தனன தனனத்
தனதானா
பகலி ரவினிற் றடுமாறா
பதிகு ருவெனத் தளிபோத
ரகசி யமுரைத் தனுபூதி
ரதநி லைதனைத் தருவாயே
இகப ரமதற் கிறையோனே
இயலி சையின்முத் தமிழோனே
சகசி ரகிரிப் பதிவேளே
சரவ ணபவப் பெருமாளே
-174சிராப்பள்ளி
பதம் பிரித்து உரை
பகல் இரவினில் தடுமாறா
பதி குரு என தெளி போத
பகல் இரவினில் = பகல், இரவு என்னும்
வேற்றுமை நிலையில்
தடுமாறா = தடு மாற்றம் அடையாமல் பதி = ஆண்டவன் எனவும் குரு என = குரு
எனவும் தெளி = தெளிவு தரும் போத = ஞான.
ரகசியம் உரைத்த அனுபூதி
(இ)ரத நிலை தனை தருவாயே
ரகசியம் உரைத்து =
ரகசிய உபதேசத்தைப் போதித்து அனுபூதி = திருவருட் பேறு என்கின்ற இரத = இனிய நிலை தனை = நிலையை தருவாயே
= தந்து அருள்க.
இக பரம் அதற்கு இறையோனே
இயல் இசையின் முத்தமிழோனே
இக பரம் அதற்கு = இம்மைக்கும்
மறுமைக் கும் இறையோனே = தலைவனாய்
நிற்பவனே இயல் இசையின் = இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோனே = முத்தமிழுக்கும்
உரியவனே
சக(ம்) சிரகிரி பதி வேளே
சரவணபவ பெருமாளே.
சக(ம்) = பூமியில்
சிரகிரிப் பதி வேளே= சிர கிரி என்னும் தலத்தில் எழுந்தருளிய சரவணப்
பெருமாளே = சரவணத்தில் உதித்த பெருமாளே .
சுருக்க உரை
பகல் இரவு என்னும் வேற்றுமை நிலைகளில் நான் தடுமாறாமலும், ஆண்டவன் என்றும், குரு என்றும் தெளிவு தரும் ஞானமாகிய ரகசிய
உபதேசத்தைப் போதித்து, உன் திருவருளைத் தந்து அருள்க. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக நிற்பவனே, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் உரியவனே. சிரகிரி என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே. சரவணப் படுகையில் உதித்த பெருமாளே.
விளக்கக் குறிப்புகள்
1. பகல் இரவினில் தடுமாறா....
தத்துவங்களின் தொழில் பாடின்றி ஆணவ மலத்தோடு மாத்திரம் கூடியிருக்கும்
ஆன்மாவின் கேவல நிலை.
ஒப்புக:
வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற.............திருப்புகழ், முகத்தைமினுக்கி.
இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே.............கந்தர் அலங்காரம்.

No comments:
Post a Comment
Your comments needs approval before being published