F

படிப்போர்

Sunday, 18 August 2013

246.பச்சை யொண்கிரி

246
திருநள்ளாறு

தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் இருக்கும் கல்யாண சுப்பிரமணிய ஸ்வாமி பாதங்களில் காலணிகள் அணிதிருப்பது குறிப்படத்தக்கது. ஒரு கையில் பழமும், மற்றொருகை அபய ஹஸ்தமாக்கி மயில் மேல் அமர்ந்த் திருக்கோலம்.

                 தத்த தந்தன தானன தானன
                   தத்த தந்தன தானன தானன
                   தத்த தந்தன தானன தானன   தனதான

பச்சை யொண்கிரி போலிரு மாதன 
   முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்
   பற்று புண்டரி காமென ஏய்கயல்              விழிஞான
பத்தி வெண்டர ளாமெனும் வாணகை
  வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழழ் 
  பத்ம செண்பக மாமறு பூதியி                  னழகாளென்
றிச்சை யந்தரி பார்வதி மோகினி 
   தத்தை பொன்கவி னாலிலை போல்வயி 
   றிற்ப சுங்கிளி யானமி னூலிடை                  யபிராமி 
எக்கு லங்குடி லோடுல கியாவையு 
   மிற்ப திந்திரு நாழிநெ லாலற 
   மெப்பொ தம்பகிர் வாள்கும ராஎன          வுருகேனோ 
கச்சை யுந்திரு வாளுமி ராறுடை 
  பொற்பு யங்களும் வேலுமி ராறுள 
  கட்சி வங்கம லாமுக மாறுள                   முருகோனே 
கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற                                 
  சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென 
  கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற           விடும்வேலா 
நச்சு வெண்பட மீதணை வார்முகில் 
  பச்சை வண்புய லார்கரு டாசனர் 
  நற்க ரந்தது கோல்வளை நேமியர்            மருகோனே 
நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி 
  யிச்சை கொண்டொரு வாரண மாதொடு 
  நத்தி வந்துந ளாறுறை தேவர்கள்              பெருமாளே 

பதம் பிரித்தல் 

பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று 
இதம் பொறி சேர் குழல் வாள் அயில் 
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் விழி ஞான 

பச்சை = பச்சை நிறமுள்ளதும் ஒண் = ஒளி உள்ளதும் கிரி போல் = மலையைப் போல் இரு மா தனம் உற்று = இரண்டு பெரிய கொங்கைகளைக் கொண்டு இதம் = இன்பம்  அனுபவிக்கும் பொறி = வண்டுகள் சேர் குழல் = சேர்கின்ற கூந்தலையும் வாள் அயில் பற்று = வாள், அம்பு போன்றதும் புண்டரிகம் என ஏய் = தாமரையின் தகைமையது என்று சொல்லத் தக்கதும் கயல் விழி = கயல் மீன் போன்றதுமான கண்களையும் 

பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை 
வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ் 
பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று 

ஞான பத்தி = ஒழுங்கு வரிசையில் உள்ள வெண் தரளம் என்னும் = வெண்மையான முத்துக்கள் என்னும் படியான நகை = பற்களையும் வித்ருமம் இதழ் = பவளம் போன்ற இதழ் சிலை போல் நுதல் = வில்லைப் போன்ற நெற்றி பத்மம் செண்பகமாம் இதழ் = தாமரை, செண்பகம் இவைக்கு ஒப்பான இதழையும் (உடைய) அநுபூதியில் = ஞான அருட் பிரகாச அழகாள் என்று = அழகி எனப்படுபவள் 

இச்சை அந்தரி பார்வதி மோகினி 
தத்தை பொன் கவின் ஆல் இலை போல் 
வயிறு இல் பசும் கிளியான மின் நூல் இடை அபிராமி 

இச்சை அந்தரி = விரும்பும் எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் ஆகாய வாணி பார்வதி = பார்வதி மோகினி = பேரழகி தத்தை பொன் = கிளி, பொன் இவற்றின் கவின் = அழகு வாய்ந்த ஆல் இலை போல் வயிறு = ஆலிலையைப் போன்ற வயிறு இல் பசும் கிளியான = இல்லறம் நடத்தும் பச்சைக் கிளி போன்றவள்  நூல் இடை = நுண்ணிய இடையை உடைய அபிராமி = அழகி  

