F

படிப்போர்

Tuesday 19 March 2013

193. அல்லில்

193
வள்ளியூர்
 
                      தய்ய தானன தனதான தய்ய தானன தனதான

                      அல்லில் நேருமி           னதுதானும்
                           அல்ல தாகிய      உடல்மாயை
                    கல்லி னேரஅ            வழிதோறுங்
                           கையு நானுமு     லையலாமோ
                   சொல்லி நேர்படு             முதுசூரர்
                           தொய்ய வூர்கெட  விடும்வேலா
                   வல்லி மாரிரு                   புறமாக
                   வள்ளி யூருறை             பெருமாளே
  193 வள்ளியூர்

பதம் பிரித்து உரை

அல்லில் நேரு மின் அது தானும்
அல்லதாகிய உடல் மாயை

அல்லில் நேர் = இரவில் காணப்படும். மின் = மின்னல் அது தானும் = அந்த நேரம் கூட நிலைக்காத அல் அதாகிய = துன்பம் மிகுந்த உடல் மாயை = உடல் ஒரு மாயையாகும்.

கல்லில் நேர் அ வழி தோறும்
கையும் நானும் உலையலாமோ

கல்லில் நேர் = கல்லுக்கு ஒப்பான அ வழி தோறும் = அந்த மாய வாழ்க்கை வழி எல்லாம் கையும் = என் ஒழுக்க நிலையும் நானும் = நைந்து வருந்துகின்ற நானும் உலையலாமோ = நிலை குலையலாமோ?

சொல்லி நேர் படு முது சூரர்
தொய்ய ஊர் கெட விடும் வேலா

சொல்லி = தம் வீரங்களைச் சொல்லி நேர் படு = சொல்லிக் கொண்டு எதிர்த்து வந்த முது சூரர் = பெரிய சூரர்கள் தொய்ய = சோர்வு அடைய ஊர் கெட = (அவர்களுடைய) ஊர் பாழ்படவும் விடும் வேலா = செலுத்திய வேலனே.

வல்லிமார் இரு புறமாக
வள்ளியூர் உறை பெருமாளே.
 
வல்லிமார் இருபுறமாக = வல்லிக் கொடி ஒத்த மாதர் இருவர்கள் (வள்ளி, தெய்வ யானை) இரு பக்கத்திலும் இருக்கும் வள்ளியூரில் = வள்ளி ஊரில் உறை பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

மின்னலைப் போல் நிலையில்லாத துன்பத்துக்கு இடமான உடல் ஒரு மாயை. கல்லுக்கு ஒப்பான அந்த மாய வாழ்க்கையை ஒட்டி என் ஒழுக்க நிலையும் நானும் அழியலாமா? தங்கள் வீரங்களைச் சொல்லித் திரியும் பெரிய சூரர்கள் அழியவும், அவர்கள் ஊர் பாழ்படவும் வேலைச் செலுத்தியவனே, கொடி போன்ற வள்ளி, தெய்வ யானை ஆகிய இரண்டு மாதர்களும் பக்கத்தில் இருக்கும்படி வள்ளியூரில் வீற்றிருக்கும் பெருமாளே, நான் நிலையில்லாத வாழ்க்கையில் நிலை குலையலாமோ?

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published