F

படிப்போர்

Monday, 19 August 2013

248.அறிவிலாத

248
திருநெல்வாயில்
(தற்சமயம் சிவபுரி என்று அழைக்கப்படுகிறது.
சிதம்பரம் அருகில்)
 
                 தனன தானன தானதாத் தனந்த
                    தனன தானன தானதாத் தனந்த
                    தனன தானன தானதாத் தனந்த      தனதான

 அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
    பகரும் நாவினர் லோபர்தீக் குணங்க
    ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள்         புனையாதர்
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
   திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
    யழியு மாலினர் நீதிநூற் பயன்கள்             தெரியாத
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
    பொருள்செய் பூரியர் மோகனமாய்ப் ப்ரபஞ்ச
    நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த          தமிழ்கூறி
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
    வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
    நௌiயு நீள்புழு வாயினேற் கிரங்கி        யருள்வாயே
நறிய வார்குழல் வானநாட் டரம்பை
    மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
    நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து       களிகூர
நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
    தகுவார் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
    நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி           யிடர்கூர
மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து
    கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
    வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த              வடிவேலா
மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
    மதியு லாவிய மாடமேற் படிந்த
    வயல்கள் மேவுநெல் வாயில்வீற்றிருந்த     பெருமாளே

பதம் பிரித்து பொருள்

அறிவு இலாதவர் ஈனர் பேச்சு இரண்டு
பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள்
அதிக பாதகர் மாதர் மேல் கலன்கள் புனை ஆதர்

அறிவு இலாதவர் = அறிவு இல்லாதவர்கள் ஈனர் = இழிவானவர்கள் பேச்சு இரண்டு பகரும் நாவினர் = சொன்ன சொற்களை மாற்றுபவர்கள் லோபர் = உலோபிகள் தீக் குணங்கள் அதிக பாதகர் = கெட்ட குணங்களையே கொண்டு மிக்க பாபச் செயல்களைச் செய்பவர்கள் மாதர் மேல் கலன்கள் = பொது மாதர்களுக்கு ஆபரணங்களை புனை ஆதர் = புனைந்து பார்க்கும் அறிவிலிகள்

அசடர் பூ மிசை வீணராய் பிறந்து
திரியும் மானுடர் பேதைமார்க்கு இரங்கி
அழியும் மாலினர் நீதி நூல் பயன்கள் தெரியாத
அசடர் = முட்டாள்கள் பூ மிசை வீணராய்ப் பிறந்து திரியும் மானுடர் = உலகில் வீண் காலம் போக்குபவர்களாகப் பிறந்து திரிகின்ற மனிதர்கள் பேதைமார்க்கு இரங்கி = பொது மகளிர் மீது காம இரக்கம் கொண்டு அழியும் = அழிந்து போகும் மாலினர் = காம மனத்தினர் நீதி நூல் பயன்கள் தெரியாத = நீதி நூல்களின் பயன்களை அறியாதவராய்

நெறி இலாதவர் சூதினால் கவர்ந்து
பொருள் செய் பூரியர் மோகமாய் ப்ரபஞ்ச
நிலையில் வீழ் தரு மூடர் பால் சிறந்த தமிழ் கூறி

நெறி இலாதவர் = நன்னெறியில் போகாதவர்கள் சூதினால் கவர்ந்து = சூதாட்டத்தால் பீடிக்கப்பட்டு பொருள் செய் = பொருள் கவர்ந்து பூரியர் = (அப்பொருளைச் சேகரிக்கும்) கீழ் மக்கள் மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் = ஆசைப் பெருக்கால் உலக நிலையையே வீழ் தரு மூடர் பால் = விரும்பும் மூடர்கள் (த்தகையோரிடம்) சென்று சிறந்த தமிழ் கூறி = நல்ல தமிழ்ப்பாடல்களைக் காட்டி

நினைவு பாழ் பட வாடி நோக்கு இழந்து
வறுமையாகிய தீயின் மேல் கிடந்து
நெளி யு நீள் புழு ஆயினேற்கு இரங்கி அருள்வாயே

நினைவு பாழ்பட = நினைவு தேய்ந்து பாழாக வாடி = வாட்டமுற்று நோக்கு இழந்து = கண் பார்வை இழந்து வறுமையாகிய தீயின் மேல் கிடந்து = தரித்திரம் என்னும் நெருப்பிலே கிடந்து நெளியும் நீள் புழு = நெளிகின்ற பெரிய புழுவைப் போல ஆயினேற்கு = ஆன என் மீது இரங்கி அருள்வாயே = இரக்கம் கொண்டு அருள்வாயாக

நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை
மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி
நகை கொடு ஏழிசை பாடி மேல் பொலிந்து களிகூர

நறிய = நறு மணம் கொண்ட வார் குழல் = நீண்ட கூந்தலை உடைய வான நாட்டுஅரம்பை = தேவ லோகத்து பெண்கள் மகளிர் காதலர் = மகளிர் தத்தம் காதலர்களுடைய தோள்கள் வேட்டு = தோள்களை விரும்பி இணங்கி = பொருந்தி நகை கொடு = களிப்புச் சிரிப்புடனே ஏழு இசை பாடி = ஏழிசை பாடியும் மேற் பொலிந்து களி கூர = குதூகலித்து மகிழ்ச்சி பொங்க

நடு இலாத குரோதமாய் தடிந்த
தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து
நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர

நடுவு இலாத = நடு நிலைமை இல்லாத குரோதமாய் = கோபம் மிக்கவராய் தடிந்த = அத்தொழிலைச் செய்த தகுவர் = அசுர மகளிர் நசை பொறாது அழுது = ஆசையை அடக்க முடியாமல் அழுது ஆகம் = உடலை மாய்த்து அழுங்கிட = ஒறுத்துத் துன்பம் கொண்டு இடர் கூர = வருத்தமே பெருக

மறியும் ஆழ் கடல் ஊடு போய் கரந்து
கவடு கோடியின் மேலுமாய் பரந்து
வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடிவேலா

மறியும் = அலைகள் கிளர்ந்து எழும் மா கடல் ஊடு போய் = ஆழ் கடலின் உள்ளே சென்று கரந்து = மறைந்து கவடு = கிளைகள் கோடியின் மேலுமாய்ப் பரந்து = கோடிக் கணக்கில் விரிந்து வளரும் = வளர்ந்த மா = மாமரமாய் நின்ற சூரன் இரு கூறதாய் = இரண்டு பிளவாக தடிந்த = வெட்டிப் பிளந்த வடிவேலா = அழகிய வேலனே

மருவு காள முகீல்கள் கூட்டெழுந்து
மதி உலாவிய மாடம் மேல் படிந்த
வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த பெருமாளே

மருவு = பொருந்திய காள = கருப்பு நிறமான முகீல்கள் = மேகங்களின் கூட்டு எழுந்து = கூட்டமாய் எழுந்து மதி உலாவிய = நிலவு உலவுகின்ற மாடம் மேல் படிந்த = மாடங்களின் மேல் படிகின்ற வயல்கள் மேவு = வயல்கள் உள்ள நெல் வாயில் வீற்றிருந்த = திரு நெல் வாயிலில் (சிவபுரியில்) வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே

சுருக்க உரை

அறிவு இல்லாதவர்கள், இழிவானவரகள், சொல் தவறியவர்கள்,
உலோபிகள், வீண் காலம் கழிப்போர், விலை மாதர் மீது இரக்கம்
கொண்டு, ஆசைப் பெருக்கால் ஆபரணங்களைப் புனைந்து உலக
இன்பத்தையே விரும்பும் மூடர்கள் இத்தகையோரிடம் சென்று தமிழ் பாடல்களைப் பாடி, தரித்திரம் என்கின்ற நெருப்பில் கிடந்து நெளிகின்ற புழுப் போல் ஆன, என் மீது இரங்கி அருள் புரிவாயாக

தேவலோகத்துப் பெண்கள் களிப்புற்று ஏழிசைகளைப் பாடவும், அசுரப் பெண்கள் தங்கள் கணவர்களின் பிரிவால் அழுது வருந்தவும், கடலுக்குள் மறைந்த மாமரமாகிய சூரனை இரு பிளவாகப் பிளந்த கூரிய வேலாயுதனே, வயல்கள் சூழ்ந்த திருநெல்வயிலில் வீற்றிருக்கும் பெருமாளே என் மீது இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக

விளக்கக் குறிப்புகள்

ஏழிசை பாடி
ஏழு இசை = குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன
சப்த சுரம்( ஸ்வரம்) = ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், துவைதம், நிஷாதம் என்பன (ச, ரி, , , , , நி)

ஒப்புக

கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்த

கவடு கோத்தெழு முவரி மாத்திறல்
காய்வேல் பாடே னாடேன் ...................                திருப்புகழ், கவடுகோத்தெழு

துன்னு பல் கவடு சூதமாய் அவுணன் நின்றான்-.................        கந்த புராணம்

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published