வெற்றிசெய வுற்றகழை
விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட விசையாலே
வெட்டவெளி யிற்றெருவில்
வட்டபணை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு மதியாலே
பற்றிவசை கற்றபல
தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு மழியாதே
பத்தியையெ னக்கருளி
முத்தியைய ளித்துவளர்
பச்சைமயி லுற்று வரவேணும்
நெற்றிவிழி
பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த கழல்வீரா
நெய்க்கமல மொக்குமுலை
மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்த ழுவுமார்பா
எற்றியதி ருச்சலதி
சுற்றியதி ருத்தணியில்
எப்பொழுது நிற்கு முருகோனே
எட்டசல மெட்டநில
முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட பெருமாளே
-
145
திருத்தணிகை
பதம்
பிரித்து உரை
வெற்றி
செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன்
விட்ட
கணை பட்ட விசையாலே
வெற்றி செய உற்ற = வெற்றியே
தர வல்ல. கழை = கரும்பு. வில் குதை வளைத்து = வில்லின் முனையை வளைத்து. மதன் = மன்மதன். விட்ட = செலுத்திய. கணை பட்ட = பாணங்கள் மேலே தைத்த. விசையாலே = வேகத்தாலும்.
வெட்ட
வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல்
விரித்து
ஒளி பரப்பும் மதியாலே
வெட்ட வெளியில் = வெட்ட
வெளியிடங்களிலும். தெருவில் = தெருக்களிலும் வட்ட பணையில் = வட்டமான பறை போல் விளங்கி கனல் விரித்து = நெருப்பை
வீசி ஒளி பரப்பும் = ஒளியைப்
பரப்புகின்ற மதியாலும் = சந்திரனாலும்.
பற்றி
வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை
பட்ட
திகிரிக்கும் அழியாதே
பற்றி வசை
= வசை மொழிகளைக் கொண்டு கற்ற = அவைகளையே பயின்று பேசும் பல தத்தையர் தமக்கு = பல பெண்களின் வசைப் பேச்சாலும் இசைபட்ட திகிரிக்கு = இசையை எழுப்பும் புல்லாங்குழலின்
இசையாலும். அழியாதே = நான்
மெலிந்து அழியாமலும்.
பத்தியை
எனக்கு அருளி முத்தியை அளித்து வளர்
பச்சை
மயில் உற்று வர வேணும்
பத்தியை
எனக்கு அருளி = பத்தி நெறியை எனக்குத் தந்து உதவி முத்தியை அளித்து வளர் = முத்தியையும் அளித்து உயர்ந்த பச்சை மயில் உற்று = பச்சை
நிற மயில் மீது ஏறி. வரவேணும் = வர வேண்டுகின்றேன்.
நெற்றி
விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர்
நினைக்கும்
மனம் ஒத்த கழல் வீரா
நெற்றி விழி
பட்டு எரிய = நெற்றிக் கண்ணின் தீ பட்டு (மன்மதன்)
எரிந்து போக நட்டம் இடும் உத்தமர் = நடனம் செய்யும் பெரியோனாகிய சிவ பெருமான்
நினைக்கும் = (உன்னைத்) தியானிக்க மனம் ஒத்த
= அவர் மனத்தில் பொருந்தி கழல் வீரா
= திருவடிகளை உடைய வீரனே.
நெய்
கமல மொக்கு முலை மெய் குறவி இச்சை உற
நித்தம்
இறுக தழுவும் மார்பா
நெய்க் கமல
= தேன் பொருந்திய தாமரை போன்ற மொக்கு
முலை = மொக்குப் போன்ற கொங்கையை உடைய மெய்க் குறவி = உண்மை நிலை தவராத குறத்தி (வள்ளி) இச்சை உற= உன்னிடம்
அன்பு கொள்ளும்படி நித்தம் = நாள்தோறும் இறுகத் தழுவும் மார்பா = அவளைக் கெட்டியாய்
அணைக்கும் மார்பனே
எற்றிய
திரு சலதி சுற்றிய திருத்தணியில்
எப்பொழுது
நிற்கும் முருகோனே
எற்றிய
= (அலை) வீசும் திருச்சலதி = கடல் சுற்றிய = சூழ்ந்துள்ள (பூமியில்) திருத்தணியில் = திருத் தணிகையில் எப்பொழுதும் நிற்கும் = என்றும் நிலையாக வீற்றிருக்கும் முருகோனே = முருகனே.
எட்டு
அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர்
இட்ட
நிறை விட்ட பெருமாளே.
எட்டு அசலம் = அட்ட
கிரிகள் வரையிலும். எட்ட = எட்டிப்
பரவும் நிலம் முட்ட = நிலம்
முழுமையும் முடி நெட்ட = தங்கள்
முடியைத் தள்ளிச் செலுத்திய அசுரர் இட்ட சிறை விட்ட
பெருமாளே = அசுரர்கள் இட்ட சிறையிலிருந்து தேவர்களை நீக்கிய பெருமாளே.
சுருக்க
உரை
கரும்பு வில்லை வளைத்து மன்மதன் செலுத்திய
பாணங்கள் மேலே தைத்த வேகத்தாலும், எல்லா இடங்களிலும் நெருப்பை வீசி ஒளியைப் பரப்பும்
நிலவாலும், மாதர்களின் வசை மொழிகளாலும், இசையை எழுப்பும் புல்லாங்குழலின் இசையாலும்,
நான் மெலிந்து அழியாமல். பத்தி நெறியை எனக்குத் தந்து, முத்தியையும் அளித்து உதவ, பச்சை
நிற மயிலின் மேல் ஏறி வர வேண்டுகின்றேன்.
நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து, நடனம்
செய்த பெரியோனாகிய சிவ பெருமான், உன்னைத் தியானிக்க அவர் மனதில் பொருந்தி எழுந்தருளிய
திருவடிகளை உடைய வீரனே, தாமரை மொக்குப் போன்ற கொங்கையை உடைய உண்மை நிலை தவறாத குறப்
பெண் வள்ளி, நாள் தோறும் அன்பு கொள்ளும்படி அவளை இறுகத் தழுவிய மார்பனே, கடல் சூழ்ந்த
பூமியில் திருத்தணியில் நிலையாக வீற்றிருக்கும் முருகோனே. நிலம் முழுதும் ஆட்சி செலுத்திய
அசுரர்கள் இட்ட சிறையிலிருந்து தேவர்களை மீட்ட பெருமாளே, பச்சை மயிலின் மேல் ஏறி என்னை
ஆள வரவேணும்.
விளக்கக்
குறிப்புகள்
1. பணை = பறை.
இசைப்பட்ட திகிரி = புல்லாங்குழல். திகிரி = மூங்கில்.
2.
விசையாலே, மதியாலே, வசையாலே...அழியாதே....
காமம்
மிகுந்தவர்களுக்கு வேதனை தருவன---மன்மதன் மலர்ப் பாணங்கள், நிலவொளி, பெண்களின் வசை
மொழி, குழல் இசை.
(தெருவினில்
நடவா மடவார்)...
திருப்புகழ் ,தெருவினில்நட.
3.
உத்தமர் நினைக்குமன மொத்த கழல்வீரா.....
சிவபெருமான்
தியானத்தில் இருந்தது முருகன் திருவடி.
(மத்தப்ர
மத்தரணி மத்தச் சடைப் பரமர்
சித்தத்தில்
வைத்த கழலோனே)...
திருப்புகழ் ,முத்துத்தெ.

No comments:
Post a Comment
Your comments needs approval before being published