F

படிப்போர்

Thursday, 30 August 2012

22. கட்டழகு

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
        இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
        கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்         முறையோடே
 வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
        மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
        விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற            வுணர்வேனோ
 பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
        முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
        பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாயத்
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
        நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
        சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை            பெருமாளே.

 - திருச்செந்தூர்

பதம் பிரித்து பத உரை

கட்டு அழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம்
இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள்
கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே        

கட்டு அழகு விட்டு = இறுகிக் கட்டுக் கோப்பாய் இருந்த அழகு நீங்கி
தளர்ந்து அங்கு = தளர்ச்சி அடைந்து அங்கு இருந்து முனம் = முன்பு இட்ட பொறி = உதவியாக் இருந்த ஐம்பொறிகளும். தப்பி = கலங்கிச் சிதறிப் போய். பிணம் கொண்டதின் = பிணம் என்னும் நிலையை அடைந்தவுடன்சிலர்கள் கட்டணம் எடுத்து = சிலர் கூலிக்கு எடுத்து. சுமந்தும் = சுமந்து போகவும். பெரும் பறைகள் = பெரிய பறைகள் முறையோடே = வரிசைப்படி.

வெட்ட விட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என
மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி
விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ

வெட்ட விட வெட்டக் கிடஞ்சம் கிடஞ்சம் என = (இவ்வாறு) பல விதமான ஒலிகளை எழுப்ப மக்கள் ஒருமிக்கத் தொடர்ந்தும் மக்கள் ஒன்று கூடிப் பிணத்தைத் தொடர்ந்தும் புரண்டும் = கீழே விழுந்து புரண்டும் வழி விட்டு வரும் இத்தை = வழி விடுகின்ற இந்தப் பொய்யான வாழ்வை விட்டு. தவிர்ந்து = விலகி உன் பதங்கள் உற உணர்வேனோ = உன்னுடைய திருவடிகளை  அடையும் வழியை உணர மாட்டேனோ?

பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல்
முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை
பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய

பட்டு உருவி = பட்டு உருவம்படியாக நெட்டைக் க்ரவுஞ்சம் = உயரமான கிரௌஞ்ச கிரி பிளந்து = பிளவுபட்டு கடல் முற்றும் அலை வற்றி = கடல் முழுமையும் அலை வற்றி குழம்பும் குழம்ப = குழம்பு குழம்பாய்ப் போகும்படி முனை பட்ட = கூர்மையானஅயில் தொட்டு
 = வேலாயுதத்தைச் செலுத்தி திடம் கொண்டு = பலமாய் எதிர்ந்த அவுணர் = எதிர்த்து வந்த அசுரர்களின் முடி சாய = தலைகள் சாயும்படி

தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு
நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி
சற் சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே.

தட்டு அழிய = அடியுடன் அழியும் படியாக. வெட்டி = துண்டித்து கவந்தம் = தலை இல்லாத உடலை. பெரும் கழுகு = பெரிய கழுகுகள் நிர்த்தம் இட = (தின்று) நடனமிடவும். ரத்தக் குளம் கண்டு = இரத்தக் குளம் பெருக வைத்து. மணி உமிழ்ந்து முடியினின்று மணிகள் சிதறி விழ வைத்து சற் சமய வித்தை = (முனிவர்களுக்கு) நல்ல காலம் வருவதற்கு வேண்டிய வித்தையை பலன் கண்டு = பலன் காட்டும்படி வைத்து செந்தில் உறை பெருமாளே = திருச்செந்தூரில் வீற்றிருக்கும்                            பெருமாளே.

சுருக்க உரை
கட்டுக் கோப்பான உடல் தளர்ந்து, இதுவரை உதவியாக இருந்த ஐம் பொறிகளும் சிதறிப் போய்ப் பிணம் என்னும் நிலையை அடைந்தவுடன், பேரிகைகள் முழங்க, மக்கள் ஓருமுகமாகப் பின் செல்லும் இந்தப் பொய்யான வாழ்வை விட்டு நீங்கி உன் திருவடியை அடையும் வழியை உணரமாட்டேனோ?
கிரவுஞ்ச மலையைப் பிளந்து, கடல் வற்றும்படி வேலைச் செலுத்திப் பலமாக வந்த அவுணர்கள் முடி சாயும்படி வெட்டி, கழுகுகள் தலை இல்லாத உடலைத் தின்று நடம் இட, இரத்தம் பெருக, முனிவர்களுக்கு நல்ல காலம் வருவதைக் காட்டித் திருச்செந்தூரில் வாழும் பெருமாளே. உன் பதங்களை உணர்வேனோ?

ஒப்புக

அ. வருமித்தை...
வரும் இத்தை = வரும் இதை. அல்லது வரும் மித்தை = வருகின்ற பொய்யை.
ஆ. கவந்தம்பெருங்கழுகு...
கவந்தம் = சிறிது தொழிலுடன் கூடிய தலையற்ற உடல்

இப்பாடல் 8 பிரிவுகள் இல்லாமல் 4 பிரிவுகளை (சரணங்கள்) மட்டுமே கொண்டு அமைந்துள்ளது.
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published