“
கமல
மாதுடன் இந்திரை யுஞ்சரி
சொலவொ ணாதம டந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில் இருபோதேய்
களவு
நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியின் மோகித கந்தசு கந்தரு
கரிய ஓதியில் இந்துமு கந்தனில் மருளாதே
அமல
மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் அருள்தானே
அறியு
மாறுபெ ரும்படி அன்பினின்
இனிய நாதசி லம்புபு லம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்
குமரி காளிப யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி எமதாயி
குறைவி
லாள்உமை மந்தரி அந்தரி
வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
குமர மூஷிக முந்திய ஐங்கர கணராயன்
மமவி
நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
அணிக ஜானன விம்பனொர் அம்புலி
மவுலி யானுறு சிந்தையு கந்தருள் இளையோனே
வளரும்
வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே.
- திருச்செந்தூர்
பதம் பிரித்து பதவுரை
கமல
மாதுடன் இந்திரையும் சரி
சொ(ல்)ல
ஒணாத மடந்தையர் சந்தன
களப
சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய்
கமல
மாது உடன் = தாமரைப் பிராட்டியாகிய கலைமகளும் இந்திரை = இலக்குமியும் சரி சொல ஒணாத = ஒப்பு
என்று சொல்ல முடியாத மடந்தையர்
= வேசியர்களின் சந்தன = சந்தனம் பூசிய களப = கலவைச் சாந்து அணிந்த சீதள=
குளிர்ந்த
கொங்கையில்
அங்கையில் = தனங்களிலும் அங்கையிலும் இரு = இரண்டு போது ஏய் = வேளைகளிலும் பொருந்தியிருந்து
களவு
நூல் தெரி வஞ்சனை அஞ்சன
விழியின்
மோகித கந்த சுகம் தரு
கரிய
ஓதியில் இந்து முகம் தனில் மருளாதே
களவு
நூல் தெரி = களவு நூல்களைக் கற்றறிந்த வஞ்சனை = வஞ்சகம் கொண்ட அஞ்சன = மை தீட்டிய விழியின் = கண்களிலும்
மோகித
= காம மயக்கத்தையும் கந்த சுகம் தரு = நறு மணச் சுகத்தையும் தருகின்ற கரிய = கரு நிறம் கொண்ட ஓதியில் = கூந்தலிலும் இந்து முகந்தனில் = சந்திரனை ஒத்த முகத்திலும்
மருளாதே =
மருட்சி அடையாமல்.
அமலம்
ஆகிய சிந்தை அடைந்து அகல்
தொலைவு
இலாத அறம் பொருள் இன்பமும்
அடைய
ஓதி உணர்ந்து தணந்த பின் அருள் தானே
அமலம்
ஆகிய = மாசு அற்ற சிந்தை அடைந்து = மனதை அடைந்து அகல் = பரந்துள்ள தொலைவு இலாத = முடிவில்லாத
அறம்
பொருள் இன்பமும் =
அறம், பொருள், இன்ப நூல்களை அடைய ஓதி = முழுவதும் ஓதி உணர்ந்து= நன்கு கற்று உணர்ந்து
தணந்த
பின் = (ஆசைகள்) அடங்கிய
பின்னர்
அருள் தானே = உனது திருவருள் உண்மையையே.
அறியும்
ஆறு பெறும்படி அன்பினின்
இனிய
நாத சிலம்பு புலம்பிடும்
அருண
ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய்
அறியும்
ஆறு பெறும்படி = நான் அறியவும் பெறவும் அன்பினின் = அன்புடனே இனிய நாத = இனிய ஒலியைத் தரும் சிலம்பு புலம்பிடும் = சிலம்பு ஒலிக்கின்ற அருண ஆடக = செம் பொன்னால் ஆகிய கிண்கிணி = சலங்கைகள் தங்கிய = அணிந்துள்ள அடி தாராய் = திருவடிகளைத் தந்து அருளுக.
