244
திருக்குற்றாலம்
(தென்காசிக்கு அருகில் உள்ளது)
தானத்தத்
தானன தானன
தானத்தத் தானன தானன
தானத்தத் தானன தானன தனதான
வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற்
காண வொணாதது
வீசத்திற்
றூர மிலாதது கதியாளர்
வீதித்துத் தேடரி தானது
ஆதித்தற்
காய வொணாதது
வேகத்துத்
தீயில் வெகாதது சுடர்கானம்
வாதத்துக் கேயவி யாதது
காதத்திற்
பூவிய லானது
வாசத்திற்
பேரொளி யானது மதமூறு
மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத்
தூரம தாகிய
வாழ்வைச்சற் காரம தாஇனி யருள்வாயே
காதத்திற் காயம தாகும
தீதித்தித்
தீதிது தீதென
காதற்பட்
டோதியு மேவிடு கதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட்
டேமதி தீதக
லாமற்கெட்
டேதடு மாறிட அடுவோனே
கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற்
றேவன வேடுவர்
கூடத்துக்
கேகுடி யாய்வரு முருகோனே
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித்
தாதியர் சூழ்தரு
கோலக்குற்
றாலமு லாவிய பெருமாளே
பதம் பிரித்தல்
வேதத்தில் கேள்வி இ(ல்)லாதது
போதத்தில் காண ஒணாதது
வீசத்தில் தூரம் இ(ல்)லாதது
கதியாளர்
வேதத்தில் கேள்வி இல்லாதது = வேதங்களில் ஆராயப் படாதது போதத்தில் = அறிவு கொண்டு காண ஒணாதது = காண முடியாதது வீசத்தில் தூரம் = ஒரு மாகாணி தூரம் கூட இல்லாதது = இல்லாதது (உள்ளத்திலேயே இருப்பது) கதியாளர் = நற்கதியை விரும்புவோர்
வீதித்து தேட அரிதானது
ஆதித்தர் காய ஒணாதது
சுடர் கானம் வேகத்து தீயில்
(வே)காதது
விதித்து = பகுத்து ஆராய்ந்து தேட அரியாதது = தேடுதற்கு முடியாதது ஆதித்தன் காய ஒணாதது = சூரியனால் எரியப் பட முடியாதது சுடர் கானம் = காட்டு நெருப்பின் வேகத்தில் = கடுமை கொண்ட தீயில் வேகாதது = தீயிலும் வேகாதது
வாதத்துக்கே அவியாதது
காதத்தில் பூ இயலானது
வாசத்தில் பேரொளி யானது மதம்
ஊறும்
வாதத்துக்கே = காற்றினால் அவியாதது = அவியாதது வாசத்தில் = நறு மணம் வீசுவதில் காதத்தில் = பத்து மைல் தூரம் வீசும் பூ இயலானது = மலரின் தன்மை வாய்ந்தது பேரொளியானது = பெரிய சோதியாய் விளங்குவது மதன் ஊறும் = ஆணவ மதம் ஊறுகின்ற
மாயத்தில் காயம் மத சல
தீதர்க்கு தூரம் அது ஆகிய
வாழ்வை சற்காரம் அதா இனி அருள்வாயே
மாயத்தில் = மாயம் பொருந்திய காயம் = (இந்த) உடலில் மத சலம் = ஆணவம் என்னும் மத நீர் உள்ள தீதர்க்கு = குற்றம் வாய்ந்தவர்களுக்கு தூரம் அதாகிய = எட்ட முடியாத தூரத்தில் இருப்பதான வாழ்வை = இத்தகைய பெரு வாழ்வை சற்காரம் அதா = (அடியேனை மதித்துப்) பொருட்படுத்தி இனி அருள்வாயே = இனி அருள் புரிவாயாக
காதத்தில் காயம் அதாகும் மதி
தித்தி தீது இது தீது என
காதல் பட்டு ஓதியும் மேவிடு
கதி காணார்
காதத்தில் = கொலைத் தொழிலில் காயமது ஆகும் = காழ்ப்பு (உறைப்பு) கொண்டதான மதி = அறிவை தித்தி = திருத்தி தீது இது = (இக்கொலைத் தொழிலைச் செய்வதே) தீது இது தீது என = கெடுதல் இது என்று இரு முறைகள் கூறி காதப் பட்டு = அன்பு வைத்து ஓதியும் = புத்தி சொன்ன போதிலும் மேவிடு = உள்ளதென கதி காணார் = நற்கதியைக் காணாதவர்கள்
