F

படிப்போர்

Tuesday, 5 March 2013

189. ஐயுமுறு

189 ஐயுமுறு

திருவடியை வேண்டல்
              
                                    தய்யதன தான தய்யதன தான
                                    தய்யதன தான                      தனதான

           ஐயுமுறு நோயு மையலும வாவி
               னைவருமு பாயப்                         பலநூலின்
        அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
                முள்ளமுமில் வாழ்வைக்              கருதாசைப்
        பொய்யுமக லாத மெய்யைவள ராவி
                 உய்யும்வகை யோகத்                தணுகாதே
        புல்லறிவு பேசி யல்லல்படு வேனை
                நல்லஇரு தாளிற்                      புணர்வாயே
        மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
                செய்யபுய மீதுற்                     றணைவோனே
        வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
                 வெள்ளமுது மாவைப்                பொருதோனே
        வையமுழு தாளு மையமயில் வீர
                 வல்லமுரு காமுத்                     தமிழ்வேளே
         வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
                  வள்ளிமண வாளப்                  பெருமாளே

189 வள்ளிமலை
பதம் பிரித்து உரை

ஐ உறு நோயும் மையலும் அவாவின்
ஐவரும் உபாய பல நூலின்

ஐயும் = கோழையும்
உறு = சேரும்
நோயும் = நோய்களும்
மையலும் = மோகங்களும்
அவாவின் ஐவரும் = ஆசைகளை எழுப்பும் ஐம் பொறிகளும் உபாய = அவைகளின் சூழ்ச்சிகளும்
பல நூலின் = கலை நூல்கள் பலவும் (அகிய இந்தச்)

அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும்
உள்ளமும் இல் வாழ்வை கருது ஆசை

அள்ளல் = சேற்றே
கடவாது = தாண்டாது
துள்ளி அதில் = துள்ளி அவைகளுக்கு உள்ளேயே விழுந்து
மாயும் = இறந்து போகின்ற
உள்ளமும் = மனமும்
இல் வாழ்வை = இல்லற வாழ்க்கையையே
கருதா ஆசை = எண்ணுகின்ற ஆசையும்

பொய்யும் அகலாத மெய்யை வளர் ஆவி
உய்யும் வகை யோகத்து அணுகாதே

பொய்யும் அகலாத = பொய்யும் நீங்காத
மெய்யை = இந்த உடலை
வளர் ஆவி  = வளர்க்கின்ற உயிர்
உய்யும் வகை = பிழைக்கும் படியான
யோகத்து = நல்ல யோக வழிகளை
அணுகாதே = (நான்) அணுகாமல்

புல் அறிவு பேசி அல்லல் படுவேனை
நல் இரு தாளில் புணர்வாயே

புல் = இழிவான
அறிவு பேசி = இழவான அறிவுப் பேசுக்களைப் பேசி
அல்லல் படுவேனை = துன்பப்படுகின்ற என்னை
நல்ல இரு தாளில் = நன்மை பயக்கும் உனது இரண்டு திருவடிகளில்
புணர்வாயே = சேர்ப்பாயாக.

மெய்ய பொழில் நீடு தையலை மு நாலு
செய்ய புய மீது உற்று அணைவோனே

மெய்ய = மெய்யனே               
பொழில் = சோலயில்
நீடு = நீண்ட நேரம்           
தையலை = பெண்ணாகிய வள்ளியை
மு நாலு = பன்னிரண்டு  
செய்ய = சிவந்த.
புயம் மீது = தோள்களில்
உற்று அணைவோனே = பொருந்த அணைப்பவனே.

வெள்ளை இபம் ஏறு வள்ளல் கிளை வாழ
வெள்ளம் முது மாவை பொருதோனே

வெள்ளை இபம் ஏறும் = வெள்ளை யானையாகிய ஐராவதம் மீது ஏறும்
வள்ளல் = இந்திரனின்
கிளை = சுற்றத்தாராகிய தேவர்கள்
வாழ = செழிக்கவும்
வெள்ளம் = கடலில்
முது மாவை =  முதுமை உற்ற மாமரமாய் நின்ற சூரனுடன் பொருதோனே = போர் புரிந்தவனே.

வையம் முழுது ஆளும் ஐய மயில் வீர
வல்ல முருகா முத்தமிழ் வேளே

வையம் முழுது ஆளும் ஐய = உலகு முழுமையும் ஆளும் ஐயனே
மயில் வீர = மயில் வீரனே
வல்ல முருகா = திருவல்லம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகனே
முத்தமிழ் வேளே = முத்தமிழ்த் தலைவனே.

வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு
வள்ளி மணவாள பெருமாளே.

வள்ளி படர் = வள்ளிக் கிழங்கின் கொடி படர்கின்ற
சாரல் = மலைச் சாரல் உள்ள
வள்ளி மலை மேவும் = வள்ளி மலையில் வீற்றிருக்கும்
வள்ளி மணவாளப் பெருமாளே = வள்ளியின் மணவாளப் பெருமாளே

வள்ளி மணவாளப் பெருமான்
பட உதவி - ரா கிருஷ்ணன்

சுருக்க உரை

ஐம்பூதங்கள், நோய்கள், மோகங்கள், கலை நூல்கள் ஆகிய சேற்றில்
புதையுண்டு, அவற்றைத் தாண்டாமல் உள்ளேயே விழுந்து மடியும்
உள்ளமும், இல் வாழ்க்கையையே எண்ணும் ஆசையும் கொண்ட இந்த  உடலைப் பேணாமல், நல்ல யோக வழிகளை அணுகாமல், இழிவான பேச்சுகளைப் பேசித் துன்பம் உறும் என்னை உன் திருவடிகளில் சேர்ப்பாயாக. 

வள்ளியைப் புணரும் சிவந்த பன்னிரு கரங்களை உடையவரே,
இந்திரனும், தேவர்களும் வாழ, மாமரமாக நின்ற சூரனுடன் போர்
செய்தவனே, வல்லத்தில் உறையும் முருகோனே, வள்ளி மணவாளப்
பெருமாளே, உன் இரு திருத் தாளில் என்னைச் சேர்ப்பாயாக.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published