F

படிப்போர்

Saturday, 1 December 2012

171.அந்தோமனமே

தந்தானன தானன தாத்தன
தந்தானன தானன தாத்தன
தந்தானன தானன தாத்தன          தனதான

   அந்தோமன மேநம தாக்கையை
     நம்பாதெயி தாகித சூத்திர
       மம்போருக னாடிய பூட்டிது         இனிமேல்நாம்
   அஞ்சாதமை யாகிரி யாக்கையை
     பஞ்சாடிய வேலவ னார்க்கிய
       லங்காகுவம் வாஇனி தாக்கையை       ஒழியாமல்
   வந்தோமிது வேகதி யாட்சியு
     மிந்தாமயில் வாகனர் சீட்டிது
      வந்தாளுவம் நாமென வீக்கிய              சிவநீறும்
   வந்தேவெகு வாநமை யாட்கொளு
     வந்தார்மத மேதினி மேற்கொள
      மைந்தாகும ராவெனு மார்ப்புய           மறவாதே
   திந்தோதிமி தீதத மாத்துடி
     தந்தாதன னாதன தாத்தன
      செம்பூரிகை பேரிகை யார்த்தெழ      மறையோதச்
   செங்காடென வேவரு மூர்க்கரை
     சங்காரசி காமணி வேற்கொடு
       செண்டாடிம காமயில் மேற்கொளு    முருகோனே
   இந்தோடிதழ் நாகம காக்கடல்
     கங்காளமி னார்சடை சூட்டிய
       என்தாதைச தாசிவ கோத்திர           னருள்பாலா
   எண்கூடரு ளால்நௌவி நோக்கியை
     நன்பூமண மேவிசி ராப்பளி
       யென்பார்மன மேதினி நோக்கிய       பெருமாளே
  171 திரிசிராப்பள்ளி

பதம் பிரித்து உரை

    அந்தோ மனமே நமது யாக்கையை
    நம்பாதே இதம் அகிதம் சூத்திரம்
    அம்போருகன் ஆடிய பூட்டு இது இனி மேல் நாம்
அந்தோ மனமே = யோ, மனமே நமது யாக்கையை நம்பாதே= நமது உடலை நம்பாதே. இதம் = (ஏனெனில் இவ்வுடல்) இன்பத்துக்கும் அகிதம் = துன்பத்துக்கும். சூத்திரம் = ஒரு பொறியாக இருக்கின்றது. அம்போருகன் = தாமரை மேல் இருக்கும் பிரமன் ஆடிய பூட்டு இது =  ஆய்ந்து செய்த பூட்டு இதுவாகும். இனி மேல் நாம் = இனி மேல் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்.

    அஞ்சாது அமையா கிரி யாக்கையை
    பஞ்சாடிய வேலவனார்க்கு இயல்
    அங்கு ஆகுவம் வா இனிது யாக்கையை ஒழியாமல்

அஞ்சாது = பயப்படாமல் அமையா = பொருந்தி இருந்து கிரி யாக்கையை = கிரவுஞ்ச மலையின் உடலைப் போல் பஞ்சாடிய = சிதற அடித்த வேலவனார்க்கு = வேலவர்க்கு இயல் = நீங்காத  அங்கு ஆகுவம்  இனிது வா = அன்புடை யோமாவோம்,  இன்பத்துடனே வருவாயாக. (இந்த உடலை வீணாக்காமல் வேலவர்க்கு அடிமைப் படுவோம் என்றபடி).

    வந்தோம் இதுவே கதி ஆட்சியும்
    இந்தா மயில் வாகனர் சீட்டு இது
    வந்து ஆளுவம் நாம் என வீக்கய சிவ நீறும்

வந்தோம் = அங்ஙனம் அன்படிமைப்பட வந்து விட்டோம் இதுவே கதி ஆட்சியும் = இது தான் நற் கதி தந்து நம்மை ஆள்வதற்கு வழி இந்தா = தோ பார் மயில் வாகனர் சீட்டு இது = மயில் வாகனப் பெருமான் ஆளுவோம் என்பதற்கு அறிகுறியாக அவர் தந்த சீட்டும் இது வந்து ஆளுவம் நாம் = நாம் வந்து ஆட் கொள்ளுவோம் எனக் கூறி வீக்கிய = விரும்பிய (கட்டித்தந்த) சிவ நீறும் = சிவ நீற்றுப் பொட்டணமும்
   