எக்குலம் (எக்)குடிலோடு உலகு இயாவையும் 
இல் பதிந்து இரு நாழி நெ(ல்)லால் அறம் 
எப்போதும் பகிர்வாள் குமரா என உருகேனோ 

எக்குலம் = எல்லாக் குலத்தாருக்கும் (எக்)குடிலோடு = எல்லா உடலுக்கும் உலகு இயாவையும் = உலகங்கள் எவைக்கும் இல் பதிந்து = இருந்த இடத்தில் இருந்தே இரு நாழி நெல்லால் = இரண்டு படி நெல் கொண்டு அறம் = (முப்பத்திரண்டு) அறங்களையும் எப்போதும் = எப்போதும் பகிர்வாள் = பங்கிட்டு அளிப்பவள் (ஆகிய ஏலவார் குழலியின்) குமரா = மகனே என = என்று உருகேனோ = (உள்ளம்) உருக மாட்டேனோ?

கச்சையும் திரு வாளும் ஈராறு உடை 
பொன் புயங்களும் வேலும் ஈராறு உள 
கண் சிவம் கமலா முகம் ஆறு உள முருகோனே 

கச்சையும் = அரையில் கச்சை திரு வாளும் = அழகிய வாள் ஈராறு உடை = பன்னிரண்டு பொன் புயங்களும் = அழகிய தோள்கள் வேலும் = வேல் ஈராறு கண் = பன்னிரண்டு  கண்கள் சிவம் கமலா முகம் ஆறும் = மங்களமான தாமரை  போன்ற ஆறு திரு முகங்கள் உள முருகோனே = இவைகளைக் கொண்ட முருகோனே 

கற்பகம் திரு நாடு உயர் வாழ்வு உற 
சித்தர் விஞ்சையர் மாகர் சபாசு என
கட்ட வெம் கொடு சூர் கிளை வேர் அற விடும் வேலா 

கற்பகம் திரு நாடு = கற்பக மரங்கள் உள்ள செல்வம் நிறைந்த பொன்னுலகம் உயர் வாழ்வு உற = உயர்ந்த வாழ்வைப் பெற சித்தர் விஞ்சையர் = சித்தர்களும், கற்றோர்களும் மாகர் = விண்ணுலகத் தேவர்களும் சபாசு என = சபாஷ் என்று மெச்சும் கட்ட = துன்பம் கொடுத்து வெம் கொடு = மிகக் கொடிய சூர் கிளை வேர் அற = சூரனுடைய சுற்றத்தார் யாவரும் வேரோடு அழிய விடும் வேலா = வேலைச் செலுத்தியவனே 

நச்சு வெண் பட மீது அணைவார் முகில்
பச்சை வண் புயனார் கருட ஆசனர் 
நல் கரம் தநு கோல் வளை நேமியர் மருகோனே 

நச்சு = விடம் கொண்ட வெண் பட மீது = வெண்ணிறப் படம் உடைய ஆதிசேடன் மேல் அணைவார் = துயிலும் முகில் பச்சை = மேக நிறம், பச்சை நிறம் கொண்ட வண் புயனார் = வளம் பொருந்திய புயத்தை உடையவர் கருட ஆசனர் = கருட வாகனம் கொண்டவர் நல் கரம் = நல்ல கையில் தநு கோல் வளை = வில், அம்பு சங்கு நேமியர் = சக்கரம் கொண்டவர் ஆகிய திருமாலின் மருகோனே = மருகனே 

நல் புனம் தனில்  வாழ் வ(ள்)ளி நாயகி 
இச்சை கொண்டு ஒரு வாரண மாதோடு 
நத்தி வந்து நள்ளாறு உறை தேவர்கள் பெருமாளே 

