எத்தனைக லாதி
சித்தங் கெத்தனைவி யாதி பித்தங் 
   கெத்தனைச ராச ரத்தின்                                    செடமான 
எத்தனைவி டாவெ
ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங் 
   கெத்தனைகொ லுனை நிமித்தம்                       பசியாறல் 
பித்தனைய னான
கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம் 
   பெற்றிடநி னாச னத்தின்                                  செயலான 
பெற்றியுமொ
ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும் 
   பெத்தமுமொ ராது நிற்குங்                            கழல்தாராய் 
தத்தனத னாத
னத்தந் தத்தனத னாத னத்தந் 
   தத்தனத னாத னத்தந்                                         தகுதீதோ 
தக்குகுகு டுடு
டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் 
   தத்தனத னாத னுர்த்துமஞ்                                     சதபேரி 
சித்தர்கள்நி
டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர் 
   திக்குகளொர் நாலி ரட்டின்                                 கிரிசூழச் 
செக்கணரி மாக
னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின் 
   செக்கர்நிற மாயி ருக்கும்                               பெருமாளே.
-121 திருத்தணிகை
பதம்
பிரித்து உரை
எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி
பித்தம் 
அங்கு எத்தனை சராசரத்தில் செடமான 
எத்தனை கலாதி = எத்தனை
கலகச் சண்டைகள் சித்து அங்கு = அங்கு
(எத்தனை) மாய வித்தைகள் எத்தனை வியாதி பித்து அங்கு = அங்கு
எத்தனை நோய், பைத்தியச் செயல்கள் எத்தனை சராசரத் தில்
= இயங்கு திணை, நிலைத் திணைகளைக் கொண்ட இவ்வுலகில் செடமான= எடுத்த உடல்கள் எத்தனை.
எத்தனை
விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனை கொல் ஊனை நித்தம் பசி ஆறல்
எத்தனை விடா
= எத்தனை நீங்காத வெருட்டு அங்கு = அச்சம்
உறுத்தும் செயல்கள் எத்தனை எத்தனை வல் ஆண்மை = எத்தனை
பேராற்றலான செயல்கள் பற்று ஆங்கு எத்தனை= எத்தனை
ஆசைகள் கொல் ஊனை = மாமிசத்தை
உண்டு நித்தம் பசி ஆறல் = தினமும்
பசியைப் போக்கும் செயல்கள் (எத்தனை) (இவைகளுக்கு
எல்லாம் ஆளான நான்).
பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி
கெடாமல் முத்தம் 
பெற்றிட நின(து) சனத்தின் செயலான 
பித்து அனையன்
நான் = பித்துப் பிடித்தவன் போன்ற நான் அகட்டு உண்டு
= வயிற்றில் உண்டு இப்படிக் கெடாமல் = இங்ஙனம்
கெட்டுப் போகாமல் முத்தம் பெற்றிட = முத்தி
(பிறவியினின்று விடுதலை) பெற நின சனத்தின் செயலான
= உனது பத்த அடியார் கூட்டத்தின் செயல்களான.
பெற்றியும் ஓராது நிற்கும் தத்த குரு
தாரம் நிற்கும் 
பெத்தமும் ஓராது நிற்கும் கழல் தாராய்
பெற்றியும்
= தன்மையையும் ஓராது நிற்கும்= (யாரும்)
உணர்தற்கரிதாக நிற்பதும் தத்த = பரவிப்
பிரகாசிக்கின்ற குரு = ஒளிமயமாக தாரம் நிற்கும் = பிரணவப் பொருளாய் நிற்பதும் பெத்தமும் ஓராது = பாசபந்தத்தால்
அறிதற்கரிதாய் நிற்பதுமான கழல் தாராய் = திருவடியைத்
தந்து அருளுக.
தத்தனத
...........................................உர்த்தும் சத பேரி 
தத்தன....சத பேரி = தத்தன தனா
என்று ஒலிக்கும் நூற்றுக் கணக்கான முரசு வாத்தியங்கள்
ஒலியுடன்.
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர்
சுவாமி பத்தர் 
திக்குகள் ஓர் நாலிரட்டில் கிரி சூழ
சித்தர்கள்
= சித்தர்களும் வெற்பின் நிடாதர் = மலை
வேடர்களும் கொற்றவர் = அரசர்களும் சுவாமி பத்தர் = உனது அடியார்களும் திக்குகள் ஓர் நாலிரட்டின் = எட்டுத் திசைகளிலும் கிரி சூழ = மலையை வலம் வர.
செக்கண் அரிமா கனைக்கும் சித் தணிகை
வாழ் சிவப்பின் 
செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே.
செக் கண் = சிவந்த
கண்களையுடைய அரிமா = சிங்கம்.
கனைக்கும் = ஒலி செய்யும். சித் தணிகை = ஞானத் தணிகை மலையில் வாழ் = வாழ்கின்ற.  சிவப்பின்
செக்கர் = மிகச் சிவந்த. நிறமாயிருக்கும் பெருமாளே
= நிறத்துடன் சிறந்து விளங்கும்
பெருமாளே.
சுருக்க
உரை 
எத்தனை சண்டைகள், மாய வித்தைகள், நோய்கள்,
பைத்தியச் செயல்கள், இந்த உலகில் எடுத்த உடல்கள், வீரச் செயல்கள், ஆசைகள், ஊனைத் தின்று
பசியைப் போக்கும் செயல்கள், இவைகளுக்கு ஆளான நான் பிறவியிலிருந்து விடுபட, அடியார்களின்
செயல்களான தன்மையையும், மக்கள் முயற்சியால் அறியப்படாமல் நிற்பதும், பிரணவப் பொருளாக
நிற்பதும், பாச பந்தத்தால் அறிதற்கரிதாக நிற்பதுமான உன் திருவடிகளைத் தந்தருளுக. 
பேரொலியுடன் முரசுகள் ஒலிக்க, சித்தர்களும்,
வேடர்களும், மன்னர்களும், அடியார்களும் வலம் வர, ஞானத் தணிகை மலையில் வீற்றிருக்கும்
பெருமாளே, உன் கழல்களைத் தாராய். 
ஒப்புக:
1. தாரம்..... 
பிரணவம். 
 தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியை 
பாரத்தி னுள்ளே
பரந்துள் எழுந்திட     ---                                                      
திருமந்திரம் 
2.
சிவப்பின் செக்கர் நிறம்... 
 செய்யன் சிவந்த ஆடையன்               ...                  திருமுருகாற்றுப்படை, திருவேரகம்  
பெத்தமும் ஓராது நிற்கும்
கழல் தாராய்

No comments:
Post a Comment
Your comments needs approval before being published