F

படிப்போர்

Wednesday 20 March 2013

199.சீரான கோல

199
விராலிமலை

                  தானான தான தான தனதன
              தானான தான தான தனதன
              தானான தான தான தனதன         தனதான

சீரான கோல கால நவமணி
  மாலாபி ஷேக பார வெகுவித
  தேவாதி தேவர் சேவை செயுமுக        மலராறும்
சீராடு வீர மாது மருவிய
  ஈராறு தோளு நீளும் வரியளி
  சீராக மோது நீப பரிமள                இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
  ஜீமூத மூர்வ லாரி மடமகள்
  ஆதார பூத மாக வலமிட           முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலு மெய்ஞ்
  ஞானாபி ராம தாப வடிவமும்
  ஆபாத னேனு நாளு நினைவது     பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
  மீதேறி மாறி யாடு மிறையவர்
  ஏழேழு பேர்கள் கூற வருபொரு        ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
  லு\டாடி யால வரில் விதிசெய்த
  லீலாவி சார தீர வரதர                     குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
  னீடேறு மாறு பாநு மறைவுசெய்
  கோபால ராய னேய முளதிரு          மருகோனே
கோடாம லார வார அலையெறி
  காவேரி யாறு பாயும் வயலியில்
  கோனாடு சூழ்வி ராலி மலையுறை   பெருமாளே

பதம் பிரித்து பத உரை

சீரான கோலகால நவ மணி
மால் அபிஷேக பார வெகு வித
தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும்

சீரான = சீரானதும் கோலாகல = ஆடம்பரமுள்ள. நவ மணி = ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற மால் = பெருமை பொருந்திய அபிஷேக = முடிகள் பார = கனமானதும் வெகுவித = பல வகையான தேவாதி தேவர் = தேவாதி தேவர்களெல்லாம். சேவை செ(ய்)யும் = வணங்குவதுமான முக மலர் ஆறும் = ஆறு திரு முகங்களையும்.

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளும் நீளும் வரி அளி
சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும்

சீராடு = சிறப்பு உற்று ஓங்கும் வீர மாது மருவிய = வீர லட்சுமி விளங்கும் ஈராறு தோளும் = பன்னிரு தோள்களையும் நீளும் = நீடித்து நின்று வரி = ரேகைகள் உள்ள.அளி = வண்டுகள் சீராகம் ஓதும் = ஸ்ரீ ராகம்
என்னும் ராகத்தைப் பாடும் நீபம் = கடப்ப மலரின் பரிமள = மணம் வீசும் இரு தாளும் = இரண்டு திருவடிகளையும்.

ஆராத காதல் வேடர் மட மகள்
ஜீமூதம் ஊர் வலாரி மட மகள்
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும்

ஆராத காதல் = முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர் மட மகள் = வேடர்களின் அழகிய மகளான வள்ளியும் ஜீமூதம் ஊர் = மேகத்தை வாகனமாகக் கொண்ட வலாரி = இந்திரனுடைய மடமகள் = அழகிய பெண்ணாகிய தேவசேனையும் ஆதார பூதமாக = பற்றுக் கோட்டின் இருப்பாக வலம் இடம் உறை வாழ்வும் = வலது பாகத்திலும், இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்.

ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்
ஞான அபிராம தாப வடிவமும்
ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும்

ஆராயும் நீதி = நன்கு ஆராய்ந்து நீதி = நீதி செலுத்தும் வேலும் மயிலும் = உனது வேலையும் மயிலையும் மெய்ஞ்ஞான = ஞான சொரூபியான அபிராம = அழகிய தாப வடிவமும் = கீர்த்தி பெற்ற உனது திருவுருவத்தையும் ஆபாதனேனும் = மிகக் கீழ்ப்பட்ட நானும் நாளும் = நாள் தோறும் நினைவது பெற வேணும் = தியானம் செய்யும் படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன்.

