கிறிமொழிக்
கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப் பறவிழிக் கிறபார்வைக்
கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
கிகள்தமைச் செறிதலுற் றறிவேதும்
அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
றறவுநெக்
கழிகருக் கடலூடே
அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
றடியிணைக் கணுகிடப் பெறுவேனோ
பொறியுடைச்
செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத் தனைபேரும்
பொடிபடச் சிவமெனப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் புலவோனே
தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
தவர்திருப் புதல்வநற் சுனைமேவுந்
தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருதிருத்
தணியினிற்
சரவணப் பெருமாளே.
-129 திருத்தணிகை
பதம்
பிரித்து உரை
கிறி
மொழி கிருதரை பொறி வழி செறிஞரை
கெடு
பிறப்பு அற விழிக்கிற பார்வை
கிறி மொழி = பொய்ம்மொழி
பேசும் கிருதரை = செருக்கு
உள்ளவர்களை பொறி வழி = ஐம்புலன்களின்
வழியே செறிஞரை = செல்லுபவர்களை கெடு பிறப்பு = கெட்ட இப்பிறப்பு அற = (நற் பிறப்பு) ஆகாமல் தொலையும்படி. விழிக்கிற பார்வை = விழிக்கின்ற விழியை உடைய.
கெடு
மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்
தமை
செறிதல் உற்று அறிவு ஏதும்
கெடு மடக் குருடரை = கெட்ட
அறிவில்லாத குருடர்களை. திருடரை = திருடர்களை. சமய தர்க்கிகள் தமை = சமய வாதிகளை செறிதல் உற்று = (நான்) நெருங்குதலுற்று. அறிவு ஏதும் = அறிவு சற்றும்.
அறிதல்
அற்று அயர்தல் உற்று அவிழ்தல் அற்று
அருகல்
உற்று அறவு(ம்) நெக்கு அழி கரு கடல் ஊடே
அறிதல் அற்று = அறிதல்
இல்லாமல் அயர்தல் உற்று = தளர்ச்சி
உற்று அவிழ்தல் அற்று = (மனம்
பக்தியால்) நெகிழ்தல் இல்லாமல். அருகல் உற்று = குறைபாடு அடைந்து. அறவும் நெக்கு = மிகவும் கெட்டு. அழி = அழிவு தரும். கருக்கடல் ஊடே = பிறவிக் கடலுள்ளே.
அமிழ்தல்
அற்று எழுதல் உற்று உணர் நலத்து உயர்தல் உற்று
அடியிணைக்கு
அணுகிட பெறுவேனோ
அமிழ்தல் அற்று = அவிழ்ந்து
போதல் நீங்கி எழுதல் உற்று = மேல்
எழுதல் உற்று உணர் நலத்து = நல்லுணர்வு பெறும் நலமான வழியில் உயர்தல்
உற்று = மேம்பாடு அடைந்து. அடி இணைக்கு = உன் திருவடியிணையை அணுகிடப் பெறுவேனோ = அணுகப் பெறுவேனோ?
பொறி
உடை செழியன் வெப்பு ஒழிதர பறி தலை
பொறி
இல சமணர் அத்தனை பேரும்
பொறி உடைச் செழியன் = அறிவுள்ள
(கூன்) பாண்டியனு டைய வெப்பு ஒழிதர = சுர நோய் நீங்கவும் பறி தலை = மயிர் பறிபடும் தலையராகிய பொறி இலாச் சமணர் = அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் = அத்தனை பேரும்
பொடி
பட சிவ மண பொடி பரப்பிய திரு
புகலியில்
கவுணிய புலவோனே
பொடி பட = அழியவும் சிவ மணப் பொடி = சிவ மணத் திருநீற்றை பரப்பிய = (மதுரையில்) பரப்பின திருப் புகலியில் = சீகாழியில்
உதித்த கவுணியப் புலவோனே = கவுணியர்
குலப் புலவனாகிய ஞான சம்பந்தரே.
தறி
வளைத்து உற நகை பொறி எழ புரம் எரித்தவர்
திரு
புதல்வ நல் சுனை மேவும்
தறி வளைத்து உற = அழிவு
உண்டாகும்படி நகைப் பொறி எழ = புன்
சிரிப்புப் பொறியை எழுப்பி புரம் எரித்தவர் = திரி புரங்களை எரித்த
சிவபெருமானுடைய திருப் புதல்வ = நல்ல
மகனே நல் சுனை மேவும் = சிறந்த
சுனையில் உள்ள.
தனி
மண குவளை நித்தமும் மலர் தரு திரு
தணியினில்
சரவண பெருமாளே.
தனி = ஒப்பற்ற மணக் குவளை = நறு மணம் வீசும் குவளை நித்தமும் = நாள்தோறும் மலர் தரு = பூவைத் தருகின்ற திருத்தணியினில்= திருத்தணிகையில் (வீற்றிருக்கும்) சரவணப் பெருமாளே = சரவணப்
பெருமாளே.
சுருக்க
உரை
பொய் பேசபவர்களும், ஐம்புலன் வழியே நடப்பவர்களும்,
இப்பிறப்பு நற் பிறப்பு ஆகாமல் தொலையும்படி விழிக்கின்ற விழியை உடையவர்களும், அறிவில்லாதவர்களும்
ஆகிய சமய வாதிகளை நான் நெருங்கி, அறிவிழந்து, தளர்ச்சி உற்று, அழிந்து போதல் நீங்கி,
மேம்பாடு அடைந்து, உன் திருவடியைப் பெறுவேனோ?
