F

படிப்போர்

Wednesday, 20 March 2013

198.கொடாதவனை

198
விராலிமலை

               தனாதனன தான தந்த தனாதனன தான தந்த
               தனாதனன தான தந்த                 தனதான

கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
  குலாவியவ மேதி ரிந்து                                       புவிமீதே
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
  எலாவறுமை தீர அன்று                          னருள்பேணேன்
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
  சுகாதரம தாயொ ழுங்கி                              லொழுகாமல்
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
  கிலாதவுட லாவி நொந்து                               மடியாமுன்
தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
  சொலேழுலக மீனு மம்பை                             யருள்பாலா
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
  நபோமணி சமான துங்க                                  வடிவேலா
படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
  பசேலெனவு மேத ழைந்து                             தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
  விராலிமலை மீது கந்த                                  பெருமாளே.

பதம் பிரித்தல் பத உரை

கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து
குலாவி அவமே திரிந்து புவிமீதே

கொடாதவரையே புகழ்ந்து = கொடை எதுவும் செய்யாதவரை வள்ளல் என்று புகழந்தும் குபேரன் எனவே மொழிந்து = (அவரைக்) குபேரன் என்று கூறியும் குலாவி = மகிழ்ந்து துதித்து அவமே = வீணாக திரிந்து = திரிந்து புவி மீதே = இந்தப் பூமியில்.

எடாத சுமையே சுமந்து எ(ண்)ணாத கலியால் மெலிந்து
எ(ல்)லா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன்

எடாத சுமையே சுமந்து = எடுக்க முடியாத எல்லா பாரங்களையும் தாங்கி எ(ண்)ணாத கலியால் மெலிந்து = எண்ணுதற்கரிய கொடுமையால் நான் உடல் மெலிந்து.
எ(ல்)லா வறுமை தீர = (அதனால் உண்டான) எல்லா விதமான துன்பங்களும் தொலைய அன்று = முன்னாளிலேயே அருள் பேணேன் = (உனது) திருவருளைப் போற்றி விரும்பாது காலம் கழித்தேன்.

சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி
சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல்

சுடாத தனமான = பசும் பொன் போன்ற கொங்கைகளால் = தனங்களால் இதயமே மயங்கி = உள்ளம் காம மயக்கம் பூண்டு  சுகாதரமதாய் = சுகத்தைத் தரக் கூடிய வழியில்
ஒழுங்கில் ஒழுகாமல் = நெறியுடன் நடக்காமல்.

கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து
கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன்

கெடாத தவமே மறைந்து = கெடுதல் இல்லாத தவ நெறியும் மறைந்து போக கிலேசம் அதுவே மிகுந்து = துக்கமே மிகப் பெருகி கிலாத = ஆற்றல் இல்லாத.
உடல் ஆவி நொந்து = உடலும் ஆவியும் நொந்து
மடியாமுன் = நான் இறந்து போவதற்கு முன்.

தொடாய் மறலியே நீ என்ற சொ(ல்)லாகி அது நா வரும் கொல்
சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா

தொடாய் மறலியே நீ என்ற = யமனே, நீ (இவனைத்) தொடாதே என்ற சொ(ல்)லாகியது = சொல்லாலனது.
நா அருங் கொல் = உனது நாவில் வருமோ? சொல் = சொல்லியருளுக ஏழு உலகம் ஈனும் அம்பை = ஏழு உலகங்களையும் பெற்ற தேவியாகிய உமை அருள் பாலா = அருளிய குழந்தையே.

நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப
நபோ மணி சமான துங்க வடிவேலா

நடாத = நட்டு வைக்கப்படாத சுழி மூலம் = சுழி முனை, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள் விந்து = சத்தி பேதம் (ஆகிய இவைகளின்) நள் ஆவி = மத்தியில் உள்ள ஆவியில் விளை = தோன்றி விளங்கும்  ஞான நம்ப = ஞான சூரியனே நபோமணி = சூரியனுக்கு சமான = சமமான துங்க = ஒளியை உடைய  வடிவேலா = கூரிய வேலனே.

படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து
பசேல் எனவுமே தழைந்து தினமே தான்

படாத குளிர் சோலை = வெயில் படாத குளிர்ந்த சோலைகள்  அண்டம் அளாவி = வானத்தை அளாவி
உயர்வாய் வளர்ந்து = உயர்ந்து வளர்ந்து பசேல் எனவே தழைத்து = பச்சென்ற நிறத்துடன் தழைத்து தினமே
தான் = நாள் தோறும்.

விடாது மழை மாரி சிந்த அநேக மலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த பெருமாளே.

விடாது மழை மாரி சிந்த = விடாது மழை பொழிவதால்.
அநேக மலர் வாவி பொங்கு = நீர் நிலைகளில் நிரம்பி பல பூக்கள் மலரும் விராலி மலை மீது கந்தபெருமாளே = விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

கொடை என்பதையே அறியாதவரைப் புகழ்ந்தும், குபேரன் இன்று
கூறியும், துதித்தும் வீணாகத் திரிந்து, பூமியில் எல்லாவிதமான
பாரங்களையும் சுமந்து, கொடுமையால் மெலிந்து வாடித், துன்பங்கள்
ஒழிய, முன்னாளிலேயே உனது திருவருளைப் போற்றி விரும்பாது
காலம் கழித்தேன்.

மாதர்களின் அழகிய கொங்கையால் மறக்கமுற்று, நல் வழியில்
நடக்காமல், தவநெறியும் ஒழுக்கமும் அற்ற வாழ்க்கையை மேற்
கொண்டு, நான் இறப்பதற்கு முன், யமன் என் உயிரைக் கவராது
இருக்க அவனிடம் சொல்ல மாட்டாயா? ஏழு உலகங்களையும் ஈன்ற
பார்வதியின் பாலனே. சுழி முனை, மூலாதாரம், சத்தி பேதம் ஆகிய
ஆறு ஆதாரங்களின் நடுவில் உள்ள ஆவியில் தோன்றி விளங்கும்
ஞான மூர்த்தியே.  செழிப்பான விராலி மலையில் வீற்றிருக்கும்
பெருமாளே,  யமன் என்னைத் தொடாத வண்ணம் அவனிடம் சொல்ல
வேண்டுகின்றேன்.

குகஸ்ரீ ரசபதி அவர்களின் விளக்க உரை

கோயில் கோபுரம் போல்வது தேகம். ஆதாரம் பலவற்றின் மேல் கோபுரம் அமைகிறது. அது போல ஆதாரங்கள் ஆறு அந்த உடம்பிற்கு ஆராதங்களாய் இருக்கின்றன. பரமன் கோயில் ஆதாரங்களை பார்த்து அறியலாம். படித்தும் தெரிந்து கொள்ளலாம்.  ஆக்கையில் உள்ள ஆதாரங்களை உமை குமரா, நீ உணர்த்தினால் தான் எங்களால் உணர இயலும்.

