F

படிப்போர்

Thursday, 28 March 2013

203.கருகியறிவகல

203
அத்திப்பட்டு

(புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.   
நெய்வேலிக்கு அருகில் வில்லுடையான்பட்டியே அத்திப்பட்டு
என்பது வலையப்பட்டி கிருஷ்ணன் கருத்து)

        தனதனன தனதனன தத்தத் தத்ததன
        தனதனன தனதனன தத்தத் தத்ததன
        தனதனன தனதனன தத்தத் தத்ததன        தனதான

   கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
      கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
        கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி       லிடைபோடாக்
   கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
      கலையையுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
        கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர்          வழியேபோய்
   மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
      மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
       மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்           மதன்மலராலே
   மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
      மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
        வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள்      தருவாயே
   பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
      புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்
       புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி                     லுறமேவும்
   புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
      புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
        பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில்       மருகோனே
   அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
      லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
          அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு         மிளையோனே
  அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிக
      மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
        அணியகய லுகளும்வயல் அத்தப் பட்டிலுறை        பெருமாளே.

-203 அத்திப்பட்டு
பதம் பிரித்தல்

கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர்
கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட
கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா

கருகி = உடல் வற்றித் தீந்தது போலாகி அறிவு அகல = அறிவும் நீங்கி உயர் விட்டு = உயிர் பிரிந்தவுடன் உக்கிக் கிளைஞர் = சுற்றத்தார் உள்ளம் நைந்து கதறி அழ = கதறி அழ. விரவு = வந்து சேர்ந்த பறை முட்டக் கொட்டியிட = பறைகள் யாவும் சப்திக்க கனக மணி = பொன் அழகு துலங்கும் சிவிகையில் அமர்த்தி = பல்லக்கில் அமர்த்தி கட்டையினில் இடை போடா = விறகுக் கட்டைகளின் நடுவில் போடப்பட்டு.

கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு
கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல்
கண கண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய்

கர மலர் கொடு = உறவினர்களின் மலரன்ன கைகளால். அரிசியினை இட்டு = அரிசியிடப்பட்டு சித்ர மிகு = அழகுள்ள கலையை உரி செய்து = துணியும் விலகப்பட்டு மறைகள் = உடலின் மறைவான மற்ற இடங்களில் பற்றப் பற்று கனல் = பிடிக்கின்ற நெருப்பு பற்றி கண கண என எரிய = கண கண என்று எரிய உடல் சுட்டு = உடல் இங்ஙனம் சுடப்பட்டு கக்ஷிவர் = பக்கத்தில் இருந்தவர்கள்
வழியே போய் = தாம் வந்த வழியே திரும்பிப் போய்

மருவு புனல் முழுகி மனை புக்கு துக்கம் அறு
மனிதர் தமை உறவு நிலை சுட்டு சுட்டி உற
மகிழ்வு செய்து அழுது பட வைத்த துட்டன் மதன் மலராலே

மருவு = பொருந்திய புனல் = நீரில் முழுகி = குளித்து மனை புக்கு = வீட்டுக்குப் போய் துக்கம் அறும் மனிதர் தமை = துக்கம் நீங்கும் மனிதர்களை உறவு நிலை சுட்டுச் சுட்டி உற = இன்ன உறவு இவர் என்று உறவின் முறையைக் குறித்து அத்தகைய குறிப்பால் மகிழ்வு செய்து = (அவர் பொருட்டு) மகிழ்ச்சி பூணவும் அழுது பட வைத்த = அழுதுபடலும் வைத்த. துட்டன் மதன் = துட்டனாகிய மன்மதனுடைய மலரால் = மலர் அம்பால்.

மயல் விளைய அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக
மனம் அழியும் அடிமையை நினைத்து சொர்க்க பதி
வழியை இது வழி என உரைத்து பொன் கழல்கள் தருவாயே

மயல் விளைய = காம உணர்ச்சி உண்டாக. அரிவையர்கள் கைப் பட்டு = பெண்கள் கையில் அகப்பட்டு எய்த்து = இளைத்து மிக மனம் அழியும் = மிகவும் மனம் நொந்து அழிதலையும் கொண்ட அடிமையை நினைத்து = அடிமையாகிய என்னை (நீ) நினைத்து சொர்க்க பதி வழியை = உன் திருவடியாகிய பொன் உலகுக்குப் போகும் வழியை இது வழி என உரைத்து = இது தான் வழி என்று சொல்லிக் காட்டி பொன் கழல்கள் தருவாயே = உனது அழகிய திருவடியைத் தந்தருளுக.

பொருவு இல் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில்
புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல்
புதிய முடுகு அரிய தவம் உற்று கச்சியினில் உற மேவும்

பொரு இல் = நிகர் இல்லாத மலை அரையன் = பர்வத அரசன் அருள் = பெற்ற பச்சைச் சித்ர மயில் = பச்சை அழகு மயில் புரம் எரிய = திரி புரம் எரி பட இரணிய தனுக்கை = பொன் வில்லை பற்றிய = கைப்பற்றியவள் இயல் = இடைவிடாத அன்புடன் புதிய = அதிசயமான வகையில் முடுகு = ஊக்கத்துடன் அரிய தவம் உற்று = அருமையான தவத்தை மேற் கொண்டு கச்சியின் = காஞ்சிப் பதியில் உற மேவும் = பொருந்தி விளங்கும்.

புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி
புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள்
பொறி அரவின் மிசை துயிலு(ம்) சுத்த பச்சை முகில் மருகோனே

புகழ் வனிதை = புகழ் பெற்ற தேவி பார்வதி தரு புதல்வ = பெற்ற மகனே பத்துக் கொத்து = பத்துக் கொத்தான. முடி = தலைகளும் புயம் இருபது அறவும் = இருபது புயங்களும் அற்று விழ எய்த = செலுத்திய சக்ரக் கைக் கடவுள் = சக்ராயுதத்தை ஏந்திய கடவுள் பொறி அரவின் மிசை = புள்ளிகளைக் கொண்ட ஆதி சேடன் என்னும் பாம்பின் மேல் துயிலும் = பள்ளி கொள்ளும் சுத்தப்பச்சை முகில் = சுத்தமான பச்சை நிற மேக வண்ணனாகிய திருமாலின் மருகனே = மருகனே

அரிய மரகத மயிலில் உற்று கத்து
கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே

அரிய = அருமையான மரகத மயிலில் உற்று = பச்சை நிறமான மயில் மீது வீற்றிருந்து கத்து = ஒலிக்கும் கடல் அது சுவற = கடல் வற்றும்படி அசுரர் கிளை கெட்டு கட்டை அற = அசுரர்களின் கூட்டம் கட்டோடு ஒழிய அமரர் பதி இனிய குடி வைத்தற்கு = தேவர்கள் தலைவனான இந்திரன் சுகத்துடன் குடி ஏறுதற்கு  உற்ற = தக்கபடி வைத்த மிகு இளையோனே = மிக்க ளையவனே.

அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக
அழகு பொதி மதர் மகுட தத்தி தத்தி வளர்
அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை பெருமாளே.

அருண மணி = செம்மணிகள் பத்துத் திக்கும் = பத்துத் திக்குகளிலும்  வெயில் பரவு = ஒளி வீசும் மிக அழகுபொதி = மிக்க அழகு நிறைந்து மதர் = செழிப்புடன் மகுட = கிரீடம் மணி முடியை உடையவனே தத்தித் தத்தி = தாவித் தாவி வளர் = வளர்கின்ற அணிய = வரிசையாக உள்ள கயல் உகளும் = கயல் மீன்கள் குதிக்கும் வயல் = வயல்கள் உள்ள அத்திப் பட்டில் உறை பெருமாளே = அத்திப் பட்டில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

உயிர் பிரிந்தவுடன் உடலைச் சுடுகாட்டில் எரித்த பின்னர், கூட
வந்தவர்கள் நீரில் முழுகி விட்டு வீட்டுக்குப் போய்த் துக்கம் நீக்குகின்ற மனிதர்களைக் கண்டால் ஒரு புறம் மகிழ்ச்சியும் மற்றொரு புறம் அழுகையும் ஏற்படும்படி காம உணர்ச்சி உண்டாகப் ஏற்படும்படி பெண்களின் வசப்பட்டு மனம் நொந்தலைக் கொள்ளும் அடிமையை,  சொர்க்க லோகத்துக்கு இது தான் வழி என்று காட்டி உனது திருவடியைத் தந்து அருள்க.
மலையரசன் பர்வதராஜன் மகளும், அரிய தவத்தை மேற் கொண்டவளும்  ஆகிய பார்வதியின் புதல்வனே, இராவணனுடைய பத்துத் தலைகளும் அற்று விழ, சக்ராயுதத்தை ஏந்திய கைகளை உடையவனும், ஆதிசேடன் மேல் பள்ளி கொள்வராகிய திருமாலின் மருகனே, கடல் வற்றவும், அசுரர்கள் கூட்டம்  அழியவும், இந்திரன் தன் ஊருக்குக் குடி போகவும் மயில் மீது வந்து உதவிய இளையவனே, கயல் மீன்கள் குதிக்கும் வயல்கள்  சூழ்ந்த அத்திப்பட்டில் வீற்றிருக்கும் பெருமாளே, உன் அழகிய திருவடியைத் தாராய்.

ஒப்புக

1. புனல் மூழ்கி மனை புக்குத் துக்கம் அறு.....

...இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது... திருப்புகழ், இத்தாரணிக்குள்

செத்துக்  கிடக்கும் பிணத்தருகே இனிச்
சாம்பிணங்கள்   கத்தும் கணக்கென்ன காண் கயிலாபுரிக் காளத்தியே-
                                                          -----------        பட்டினத்தார்
2. புரமெரிய இரணிய தனுக்கைப் பற்றி...

         ...இமயகிரிமயில் குலவரை தநுவென
         அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த அபிராமி
                                                                 ---திருப்புகழ், முகிலுமிரவுயு
        
       வாளிசேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய்த்
        தொளி பாகம் அமர்ந்தவர்             ----                          சம்பந்தர் தேவாரம்.

3. அரிய தவ முற்றுக் கச்சியினி லுறமேவும்....
     
      அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
       தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்
       தமலைதென் கச்சிப் பிச்சி மலர்க்கொந் தளபாரை)-    -- திருப்புகழ், கனிதருங்கொக்கு 
     
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published