நல் புனம் தனில் வாழ் = நல்ல தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளி நாயகி = வள்ளியம்மை இச்சை கொண்டு = காதலைப் பெற்று ஒரு = ஒப்பற்ற வாரண மாதோடு = ஐராவதம் ஆகிய யானை வளர்த்த தேவசேனையோடு நத்தி = விரும்பி நள்ளாறு உறை = திருநள்ளாறு என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே = தேவர்கள் பெருமாளே 

சுருக்க உரை 

பச்சை நிறமுள்ளதும், ஒளி வீசுவதுமான மலை போன்ற இரு கொங்கைகளையும், வண்டுகள் விரும்பும் அழகிய கூந்தலையும், கயல் மீன் போன்ற கண்களையும், முத்துப் போன்ற வரிசையான பற்களையும், வில்லைப் போன்ற நெற்றியையும், பவளம்  போன்ற வாயிதழ்களையும் கொண்ட அழகி, பார்வதி என்பவள் இவள்  வேண்டுவோர் இச்சைகளைப் பூர்த்தி செய்பவள், பேரழகி, ஆலிலை வயிற்றினள், மின்னல் போல் இடையை உடையவள் எல்லா உலகத்துக்கும் முப்பத்திரண்டு அறங்களையும் இல்லறத்தில் இருந்து கொண்டே செய்பவள் இத்தகைய உமா தேவியின் குமரா என்று உள்ளம் உருக மாட்டேனோ

அரையில் கச்சை, வாள், பன்னிரு தோள்கள், வேல், பன்னிரு கண்கள், மங்களகரமான ஆறு திருமுகங்கள் இவை  கொண்ட முருகோனே கற்பக மரம் நிறைந்த பொன்னுலகத்தில் வாழும் சித்தர்களும், கற்றோர்களும் போற்றும் முருகனே கொடிய சூரனை வேரோடு அழித்த வேலனே ஆதிசேடன் மேல் துயிலும் மேக நிறத் திருமாலின் மருகனே வள்ளி, தெய்வ யானை இருவரையும் விரும்பி வந்து திருநாள்ளாறு என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே குமரா என்று உள்ளம்  உருகக் கூற மாட்டேனோ

விளக்கக் குறிப்புகள் 

சம்பந்தர் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி

பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தர்க்க வாதம்   புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்லலாம் என்று எண்ணினார்கள். திருஞானசம்பந்தர் `இனி உங்கள் உண்மையைக் கூறுங்கள்` என்றார்.  சமணர்கள் `இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே   மெய்ச்சமயம் எனக் கொள்வோம்` என்றனர் ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார்.   பாண்டிய அரசன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான்.

ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியை வழிபட்டு, அதனை நூல் போட்டு ஒரு பதிகம் எடுத்தார் `போகமார்த்த   பூண்முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் எழுதிய ஏடு வந்தது.   ஞானசம்பந்தர் நள்ளார் இறைவனைப் போற்றி அந்த ஏட்டினை எடுத்து, அனலில் அந்த ஏடு எறிந்து போகமாலிருக்க வேண்டி `தளிரிள வள ரொளி`   என்றதொரு திருப்பதிகம் பாடி ஏட்டினைத் தீயில் இட்டார் அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது. சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பட்ட ஒரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து, கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான்   இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தார். அது முன்னையினும்  பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப்  பெறுவதாயிற்று. 

அந்த நிகழ்சியை நினைவு கூறும் வகையில் இத்தல திருப்புகழ்  பச்சையொண்கிரி என ஆரம்பித்து அருணகிரியார் அமைத்திருப்பது . நோக்கத்தக்கது

வித்ரு மஞ்சிலை போல் நுத லாரிதழ் 

    இங்கு இதழ் நுதல் என்பவை இடம் மாறி உவமை கூறப்பட்டுள்ளது
    இது முரண் நிரனிறையணி எனப்படும் நிரலே நிறுத்தி மொழி மாற்றிப்
    பொருள் கொள்வது 

ஒப்புக :  இரு நாழி நெல்லால் அறம் 
     தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண் 
    டறமிரண் டெட்டெட் டெட்டிந் வளர்க்கும்                 -      திருப்புகழ், கனிதருங்கொ

சாபஷ் என்ற சொல் உள்ள  திருப்புகழ்  இது ஒன்றே.
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published