கனைத்த திர்க்குமிப்
பொங்கு கார்க்கட ன்றினாலே
கறுத்த றச்சிவத்
தங்கி வாய்த்தெழு திங்களாலே
தனிக்க ருப்புவிற்
கொண்டு வீழ்த்தச ரங்களாலே
தகைத்தொ ருத்தியெய்த்
திங்கு யாக்கைச ழங்கலாமோ
தினைப்பு னத்தினைப்
பண்டு காத்தம டந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக்
குன்றின் மேற்றிகழ் கந்தவேளே
பனைக்க ரக்கயத்
தண்டர் போற்றிய மங்கைபாகா
படைத்த ளித்தழிக்
குந்த்ரி மூர்த்திகள் தம்பிரானே
-128 திருத்தணிகை
பதம்
பிரித்து உரை
கனைத்து
அதிர்க்கும் இ பொங்கு கார் கடல் ஒன்றினாலே
கறுத்து
அற சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே
கனைத்து
= ஒலித்து அதிர்க்கும் = அதிரும் இப் பொங்கு கடல் = பொங்குகின்ற
இந்தக் கடல் ஒன்றினாலே = ஒன்றாலும் கறுத்து = கோபித்து அற சிவத்து = மிகச் சிவந்து அங்கி வாய்த்து = நெருப்புத் தன்மை பூண்டு எழு = உதித்தெழுந்துள்ள திங்களாலே = நிலவாலும்.
தனி
கருப்பு வில் கொண்டு வீழ்த்த சரங்களாலே
தகைத்து
ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ
தனி = ஒப்பற்ற கருப்பு வில் கொண்டு = கரும்பு வில்லை ஏந்தி வீழ்த்த சரங்களாலே = (மன்மதன்) செலுத்திய அம்புகளாலும் தகைத்து = வாட்டமுற்று ஒருத்தி = தனித்த ஒருத்தியாம் இத் தலைவி எய்த்து
= இளைப்புற்று இங்கு யாக்கை = இங்கு
உடல் சழங்கலாமோ = சோர்வு
அடையலாமோ?
தினை
புனத்தினை பண்டு காத்த மடந்தை கேள்வா
திருத்தணி
பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே
தினைப் புனத்தினை = தினைப்
புனத்தை. பண்டு = முன்பு காத்த மடந்தை = காவல் புரிந்த வள்ளியின் கேள்வா = கணவனே திருத்தணிப் பதிக் குன்றின் மேல் = திருத்தணிகை
மலையின் மேல் திகழ் = விளங்கும்
கந்த வேளே = கந்த வேளே.
பனை
கர கயத்து அண்டர் போற்றிய மங்கை பாலா
படைத்து
அளித்து அழிக்கும் த்ரி மூர்த்திகள் தம்பிரானே.
பனைக் கர
= பனை மரம் போன்ற கையையும் கயத்து
= வெள்ளை யானையையும் உடைய அண்டர்
= தேவர்கள் போற்றிய = போற்றி
வளர்த்த மங்கை பாகா = தெய்வ
யானையின் கணவனே. படைத்து அளித்து அழிக்கும் = முத் தொழில்களைப் புரியும் த்ரி மூர்த்திகள்
= மும்மூர்த்திகளுக்கும். தம்பிரானே
= தம்பிரானே (தலைவரே).
சுருக்க
உரை
பொங்கும் கடலாலும், நெருப்பு போன்ற நிலவாலும்,
மன்மதன் எய்த கணையாலும், வாட்டமுற்று தனித்து நிற்கும் இத் தலைவி சோர்வு அடையலாமோ?
தினைப்புனம் காத்த வள்ளியின் கணவரே.
தேவர்கள் போற்றி வளர்த்த தேவசேனையின் கணவரே. மும்மூர்த்திகளுக்கும் தம்பிரானே. காம
நோயால் வாடும் இப் பெண் சோர்வு அடையலாமோ?
இப்பாடல்
அகப் பொருள் துறையைச் சேர்ந்தது.

No comments:
Post a Comment
Your comments needs approval before being published