284
தேவனூர்
(செஞ்சிக்கு அருகில் உள்ளது)
தான தான தந்த தந்த தான தான தந்த தந்த
தான
தான தந்த தந்த தனதான
தார காசு ரன்ச ரிந்து வீழ
வேரு டன்ப றிந்து
சாதி பூத ரங்கு லுங்க முதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு
தீகொ ளுந்த அன்று
தாரை வேல்தொ டுங்க டம்ப மததாரை
ஆர வார வும்பர் கும்ப வார
ணாச லம்பொ ருந்து
மானை யாளு நின்ற குன்ற மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம
யூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ
பார மார்த ழும்பர் செம்பொன்
மேனி யாளர் கங்கை வெண்க
பால மாலை கொன்றை தும்பை சிறுதாளி
பார மாசு ணங்கள் சிந்து
வார வார மென்ப டம்பு
பானல் கூவி ளங்க ரந்தை அறுகோடே
சேர வேம ணந்த நம்ப ரீச னாரி
டஞ்சி றந்த
சீத ளார விந்த வஞ்சி பெருவாழ்வே
தேவர் யாவ ருந்தி ரண்டு
பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த பெருமாளே.
பதம் பிரித்து உரை
தாரகா சுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து
சாதி பூதரம் குலுங்க முது மீன்
தாரகா சுரன் - தாரகன் என்னும் அசுரன் சரிந்து வீழ - அழிந்து விழும்படி வேருடன் பறிந்து - அவன் குலம் முழுதும் வெட்டி அழித்தும் சாதி பூதரம் - மிக்க விளக்கமுற்ற மேருமலை குலுங்க - நடுங்க முது மீன - முதிய மீன்களை உடைய.
அம் சாகர(ம்) ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று
தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை
அம் ஓதை சாகரம் - அழகும் ஆரவாரமும் கொண்ட கடல்
குழம்பி - கலக்கமுற்று நீடு தீ கொளுந்த - முற்று பெரிய தீப்பற்றி எரியவும் அன்று - முன்னொரு நாளில் தாரை வேல் - கூரிய வேலைச் தொடும் - செலுத்திய. கடம்ப - கடப்ப மாலை அணிந்தவனே மத தாரை - மத நீர் ஒழுக்கையும்.
ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து
மானை ஆளு(ம்) நின்ற குன்ற மற மானும்
ஆரவார உம்பர் - ஆரவாரத்தைக் கொண்டதும் உம்பர் - தேவலோகத்தில் உள்ளதும்
கும்ப வாரண அசலம் - மலை போன்ற (ஐராவதம்) என்னும் யானை மீது பொருந்து - வீற்றிருக்கும் மானையாளும் - மான் போன்ற தேவசேனையும்
நின்ற - நிலை பெற்று நிற்கும் குன்ற மற மானும் - வள்ளி மலைக் குன்றில் வாழும் வள்ளி நாயகியும்.
ஆசை கூரு(ம்) நண்ப என்று(ம்) மா மயூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ
ஆசை கூரும் நண்ப - ஆசை கொண்ட நண்பனே என்றும் - என்று கூறியும் மா மயூர கந்த என்றும் - சிறந்த மயில் மீது ஏறும் கந்தனே என்றும் ஆவல் தீர - என்னுடைய விருப்பம் தீர என்று - எப்பொழுது நின்று புகழ்வேனோ - அமைதியாக நின்று உன்னைப் புகழ்வேனோ?
பாரம் ஆர் தழும்பர் செம் பொன் மேனியாளர் கங்கை வெண்
கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி
பாரம் மார் தழும்பர் - உமா தேவியின் கொங்கைகளின் தழும்புகள்
பொருந்திய மார்பை உடையவரும். செம் பொன் மேனியாளர் - சிவந்த திருமேனியை உடையவரும். கங்கை - கங்கை நதியையும். வெண் கபால மாலை - வெண்ணிறமுடைய கபால மாலையையும். கம் கை வெண் கபால மாலை
என பதம் பிரித்து பிரம கபாலதை ஏந்திய கையரும், பிரமனுடைய வெளுத்த சிரமாலை என
வாரியார் ஸ்வாமிகள் பொருள் கொள்வார் கொன்றை தும்பை சிறுதாளி - கொன்றை மலர், தும்பை, சிறுதாளி ஆகியவற்றையும்.
