F

படிப்போர்

Tuesday 5 March 2013

188 அல்லிவிழியால்

188 அல்லிவிழியால்
திருவடியை அருளுக

                   தய்யதன தான தய்யதன தான
                     தய்யதன தான                தனதான

      அல்லிவழி யாலு முல்லைநகை யாலு
         மல்லல்பட ஆசைக்                           கடலீயும்
      அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
         முள்ளவினை யாரத்                          தனமாரும்
      இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
         வல்லெருமை மாயச்                         சமனாரும்
      எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
         உய்யவொரு நீபொற்                     கழல்தாராய்
      தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
         சொல்லுமுப தேசக்                            குருநாதா
      துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
         வெள்ளீவன மீதுற்                      றுறைவோனே
      வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
         வல்லைவடி வேலைத்                  தொடுவோனே
      வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
         வள்ளிமண வாளப்                        பெருமாளே.
-188 வள்ளிமலை

பதம் பிரித்தல்

***********

இல்லும் இளையோரும் மெல்ல அயலாக
வல் எருமை மாய சமனாரும்

***********
இல்லும் = மனைவியும். இளையோரும் = (தனக்கு வயதில்) இளையவர்களும். மெல்ல அயலாக = மெதுவாக வேறாகும் படி. வல் எறுமை மாயச் சமனாரும் = வலிய எறுமை மீது வரும் மாயம் வல்ல நமனும்.

எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில்
உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய்

எள்ளி எனது ஆவி = இகழ்ந்து என் உயிரை. கொள்ளை கொளு நாளில் = கொள்ளை அடித்துக் கொண்டு போகும் அந்த நாளில் உய்ய (நான்) உய்யுமாறு  நீ ஒரு பொன் கழல் தாராய் = நீ  ஒப்பற்ற (உனது) திருவடியைத் தாராய்.

தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர்
சொல்லும் உபதேச குருநாதா

தொல்லை மறை தேடி = பழைய வேதங்கள் தேடி  இல்லை எனு நாதர்காணுதற்கில்லை என்ற சிவபெருமான் சொல்லும் = (உன்னிடம் கற்றுச்) சொல்லும் உபதேசக் குரு நாதா = உபதேசத்தைச் செய்த குரு நாதனே.

துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண
எள்ளி வனம் மீது உற்று உறைவோனே

துள்ளி விளையாடும் = துள்ளி விளையாடுகின்ற புள்ளி உழை நாண = புள்ளி மானும் வெட்கப்படும் படி எள்ளி = இகழ்ந்தவளாகிய வள்ளி (வாழ்ந்திருந்தவனம் மீது உற்று உறைவோனே = வள்ளி மலைக் காட்டில் நின்று தங்கியவனே.

வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ
வல்லை வடிவேலை தொடுவோனே

வல் அசுரர் மாள = வலிமை வாய்ந்த அசுரர்கள் இறக்கவும் நல்ல சுரர் வாழ = நல்ல தேவர்கள் வாழவும் வல்லை = விரைவில் வடி வேலைத் தொடுவோனே = கூரிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே.

வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு
வள்ளி மணவாள பெருமாளே.

வள்ளி படர் சாரலில் = வள்ளிக் கொடி படர்ந்திருந்த மலைப் பக்கம் கொண்ட வள்ளி மலை மேவும் = வள்ளி மலையில் வீற்றிருக்கும் வள்ளி மணவாளப் பெருமாளே = வள்ளியின் மணாளனாகிய பெருமாளே.

சுருக்க உரை

****** மனைவியும், மக்களும், வேறாக நிற்க, நமன் எருமை மீது  என் உயிரைக் கொள்ளை கொண்டு  போக வந்த அந்நாளில் நான் உய்யுமாறு உனது திருவடியைத் தந்து அருளுக.

வேதங்களும் தேடிக் காண ஒண்ணாத சிவபெருமானுக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்தவனே. புள்ளி மானும் வெட்கப்டும்படி இகழ்ந்தவளாகிய வள்ளி வாழ்ந்த வள்ளி மலை காட்டில் நின்று தங்கியவனே. வலிய அசுரர் மாளவும், நல்ல அமரர் வாழவும் கூரிய வேலைச் செலுத்தியவரே. வள்ளி மலையில்
வீற்றிருக்கும் வள்ளி மணவாளப் பெருமாளே. நான் உய்ய உன் திருவடியைத் தந்து அருளுக.
  
விளக்கக் குறிப்புகள்

1. அல்லி விழியாலும்.....
நல்லை நெஞ்சே.....
அல்லி மாதர் புல்க நின்ற
ஆயிரத் தோளனிடம் ----                            பெரிய திருமொழி.

2. மாயச் சமனாரும்....
         அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக் கடியிணை தரவேணும்     திருப்புகழ், வஞ்சித்துடனொரு

3. தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர்.....
   வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
                                               ................. மாணிக்கவாசகர்,திருவாசகம்.    
4. எள்ளி வன மீதுற்று உறைவோனே...
    வெங்காடும் புனமும் கமழும் கழலே ---                                   கந்தர் அனுபூதி.
    தினையோ டிதணோடு திரிந்தவனே) ---                                     கந்தர் அனுபூதி

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published