F

படிப்போர்

Saturday, 3 November 2012

132. சினத்திலத்தினை

சினத்தி லத்தினை சிறுமண லளவுடர்
  செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
  செனித்த தெத்தனை திரள்கய லெனபல       வதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
  செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
  செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ    தளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
  கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
  வதைத்த தெத்தனை யளவிலை விதிகர       மொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
  மடைக்கு லத்தனை மதியழி விரகனை
  மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள்         புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன
  திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
  தகுத்த குத்தகு தகுதகு தகுதகு               தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
  தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
  தமித்த மத்தள தமருக விருதொலி            கடல்போலச்
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
  திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
  தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை           பொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
  முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
  திருத்த ணிப்பதி மருவிய குறமகள்           பெருமாளே.
-132 திருத்தணிகை

பதம் பிரித்து உரை

சி(ன்)ன திலம் தினை சிறு மணல் அளவு உடர்
செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர்
செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா(து)

செ(ன்)மித்தது எத்தனை மலை சுனை உலகு இடை
செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு
செடத்தில் எத்தனை நமன் உயிர் பறி கொள்வது அளவு ஏதோ

மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி
கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர்
வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல்

வகுத்தது எத்தனை மசகனை முருடனை
மடை குலத்தனை மதி அழி விரகனை
மலர் பதத்தினில் உருகவும் இனி அருள் புரிவாயே

தனத்த.. டுடுடுடு தமித்த மத்தள தமருகம் விருது ஒலி கடல்போல
 
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி
இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை
தெறித்திட கழு நரி தி(ன்)ன நிணம் மிசை பொரும் வேலா

செழிக்கும் உத்தம சிவ சரணர்கள் தவ
முநி கணத்தவர் மது மலர் கொடு பணி
திருத்தணி பதி மருவிய குற மகள் பெருமாளே.

பத உரை

சி(ன்)ன திலம் = சிறிய எள். தினை = தினை சிறு மணல் = சிறிய மணல் அளவு = இவற்றின் அளவுள்ள உடர் செறித்தது = உடல்களில் பொருந்திய (பிறவிகள்). எத்தனை = எத்தனை? சிலை = முழங்கும். கடலினில் = கடலில். உயிர் செனித்தது எத்தனை = உயிர் பெற்று வாழ்ந்தது எத்தனை பிறவிகள்? திரள் கயல் என பல = திரண்ட கயல் மீன் எனப் பல வகையானவை அது போதா(து) = அது போதாமல்.

செ(ன்)மித்தது = பிறப்பெடுத்தது. எத்தனை = எத்தனை? மலை சுனை = மலையிலும், சுனையிலும். உலகு இடை = உலகத்திலும். செழித்தது எத்தனை = செழிப்புற்ற பிறவிகள் எத்தனை? சிறு = அற்பமான. தனம் மயல் கொடு = கொங்கையில் மயக்கம் கொண்டு. செடத்தில் எத்தனை = உடம்பெடுத்த பிறவிகள் எத்தனை? நமன் உயிர் பறி கொள்வது = யமன் உயிர் பறித்துப் போவதற்கு. அளவு ஏதோ = ஒரு அளவு உண்டோ?

மனத்தில் எத்தனை நினை கவடுகள் = (மனிதப் பிறவியில்) மனத்தில் எழுந்த எண்ணங்கள் எத்தனை வஞ்சகமானவை? குடி கெடுத்தது இத்தனை = பிறர் குடியைக் கெடுத்தது எத்தனை? மிருகம் அது என உயிர் வதைத்தது எத்தனை = மிருகம் போல பிற உயிர்களை வதைத்தது எத்தனை? அளவு இ(ல்)லை = கணக்கே இல்லை. விதிகரம் ஒழியாமல் = விதியின் போக்கு தவறாதபடி.