ஏர் ஆரும் மாட கூட மதுரையில்
மீது ஏறி மாறி ஆடும் இறையவர்
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம்

ஏர் ஆரும் = அழகு நிறைந்த மாட கூட மதுரையில் = மாட கூடங்கள் உள்ள மதுரையில் மீது ஏறி = வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் மாறி ஆடும் = கால் மாறி ஆடிய இறைவர் = இறைவராகிய சிவ பெருமான் ஏழேழு  பேர்கள் = நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் கூற வரு = பொருள் கூறி வந்த பொருள் அதிகாரம் = பொருள் அதிகாரத்தின் அகப் பொருள் உண்மைப் பொருள் இது தான் என்று கூற.

ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதி செய்த
லீலா விசார தீர வரதர குருநாதா

ஈடாய = தகுதி உள்ள ஊமர் போல = ஊமைப் பிள்ளை போல வணிகரில் = செட்டி குலத்தில் தோன்றி விளை யாடி ஆலவாயில் = ஆலவாயில் என்னும் மதுரையில் விதி செய்த = உண்மைப் பொருளை நிறுத்திக் காட்டிய லீலா விசார தீர = திருவிளையா டலைப் புரிந்த தீரனே வரதர = வரங்களைக் கொடுப்பவனே குரு நாதா = குரு நாதரே

கூர் ஆழியால் முன் வீய நினைபவன்
ஈடேறுமாறு பாநு மறைவு செய்
கோபாலராய நேயம் உள திரு மருகோனே

கூர் ஆழியால் = கூர்மையான சக்கரத்தால் முன் = (பாரதப் போர்) நடந்த போது வீய நினைபவன் = இறந்து போவதற்கு எண்ணித் துணிந்த (அருச்சுனன்). ஈடேறு மாறு = உய்யுமாறு பாநு = சூரியனை மறைவு செய் = மறைத்து வைத்த கோபாலராய = கோபாலர்களுக்கு அரசனாகிய கிருஷ்ணன் நேயம் உள = அன்பு வைத்த திரு மருகோனே = அழகிய மருகனே
கோடாமல் ஆரவார அலை எறி
காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.

கோடாமல் = தவறுதல் இன்றி ஆரவார = ஆரவாரத்துடன் அலை எறி = அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாயும் = காவேரி ஆறு பாய்கின்ற வயலியில் = வயலூரிலும் கோனாடு சூழ் = கோனாடு என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலை உரை பெருமாளே = விராலி மலையிலும் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

உனது சீரான, மணிகள் பொருந்திய மகுடத்தையும், தேவர்கள் போற்றும் ஆறு முகங்களையும், லட்சுமிகரம் பொருந்திய பன்னிரு தோள்களையும், வண்டுகள் இசை பாடும் கடப்ப மலர்களின் மணம் வீசும் திருவடிகளையும், உன் மேல் அளவில்லாத காதல் கொண்ட குறப் பெண் வள்ளியும், இந்திரன் மகள் தேவசேனையும், இரு பக்கங்களிலும் உறைகின்ற திருக்கோல வாழ்க்கையையும், வேல், மயிலுடன் மெய்ஞ்ஞான சொரூபியான திருவுருவத்தையும், கீழோனாகிய நானும் நாள் தோறும் தியானிக்கும் படியான பேற்றைப் பெற வேண்டுகின்றேன்.

மதுரையில் வெள்ளி அம்பலத்தில் கால் மாற்றி நடனம் ஆடும் சிவபெருமான், சங்கப் புலவர்களுக்கு இறையனார் அகப் பொருள் என்னும் நூலின் உண்மைப் பொருள் இது தான் என்று கூற, செட்டியின் குலத்தில் தோன்றிய ஊமைப் பிள்ளையாக வந்த திருவிளையாடலைச் செய்த குரு நாதரே. பாரதப்போரில் இறக்கவும் துணிந்த அருச்சுனனுக்கு உதவ வேண்டி, சூரியனை மறைத்து வைத்த கண்ணனின் மருகனே. வயலூரிலும், கோனாட்டில் உள்ள, விராலி மலையிலும் வீற்றிருக்கும் பெருமாளே உன்னைத் தியானிக்கும் பேற்றினை அருள்வாயாக.