குமரி
காளி பயங்கரி சங்கரி
கவுரி
நீலி பரம்பரை அம்பிகை
குடிலை
யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி
குமரி = என்றுமகலாத இளம் பருவத்தையுடைய கன்னிப் பெண்ணும் காளி
= கரிய நிறத்தையுடையவளும் பயம்
ஹரி = அடியவர் பயத்தை நீக்குபவளும் சங்கரி
= ஆன்மாக்களுக்குச் சுகத்தை செய்பவளும் கவுரி = பொன்னிறத்தை உடையவளும் நீலி
= நீல நிறத்தையுடையவளும் பரம்பரை = பெரிய பொருள்களுக்கெல்லாம் பெரிய பொருளாக வீற்றிருப்பவளும் அம்பிகை = உலகமாதாவும் குடிலை = சுத்தமாயையும் யோகினி
= யோகினி என்னும் தெய்வமாக இருப்பவளும், சண்டினி = பாவிகளுக்குக் கொடியவளாகத் திகழ்பவளும், குண்டலி = குண்டலி
சக்தியும் எமது ஆயி = எங்கள் தாயும்
குறைவிலாள்
உமை மந்தரி அந்தரி
வெகு
வித ஆகம சுந்தரி தந்து அருள்
குமர
மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன்
குறைவு
இலாள் = ஒரு குறைவும் இல்லாதவள் உமை
= உமா தேவியும் மந்தரி = சுவர்க்க லோகத்தை அருள்பவளும் அந்தரி
= முடிவில்லாதவளும் வெகுவித
= பல விதமான ஆகம சுந்தரி
=
சிவாமகங்களால் துதிக்கப்படும் கட்டழகு உடையவளும் தந்து அருள்
= பெற்றருளிய குமர = குமரனே மூஷிகம்
உந்திய = எலியை வாகனமாகக் கொண்டவனும் ஐங்கர கண ராயன் = ஐந்து
கரங்களை உடையவனுமாகிய கணபதி.
மம
விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி
அணி
கஜானன விம்பன் ஒர் அம்புலி
மவுலியான்
உறு சிந்தை உகந்து அருள் இளையோனே
மம
= எனது விநாயகன்
= விநாயக மூர்த்தி நஞ்சு
உமிழ் = விடத்தைக் கக்குகின்ற கஞ்சுகி=
பாம்பை அணி=அரையில் அணிந்துள்ள கஜானன விம்பன்= யானை முகத்தன் ஒர்
=
ஒப்பற்ற அம்புலி = பிறைச் சந்திரனை மவுலியான்
உறு = முடியில் அணிந்தவன் (ஆகிய
கணபதி). சிந்தை = மனம் உகந்து = மகிழ்ந்து அருள் இளையோனே = அருளும் இளையவனே.
வளரும்
வாழையும் மஞ்சளும் இஞ்சியும்
இடை
விடாது நெருங்கிய மங்கல
மகிமை
மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே.
வளரும்
வாழையும் = வளர்கின்ற வாழை மரங்களும். மஞ்சளும், இஞ்சியும் = மஞ்சளும் இஞ்சியும் இடைவிடாது
நெருங்கிய = இடைவெளியில்லாமல்
நெருங்கி விளங்கும். மங்கல = மங்கலமும் மகிமை மா நகர்
= பெரிய நகரமாகிய செந்திலில்
வந்து உறை பெருமாளே = திருச் செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே
சுருக்க உரை
கலைமகள்,
திருமகள் இருவருக்கும் ஒப்பு என்று சொல்ல முடியாத அழகு வாய்ந்த விலை மாதர்களின், கலவைச்
சாந்து அணிந்த கொங்கைகளிலும், கண்களிலும், கரிய கூந்தலாலும், சந்திரன் போன்ற முகத்திலும்
மயக்கம் கொள்ளாமல், தூய மனதுடன் அறம், பொருள், இன்ப நூல்களை ஓதி, உணர்ந்து, பிறகு உனது
திருவருள் உண்மையை அறிந்து கொள்ள, சிலம்புகள் அணிந்த உன் திருவடியைத் தந்து அருள வேண்டும்.
பல
விதமான ஆகமங்களால் போற்றப்படுபவளும், பல வேறு நாமங்களால் அழைக்கப் படுபவளும் ஆகிய பார்வதி
அருளிய குமரனே, எலியை வாகனமாக உடையவனும், அரையில் பாம்பை
அணிந்தவனுமாகிய யானை முகத்தனனான கணபதி மனம் மகிழ்ந்தருளும் தம்பியே, வாழை, மஞ்சள், இஞ்சி எப்போதும் விளங்கும்
திருச் செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே,
உன்
திருவடிகளைத் தாராய்.
விளக்கக்
குறிப்புகள்
அ.
குடிலை ..... பிரணவ மந்திரத்திற்கு உரியவளாய் இருத்தலின் உமா தேவிக்கு
இப்பெயர் வந்தது.
ஆ.
யோகினி.. (எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பாள்)
என்ற படி இறைவன் யோக வடிவம் கொள்ளுங்கால்
தானும் யோக வடிவம் கொண்டு ஆன்மாக்களுக்கு யோக
ஞானத்தை உணர்த்துவதால் யோகினி என்ற பெயர் வந்தது.
இ.
சிந்தை உகந்தருள் இளையோனே... (ஆதரவா யடியவருக் கருள்சுரக்கு மைங்கரத்தோன் அன்பு
கூர்ந்து மாதவமே எனவழைத்துப் புயத்தணைக்கத்
திருவுளத்து மகிழுங் கோவே) ---
சிதம்பர சுவாமிகள் (திருப்போரூர் சந்நிதி முறை).
” tag: