191 குடிவாழ்க்கை
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய தனதான
வள்ளி நாயகனே
மரணமடையுமுன்
உன் சரணமடைய அருள்
புரிவாய்
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர
சன்ன மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
குருவார்த்தை
தன்னை யுணராதே
இடநாட்கல்
வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட
இன்னல் கொடுபோகி
இடுகாட்டி
லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை யுணர்வேனோ
வடநாட்டில்
வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி
கழ்ந்த குமரேசா
வடிவாட்டி
வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த
நல்ல மணவாளா
அடிநாட்கள்
செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும்
வண்மை தரும்வாழ்வே
அடிபோற்றி
யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு
நல்ல பெருமாளே
- 191வள்ளி
மலை
பதம்
பிரித்தல்
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை
குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்
குடி வாழ்க்கை = இல்லற வாழக்கையில் ஏற்பட்ட அன்னை = தாய் மனையாட்டி = மனைவி பிள்ளை = பிள்ளை குயில் போல் = குயிலைப் போல ப்ரசன்ன மொழியார்கள் = பேசி
எதிர்ப்படும் பெண்கள்.
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன
குரு வார்த்தை தன்னை உணராதே
குலம் வாய்த்த = (மேன்மையான)
குலம் கிடைத்துள்ள. நல்ல
தனம் வாய்த்தது = நல்ல செல்வம் (இவை எல்லாம் நமக்குக் கிடைத்து உள்ளது) என்ன = என்று (ஆணவம்
கொண்டு) குரு வார்த்தை தன்னை = குருவின் உபதேச
மொழிகளை உணராதே = உணர்ந்து அறியாமல்.
இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய
இடர் கூட்ட இன்னல் கொடு போகி
இட நாட்கள் = நாட்களைக் கழிக்க
வெய்ய = கொடு மையான நமன் நீட்டி = நமன் நெருங்கி தொய்ய = சோர்ந்து போகும்படி இடர் கூட்ட = துன்பத்தைத் தர இன்னல் கொடு போகி = துயரத்துடன் கொண்டு போய்
இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன்
இரு தாட்கள் தம்மை உணர்வேனோ
இடு காட்டில் என்னை = சுடு காட்டில்
என் உடலை எரி ஊட்டு முன் = எரிப்பதற்கு
முன்னர் உன் இரு தாட்கள் தம்மை = உன்னுடைய இரண்டு
திருவடிகளை உணர்வேனோ = உணர்ந்து அறிய
மாட்டேனோ?
வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி
மயில் மேல் திகழ்ந்த குமரேசா
வட நாட்டில் = வடக்கே உள்ள வெள்ளி மலை காத்து = வெள்ளி மலையாகிய
கயிலாயத்தைக் காத்து புள்ளி மயில் மேல் = புள்ளி மயிலின் மீது
திகழ் குமரேசா = விளங்கும்
குமரேசனே.
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி
மலை காத்த நல்ல மணவாளா
வடிவாட்டி = அழகு நிறைந்த வள்ளி அடி போற்றி = வள்ளியின்
திருவடியைத் துதித்து வள்ளி மலை காத்த = வள்ளி மலையில் வேளைக்காரனாகக் காத்து
நின்ற நல்ல மணவாளா = நல்ல கணவனே.
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை
அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே
அடி நாட்கள் = முன் நாட்களில் செய்த = (நான்) செய்த பிழை நீக்கி = பிழைகளைப்
பொறுத்து என்னை அருள் போற்றும் = எனக்கு உனது
திருவருளைப் போற்றும் வண்மை = வளப்பமான குணத்தை தரும் வாழ்வே =
தருகின்ற செல்வமே
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல பெருமாளே.
அடி போற்றி = உனது திருவடியைப் போற்றி அல்லி = தாமரை மலரை முடி சூட்டி = உனது தலையில்
சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே = அடியவர்களுக்கு
நல்ல பெருமாளே.
சுருக்க
உரை
இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட தாய், மனைவி, பிள்ளை, பெண்கள் முதலியவைகளும் பெருஞ் செல்வமும்
தமக்கு உள்ளன என்று ஆணவம் கொண்டு, குருவின் உபதேசங்களை உணராமல், காலத்தைக் கழித்து, கடைசியாக நமன் நெருங்கித் துன்பம் தர, சுடுகாட்டில உடலைக் கொண்டு போய் எரிக்கும் போது, உன் இரு திருவடிகளை உணர மாட்டேனோ?
கயிலாய மலையைக் காத்து மயில் மேல் திகழும் குமரேசா,
வள்ளி மலையில் வள்ளி நாயகியைப் போற்றித் துதித்த நல்ல
மணவாளனே, முன் நான் செய்த பிழைகளைப் பொறுத்து, உனது
திருவடியைப் போற்றும் வண்மையை எனக்கு அருள் செய்த செல்வமே, உன் அடிகளில் மலர்களைச் சூட்ட வல்ல அடியார்களுக்கு
நல்ல பெருமாளே, உன் தாள்களை நான் உணர்வேனோ?
ஒப்புக:
அடியார்க்கு நல்ல பெருமாளே
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே . . . சம்பந்தர் தேவாரம்
அடியாரக்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்க.. .கந்தர் அலங்காரம்
விளக்கக்
குறிப்புகள்
வடநாட்டில் வெள்ளி மலை காத்து:-
வடநாட்டில் உள்ள வெள்ளி மலையான திருக்கயிலாயத்தில்,
கோபுர வாசலில் முருகன் இருந்து காத்தல் செய்கின்றார்.

No comments:
Post a Comment
Your comments needs approval before being published