விளக்கக் குறிப்புகள்

மாறியாடும் இறையவர்:-

மதுரையில் அரசு புரிந்த விக்கிரம பாண்டியனுடைய புதல்வன் இராஜசேகர பாண்டியன் ஆண்டு வந்தான்.  64 கலைகளையும் கற்க வேண்டிய ஆவலில் அவன் பரதசாத்திரத்தை கற்று பழகினான்.

அப்போது தனக்கு ஏற்பட்ட கால்வலியை நோக்கி, “சிறிது நேரம் நாம் நடிப்பதற்கே கால்வலிக்கின்தே? நடராஜமூர்த்தி அனவரதம் ஓயாது நடிக்கின்றனரே? அவருக்கும் திருவடி வருந்துமே? தாண்டவத்தை நிறுத்தச் சொன்னால் உலகம் நடைபெறாதழியும். ஆதலின் கால் மாறியாடுமாறு பெருமானை வேண்டிக்கொள்வோம்” என்று எண்ணி, திருவாலயம் போய், வெள்ளியம்பலத்துள் ஆடும் ஆண்டவனை வணங்கிக் கால்மாறியாட வேண்டினான்.

அரசன் வேண்டியதினால் அவனை அருளும் பொருட்டு ஆண்டவன், வலக்காலைத் தூக்கி  நடனம் புரிந்ததாக அறிகிறோம்.

ஏழேழு பேர்கள் கூற வரு பொருளதிகாரம்.....

அகப்பொருள் இலக்கணம் இல்லையே என்ரு பாண்டிய மன்னன் வருந்தினான். மதுரை சொக்கலிங்க மூர்த்தியே 60 சூத்திரங்கள் கொண்ட நூலை எழுதி அளித்தார். இறையவனார் அகப்பொருள் எனப்பெயர் பெற்றது. இதற்கு 49 சங்கப்புலவர்கள் உரை எழுதி தங்கள் உரையே சிறந்தது என வாதிட்டு இருந்தனர். இறைவனிடம் முறையிட, இறைவன் ஒரு புலவர் வேடத்தில் வந்து ‘இவ்வூரில் வணிகன், உப்பூர் கிழாரின் மகன், ஊமை, பாலன், சரவண குகன் வந்துள்ளான். அவன் ஒப்பிலா ஞானி. அவன் பெயர் உருத்திர சன்மன். அவன் முன் உங்கள் உரையைச் சொல்லுங்கள். அவருடைய உரையை அவன் கொள்கின்றானோ அதுவே உண்மை உரை’ என கூறினார். ‘ஊமை எப்படி பேசுவான்’ என கேட்க ‘எந்த உரையைக் கேட்டதும் உடலிற் புள்கமும் கண்ணில் (ஆனந்த) நீரும் தோன்றுகிறனவோ அந்த உரையே உரை. மற்றவை உரையல்ல’ எனக்கூறி மறைந்தார். நக்கீரன், கபிலன், பரணன் அவர்களின் உரையைக் கேட்டு ஊமை புளாங்கிதம் அடைய அவர்கள் உரையே ‘உண்மைப் பொருள்’ என அறிந்தனர்

முருக சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்யருள் ஒருவரே முருகவேள் அருள் தாங்கி உருத்திர ஜன்மராக அவதரித்தனர். உக்கிரப் பெருவழுதியாகவும், ஞானசம்பந்தராகவும் வந்ததையும் அங்ஙனமே. அபரசுப்ரமண்யர்கள் சம்பந்தராகவும் உருத்திரசன்மராகவும், உக்கிரப்பெருவழுதியாகவும் வந்து ஆற்றிய அருஞ் செயல்களை பரசுப்ரமண்யத்தின் செயலாகத் திருப்புகழ் கூறுகின்றது.

ஒப்புக:
“திருத்தகு மதுரைதனிற்சிவன்பொரு ணிறுக்கு மாற்றால்
           உருத்திர சருமனாகி யுறுபொருள்     விரித்தோன்‘     -                        கந்தபுராணம்
                                                                                                    
“செஞ்சொற்புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
    செந்திற் பதிநக ருறைவோனே”                .............        ..               வஞ்சத்துட,  திருப்புகழ்

“உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
     மதித்திட் டுச்செறி நாற்கவிப்புணர்
     ஒடுக்கத் துச்செறிவாய்த்தலத்துறை பெருமாளே”                            - வழக்கு, திருப்புகழ்                                                                        

“அரியதாதை தானேவ மதுரேசன்
   அரிய சாரதாபீட மதனிலேறி யீடேற
   அகிலநாலு மாராயு மிளையோனே” .............                                    மனகபாட, திருப்புகழ்

“அரியதாதை தானேவ மதுரேசன்
   அரிய சாரதாபீட மதனிலேறி யீடேற
   அகிலநாலு மாராயு மிளையோனே”                                               - (மனகபாட) திருப்புகழ்

“சடிலத் தவனிட்டவிசிட் டகுலத்
   தொருசெட் டியிடத்தினுதித் தருள்வித்
   திருத் ரஜன்மப்பெயர் செப்பியிடப் பரிவாலே
   சநகர்க்கு மகஸ்த யபுலஸ்த் யசநற்
   குமரர்க்கு குமநுக்ரக மெய்ப் பலகைச்
   சதுபத்து நவப்புலவர்க்கும் விபத் தியில்ஞான
   படலத்துறுலக்கணலக் யதமிழ்த்
   த்ரயமத் திலகப்பொருள்வ் ருத்தியினைப்
   பழுதற்றுணர்வித்தருள் வித்தகச்ணு குருநாதா” -….                      கடலைச்சிறை திருப்புகழ்
                                                 
கூராழியால்..........................................கோபாலராயன்:-

பாரதப்பொரில் தன்மகன் அபிமன்யுவை ஜயத்ரதன் நீதிக்கு மாறாக கொன்றமையால் அருச்சுனன் சினந்து “நாளை பொழுது சாய்வதற்குள் ஜயத்ரதனைக் கொல்லேனாயின் தீப்புகுந்து உயிர் விடுவேன்” என்று சபதம் எடுத்தான்.  பதினான்காவது நாள் துரியோதனன் சேனையை அழித்தான். நெடுந் தொலைவில் ஜயத்ரதனிருந்தமையால் அவனைக் கொல்வது அரியது எனத் தேர்ந்த கன்னபிரான் ஆழியால் ஆதித்தனை மறைத்தார். தனஞ்சயன் தீப்புக முயலுகையில் ஜயத்ரதன் அதனைக் காணஅருகில் வந்தான். அப்போது கண்ணபிரான் சக்கரத்தை விலக்கி சூரியன் அஸ்தமனாகவில்லை என அருச்சுனனுக்கு சொல்லி ஜயத்திரதனைக் கொல்ல வழி வகுத்தார்  என்பது பாரதக்கதை.

