F

படிப்போர்

Tuesday, 20 November 2012

154. சரியையா ளர்க்கும்

சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
  சகலயோ கர்கட்டுமெட்                  டரிதாய
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
  டருபரா சத்தியிற்                         பரமான
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
  சுடர்வியா பித்தநற்                       பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
  சுகசொரூ பத்தையுற்             றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
  புருஷவீ ரத்துவிக்                       ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
  புகழையோ தற்கெனக்         கருள்வோனே
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
  கனிகள்பீ றிப்புசித்                       தமராடி
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
  கதிரகா மக்கிரிப்                     பெருமாளே

-    154 கதிர்காமம்

பதம் பிரித்து உரை

சரியையாளர்க்கும் அக் கிரியையாளர்க்கும் நல்
சகல யோகர்க்கும் எட்ட அரிதாய

சரியையாளர்க்கும் = சரியை மார்க்கத்தில் இருப்பவர் களுக்கும் அக் கிரியையாளர்க்கும் = அந்தக் கிரியை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும் நல் சகல யோகர்க்கும் =நல்ல எல்லாவித யோக நிலையில் இருப்பவர்களுக்கும் எட்ட அரிதாய = எட்டுதற்கு முடியாததும்                 

சமய பேதத்தினுக்கு அணுக ஒணா மெய் பொருள்
தரு பரா சத்தியின் பரமான

சமய பேதத்தினுக்கு = சமய வேறுபாடுகளால் அணுக ஒணா = நெருங்க முடியாததுமான மெயப் பொருள் தரு = உண்மைப் பொருளைத் தர வல்ல பரமான = பராசத்தியினும் மேலான தானதும்.

துரிய மேல் அற்புத பரம ஞான தனி
சுடர் வியாபித்த நல் பதி நீடு

துரியம் = யோகியர் தன் மயமாய் நிற்பதும் மேல் அற்புத = மேம்பட்டதானதும் (ஆகி) பரம ஞான = பரம ஞான. தனிச் சுடர் = தனி ஒளி வியாபித்த = பரந்துள்ளதாய் நல் பதி = சிறந்த இடமாய் நீடு= நீடியதாய்

துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல்
சுக சொரூபத்தை உற்று அடைவேனோ

துகள்இல் = குற்றமில்லாத சாயுச்சியக் கதியை = இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை
ஈறு அற்ற = முடிவில்லாததும் சொல் = புகழப் படுவதுமான சுக சொரூபத்தை = பேரின்ப நிலையை உற்று அடைவேனோ = பொருந்தி அடைவேனோ?

புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத்
புருஷ வீரத்து விக்ரம சூரன்

புரிசை சூழ் = மதில் சூழ்ந்துள்ள செய்ப்பதிக்கு = வயலூருக்கு உரிய = உரிய சாமர்த்ய = வல்லவனே
சத் புருஷ = உத்தமனே வீரத்து = வீரமும் விக்ரம
சூரன் = வலிமையும் கொண்ட சூரன்.

புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு
புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே

புரள = புரண்டு விழ வேல் தொட்ட = வேலைச் செலுத்திய கைக்குமரனே = திருக்கரத்தை உடைய குமரனே மேன்மை = மேன்மை ருந்திய  திருப்புகழ் = திருப்புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே = ஓதுவதற்கு எனக்கு அருள் செய்தவனே.

கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை
கனிகள் பீறி புசித்து அமர் ஆடி

கரிய = கரு நிறமான ஊகத் திரள் = குரங்குகளின் கூட்டங்கள் பலவின் மீதில் = பலா மரத்தின் மீது இருந்து சுளைக் கனிகள் = சுளைப் பழங்களை  பீறிப் புசித்து = கீறிக் கிழித்து உண்டு அமர் ஆடி = சண்டை இட்டு.

கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில்
கதிர் காம கிரி பெருமாளே.

கதலி சூதத்தினில் = வாழை மரங்களிலும், மாமரங் களிலும் பயிலும் =நெருங்கி விளையாடும் ஈழத்தினில் = ஈழ நாட்டில் உள்ள கதிர் காமக் கிரிப் பெருமாளே கதிர்காம மலையில் வீfற்றிருக்கும் பெருமாளே.

