F

படிப்போர்

Monday, 8 October 2012

124.எனையடைந்த

முக்திக்கு விண்ணப்பம்

எனைய டைந்த குட்ட வினைமி குந்த பித்த
        மெரிவ ழங்கு வெப்பு                       வலிபேசா
  இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
         டிரும லென்று ரைக்கு              மிவையோடே
  மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
        மதிம யங்கி விட்டு                            மடியாதே
  மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
        மயிலில் வந்து முத்தி                     தரவேணும்
  நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
        நெறியில் நின்ற வெற்றி            முனைவேலா
  நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
        நெடிய குன்றில் நிற்கு                 முருகோனே
  தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
        செயல றிந்த ணைக்கு                  மணிமார்பா
  திசைமு கன்தி கைக்க அசர ரன்ற டைத்த
        சிறைதி றந்து விட்ட                     பெருமாளே
-124 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

எனை அடைந்த குட்ட(ம்) வினை மிகுந்த பித்தம்
எரி வழங்கு(ம்) வெப்பு வலி பேசா

எனை அடைந்த குட்ட = எனக்கு வந்த குட்ட நோய் வினை மிகுந்த = வினைக்கு ஈடாக மிக்கு வரும் பித்தம் = பித்தம் எரி வழங்கும் = கொதிப்பைத் தருகின்ற வெப்பு = சுர நோய் வலி பேசா = வலி சொல் முடியா வண்ணம்.

இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பு
ஒடு இருமல் என்று உரைக்கும் இவை ஓடே

இகலி = மாறு பட்டு அலைக்கும் = வருத்தும் முயலகன் = முயலகன் என்னும் வலிப்பு குலைப்பு ஒடு = நடுக்கம் தரும் நோயுடன் இருமல் என்று உரைக்கும் = இருமல் என்று சொல்லப்படும் இவை ஓடே = இந்நோய்களுடன் ஊடாடி.

மனைகள் பெண்டிர் மக்கள் தமை நினைந்து சுத்த
மதி மயங்கி விட்டு மடியாதே

மனைகள் = வீடுகள் பெண்டிர்= பெண்கள் மக்கள் = மக்கள் தமை = ஆகியவற்றை நினைந்து = நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு = நல்ல அறிவு மயக்கம் அடைந்து மடியாதே = (நான்) இறந்து போகாமல்.

மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும்
மயிலில் வந்து முத்தி தரவேணும்

மருவி = (நீ) தோன்றி இன்று எனக்கு= இன்று எனக்கு மரகதம் சிறக்கும் = பச்சை ஒளி வீசும் மயிலில் வந்து முத்தி தரவேணும் = மயிலின் மீது வந்து நீ வீட்டுப் பேற்றை அளிக்க வேண்டுகிறேன்.

நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க
நெறியில் நின்ற வெற்றி முனை வேலா

நினை வணங்கு பத்தர் அனைவரும் = உன்னை வணங்கும்  அடியார்கள் அனைவரும் தழைக்க = சுகத்துடன் வாழ நெறியில் நின்ற = (அவர்களுக்கு அருள் பாலிக்கும்) வழியில் நிற்கும் முனை வேலா = கூரிய வேலாயுதத்தை ஏந்தியவனே.

நிலை பெறும் திருத்தணியல் விளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கும் முருகோனே

நிலை பெறும் திருத்தணியில் விளங்கும்= (அழியாது) நிலை பெற்று விளங்கும் திருத்தணிகையில் சித்ர = அழகிய நெடிய குன்றில் = பெருமை வாய்ந்த மலையில் நிற்கும் முருகோனே = நிற்கும் முருகனே.

தினை விளங்கல் உற்ற புன இளம் குறத்தி
செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா

தினை விளங்கலுற்ற = தினை செழித்து விளங்கும் புன = (மலைக்) கொல்லையில் (இருந்த)இளம் குறத்தி= இளைய குறப் பெண்ணான வள்ளியின் செயல் அறிந்து அணைக்கும் = (பத்திச்) செயலை அறிந்து அவளை அணைக்கும் மணி மார்பா = அழகிய மார்பனே.

திசை முகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த
சிறை திறந்து விட்ட பெருமாளே.

திசை முகன் = பிரமன் திகைக்க = திகைத்து நிற்கும்படி அசுரர் அன்று அடைத்த = அன்று (தேவர்களை) அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே = சிறையைத் திறந்து விட்ட பெருமாளே.

சுருக்க உரை

சொல்ல ஒணாத வலிகளைக் கொடுக்கும் பிணிகளால் துன்பப் பட்டு, மனைவி, மக்கள் என்பவற்றை நினைந்து, அறிவு மயக்கம் அடைந்து, நான் இறவாமல், நீ பச்சை மயிலில் என் முன்னே தோன்றி, முத்தி தர வேண்டும். 

உன் பத்தர்கள் சுகத்துடன் வாழ, அவர்களுக்கு அருள் பாலிக்கும் வழியில் நிற்கும் வெற்றி பெறும் கூரிய வேலனே, வள்ளியின் பத்திச் செயலை அறிந்து அவளை அணைத்த மார்பனே, பிரமன் திகைக்க, அசுரர்கள் அன்று அடைத்த சிறையைத் திறந்து விட்ட பெருமாளே, மயிலில் வந்து எனக்கு முத்தி தர வேண்டுகின்றேன்.

ஒப்புக
1.  எனையடைந்த குட்ட....
வேசையர் மயல்மேலாய் வெடுக் கெடுத்து மகா பிணி மேவிட முடக்கி வேட்கு மதாமத வீணனை                                                                ---                      திருப்புகழ்,  மலைக்கனத்தென.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published