குகஸ்ரீ ரசபதி அவர்களின் விளக்க உரை

கடம்ப மரங்களே நிறைந்தது ஒரு காடு. அதன் கிழக்கில் இருந்தது மணவூர். அரசர் குலசேகரர் அப்பதியை ஆண்டவர். மன்னர் நண்பர்    தனஞ்சயச் செட்டியார்.  காலை மணி எட்டு.  வேர்த்து விருவிருத்து செட்டியார் வேந்தர் முன் ஓடி வந்தார்.  அரசர் பெரும,   வர்த்தகக்     காரணமாக வெளி ஊருக்குச் சென்றேன். மீண்டேன். வழியிடைப்பட்டது ஒரு கடம்ப வனம்.  சூரியன் அஸ்தமித்தான். எங்கும் இருள் சூழ்ந்தது. மருண்டது மனம். இரவு மணி எட்டு. கண்ணிற்கு எட்டிய தூரத்தில் பளபளத்தது ஒரு ஒளி. அங்கு விரைந்தேன்.  என்ன அதிசயம். எட்டு  யானைகள், அவைகளின் மேல் ஒரு விமானம்.  அதனில் லிங்க உருவில் இறைவன். தூய மேனியர் பலர் தொடர்ந்து வந்தனர். வரத சிவத்தை நான்கு யாமத்திலும் வழிபட்டனர். இரவு முழுவதும் அந்த ஈடுபாட்டில் இருந்தேன். என்ன அற்புதம், கண்ணிமைக்கும் நேரத்தில் இருந்தவர் மறைந்தனர். ஆஹா, அவர்கள் அமரர்கள் என்று அதன் பின் அறிந்தேன். அதைத் தங்கட்கு அறிவிக்க நினைத்தேன். நேரே இங்கு வந்தேன் என்று இன்பக் கண்ணீரை செட்டியார் இறைத்தார். செய்தி கேட்ட மன்னரின் மெய் சிலிர்த்தது. அன்று முழுவதும் அரசருக்கு அதே நினைவு. காட்டில் இருக்கும் பெருமானைக் கருதியபடியே கண் உறங்கினார். இரவு மணி 1 , எல்லாம் வல்ல சித்தர் எதிர் நின்றார். எண்ணுவது போதாது, செயலில் இறங்கு, ஒரு நகரை அங்கே உருவாக்கு, வசிப்பவர் வாழ்வடைய   பாண்டியா, மகத்தான ஒரு ஆலயம் அமைக்க மறவாதே என்றார். வேந்தர் திடுக்கிட்டு விழித்தார். வியர்த்தது மேனி. அமல பரமா, விமல முதலே, என்று கூவிய கரம் கொண்டு கும்பிட்டார். எழுந்தார், பரிஜனங்களுடன் விரைந்தார், கடம்ப வன கண்ணுதலைக்கண்டார். அடியற்ற மரம் போல் அடியில் விழுந்தார். ஏத்தி போற்றி இறைஞ்சினார். ஏவலரை ஏவினார். காட்டை அழித்தார். எப்படி நகரை அமைப்பது ? இந்த ஏக்கம் மனதில் எழுந்தது. என்ன அதிசயம். கனவில் வந்த சித்தர் நனவில் எதிரில் வந்து நின்றார்.

ஆலயம், கொடிமரம், மண்டபம், வீதிகள், சாலைகள், முதலியவற்றை இன்ன இன்ன இடத்தில் இவைகளில் உள்ளபடி அமைத்து வழிபாட்டு முறைகளை வகுத்து வை என்று ஆகம மந்திர சிற்ப நுட்பங்களை அளித்தார். திடீரென்று மறைந்தார். அரசரும் பிறரும் அதிசயித்து வணங்கினர்.நம்பர் அருளை நம்பி ஆலயத்தை முதலில் அமைத்தார். வருண முறைப்படி வீதிகளை வகுத்தார். ஏரிகள், குளங்கள், கிணறுகளை எழுப்பினார்.

விமலர் திருச்சடை மின்னியது. சடையிலிருந்து புது மதி பொங்கியது திவலைகள் பரவி எங்கும் படர்ந்தன. சின்மயத் திருவடி சேர்ந்தவர் சிவமாவது போல மதுர அமுதம் விரவிய அப்பதி மதுரை எனும் பெயர் எய்தியது.