விளக்கக் குறிப்புகள்

சரியையுடன் அக்கிரியை பேற்றிய....

சரியை என்பது இறைவனை வழிபடுவோர்கள் இறைவனைத் தொழுவது மட்டுமல்லாமல் அவனைத் தன்னுடைய எஜமானாகப் பாவித்து தான் அவனுக்கு அடிமை என்று எண்ணி அவனுக்கு தொண்டு செய்து வழிபட்டு முக்திக்கு வழித் தேடுவார்கள். இதை தாச மார்கம் என்பார்கள்.

இறைவனைத் தன் தகப்பனாக பாவித்து அவன் தாள் பணிந்து வழிபடு
வோர்கள் கிரியை வழி சேர்ந்தவர்கள். அவர்கள் செல்லும் மார்க்கம் ஸத்புத்திர மார்கம்.

இப்படி இல்லாமல் இறைவனைத் தன் நண்பனாகப் பாவித்து அவனை துதித்து பிரார்த்திப்பது சக மார்கம். இறைவன் தன் உடலில் உள்ளான் என வணங்கி வழிபடும் முறை. இம் முறை யோகம் எனப்படும்.

தன்னையயே இறைவனாகப் பாவித்து ‘நான்’ என்ற அகந்தையை அழித்து வழிபடும் முறை ஞானம் என்று அழைக்கப்படும்.

இதனால் அடையப்படும் முக்தி முறையே சாலோபம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

இந்த வழி முறைகள் ஏதோ தனித்தனியானது என்று எண்ணக்கூடாது. எல்லாமே ஒன்றில் ஒன்று இணந்து சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நான்காய் ஆகி  பதினாறு படிகளாய் விரிவடையும்.

சாலோகம் - ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது.
சாமீபம் - ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாதமடி வாழும் பேறு பெறுவது.
சாரூபம் - ஈசனின் வடிவே தாமும் எய்தி வாழ்வது.
சாயுச்சியம் - ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவைத நிலை. சாயுச்சிய பதவி பெற்றோர்க்கு மீண்டும் பிறவி இல்லை என்பர்.

சமயக்குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசர் முறையே இந்த நான்கு வித முக்தியை அடைந்தார்கள் என வரலாறு சொல்கிறது.

ஒப்புக:

உத்ரமிகும் அக்கினி சொரூப வடிவாகிய
ஓங்கார ரூபமாகி
ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்
உதிக்கின்ற தெய்வமாகிச்
சகல புவனங்களும் தானாகி நின்றவொரு
சச்சிதானந்த மயமாய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய
சகல சூட்சும தாரியாய்
விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர்
வேதாந்த முத்தி முதலாய்
வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்
வேதனே பர நாதனே
சுக்ரகெம் பீரபரி பூரண விலாசனே
சுயம்புரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே ! ---------------------– சூரிய நமஸ்கார பதிகம்

சுருதி வெகுமுகபு ராண கோடிகள்
  சரியை கிரியைமக யோக மோகிகள்
  துரித பரசமய பேத வாதிகள்  என்றுமோடித்
தொடர வுணரஅரி தாயதூரிய
  பொருளை யணுகியநு போக மானவை
  தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய நின்ப்ரகாசங்
கருதி        ----------------------                 திருப்புகழ், சுருதி வெகுமுக

நாடக ஆசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே- …………..திருப்புகழ், குருதி மூளை யூனாறு

சரியையில் கிரியையில் தவமும் அற்று  
 - திருப்புகழ், ஒருவரைச் சிறுமனை

சரியைஉடன் க்ரியை போற்றிய பரம பதம் பெறுவார்க்கு அருள் தரு கணன்…………………………………………      திருப்புகழ், அரிவையர்

சரியை கிரியை அண்டர் பூசை வந்தனை வழிபாடு துதியொடு நாடுந் தியான மொன்றையு முயலாதே
..….திருப்புகழ் குருதிபு லாலென்பு

செய் சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது-
                                                                 திருப்புகழ், கமையற்ற
எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன்
……. திருப்புகழ், கருப்புச் சாப னனைய

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published