முதல் ஆதாரம் மூலாதாரம், அதன் மேல் சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, விசுக்தியின் மேல் இடம் ஆக்ஞை. ஆக்ஞையின் நிலமே சுழுமுனை. பயனான நாடிகள் பத்து. அவைகளில் ஒன்று சுழுமுனை. உடம்பில் உள்ள ஆதாரங்கள் தோறும் ஒளிமயமான விந்து சக்தி விளங்கி  புகுந்து விளையாடுகிறாள். இதனால் ஆறு ஆதாரங்களும் ஏகமான ஜோதிமயம். - எந்தனுள் ஏக செஞடசுடராகி என் கண்ணில் ஆடும் தழல் வெணி எந்தையர் தேடும் அன்பர் சகாய எங்கள் சுவாமி அருள் பாலா -  என விந்ததினூறி திருப்புகழில் முன்னம் இதனை    எண்ணியுளம்.
அடியில் இருக்கும் மூல நிலம் உச்சியில் இருக்கும் சுழுமுனை இடையில் இருக்கும் விளக்கொளி சக்தி  மூன்றும் தூய ஒளி வெள்ளைத் தம்பம் போல் தோன்றுகின்றன. ஆயினும் அவைகள் எங்கள் முயற்சியால் ஆனவை அல்ல. உண்மையில் அவைகள் ஈஸ்வர் பிரசாதமான இடங்கள் என்று நீர் அருளோடு அறிவிக்க அறிந்துளம். - ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே - என்று ஓதும் எங்களை உய்விக்க மேல் நிலை சுழுமுனை கீழ் மேல் ஆதாரங்கள் மேலும் கீழும் ஆன உயர்ந்த விந்து ஒளிகளின் நடுவில் ஊடுறுவி ஆன்ம இயற்கை அறிவால்அறியவொண்ணாதபடிஏட்டுக் கல்வியின் செயற்கை அறிவிற்கு எட்டாதபடி  அதிநுட்ப ஆவியாய் ஆடல் புரிகின்றீர்.

இன்மையை வெறுத்து மறுமையை மறுத்து உம்மில் ஒன்ற அழுது கதறும்  ஆன்மாக்களை அறிந்து அருளும் முதன்மை ஞான மூர்த்தி நீர். அவர்கள் நம்பி இருக்கும் நம்பர் நீர். அதனால் தான்,  -   நடாத   சுழி மூல விந்து நள்  ஆவி   விளை ஞான நம்ப -   என்று ஆவலித்து உம்மை அழைக்கிறோம். ( நள்  =  நடு இடம் )   விண்ணில் ஒரு மணி விளங்குகிறது.  அது எல்லை இட்ட ஒளி மயம். தோன்றும் மறையும்.  அம்மணி ப்ரகிருதியின்  அக்னி பிழம்பு. அதை சூரியன் என்று  சொல்லுகிறது. அற்றொரு ஆகாயம் மதிப்பிற்கு உரியது. அது ஞானஆகாயம். புனித சுழுமுனையில் உணர்வு புகுந்து விந்து தத்துவ விளக்கொளி பிறந்து  அவ்வழியில் ஆதாரங்களை அறிந்து இம்மூன்றிலும் ஊடுறுவிய மேன்மை ஆவியான உமது மெய்மையை அறிந்தோம். அருள் மயமான அந்த ஞான ஆகாயத்தை அறிவர் அறிவர். அதை அறியும் சமயம், - உததியடை  கடவுமர கதவருண குலதுரக உபலளித கனக ரத சதகோடி சூரியர்கள் உதயமென அதிக வித கலபகக மயிலின்மிசை யுகமுடிவின் இருளகல ஒரு ஜோதி வீசும்  நவோமணி ஆகி ஆதி பரம அருளை பாலிப்பவர் நீர். ( நவம் = ஞான விண், மணி = மாணிக்கமான சூரியன் ).

அகண்டாகாயமாய் இருந்தே அதி நுண்மையான உம்மிடத்தில் நிக்ரக அனுக்ரக நியதி சக்தி  ஒன்று  நிலைத்து இருக்கிறது. வடமொழியில் அதன் பெயர் ஞானாசக்தி. தென் மொழி வடிவேல் என பெயரிட்டு அதை மனனம் செய்து மகிழ்கிறது. ஜோதிமயமான உபலளித சமானமானது வளரும் ஒளிமயமான அவ்வடிவேல். அதனால் தான் சமான துங்க வடிவேலா என்று அன்பால் கூவி அழைக்கிறோம்.

குளு குளுவென்று  குளிர்ந்து ஆதித்தன் வெயில் நுழையாதபடி அடர்ந்து  பசுமையைப் பரப்பும் சோலைகள் வானம் அளாவி வளர்ந்து இருத்தலால் கால மழை என்றும் காலங்கரில் பெய்யும். இதனால் நீரோடைகள் எங்கும் நிரம்பின. அவைகளில் பூத்த நீர் பூக்கள்  பயனான மணத்தைப் பரப்புகின்றன. கோட்டுப் பூ, கொடிப்பூ, நீலப்பூ இவைகள் மாபெரும் சோலைகளில் அந்த எணத்தைப் பரப்புகின்றன. இயற்கை சிறப்புடைய இந்த விராலி மலையை உவந்துளிர் நீர். அதனால் விராலி மலை மீது உகந்த பெருமாளே என வினயம் காட்டி விளிப்பம்.

எங்கும் மணம் எழுப்பும் விராலி மலை மீது இருக்க உவந்த நீரும் அருள் மணமானவர். அதனால் விராலி மலை மீது கந்தப் பெருமாளே என ஓதினாலும் உய்தி உண்டு ( கந்தம் = மணம் ).

அம்பை அருள் பாலா, வடி வேலா, விராலி மலை மீது கந்தப் பெருமாளே கேண்மையேன் விண்ணப்பம் கேட்டு அருளும். கோடுப்பாரும் இல்லை கொள்வாரும் இல்லை என்பது கடந்த கால வரலாறு.  இன்றைய உலகில் தாழ்மையைத் தருகின்ற ஏழ்மை நிலை, அறியாமையால் ஈவாரை அறிந்திலன். ஈயாத செல்வன் தான் கண் முன் எதிர்படுகிறான். ஈவார் எனும் எண்ணத்தில் அவர்களை உயர்த்தி புகழ்கிறது புத்தி. வாய்மையை மறந்த வாய், நீயே குபேரன் என வாழ்த்துகின்றது.  ஈவார் ஈவார் என நம்பி பேதையாகி  பலகாலும் அவரைப் பின் பற்றி உழன்று  அலுப்பது

உலக நடை.  சும்மாடு எதையும் சுமப்பது இல்லை. அந்த சும்மாட்டையும் சேர்த்து சுமப்பது தான் தலை விதி.

ஏமாற வைக்கும் வாழ்க்கையில் எத்தனையோ கவலைகள்.  இருக்கும் இதயமோ சிறியது.  அதில் சுமக்கும் கவலைக்கோ அளவில்லை. எங்கள் நிலையை கூவி அதை எண்ணிப்பார்ப்பது இல்லை.  உக்ரமான அதன் சூழ்நிலையால் உடல் இளைப்பது தான் கண்ட பலன்.  பொருட் செல்வம் இல்லை என்பது தெரிந்த செய்தி.  வறுமை வாழ்க்கையில் அறிவுட் செல்வமும் வரண்டது.  பொருள் நலம் உணரும் கல்விச் செல்வமும் கரந்து தொலைந்தது. கொடாதவனையே  புகழ்ந்து குபேரன்  எனவே   மொழிந்து குலாவி  அவமே   திரிந்து சுமையைச் சுமந்து மெலிந்து   அவதிப்பட வைத்த தொல்லை வறுமை அடியோடு தொலைய  இளம் பருவ அந்நாளில் பொன்னான உன் அருளைப் போற்றி இருக்கலாம்.  அதனால் இளமையில் பல நலம் ஏறி இருக்கும்.  அடடா , ஒரு சிறிதும் உன்  அருள் பேணேன் இப்படியா விதி சதி செய்யும். இந்த நிலையில் காமன் அம்பு தைக்க வரும் காளைப்பருவ கல கல கதை பின்னி உடலை பிசைகிறது.                                                                      -  பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டு என்னை புண்ணும் குழியில் தள்ளி என்னைக் கண்ணால் மயக்கி முலையால் விரட்டி தடி தடத்து  புண்ணாம் குழியில் தள்ளி என் போதப் பொருள் பறித்து எண்ணாது உன்னை மறந்தேன் கச்சி ஏகம்பனே -  என்று முற்றும் துறந்த ஒரு முனிவர் புலம்பினார்.

தூய்மையை பேய்மையாய் நினைப்பது பெரும் தவறு. பயனான மனத்தை பலவீனமாக்கி சிருஷ்டி ரகசியத்தை சிந்திக்காமல்  தன் குற்றத்தை உலக குற்றமாக உணர்வது முறையாகுமா ?. இறை திருவருள் இருந்து தூய ஒரு சேய் எதிர்காலத்தில் தோன்றுமேல் அதன் பசி ஆற்றும் கலசங்கள் இவை. இயற்கை தந்த பிரசாதங்கள் இவை என எண்ணுவது அறிவுடைமை.  அதற்கு மாறாக உருக்கி வார்க்காத பொன் உருண்டை என்று பாவையர் குயங்களை எண்ணி பல் இளித்து மனம் மிக மயங்குவது மரபாகுமா ?
இல்லறம் தான் வேண்டுமேல் மங்கை ஒருத்தியை மணந்து  இயற்கை நெறியில் இன்பம் கண்டு இருப்பது தானே தர்ம நெறி.  இதுதானே பேரின்ப சுகத்திற்கு ஆதாரமான பெரிய வழி. அதற்கு மாறாக கண்ட கண்ட இடங்களில் காண்பித்து இரவு பகல், நன்னாள் தீநாள் என அறிந்து சுகாதாரமான ஒழுக்கமுறை வாழ அறியாதாரை என்ன என்று இயம்புவது. மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில்  ஒழுகாமல்  தவறு  செய்யும் இவர்கள் அழிவற்ற மாபெரும் தவநெறி மறைகிறது. உடல் கெட்டு உள்ளம் கெட்டு  உணர்வும் சிதைந்து  வர வர கிலசமே வளர்கிறது.  அணு அணுவாக உடலின் பலமும் நலிகிறது.

சுவாச ஓட்டமும் சுகமில்லை. மூச்சு தாராளமாக விடமுடிவதில்லை. அந்தி காலம் அணுகுகிறது.  அதை எண்ணும் போதே இதயம் அதிர்கின்றதே.  ஆவி நொந்து மடியாமுன் தலை தொங்கும், கண்கள் கங்கும், காதடைக்கும், கைகால்கள் செயலற்றுப் போகும். நாவில் ஈரம் வரண்டுவிடும்.  இதுதான் முடிவு என்பதா ?.

அடடா, பருமை உலகம் மறைகிறது, நுண்மை உலகம் புரிகிறது. ஓ, எம தூதர்கள் தரிசனமா ? என்ன பயங்கரமான தோற்றம்.  பாசம் வீசும் பரபரப்பு. கபக் என்று உயிரைப் பற்றுகிற நேரம்.  எண் சாண் உடம்பும் ஒரு சாண் ஆகி  ஆன்ம இதயம் அலறுகிறது.

தொடாதே , ஏய் எம தூதா”, “உன்னைத் தான் சொல்லுகிறேன்”,  என ஆபத்தான அந்த சமயத்தில்  ஒரு வாக்கு உமது திருநாவில் இருந்து உதயமாகுமா ?

ஏழை  மேலும் கோழை இவன், சூழ்நிலையால் அறிவு சுழிந்தவன், கற்பித்தார் இல்லை, மேலும் கை கொடுப்பாரும் இல்லை, அவனுக்கு இனி யாம் அருள்வம் எனும் பொருளில், தொடாய் மறலியே நி என்ற சொல் ஆகி அது உன்  நாவரும்   சொல்  என்று குழறி வருகிறது குரல். மக்கள்
நிலையைத் தம் மேல் ஏற்றி அவர் தம் பிரதிநிதியாகி உமைபாலா, வடிவேலா, மரண நாளில் மறலியைத் தடுக்க யாம் வருவம், அஞ்ச வேண்டா என்ற ஒரு வாக்கு அருளும். அதிரும் மனம் அதன் பின் அமைதி அடையும் என அருணை முனிவர் விழுந்து கதறி விண்ணப்பித்த புகழ் இது.          

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published