    வந்தே வெகுவா நமை ஆட் கொளு
    வந்தார் மதம் ஏது இனி மேற்கொள
    மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே

வந்தே வெகுவா = (ஆதலால் அவர்) வந்து அநேகமாக நமை ஆட்கொளு வந்தார் = நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்து வந்துள்ளார் மதம் ஏது இனி மேற் கொள = இதனினும் நாம் மேற் கொள்ள வேண்டிய சமய வழிபாடு வேறு என்ன உள்ளது? மைந்தா, குமரா எனும் = மைந்தனே, குமரனே என்னும் ஆர்ப்பு = நிறை பேரொலியை உய = ஈடேற வேண்டி மறவாதே = மறவாமல் ஓதுக.

    திந்தோதிமி தீதத மா துடி
    தந்தாதன னாதன தாத்தன
    செம் பூரிகை பேரிகை ஆர்த்து எழ மறை ஓத

திந்தோதிமி...= திந்தோதமி....... என்று. மா துடி = சிறந்த உடுக்கையும் செம் பூரிகை = செவ்விய ஊது குழலும் பேரிகை = முரசும் ஆர்த்து எழ = சப்தித்து ஒலியை எழுப்ப மறை ஓத = வேதங்கள் முழங்க.

    செம் காடு எனவே வரும் மூர்க்கரை
    சங்கார சிகாமணி வேல் கொடு
    செண்டு ஆடி மகா மயில் மேல் கொளு முருகோனே
செங் காடு என = சிவந்த காடு போன்று (இரத்தம் பெருக) வரும் மூர்க்கரை = வந்த மூடர்களான அசுரர்களை  சங்கார = சங்காரம் செய்த சிகாமணி = சிகா மணியே வேல் கொடு = வேலாயுதத்தால் செண்டாடி = நிலை குலைத்தவனே மகா மயில் மேல் கொளும் முருகோனே = பெருமை மிக்க மயில் மீது ஏறிவரும் முருக வேளே
   
    இந்தோடு இதழ் நாகம் மகா கடல்
    கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய
    என் தாதை சதா சிவ கோத்திரன் அருள் பாலா

இந்தோடு = பிறை நிலாவுடன் இதழ் = இதழி (கொன்றை) நாகம் = பாம்பு மகாக் கடல் = பெருங் கடல் போலப் பெருகி வரும் கங்கை கங்காளம் = எலும்புக் கூடு மின் ஆர் சடை = (இவைகளை) மின் போன்ற ஒளி விடுகின்ற சடையில். சூட்டிய = தரித்துள்ள. என் தாதை = என்னுடைய தந்தையாகிய சிவபெருமான் சதாசிவ கோத்திரன் = சதாசிவ வர்க்கத்தான் அருள் பாலா = பெற்றருளிய பாலனே.

    எண் கூடு அருளால் நௌவி நோக்கியை
    நல் பூ மணம் மேவி சிராப்ப(ள்)ளி
   என்பார் மனம் மேதினில் நோக்கிய பெருமாளே.

எண் கூடு = (அபரீதமான திருவருளால்) மதிப்பு கலந்த திருவருளால் நௌவி நோக்கியை = மான் போன்ற கண்ணை உடைய (பார்வையை உடைய) வள்ளியை நல் பூ மணம் மேவி = சிறந்த அழகிய (களவியல்) வழியில் திருமணம் விரும்பிச் செய்து. சிராப்பள்ளி என்பார் = திரிசிராப் பள்ளி என்னும் தலப் பெயரை செபிப்போர் மனம் மேதினில் = உள்ளமாகிய பூமியில் நோக்கிய பெருமாளே = வீற்றிருக்க விரும்பும் பெருமாளே.

சுருக்க உரை

மனமே, நீ இந்த உடலை நம்பாதே. இது இன்பத்துக்கும் துன்பத்துக்கும்
இடமான ஒரு கருவியாகும். பிரமன் செய்த ஒரு பூட்டு இது. நாம் செய்ய வேண்டியது பின் வருமாறு.

