F

படிப்போர்

Wednesday, 20 March 2013

202.மாலாசை

202
விராலிமலை

            தானான தான தானான தான
            தானான தான       தனதான

மாலாசை கோப மோயாதெ நாளு
   மாயா விகார                  வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
   மாதா பிதாவு                      மினிநீயே
நாலான வேத நூலாக மாதி
   நானோதி னேனு             மிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்  
   ஞானோப தேச                மருள்வாயே
பாலா கலார ஆமோத லேப
   பாடீர வாக                      அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
   பானீய மேலை                   வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக
   வேதாள பூத                      பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
   வேளே சுரேசர்                பெருமாளே.

பதம் பிரித்தல்

மால் ஆசை கோபம் ஓயாது எந்நாளும்
மாயா விகார வழியே செல்

மா பாவி காளி தான் ஏனு(ம்) நாத
மாதா பிதாவும் இனி நீயே

நாலு ஆன வேத நூல் ஆகம(ம)ம் ஆதி
நான் ஓதினேனும் இல்லை வீணே

நாள் போய் விடாமல் ஆறு ஆறு மீதில்
ஞான உபதேசம் அருள்வாயே

பாலா க(ல்)லாரம் ஆமோத லேப
பாடீர வாக அணி மீதே

பாதாள(ம்) பூமி ஆதாரம் மீன
பானீயம் மேலை வயலூரா

வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத பதி சேயே

வீரா கடோர சூராரியே செவ்வேளே
சுரேசர் பெருமாளே.

பத உரை

மால் = மயக்கம். ஆசை = ஆசை கோபம் = சினம் (ஆகியவை). ஓயாது = ஓய்வில்லாமல் எந்நாளும் = எப்போதும் மாயா விகார = உலக மாயை சம்பந்தப்பட்ட கவலைகளின் வழியே செல் = வழியிலேயே போகின்ற.

மா பாவி = பெரிய பாவி காளி = விட குணம் உள்ளவன் தான் என்னும் நாத = நான் என்றிருந்த போதிலும், நாதனே மாதா, பிதாவும் எனி நீயே = இனி எனக்குத் தாயும், தந்தையும் நீ தான்.

நாலு ஆன வேத நூல் = நான்கு வேத நூல்களையும் ஆகமம் ஆதி = ஆகமம் ஆகிய பிற நூல்களையும் நான் ஓதினேனும் இல்லல் = நான் படித்ததும் இல்லை வீணே = வீணாக (என்).

நாள் போய் விடாமல் = வாழ் நாள் போய்விடாமல் ஆறாறு மீதில் = முப்பத்தாறு தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட நிலையதான ஞான உபதேசம் அருள்வாயே = ஞான உபதேசத்தை அருள்வாய்.

பாலா = பாலனே கல்லாரம் ஆமோத = செங்குவளை[Sr1] [Sr2]  மலர்ப் பிரியனே லேப பாடீர வாக அணி மீதே = ஆபரணங்களின் மேல் சந்தனக் கலவைப் பூச்சு அணிந்த அழகனே.

பாதாள பூமி ஆதாரம் = பாதாளம், பூமி இவைகளுக்குப் பற்றுக் கோடாக இருப்பவனே. மீன பானீயம் = மீன் நிறைந்த. மேலை வயலூரா =  மேலைமேன்மை தங்கிய வயலூரில் வீற்றிருப்பவனே.

வேலா = வேலனே விராலி வாழ்வே = விராலி மலைச் செல்வனே சமூக வேதாள = திரளான பேய்க் கணங்களுக்கும் பூத = பூத கணங்களுக்கும் பதி = தலைவனாகிய சிவபெருமானுடைய சேயே = குமாரனே.

வீரா = வீரனே. கடோர = கொடுமை வாய்ந்த சூராரியே = சூரனுக்குப் பகைவனே செவ்வேளே = செவ்வேளே சுரேசர் பெருமாளே

மயக்கம் ஆசை கோப முதலியவை ஓயாது, என்றும் மாயா விகார வழியில் செல்லுகின்ற பெரிய பாவியும் விஷ குணமுள்ளவன் எனினும் தலைவரே! எனக்கு தாயும் தந்தையும் நீர்தான். வேதாகமம் முதலிய நூல்களை அடியேன் ஓதினேனில்லை. வீணே நாள் கழித்து போகாமல் முப்பத்தாறு தத்துவங்கட்கும் அப்பாலுள்ள ஞானத்தை உபதேசித்தருளுவீர்.இளங் குமாரரே! செங்கழுநீசர் மலர் மாலையில் அன்புள்ளவரே! ஆபரணங்கள் மீது சந்தனக் கலவை யணிந்துள்ளவரே! பாதலத்துக்கும் பூதலத்துக்கும் தலைவரே! மீன் நிறைந்த தண்ணீர் சூழ்ந்த மேலை வயலூரில் வாழ்பவரே! வேலாயுதரே விராலி மலைச் செல்வனே!  பூத கூட்டங்களின் தலைவராய சிவ குமாரரே! வீர மூர்த்தியே! கொடுமையான சூரபன்மனுக்குப் பகைவரே! செவ்வேட் பரமரே! தேவர்தலைவராகிய பெருமிதமுடையவரே!

விளக்கக் குறிப்புகள்

1. காளி =  விட குணமுள்ளவன். ...காளம் விஷம்

2. ஆறுஆறு மீதில்....
(கனத்த தத்துவமுற் றழியாமல்).............................திருப்புகழ்,நினைத்ததெ.

3. சமூக வேதாள் பூத பதி சேயே...
(பூத பதியாகிய புராணமுனி)...சம்பந்தர் தேவாரம்.

” tag:

1 comment:

Your comments needs approval before being published