வகுத்தது எத்தனை = உண்டான நிகழ்ச்சிகள் எத்தனை? மசகனை = (இங்ஙனம் பல பிறவிகள் எடுத்து இளைத்த) கொசு போன்றவனை முருடனை = மூடனை மடைக் குலத்தனை = மடையர் கூட்டத்தில் சேர்ந்தவனை. மதி அழி = அறிவிழந்த. விரகனை = காமுகனாகிய என்னை. மலர்ப் பதத்தினில் = உனது மலர் போன்ற திருவடியில். உருகவும் = உருகும்படி. இனி அருள் புரிவாயே = இனி அருள் புரிவாயாக.

தனத்த.....தமித்த மத்தள = இவ்வாறு ஒலிக்கும் மத்தளம் தமருகம் = உடுக்கை விருது ஒலி = இவைகளின் சத்தம். கடல் போல = கடல் போல முழங்க.
சினத்து = கோபத்துடன். அமர் களம் செரு = போர்க்களப் போரில். திகழ் = தோன்றி எழும் குருதி = இரத்தம் அதி இமிழ்த்தி = ஒலியுடன் பெருக கரி = யானைகளும் அசுரர்கள் = அசுரர்களும். பரி = குதிரைகளும். சிலை = வில்லுகளும். தெறித்திட = முறியவும். கழு = கழுகும். நரி = நரியும். தி(ன்)ன = உண்ண. நிணம் மிசை = மாமிசங்கள் மேலிருந்து. பொரும் வேலா = சண்டை செய்யும் வேலனே.

செழிக்கும் = செழிப்புள்ள. உத்தம = உத்தம குணம் படைத்த. சிவ சரணர்கள் = சிவனடியார்களும். தவ முநிக் கணத்தவர் = முனிவர் கூட்டத்தினரும். மது மலர் கொடு = தேன் நிறைந்த மலர்களைக் கொண்டு. பணி திருத்த = வணங்கும். திருத்தணிப் பதி மருவிய = திருத்தணிகை நகரில் வீற்றிருக்கும். குற மகள் பெருமாளே = குறப் பெண்ணாகிய வள்ளியின் பெருமாளே.

சுருக்க உரை

எள், தினை, சிறு மணல் இவற்றின் அளவுள்ள உடல்களில் பொருந்திய பிறவிகள் எத்தனை. முழங்கும் கடலில் எடுத்த பிறவிகள் எத்தனை இப்படிப் பல விதமான பிறவிகள் போதாதென்று, மற்ற பிறிப்புகள் எத்தனை மலையிலும், சுனையிலும், உலகிலும் எத்தனை பிறவிகள் அற்பமான கொங்கை மீது மோகம் கொண்டு உடம்பு எடுத்த பிறவிகள் எத்தனை இவ்வாறு தோன்றி யமன் பறித்துப் போவதற்கு ஒரு அளவே கிடையாதா?

மனிதப் பிறவியிலும் எத்தனை வஞ்சகமான எண்ணங்கள்? கெடுத்த குடிகள் எத்தனை? மிருகங்களை வதைத்தது எத்தனை?
கணக்கே இல்லை. விதியின் படி தோன்றிய நிகழ்ச்சிகள் எத்தனை?
இப்படித் தோன்றி இளைத்த நான் கொசு போன்றவன். மூடன். மடையர் கூட்டத்தைச் சேர்ந்தவன். உனது திருவடியில் உருகும் நாளும் எனக்கு உண்டாகுமோ? பேரொலிகளுடன் ஒலி செய்த வந்த அசுரர்களைக்
கொன்று, அந்த ரத்தம் பெருக, மாமிசத்தின்மேல் நின்று போர் செய்த வேலனே, சிவனடியார்களும் தவசிகளும் வணங்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் வள்ளியின் பெருமாளே, என் பிறப்பை அறுக்கவும்.

விளக்கக் குறிப்புகள்

சின திலம் தினை - சிறிய எள், தினை.  செமித்தது - சென்மித்தது.

உயிர் செனித்தது எத்தனை.....
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்....
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்      ...                  திருவாசகம்  ” tag:

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்      ...                  திருவாசகம்  No comments:

Post a Comment

Your comments needs approval before being published