பயப்படாமல் அமைதியாக இருந்து, இவ்வுடலை வீணாக்காமல்
வேலவர்க்கு அன்பு அடிமைப் படுவோம். இதுவே நமக்கு நற்கதியாகும். நம்மை ஆள்வதற்கு மயில் வாகனப் பெருமான் வந்துள்ளார் என்பதற்கு அறிகுறியாக இதோ பார் அவர் தந்த அனுமதி சீட்டும், சிவ நீறும். இதை விட நாம் மேற் கொள் வேண்டிய சமய நெறியாது உள்ளது? மைந்தா, குமரா என்று மறக்காமல் ஓதவும்.

பேரிகைகள் முழங்க, சண்டை செய்ய வந்த மூர்க்கரான அசுரர்களை
சங்காரம் செய்த சிகா மணியே, மயில் வாகனனே, பிறை, கொன்றை,
கங்கை, இவற்றைச் சடையில் தரித்த சிவபெருமான் அருளிய
பாலனே, வள்ளியைக் களவியல் முறைப்படி மணம் செய்து, திரிசிராப் பள்ளியில் வீற்றிருக்கும் பெருமாளே, மைந்தா, குமரா என்னும் ஆர்ப்பு உய்ய மறவாதே

ரசபதி விளக்கம்

மனமே
கோள்களும் நாட்களும் கொக்கரித்தாலும் இடையூறு பிறருக்கு, நமக்கில்லை என எண்ணிச் செய்குவை. பக்கத்து வீட்டார் படுக்கை ஆயினார்.  எதிர் வீட்டுக் காரர் இறந்து போயினர். இதைக் கண்டிருந்தும்  இன்னும் பல கேடுகளைப் பார்த்திருந்தும் என்றும் நாம் இருப்பம் என்று இருமாப்பு வைத்தனை. பொல்லாத உன் போக்கை புரிந்து கொள்ள முடியவில்லை. அறுபது தத்துவங்கள் தனித் தனியே அமைந்தவை. அவைகளை ஒன்று கூட்டி கட்டி வைத்த இத்தேகம்  ஒரு கட்டிடம். வெளுத்த நரம்பும் உலுத்த தோலும் இழுத்து கட்டிய கூடு எனும் இந்த உடல்  ஒவ்வொரு தத்துவமாக பிரமன் பூட்டி வைத்த ஒரு பூட்டு. இது பல இன்ப துன்ப அனுபவ எந்திரம். கட்டிடம் இடிந்து விழும், கூடு ஒரு நாள் குலைந்து விடும். தெரிந்த எந்திரம் தேய்ந்து விடும்        

அந்தோ   மனமே   நமது  ஆக்கையை
நம்பாதெ  இதம்  அகிதம் சூத்திரம்
அம்போருகன நாடிய பூட்டி இது 

தொன்டை விக்கிக் கொள்ளுமோ? கண் பஞ்சடைந்து போகுமோ? சண்டமாருத வேகத்தல் பிராணன் சஞ்சாரம் செய்யுமோ?எந்த நேரத்தில் என்ன நேருமோ? எண்ணும் போதே உடல் ஆட குடல் தான் புரண்டு குழம்புகிறதே. அஞ்சாமல் இருக்கலாம் என்றால் ஆவது இல்லையே. ஆகிற காலத்தில் பார்த்துக் கொள்ளலாம்  இப்போது அவைகளை என்னாதே. பேசாதே எனில் ஆம் ஆம் ஜாதகப் படி இன்னும் எனக்கு ஆயுள் உண்டு. தேகத்திடம் உண்டு எனத் தைரியம் கொள்ளலாம். எனினும் பல சமயங்களில் டொண் டொண் என்று எழுப்புகிற சாப்பறை உண்டு உண்டு என பரிகசிப்பது போல் பயங்கரமாக ஒலிக்கிறதே.
இனிமேல் நாம் அஞ்சாது அமையா 

அகங்காரம் மலை உருவாகி அமரர் முனிவரை அலறச் செய்தது. அம்மலையை நொருங்க வைத்து அன்பரைக் காத்தவன் ஞானவேல் அம்மான். பரந்த உலகில் பாசம் கொண்டு பட்ட பாடு போதும் போதும். பாழும் அஞ்ஞான பாசந்தான் அநியாய பல பிறப்பை அளிக்கிறது இனியேனும் சத்தி ஞான சக்தி தரன் இடத்தில் பரம அன்பாம் பாசம் வைப்பம்.

கிரி ஆக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு இயல் அங்காகுவம்

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை தந்த தலைவனை சூழ்த்த மா மலர் கொண்டு துதியாதே வீழ்தவா வினையேன் நெடுங்காலமே - தேவாரம்  என்று திருமறையை எண்ணியபடி விணாக உடலில் முயற்சியை விரயம் செய்யோம். செவ்வேள் பரமன் சன்னதியில் சேவிப்போம்.

அங்கு இனிது வா ஆக்கையை ஒழியாது வந்தோம்

இதுவரை விதி வழி சென்ற மதி ஆட்சி இறைவனை வழிபட வந்த இந்த ஒன்று பயன் விளைய நம்மை ஆளும் பதி ஆட்சி.

இதுவே கதி ஆட்சியும் என நம்பு

ஆவரண சக்தி, ஓங்கார கோலம்குடிலுயின் சொரூபம் எனும் மயிலேறும் ஞெபருமான் மேல் அன்பு கொள். வாழ்விக்கும் எனது சன்னிதிக்கு வா நற்பேறு என்று இதையே நம்பு என்று எம்மான் ஆகம உருவில் எழுதி வைத்துள்ள அறிக்கையான இது தான் மயில் வாகனர் சீட்டு. என்னைத் தேடி நீ ஏமாந்து போகாதே. ஆலயத்திற்கு வந்து உன் அன்பைக் காணிக்கை ஆக்குவையேல் வலிய நாமே வருவேம். காணுமாறு எம்மை உனக்குக் காட்டுவம். அருளோடு நின்று ஆட்கொள்ளுவம் என்று அருளி அதற்கு அடையாளமாக அப்பரமன் அழுந்தத் தரித்துள்ள பேறான விபூதியை நீ பெற்றுக் கொள். - நின்று பாடும் இவன் தன் ஆவை இடர் தவிர்ப்பர் ஆதலின் நீறு கொண்டு மூன்று ரேகை நெற்றி மீதில் எழுதுமே - எனும் ஆன்றோர் அறிவிப்பையும் நீ அறிந்துளை. அதே செய்தியைத் தான் ஆண்டவன் வந்தாளுவம் நாம் என வீக்கிய சிவ நீறு என்று குறிப்பாக நானும் கூறுகிறேன்  இந்த புனித விபூதியை நீயும் நன்றாகப் பூசிக் கொள்.

நித்தியம் இவ் வழிபாடு நிகழுமாயேல் காணொணாதது பேசொணாதது வெளியே ஒளியது துரிய அதீதமானது என உள சொரூபப் பெருமான் நம்பால் கொண்ட நல் அருளால் தடத்த தடத்த உருவில் காணுமாறு தம்மைக் காட்டுவான். அரிய பல வகையில்  நம்மை ஆட்கொள்ளும் பொருட்டு ஆனந்த மூர்த்தமாக சன்னிதியில் அமர்ந்துளன். இந்த அருமையைத் தான் வந்தே வெகுவாக நம்மை ஆட்கொள வந்தார் என்று உணருமாறு உனக்கு மனமே உணர்த்துகிறேன்.

இடத்திற்கும், காலத்திற்கும், ஊழிற்கும், இருக்கும் உணர்விற்கும் தக்கபடி  எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. எனினும் எளிது பயன்தரும் இதற்கு மேற்பட்ட சமயம் இந்த உலகில் இல்லை அதனால் தான்இனி மேற்கொள மதம் ஏது என்றேன். இதுவரை
இறைவ நின் அறக்கருணை. இனி மறக்கருணை. கொதிக்கும் கண்ணர், கோபக் கனலர், வெடிக்கும் சொல்லர், அடர்ந்த காடு போல் வந்து ஆரவாரிக்கும் அவுணர்கள், அமலரது அருள் ஆக்கம் அறியார். அறிந்து வழிபடுபவரையும் அழியச் செய்தனர். அதனால் உத்தம பத்தர்கள் ஓலமிட்டு அலறினர். அதை அறிந்து உடுக்கை, ஊரிகைபேரிகை முதலிய பறைகள் ஒலியைப் பரப்ப வேதங்கள் ம்ருத்த நாச மந்திரங்களை ஒலிக்க ஆக்ரமித்த அவுணர்களை அழிக்க நினைத்தீர்.

அகத்தில் ஆணவ கண்டனம், அநியாய வாதிகளை புறத்தில் அழித்தல், உத்தம உயிர்களில் ஒளியைப் பாய்ச்சி தாபம் மிகுவிக்கும் இளைப்பைத் தவிர்த்தல்  முதலிய விவரமான சேவைகளைச் செய்யும் வேல் சங்கார சிகாமணி எனும் பெயர் பெறும்.

கிரி யாக்கையை பஞ்சாடி அவ்வேலை ஏவி அவுணர்களைச் செஞ்சாடினீர்.  இது உமது மறக்கருணை. மாமயில் மேல் கொளும் முருகோனே

பிரணவம் ஐந்து. அவைகளுள் இரண்டாவது பிரணவம் ஜகத் காரண காமராஜபீடம். அதன் பிரதிநிதியே மூன்றாம் பிறை. மகரந்தம் ஓம். ஐந்து இதழ்களும் ஐந்தெழுத்து. இதன் பெயர் கொன்றை. பரிக்ரக சக்தியே பாம்பு இதனுடன் அப்பரிக்ரக கங்கை இவைகளை மின் வண்ணச் சடையில் மிளிர வைக்கும் எம் பரம பிதா. அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவுரு ஒன்று இந்த நவம் தரும் பேதமாக நாடகமாடும் அந்த நம்பர் நாதகோத்திரர். நாதப்பிரபலர். ஆதலின் சதாசிவ கோத்திரர் எனப்படுவர்.

இந்தோடு  இதழ் நாக  மகாக்கடல்
கங்காள   மினார்   சடை சூட்டிய
என்தாதை   சதாசிவ கோத்திரன் அருள்பாலா

மான் பெற்ற மகளார் வள்ளி அம்மை. அதற்கு ஏற்ப மருளின் கண்ணினார் ஆதலின் அவர் நௌவி நோக்கினார் ஆகிறார். புறத்தில் புனம் காத்தார். அகத்தில் தவம் வளர்த்தார். குவித்த அவர் மனதில் திருவருள் கூட்டு செய்தது. அந்நிலையாரை ஏற்பம் என்பதற்கு அறிகுறியாக புறத்தவர் அறிய அவரை திருமணம் செய்து கொண்டம்.

எண்கூடு அருளால் நௌவி நோக்கியை
நன்பூமண மேவி   

என்ன அருமை.
அரிச்சிராபகல் ஐவரால் ஆட்டுண்டு சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக் கேள்  திரிச்சிராப்பளி என்னலும் தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே - தேவாரம். இப்பெயர் சொன்னதும் வினை ஒழியும் என்று அனுபவர் கூறினர் அப்பர் பெருமான். திருசிராப்பள்ளி என தினமும் ஓதுவார் உள்ளம் ஒரு நிலம். அந்த நிலத்தில் அருளோடு நோக்கி எழுந்தருளி பெருமித ஆட்சி செய்யும் பெருந்தகையே உம்மை சிராப்பளி என்பார் மன மேதினி நோக்கிய பெருமாளே என முதன்மைப் பெயரால் அழைப்பது தான் முறை.

மைந்தா, குமரா, மறை நாயகனே முருகோனே, அருள் பால், பெருமாளே என்று அறுமுகனை அன்போடு கூவி அழைத்துக் கொண்டே இரு. மறந்திடாதே. உய்யும் வழி இது ஒன்று தான் உளது என்று உருகா மனம் உருகி ஒத்துழைக்குமாறு அந்த மனத்திற்கு வினயம் காட்டி விண்ணப்பித்தபடி இந்தத் திருப்புகழ்.
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published