F

படிப்போர்

Thursday 30 August 2012

21. ஓரா தொன்றை

ஓரா தொன்றைப் பாரா தந்தத்
       தோடே வந்திட்                               டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
       டாமால் தந்திட்                                டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
       கோயா நின்றுட்                              குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
       கோடா தென்கைக்                          கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
       றோளா குன்றைத்                           தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சக்
       சூர்மா அஞ்சப்                                 பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
       சேவே றெந்தைக்                            கினியொனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
       சேயே செந்திற்                                பெருமாளே.

-       திருச்செந்தூர்

பதம் பிரித்து உரை

ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே
வந்திட்டு உயிர் சோர

ஒன்றை ஓராது = (உண்மை நெறியாகிய) ஒரு பொருளை நன்கு
ஆராய்ந்து அறியாமலும்  பாராது = சிந்தித்துப் பார்க்காமலும்
அந்தத்தோடே = அழகுடன்  வந்திட்டு = நெருங்கி வந்து உயிர்
சோர = உயிர் சோர்ந்து போகும்படி ( ஒன்று – பிரணவம் என்றும் கொள்ளலாம்)

ஊடா நன்று அற்றார் போல் நின்று
எட்டா மால் தந்திட்டு உழல் மாதர்

ஊடா = பிணங்கியும் நன்று அற்றார் போல் = (ஆடவரிடம் பொருள் பரிக்கும் பொருட்டு) நல்ல ஆடை அணிகள் இல்லாதவர்கள் போல  நின்று = நின்றும்  எட்டா = அளவு கடந்த மால் தந்திட்டு = காம மயக்கத்தைக் கொடுத்து. உழல் மாதர் =
அலையும் விலை மாதர்கள்

கூரா அன்பில் சோரா நின்று அக்கு
ஓயா நின்று உள் குலையாதே

கூரா அன்பில் = உண்மையில்லாத அன்பில் சோரா நின்று = ஓய்ந்து நின்று அக்கு = எலும்போடு கூடிய உடம்பு ஓயா நின்று= தளர்ந்து நின்று உள் குலையாதே = உள்ளம் நிலை குலையாதபடி.

கோடு ஆர் செம் பொன் தோளா நின் சொல்
கோடாது என் கைக்கு அருள் தாராய்

கோடு ஆர் = மலை போன்ற  செம்பொன் தோளா = பொன் மயமான தோளை உடையவனே  நின் சொல் = உன்னுடைய திருப்புகழை  கோடாது என்கைக்கு = (உலகோருக்கு) நேர் நின்று உதவும்  என்று சொல்லும்படி அருள் தாராய் = அருள் புரிய வேண்டும்.

தோரா வென்றி போரா மன்றல்
தோளா குன்றை தொளை ஆடீ

தோரா = தோல்வி இல்லாமல் வென்றிப் போரா = வெற்றிப் போர் செய்பவனே மன்றல் = மணம் வீசும்  தோளா = தோள்களை உடையவனே  குன்றை = கிரௌஞ்ச மலையை
தொளை ஆடீ = துளைத்தவரே

சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச
சூர் மா அஞ்ச பொரும் வேலா

சூதாய் = மிக்க வஞ்சகத்துடன் எண் திக்கு ஏயா = எட்டுத் திசைகளிலும் பொருந்திச் சென்ற சூர் மா = மாமரமாய் வந்த சூரன் அஞ்ச = பயப்படும்படி பொரும் வேலா = போர் புரிந்த வேலனே.

சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற
சே ஏறு எந்தைக்கு இனியோனே

சீர் ஆர் = சிறந்த ஆத்தி. கொன்றை = கொன்றை. தார் மார்பு ஒன்ற = மாலைகளை அணிந்த மார்பில் திகழும். சே ஏறு = விடையின் மேல் ஏறும். எந்தைக்கு இனியோனே = என் தந்தையாகிய சிவபெருமானுக்கு இனியவனே.

தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல்
சேயே செந்தில் பெருமாளே.

தேனே = தேன் போல் இனிப்பவனே அன்பர்க்கே ஆம் = அன்பர்களுக்கு என்றே இன் சொல் = இனிய சொற்களைப் பேசும். சேயே = செம்மைப் பண்புடையவரே. செந்தில் பெருமாளே = திருச் செந்தூரில் எழுந்தருளியிருக்கும்                     பெருமாளே.

சுருக்க உரை

உண்மை நெறிகளை நன்கு ஆராய்ந்து பாராமல், அழகுடன் வந்து, ஆண்களுக்குக் காம மயக்கம் தந்து, உடலும் உள்ளமும் தளரும்படி, நல்ல பொருள் இல்லாதவர்கள் போல் நடிக்கும் விலைமாதர்களின் பொய்யான அன்பில் சோர்வடைந்து, உள்ளம் குலைந்து போகாமல், உன் திருப்புகழ் யாவர்க்கும் உதவும் என்று உலகோர் கூறுமாறு அருள் புரிவாய்.

வெற்றிப் போர் செய்பவனே. மாமரமாய் வந்த சூரன் அஞ்சும்படி அவனுடைய கிரௌஞ்ச மலையைத் தொளைய போர் புரிந்தவனே, கொன்றை மலர் மாலைகள் அணிந்த மார்பை உடையவரே, எந்தையாகிய சிவபெருமானுக்கு இனியவனே, அன்பர்களுக்கு இனிமையான சொற்களைப் பேசும் செந்திற் பெருமாளே, உன்னுடைய திருப்புகழ் நின்று உதவும் என்று உலகோர் கூறுமாறு அருள் தாராய்.

ஒப்புக

அ. ஓராது ஒன்றை =   (ஓரவொட்டார் ஒன்றை உன்ன வொட்டார்)--- கந்தர் அலங்காரம்  
ஆ. ஊடா.... காம மயக்கத்தால் பிணங்குதல்.
     (ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
      கூடி முயங்கப் பெறின்) --- திருக்குறள் 1330.

 இன் சொல் சேயே – இன்சொல் விசாகா - திருப்புகழ்
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published