292
மதுராந்தகம்
தனதாந்த தத்த தனதனத்தத்
தந்தனத்
தனந்த தனதானா
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொளைத்தொக்
கிந்த்ரியக் குரம்பை வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெனக்கைக்
கொண்டிளைத் தயர்ந்து சுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெடப்பொற்
கிண்கிணிச் சதங்கை விதகீத
உபயாம்பு யப்பு ணையையினிற்பற்
றுங்கருத் தையென்று தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளையடற்சக்
ரந்தரித் தகொண்டல் மருகோனே
கருணாஞ்ச னக்க மலவிழிப்பொற்
பைம்புனக் கரும்பின் மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெனப்பத்
மந்தனிற் பிறந்த குமரேசா
மதுராந்த கத்து வடதிருச்சிற்
றம்பலத் தமர்ந்த பெருமாளே
பத உரை
குதி பாயந்து இரத்தம் வடி தொளை தொக்கு
இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர்
குதி பாய்ந்து - குதித்துப் பாய்ந்து இரத்தம் வடி - குருதி வடிகின்ற தொளை - தொளையை உடையதும் தொக்கு - தோலோடு கூடியதும் இந்த்ரிய குரம்பை - ஐம்பொறிகளுடன் கூடியதுமான உடம்பு வினை கூர் - வினை மிகுந்து தூர் - நிரம்பி உள்ள
குண பாண்டம் உற்று அகிலம் என கை
கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே
குண பாண்டம் உற்று - குணங்களுக்கு உறைவிடமான (இத்தகைய) உடம்பை அடைந்து அகிலம் எனக் கைக்கொண்டு - (இந்த உடம்பைப் போற்றுதலே) எல்லா செல்வமும் என்று மேற்கொண்டு இளைத்து - (அதனால்) மெலிந்து அயர்ந்து - சோர்வு உற்று சுழலாதே - திரியாமல்
உதிதாம் பரத்தை உயிர் கெட பொன்
கிண்கிணி சதங்கை வித கீத
உதிதாம் - மனதில் உதிக்கின்றதாகிய பரத்தை - மெய்ப்பொருளை உயிர் கெட - ஆன்ம போதம் நீங்க பொன் - அழகிய கிண்கிணி - கிண்கிணி சதங்கை - சதங்கை (ஆகியவை) வித கீத - விதவிதமாக இசையைச் செய்யும்
உபய அம்புய புணையை இனி பற்றும்
கருத்தை என்று தருவாயே
உபய அம்புய - இரண்டு தாமரை போன்ற புணையை - தெப்பத்தை இனிப் பற்றும் கருத்தை - இனியேனும் பற்றி உய்யும் எண்ணத்தை என்று தருவாயே - எனக்கு என்று தருவாய்?
கதை சார்ங்கம் கட்கம் வளை அடல் சக்ரம்
தரித்த கொண்டல் மருகோனே
கதை - கதை சார்ங்கம் - சாரங்கம் கட்கம் - வாள் வளை - சங்கு அடல் சக்ரம் - வலிமை வாய்ந்த சக்ராயுதம் இவற்றை தரித்த - தரித்துள்ள கொண்டல் - மேக நிறமான திருமாலின் மருகோனே - மருகனே
கருண அஞ்சன கமல விழி பொன்
பைம்புன கரும்பின் மணவாளா
கருண அஞ்சன - கருணையும் மையும் கொண்ட கமல விழி - தாமரை போன்ற விழி - கண்களைக் கொண்ட பொன் - அழகிய பைம்புனக் கரும்பின் - பசுமையான புனத்திருந்த கரும்பு போல் இனித்த
(வள்ளியின்) மணவாளா - கணவனே
மதன அந்தகர்க்கு மகவு என பத்மம்
தனில் பிறந்த குமரேசா
மதன அந்தகர்க்கு - மன்மதனுக்கு யமனாக இருந்த (சிவபெருமானுக்கு) மகவு என - குழந்தையாக பத்மம் தனில்- தாமரையில் பிறந்த குமரேசா - பிறந்து விளங்கிய குமரேசனே
மதுராந்தகத்து வட திரு சிற்றம்பலத்து
அமர்ந்த பெருமாளே
மதுராந்தகத்தே - மதுராந்தகத்தில் வட திருச் சிற்றம்பலத்து - வடக்கே உள்ள திருச்சிற்றம்பலத்தில் அமர்ந்த பெருமாளே - விளங்கும் பெருமாளே
சுருக்க உரை
குதித்துப் பாயும் இரத்தம் வடிகின்றதும், தொளையை உடையதும், தோலோடு கூடியதும், ஐம்பொறிகளுடன் சேர்ந்ததுமான
வினை நிரம்பிய உடலை அடைந்து, அதனைப் போற்றுதல் ஒன்றுதான் மேலானது எனக் கருதி, இளைத்துச் சோர்வுற்றுத்
திரியாமல், மனத்தில் மெய்ப் பொருளை துதித்துப் போற்றி, ஆன்ம போதம் நீங்க, சிலம்பொலிகள் கீதம் செய்யும்
உனது இரண்டு திருவடிகளாகிய தெப்பத்தை எனக்கு எப்போது தருவாய்?
கதை, சங்கு, சக்கரம் ஆகிவற்றைத் தரித்த மேக நிறம் கொண்ட திருமாலின் மருகனே
கருணையும், மை தீட்டிய கண்களை உடையவளுமாகிய வள்ளியின் கணவனே மன்மதனை எரித்த
சிவபெருமானின் குழந்தையே தாமரை மலரில் தோன்றிய குமரேசனே மதுராந்தகத்தில் திருச் சிற்றம்பலத்தே
வீற்றிருக்கும் பெருமாளே உனது திருவடியை என்று தருவாயா?
விளக்கக் குறிப்புகள்
1குரம்பை வினை கூர் தூர்
பொருந்திய குரம்பைதன்னைப் பொருள் எனக் கருதவேண்டா
இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்துமின்கள்
---
திருநாவுக்கரசர் தேவாரம்
2 மகவெனப் பத்மந்தனிற் பிறந்த குமரேசா
பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
பணில சரவணை தனில்முளரியின்வரு முருகோனே
-
திருப்புகழ், முருகுசெறிகுழல்
முகிலென
நாளார் வனச மேல்வரு தேவா மூவா மயில்வாழ்வே--- திருப்புகழ், கலகவாள்விழி
நறைகமழ் மலர் மிசை
நணியெ சரவண மதில்வள ரழகிய பெருமாளே --- திருப்புகழ், கடலைபய
படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை
படர்வன பரிமள முட்டாட் டாமரை தங்கிவாழுஞ் --- திருப்புகழ், கதறியகலை
அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மௌளச்ச ரோரு கங்கள் பயில்நாதா --- திருப்புகழ்,முல்லைக்கு

No comments:
Post a Comment
Your comments needs approval before being published