கூன் பாண்டியனின் சுரநோய் நீங்கவும்,
மயிர் நீங்கிய தலையை உடைய சமணர் அழியவும், திருநீற்றைப் பரப்பிய கவுணியப் புலவனே, சிரிப்புப்
பொறியால் திரி புரங்களை எரித்த சிவபெருமானின் மகனே, சுனையில் நறு மணம் வீசும் திருத்தணிகையில்
சரவணப் பெருமாளே, உன் திருவடியைப் பெறுவேனோ?
விளக்கக்
குறிப்புகள்
1.பறிதலைப்
பொறியிலச் சமணர்.....
(பறிதலை
குண்டர் கழுநிரை கண்டு
பழநி
யமர்ந்த பெருமாளே) --- திருப்புகழ் (கருகியகன்று)
2..
சிவமணப் பொடிபரப்பிய....
(தென்னவன்
தனக்கு நீறு.....
மன்னன்
நீறு அணிந்தான்
என்று
மற்று அவன் மதுரை வாழ்வார்
துன்னி
நின்றார்கள் எல்லாம்
தூய
நீறு அணிந்து கொண்டார்) --- பெரிய புராணம்
3.
புகலியிற் கவுணயப் புலவோனே..
சீகாழிக்கு
உரிய பன்னிரண்டு பெயர்கள். பிரமபுரம், வேணுபுரம், தோணிபுரம், பூந்தராய், சிரபுரம்,
புறவம், சண்பை, கொச்சைவயம், வெங்குரு, கழுமலம் என்பன.
4.
கவுணியப் புலவோனே....
தேன்
நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல்
சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன்... ---- சம்பந்தர் தேவாரம்
கவுணியன்
– கௌண்டின்ய கோத்திரகாரன்
சம்பந்தர் சுரம் நீக்கிய வரலாறும், சமணர்கள் கழுவேறியதும்
பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும்
மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞான சம்பந்தர் மதுரைக்கு
வந்திருந்தார். அவர் சமயத்தில்
நம்பிக்கை யில்லாத சமணர்கள் அவர் வருகை தந்ததை வரவேற்கவில்லை. அவரை
ஒழித்துக்கட்ட அவர்கள் ஞானசம்பந்தர்
தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன்
பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சம்பந்தர், "அந்தத் தீ அரசனையே
பைய சாரட்டும்'' என்று சொல்லி பதிகம் பாடினார்.
உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம் வெப்பு நோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல்
அவன் தவித்தான். அவன் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை.
தன் வெப்பு நோயைத் தீர்க்க அவன் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தான். கருணை மனம்
கொண்ட ஞானசம்பந்தர் "மந்திரமாவது நீறு' என்ற பதிகம் பாடி,
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அவனுக்கு பூசியதும், நோய் நீங்கியது.
இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் சைவ மதத்திற்கு மாற
எண்ணிணான். இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர்
செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால்,
மதுரையை விட்டே போய் விடுவதாகவும்
அறிவித்தனர். அதன்படி இருதிறத்தாரும் தத்தம்
சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ
அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்`என்றனர்.
முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக்
கூறும் வசனத்தை எழுதி
ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை
எதிர்க்கும் ஆற்றலின்றி நீர்
ஓடும் திசையிலே ஓடிற்று. ஞான சம்பந்தர், `வாழ்க அந்தணர்` என்னும்
திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை
ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை
ஆற்றில் இட்டருளினார். அந்த ஏடு வைகை ஆற்று
வெள்ள ஒட்டத்துக்கு மாறாக எதிர் திசையில் சென்றது. அத்திருப்பதிகப்
பாடலில் `வேந்தனும் ஓங்குக` என ஞான சம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து
நின்றசீர் நெடு மாறன் ஆயினான்
இதற்கு முன்
சமணர்கள்` இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில்
எழுதி நெருப்பில்
இட்டால்வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்
சமயம் எனக்
கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார்.
பாண்டியன் தீக்குண்டம்
அமைக்கக் கட்டளையிட்டான். ஞானசம்பந்தர்
தாம் அருளிய பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை நூல் போட்டு விரித்ததில்.
`போகமார்த்த பூண்முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் வந்தது. ஞானசம்பந்தர்
திரு நள்ளாறு இறைவனைப் போற்றி அந்த ஏட்டினை எடுத்து அது நெருப்பில் வேகாதிருக்க
வேண்டி `தளிரிள வள ரொளி` என்றதொரு திருப்பதிகம் அருளி எடுத்த
ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது. சமணர்கள் ‘அஸ்தி
நாஸ்தி` என்ற தங்கள் சமய வசனத்தை எழுதி ஏட்டினைத்
தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை
காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும்
காண எடுத்தருளினார். அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால்
பச்சைத் திருப்பதிகம் எனப் வழங்க பெறுவதாயிற்று. இந்த இரண்டு
போட்டிலும் தோற்ற சம்ணர்கள் போட்டிக்கு முன்னால் ஒப்புக்கொண்டபடி தாங்களே கழு
ஏறினார்கள் எனச் சொல்லப்படுகிறது.
அருணகிரி நாதர் திருநள்ளார் திருப்புகழை
பச்சையொண்கிரி என ஆரம்பிப்பது
நோக்கத்தககது