், மைக்குலொத்த.

.  தர்க்க சமண் மூகர் மிக்க எழி கழு...
   
    திகுதிகென மண்ட விட்ட தீயொரு
    செழியனுடல் சென்று பற்றி வாருகர்
    திகையினமண் வந்து விட்ட போதினும் அமையாது                           .திருப்புகழ், திடமிலிசற்.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published