256
திருமயிலை
தனதனாதன தானன தந்தத் தனதான
அறமிலாவதி பாதக வஞ்சத் தொழிலாலே
அடியனேன்மெலி வாகிம னஞ்சற் றிளையாதே
திறல்குலாவிய சேவடி வந்தித்
தருள்கூடத்
தினமுமேமிக வாழ்வுறு மின்பைத் தருவாயே
விறல்நிசாசரர் சேனைக ளஞ்சப்
பொரும்வேலா
விமலமாதபி ராமித ருஞ்செய்ப் புதல்வோனே
மறவர்வாணுதல் வேடைகொ ம்பொற் புயவீரா
மயிலைமாநகர் மேவிய கந்தப் பெருமாளே
பதம் பிரித்தல்
அறம் இல் அதி பாதக வஞ்ச தொழிலாலே
அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே
அறம் இலா = தருமமே இல்லாத அதி பாதக = மிகவும்
பாவகரமான வஞ்சத் தெழிலாலே = வஞ்சனை கொண்ட செயல்களாலே அடியனேன் மெலிவாகி =
அடியவனாகிய நான் தளர்ச்சி உற்று மனம் சற்று இளையாதே = மனம் கொஞ்சமும் சோர்வு அடையாமல்
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட
தினமுமே மிக வாழ்வு உறும் இன்பை தருவாயே
திறல் குலாவிய = வெற்றி விளங்கும் சேவடி வந்தித்து = திருவடிகளைப் போற்றி வணங்கி அருள் கூட = உனது திருவருள் கூடுமாறு தினமுமே மிக வாழ்வுறு = நாள் தோறும் நல்ல வாழ்வு தரும் இன்பத்தைத் தருவாயே = இன்பத்தைத் தந்து அருளுக.
விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா
விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே
விறல் = வீரம் வாய்ந்த நிசாசரர் = அசுரர்களுடைய
சேனைகள் அஞ்ச = சேனைகள் பயப்படும்படி பொரும் வேலா = போர் செய்த வேலனே. விமல = பரிசுத்த மூர்த்தியே மாது அபிராமி = தாய்
அபிராமி தரும் = பெற்ற செய்ப் புதல்வோனே
= செந்நிறத்த குழந்தையே
மறவர் வாள் நுதல் வேடை கொளும் பொன் புய வீரா
மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே.
மறவர் = வேடர்களுடைய வாள் = ஒளி பெற்ற நுதல் = நெற்றி உடைய (வள்ளி நாயகி) வேடை கொள்ளும் = விருப்பம் கொள்கின்ற பொன் புய வீரா = அழகிய புய வீரனே மயிலை மா நகர் மேவிய = மயிலை மாநகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே.
சுருக்க உரை
தருமமே இல்லாத பாவமும் வஞ்சகமும் கொண்ட செயல்களால்
அடியவனாகிய நான், மெலிந்து மனம் சோர்வு அடையாமல், வெற்றி விளங்கும் உனது செவ்விய
திருவடியைப் போற்றி வணங்கி, உன் திருவடியைக் கூடுமாறு நல்ல
வாழ்வைத் தந்து அருள வேண்டும்.
வீரம் வாய்ந்த அசுரர்களுடைய சேனைகள் அஞ்ச சண்டை செய்த வேலனே,பரிசுத்த
மூர்த்தியே, வேடர் பெண்ணான வள்ளியின் மீது பற்று கொண்ட புய வீரனே, மயிலை நகரில்
வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே, உனது திருவடி இன்பத்தைத் தருவாயாக.
விளக்கக் குறிப்புகள்
செய்ப் புதல்வோனே....
பொய்யா மறையோனும் பூமி
அளந்தோனும் போற்ற மன்னிச்
செய் ஆர் எரி ஆம்
உருவம் உற வணங்கும் திரு நணாவே
----
சம்பந்தர் தேவாரம்.
புதல்வோனே .............
முருகோனே - என்ற
பொருளில் வந்தது.

No comments:
Post a Comment
Your comments needs approval before being published