பார மாசுணங்கள் சிந்து வார(ம்) ஆரம் என்பு அடம்பு
பானல் கூவிளம் கரந்தை அறுகோடே
பார மாசுணங்கள் - பெரிய பாம்புகள் சிந்து வாரம் - நொச்சி ஆரம் - கடம்பு என்பு - எலும்பு அடம்பு - (ஒரு வகைக்) கொடிப் பூ பானல் கருங்குவளை
கூவிளம் - வில்வம்
கரந்தை அறுகோடே - கரந்தை, அறுகம் புல் ஆகியவற்றையும்.
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த
சீதள அரவிந்த வஞ்சி பெரு வாழ்வே
சேரவே - ஒன்று கூடி மணந்த - தரித்தவரும் நம்பர் ஈசனார் - நம்முடைய ஈசனுமாகிய சிவபெருமானுடைய இடம் சிறந்த - இடப் பாகத்தில் உறையும் சீதள அரவிந்த - குளிர்ந்த தாமாரையில் வீற்றிருக்கும் வஞ்சி - பார்வதி தேவியின். பெரு வாழ்வே - பெருஞ் செல்வமே.
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு(ம்)
தேவனூர் விளங்க வந்த பெருமாளே.
தேவர் யாவரும் - எல்லா தேவர்களும் திரண்டு - ஓன்று கூடி. பாரின் மீது வந்த - பூமியில் வந்து உன்னை இறைஞ்சும் - தொழுகின்ற. தேவனூர் விளங்க வந்த பெருமாளே - தேவனூர் என்னும் தலத்தில் சிறப்பு மிக்க
விளங்கும் பெருமாளே.
சுருக்க உரை
தாரகாசுரன் தன் குலத்தோடு அழியவும், பெரிய மேருமலை நடுநடுங்கிக்
குலையவும், கடல் தீக்கொள்ளவும், கூரிய வேலைச் செலுத்திய கடம்பனே. மலை போன்ற ஐராவதமாகிய யானையின்
மீது வரும் தேவசேனையும், வள்ளி மலையில் வாழும் குறப்
பெண்ணாகிய வள்ளியும் ஆசை கொண்டவனே, சிறந்த மயில் வாகனனே என்றும் கூறி, என் ஆவல் தீர உன்னை எப்போது
புகழ்வேனோ?
உமா தேவியின் கொங்கைகள் பதியும் மார்பினரும், கங்கை, கபாலம், கொன்றை, தும்பை, அறுகம் புல், எலும்பு ஆகியவற்றைத் தரித்தவரும்
ஆகிய சிவ பெருமானின் இடப் பாகத்தில் உறையும் பார்வதியின் பெருஞ் செல்வமே, தேவனூரில்
சிறப்பு உற்று விளங்கும் பெருமாளே, உன் புகழை நான் பாடும் நாள் எப்போது எனக்குக் கிட்டுமோ?
விளக்கக் குறிப்புகள்
சாக ரோதை யங் குழம்பி நீடு தீகொளுந்த...
ஒப்புக : வேல் பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்...கந்தர் அலங்காரம்
பாரமார் தழும்பர் ...
கலைகள ணெக்கொந் தடர்ந்து வம்பலர்
நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்
கருக இடத்திற் கலந்தி ருந்தவள் கஞ்சபாதங்...திருப்புகழ் -சலமலம்.
செம்பொன் மேனியாளர்...
பொன் இயலும் திருமேனிதன் மேல் புரி நூல்பொலிவித்து...சம்பந்தர் தேவாரம்.

No comments:
Post a Comment
Your comments needs approval before being published