பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கொடி நின்ற
பதம் அடியர் காண வந்த கதிர்காமா
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த தனதான
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்று தொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொ டர்ந்து அடைவார்கள்
கருவியத னாலே றிந்து சதைகள்தனை யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை
கண்டு
கடுகிவர வேணு மெந்தன் முனமேதான்
பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்த குமரேசா
பதிகள்பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி
நின்ற
பதமயிரர் காண வந்த கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை
கொன்றை
யணிவர் சடை யாளர் தந்த முருகோனே
அரசரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர்தமை ஆள வந்த பெருமாளே
-157கதிர்காமம்
பதம் பிரித்தல்
வருபவர்கள் ஓலை
கொண்டு நமனுடைய தூதர் என்று
மடி பிடியது ஆக
நின்று தொடர் போது
வருபவர்கள் = (என் உயிரைக் கவர) வரும் (யம தூதர்கள்) ஓலை
கொண்டு = எனது ஆயுள் சீட்டு ஓலையை எடுதுக் கொண்டு
வந்து நமனுடைய தூதர் என்று = (நாங்கள்)
நமனுடைய தூதுவர்கள் என்று கூறி
மடி பிடியதாக நின்று = விடாப் பிடியாக நின்று
தொடர்போது = என்னைத் தொடர்கின்ற போது.
மயல் அது பொல்லாத
வம்பன் விரகுடையன் ஆகும் என்று
வசைகளுடனே
தொடர்ந்து அடைவார்கள்
மயல் அது = காமம் மிக்க பொல்லாத= பொல்லாத
வம்பன் =வீணன் விரகுடையன் ஆகும் என்று=
தந்திரம் உடையவன் இவன் ஆவான் என்று வசைகளுடனே = பழிப்பு வார்த்தை களுடன்
தொடர்ந்து= என்னைத் தொடர்ந்து அடைவார்கள்
= நெருங்குவார்கள்.
கருவி அதனாலே
எறிந்து சதைகள் தனையே அரிந்து
கரிய புனலே
சொரிந்து விடவே தான்
கருவி அதனால் = ஆயுதங்களை வீசி எறிந்து சதைகள் தனையே அரிந்து= சதைகளை அரிந்து கரிய= பசிய புனலே சொரிந்து = இரத்தம் சொரிந்து விடவே தான் = விழுமாறு.
கழு முனையிலெ இரு என்று விடும்
என்னும் அவ்வேளை கண்டு
கடுகி வர வேணும்
எந்தன் முனமே தான்
கழு முனையிலே இரு என்று = கழு முனையில் நீ
இருப்பாயாக என்று விடும் எனும் = ஏவி
விடுவார்கள் அவ்வேளை = அந்தச் சமயத்தில். கண்டு = அறிந்து கடுகி = வேகமாக.
வரவேணும் = நீ
வந்தருள வேண்டும். என்தன் முனமே தான் = என்னுடைய
முன்னிலையில்.
பர கிரி உலாவு
செந்தி மலையின் உடனே இடும்பன்
பழனி தனிலே இருந்த
குமரேசா
பரகிரி = திருப்பரங்குன்றம்
உலாவு = நீ உலவி விளையாடும்
செந்திமலையினுடன் = செந்தூர் மலை இவைகளுடன் இடும்பன் பழனி தனிலே = இடும்பன் கொண்டு வந்த பழனி மலை ஆகிய தலங்களில் இருந்த குமரேசா = வீற்றிருக்கும் குமரேசனே.
பதிகள் பல
ஆயிரங்கள் மலைகள் வெகு கொடி நின்ற
பதம் அடியர் காண
வந்த கதிர்காமா
பதிகள் பல ஆயிரங்கள்= பல ஆயிரக் கணக்கான
தலங்கள் மலைகள் வெகு கோடி = கோடிக் கணக்கான மலைகள்
நின்ற = (இவைகளில்) நின்ற பதம் = உனது திருவடிகளை. அடியர் காண = அடியார்கள் காணும் பொருட்டு வந்த கதிர்காமா = எழுந்தாருளிய கதிர்காமத் தலத்தனே.
