F

படிப்போர்

Saturday 24 November 2012

160.புமியதனில்

                                   தனதனனத்  தனதான

புமியதனிற்            ப்ரபுவான
   புகலியில்வித்     தகர்போல
அமிர்தகவித்          தொடைபாட
   அடிமைதனக்      கருள்வாயே
சமரி லெதிர்த்         தசுர்மாளத்
   தனியயில்விட்  டருள்வோனே
நமசிவயப்           பொருளானே
  ரசதகிரிப்           பெருமாளே.
-    160கயிலை மலை

பதம் பிரித்து உரை

பூமி அதனில் பிரபுவான
புகலியில் வித்தகர் போல

பூமி அதனில் பிரபுவான = உலகில் அரசாகத் தோன்றிய  
புகலியில் = சீகாழித் தலத்து வித்தகர் போல = ஞான சம்பந்தர் போல்

அமிர்த கவி தொடை பாட
அடிமை தனக்கு அருள்வாயே

அமிர்த கவித் தொடை பாட = அமுதமே இது என்று சொல்லத் தக்க கவி மாலைகளைப் பாடுதற்கு அடிமை தனக்கு அருள்வாயே = அடிமையாகிய எனக்கும் அருள் புரிவாயாக.

சமரில் எதிர்த்த  சுர் மாள
தனி அயில் விட்டு அருள்வோனே

சமரில் = போரில் எதிர்த்து = எதிர்த்து வந்த அசுர் = அசுரர்கள் மாள = மடியும்படி தனி அயில் விட்டு அருள் வோனே = ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தி அருள் வோனே.

நமசிவய பொருளானோ
ரசத கிரி பெருமாளே.

நமசிவயப் பொருளானோ = நமசிவ என்னும் ஐந்தெழுத்தின் மூலப் பொருளானவனே ரசத கிரிப் பெருமாளே = வெள்ளி யங்கிரிப் பெருமாளே.

சுருக்க உரை

பூமியில் அரசாகத் தோன்றிய சீகாழித் தலத்து ஞான சம்பந்தர் போல அமுதமான கவி மாலைகளைப் பாடுதற்கு எனக்கும் அருள் புரிவாயாக.

போரில் அசுரர்கள் மாளும்படி ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தியவனே. நமசிவய என்னும் ஐந்தெழுத்தின் மூலப் பொருளானவனே. கயிலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. நான் அமிர்த கவி பாடும் திறனைக் கொடுத்து அருள்க.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published