294
மதுரை
                 தானதன தத்த தானதன தத்த 
                    தானதன தத்த                  தனதான 
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
       ஆறுமுக வித்த                      கமரேசா 
 ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும் 
     ஆரணமு ரைத்த                     குருநாதா
 தானவர்கு லத்தை வாள்கொடுது ணித்த 
     சால்சதுர்மி குத்த                  திறல்வீரா
 தாளிணைக ளுற்று மேவியப தத்தில் 
     வாழ்வொடுநி றக்க              அருள்வாயே
வானெழுபு விக்கு மாலுமய
னுக்கும் 
     யாவரொரு வர்க்கு                   மறியாத 
மாமதுரை சொக்கர் மாதுமைக
ளிக்க 
     மாமயில்ந டத்து                 முருகோனே
 தேனெழுபு னத்தில் மான்விழிகு றத்தி 
     சேரமரு
வுற்ற                   திரள்தோளா
தேவர்கள்க ருத்தில் மேவியப
யத்தை 
     வேல்கொடுத
ணித்த            பெருமாளே
பதம் பிரித்தல் 
ஆனை முகவற்கு நேர் இளைய பத்த 
ஆறு முக வித்தக அமரேசா 
ஆனை முகவற்கு - யானை முகம் கொண்ட
விநாகருக்கு நேர் இளைய - நேராகப்
பின் தோன்றிய இளையவரான பத்த - அன்பனே வித்தக - ஞானியே அமரேசா - தேவர்களுக்கு
அரசாம் தலைவனே 
ஆதி அயனுக்கும் வேத முதல்வற்கும் 
ஆரணம் உரைத்த குரு நாதா 
ஆதி அரனுக்கும் - முதல்வராகிய சிவபெருமானுக்கும் வேத முதல்வர் - வேதத்
தலைவனான பிரமனுக்கும் ஆரணம் - வேதப் பொருளை உரைத்த- உபதேசித்தருளிய
குரு நாதா - குரு நாதரே 
தானவர் குலத்தை வாள் கொடு துணித்த 
சால் சதுர் மிகுத்த திறல் வீரா 
தானவர் குலத்தை - அசுரர்கள் குலத்தை வாள் கொடு துணித்த - வாள்
கொண்டு வெட்டி அழித்த சதுர்சால் மிகுத்த - சாமர்த்தியம்
நிறைந்த திறல் வீரா - வல்லமை
வாய்ந்த வீரனே 
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் 
வாழ்வொடு சிறக்க அருள்வாயே 
தாள் இணைகள் உற்று - உனது
இரண்டு திருவடிகளையும் தியானித்து மேவிய பதத்தில் - பொருந்துதலைக்
கொண்ட பதவியில் வாழ்வொடு சிறக்க - நல்ல வாழ்வுடன் நான் விளங்கும்படி அருள்வாயே - அருள்
புரிவாயாக 
வான் எழு புவிக்கு(ம்) மால் அயனுக்கும்
யாவர் ஒருவர்க்கும் அறியாத 
வான் எழு புவிக்கும் - விண்ணுலகம்
முதலான எழு வகைப் பட்ட உலகத்தினர்க்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத
- வேறு
எவர்க்கும் அறிய முடியாத 
மா மதுரை சொக்கர் மாது உமை களிக்க 
மா மயில் நடத்தும் முருகோனே 
மா மதுரை சொக்கர் - சிறந்த
மதுரை நகரில் வாழும் சொக்கேசரும் மாது உமை களிக்க - மாதாகிய
பார்வதியும் மகிழ்வுறும்படி மா மயில் நடத்தும் முருகேனே - அழகிய
மயிலைச் செலுத்தி நடத்தும் முருகனே
தேன் எழு புனத்தில் மான் விழி குறத்தி
சேர மருவு உற்ற திரள் தோளா 
தேன் எழு புனத்தில் - தேன்
உண்டாகும் வள்ளி மலைக் காட்டில் மான் விழிக் குறத்தி - மான்
போன்ற கண்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியை சேர மருவு உற்ற - உன்னைச்
சேரும்படி அவளிடம் அணுகிய திரள் தோளா - திரண்ட தோளை உடையவனே  
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை 
வேல் கொடு தணித்த பெருமாளே 
தேவர்கள் கருத்தில் - தேவர்களுடைய
மனதில் மேவிய பயத்தை - (சூரனால் ஏற்பட்ட) பயத்தை வேல் கொடு தனித்த பெருமாளே
- வேலாயுதத்தால் நீக்கிய பெருமாளே 
சுருக்க உரை 
விநாயகருக்கு இளையவரே, சிவபெருமானுக்கும் பிரமனுக்கும் வேதப் பொருளை உபதேசித்த குரு
நாதா, அசுரர் குலத்தை அழித்த வீரா, உன் திருவடிகளைத் தியானித்து, நான் நல் வாழ்வுடன் விளங்க அருள் புரிவாய். 
எவராலும் அறிய ஒண்ணாத மதுரை வாழ் சொக்கரும், உமையும் மகிழும்படி அழகிய மயிலைச் செலுத்தும் முருகனே வள்ளியைத்
தழுவும் வலிய தோள்களை உடையவனே தேவர்கள் பயத்தை வேல் கொண்டு நீக்கிய பொருமாளே 
விளக்கக் குறிப்புகள் 
1 வான் எழு புவிக்கு 
மேலுலகம் ஏழு கீழுலகம் ஏழு 
2 ஆதியரனுக்கும் வேத முதல்வற்கும் 
ஓதுவித்த நாதர் கற்க வோதுவித்த முனிநாண 
ஓரெத்தி லாறெழுத்தை யோது வித்த பெருமாளே --- திருப்புகழ்,. வேதவெற்பி 
ஆதி கற்பகவிநாய கற்குபிற 
கானபொற்சரவ ணாப ரப்பிரம 
னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய றிந்தகோவே 
                                                            —திருப்புகழ்,வாதபித்தமொடு

No comments:
Post a Comment
Your comments needs approval before being published