காணப்பட்டே கொடு நோய் கொ(ண்)டு
வாதை பட்டே மதி தீது அகலாமல்
கெட்டே தடுமாறிட அடுவோனே
காணப்பட்டே = கண்கூடாகக் காணும் பொருட்டு கொடு = கொடுமையான நோய் கொண்டு = நோய் வாய்ப்பட்டு வாதைப் பட்டே = வேதனைப்பட்டு மதி = அறிவின் தீது அகலாமல் கெட்டே = கெட்ட புத்தி நீங்காமல் தடுமாறிட = நான் தடுமாறும்படி அடுவோனே = அவர்களை வருத்துபவனே
கோதை பித்தாய் ஒரு வேடுவர்
ரூபை பெற்றே வன வேடுவர்
கூ(ட்)டத்துக்கே குடியாய்
வரும் முருகோனே
கோதைப் பித்தா = பெண் மேல் காமப் பித்துடன் ஒரு = ஒப்பற்ற வேடுவ ரூபை = வேட உருவத்தை பெற்றே = தாங்கி வன வேடுவர் = காட்டு வேடர்களின் கூ(ட்)டத்துக்கே = கூட்டத்தின் நடுவே குடியாய் வரு = வீட்டுக்குக் குடியாக வந்த முருகோனே = முருகனே
கோது இல் பத்தாரோடு மாதவ
சீல சித்தர் ஆதியர் சூழ் தரு
கோல குற்றாலம் உலாவிய பெருமாளே
கோது இல் பத்தாரொடு = குற்றமில்லாத பக்தர்களுடன் மா = சிறந்த தவச் சீல = தவம் ஒழுக்கம் வாய்ந்த சித்தர் ஆதியர் = சித்தர் முதலானோர் சூழ் தரு = சூழ்ந்து வந்து வலம் வரும் குற்றாலம் உலாவிய பெருமாளே = குற்றாலம் என்னும் தலத்தில் உலாவும் பெருமாளே
சுருக்க உரை
வேதங்களில் ஆராயப் படாதது அறிவு கொண்டு
காண முடியாதது அடியார்கள் மனத்துகுள்ளேயே இருப்பது நற்கதி அடைய விரும்புவோர் பகுத்து
ஆராய்ந்து தேட முடியாதது தீயில் வேகாதது காற்றில் அவிந்து போகாதது காத தூரத்துக்கு
நறுமணம் வீசும் மலர் போன்றது சோதியாய் விளங்குவது ஆணவ மலம் என்னும் குற்றம் உள்ளவர்களால்
எட்ட முடியாதது இத்தகைய பெருவாழ்வை அடியேனையும் மதித்து இனி அருள்வாயாக
கொலைத் தொழிலில் விருப்பம் கொண்ட அறிவைத்
திருத்தி, இது தீயது, இது தீயது என்று பன்முறை புத்தி சொல்லிய
போதிலும் நற்கதியைக் காணாதவர்கள் பொல்லாத (பிறவியாகிய) நோய் வாய்ப்பட்டுக் கேடுற்றுத்
தடுமாறும்படி அவர்களை வருத்துபவனே ஒப்பற்ற வேடப் பெண்ணாகிய வள்ளியின் மேல் காமப் பித்து
கொண்டு, அந்த வேடர்கள் இருக்கும் வீட்டுக்குக்
குடி போந்த முருகனே குற்றமில்லாத பக்தர்களுடன், தவ ஒழுக்கம் உள்ளவர்களும் வலம் வரும் குற்றாலத்தில்
உலாவும் பெருமாளே எனக்கு பேரின்ப வாழ்வைத் தந்து அருள்வாயாக
ஒப்புக
1 வேதத்தில் கேள்வி யிலாதது
பரம் பொருள் இலக்கணம் கூறப்பட்ட மற்ற திருப்புகழ் பாடல்கள்:
மக்கட்குக்கூற, சுருதியூடு, காணொணாதது, ஓலமறைகள, வாசித்து
நான்மறை யெட்டிற்ட் டாதெனவேவரு - திருப்புகழ், மக்கட்கு
வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரிந்த
போதக் காட்சிக்கும் காணலன் ... கந்த புராணம்
தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் ........ திருநாவுக்கரசர் தேவாரம்
2 வாதத்துக்கே அவியாதது
பவனம் வீசில் வீழாது சலியாது ..... திருப்புகழ், சுருதியூடு

No comments:
Post a Comment
Your comments needs approval before being published