அரவு பிறை பூளை
தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
அணிவர் சடையாளர்
தந்த முருகோனே
அரவு = பாம்பு பிறை = பிறைச் சந்திரன் பூளை = பூளைப்பூ தும்பை = தும்பை.
விலுவமொடு = வில்வம் தூர்வை = அறுகு. கொன்றை = கொன்றைப்
பூவை யையும் அணிவர் = அணிபவராகிய
சடையாளர் = சடையாளராகிய சிவ பெருமான் தந்த முருகோனே = பெற்றருளிய குழந்தையே
அரகர சிவாய சம்பு
குமர குமார நம்பும்
அடியர் தம்மை ஆள வந்த
பெருமாளே.
பதம் பிரித்து உரை
அரகர = பாவங்களை
நீக்குபவரும் சிவாய = சிவாய என்ற மூன்று எழுத்துடையவரும் சம்பு = சுக காரண்யருமாகிய சிவமூர்த்தியின் குருபர = குருநாதரே குமார = குமாரக்கடவுளே
நம்பும் அடியர் தமை = உன்னை நம்பும் அடியார்களை
ஆள வந்த பெருமாளே = ஆண்டருள வந்த பெருமையுடையவரே
சுருக்க உரை
யம தூதுவர்கள் எனது ஆயுள் காலம் முடியும் சீட்டு ஓலையை எடுத்துக்
கொண்டு வந்து என்னைக் கவர வரும் போது, இவன் ஒரு கமுகன், துட்டன், பெரிய தந்திரசாலி என்னும் பழிப்புச் சொற்களுடன் என்னைத் தொடர்வார்கள்.
ஆயுதங்களை வீசி, என் சதைகளை அரிந்து, இரத்தம் சொரிய கழு முனையில் இடுமாறு ஏவி
விடுவார்கள். அந்த சமயத்தில் நீ வேகமாக என் முன்னே வர வேண்டும்.
பரங்குன்றம், நீ விளையாடும் செந்தில், இடும்பன் கொண்டு வந்த பழனி மலை ஆகிய தலங்களில்
வீற்றிருக்கும் குமரேசனே, ஆயிரக் கணக்கான தலங்களிலும், மலைகளிலும் உனது திருவடிகளை அடியார்கள்
காணும் பொருட்டு எழுந்தருளி வந்துள்ள கதிர்காமத் தலத்தனே, பாம்பு, பிறை, பூளை, தும்பை, வில்வம், அறுகு, கொன்றை ஆகியவைகளைச் சடையில் அணிந்த சிவபெருமான்
தந்த குழந்தையே. அரகர, சிவாய, சம்பு, குருபர, குமார, உன்னை நம்பும் அடியார்களை ஆண்டருள வந்த பெருமாளே, யம தூதுவர்கள்
என்னைக் கவர வரும் போது என் முன்னே வந்து காப்பாயாக.
விளக்கக் குறிப்புகள்
இடும்பன் பழனி மலை...
சிவமலை கந்தப் பெருமாளே...திருப்புகழ்
(கறுத்தகுழ).
சிவமலை = இடும்பன் காவடியாகக் கொண்டு வந்த
சிவகிரி சத்தி மலைகளுள் முருகன் வீற்றிருக்கும்
பழனி மலை.
அகத்தியர் தம்மை வணங்கிய இடும்பாசுரனை வடக்கே திருக்கேதாரத்துக்கு
அருகில் உள்ள சிவகிரி, சத்திகிரி என்னும் இரு மலைகளையும் கொண்டு வரும்படி கட்டளை இட்டார்.
அங்ஙனம் இடும்பன் இரு மலைகளையும் காவடி போல் கட்டித் தூக்கி
வந்து,
ஆவினன் குடியில் இளைப்பாறினான். பின்னர்
மலைகளை எடுக்க முயன்ற போது ஒரு சிறுவன் சிவகிரியில் இருக்கக் கண்டான். சிறுவனாகிய முருகன்
போக மறுத்ததும், சிறுவன் மேல் பாய்ந்தான். இதை அறிந்த அகத்தியர் ஆண்டவணை வணங்கி
இடும்பனை எழுப்பினார்.

No comments:
Post a Comment
Your comments needs approval before being published