அருளாளர்கள் பலர் மதுரையில் அவதரித்தனர். எங்கும் இறை வழிபாடு எழுந்தது. அதனால் வளம் பல எங்கும் வளர்ந்தன. போகம்மதான மருளான பொன்னுலக வாழ்வை நிந்தித்தல், சிவனார் அருளை சிந்தித்தல்.  இதுவே அப்பதி வாழ் மக்கள் நிலை. இந்திரன் இதனை அறிந்தான். இறுமாந்து எழுந்தான். மதுரையை அழித்து விடுங்கள் என்று எடுப்பான மேகங்களை ஏவினான். அல்லோல கல்லோலமாக இடியும் மின்னலும் எழுந்தன. பெய்த பெருமழையைக் கண்டு அஞ்சி மக்கள் அலறினர்.

இறைவன் முடி மேல் இருக்கும் கங்கையில் ஏராளமான மேகங்கள். அவைகளுள் நான்கு மேகங்களை நம்பர் ஏவினார். விண்ணில் அவைகள் விரைந்தன. நான்கு மாடக் கூடங்கள் போல் விளங்கின. பட படத்த மழை நீரைப்பருகின. அது கண்ட அமரர் தலைவன் அஞ்சினான். ஓடி விண்ணில் ஒளிந்தான். நீடித்த மழையும் நின்றது. சிவ முகில்கள் சிவனார் திருமுடியில் சேர்ந்தன. அச்சம் அகன்ற அனைவரும் ஆண்டவனை ஆராதித்தனர். அன்று முதல் அப்பதி நான்மாடக் கூடல் என அரியதொரு நாமத்தை அடைந்தது.

பாவலர் ஒருவர் பாண்டிய நாட்டிற்கு வந்தார். பாண்டியன் ராஜசேகரனைப் பார்த்தார்.எங்கள் நாடு சோழநாடு என்றார். அப்படியா ?   சோழ மன்னர் சுகமா? என்றார் பாண்டியர். எக்குறையும் அவர்க்கு இல்லை. அவர் 64 கலைகளையும் அறிந்தவர். 63 கலைகளை நீர் அறிந்தவர். பரதக் கலையில் உமக்கு பழக்கம் இல்லை. எனவே எங்கள் அரசர் உம்மைவிட ஏற்றம் பெற்றவர் என்றார். சீச்சீ என்ன  மோசமான பேச்சு. மன்னர் ராஜசேகரர் அது கேட்டு வருந்தினார்.  உள்ளதை தைரியமாக உரைத்தார் என்று என்று ஓரளவு மனம் அமைதி கொண்டது. அவரை வழி னுட்டி அனுப்பினார். பரதக் கலையை முதிர்ந்த வயதில் முயன்று பயின்றார். தெளிவுர மிகுந்து அதில் தேரினார். ஸ்ரீமீனாட்சி திருமணத்தில் புலிக்கால் முனிவரும் பாம்புக்காலரும் விரும்பி அன்னாருக்கு விண்ணப்பித்தபடி வெள்ளியம்பலம் மதுரையில் விளங்கியது. அங்குள்ள ஆனந்தக் கூத்தரை அன்பு வெள்ளம் கரை புரள பாண்டிய் சிந்தை மகிழ்ந்து நாளும் சேவிப்பர்.

மற்மவர் கண்ணுக்கு அது சிலா ரூபம். பாண்டியர் பக்திக்கு அது தெய்வமேயான திருவுருவம். ஒருநாள் வழிபாட்டில் மன்னர் ஊன்றி இறை திருவுருவை உணர்ந்தார். மானின் துள்ளலும் மயிலின் சாயலும் வெளிப்பட அங்கமெல்லாம் பல நுட்பம் காட்டி ஆட பாதம் இரண்டும் ஊன்றி பரதம் பயின்ற நமக்கு  எவ்வளவு சிரமமாய் இருந்தது. அனாதி காலம் தொட்டு எம்பெருமான்ஆடுகின்றாரே என்று எண்ணும் போது அவர் இதயம் பதைபதைத்தது ஒரு கால் தூக்கினீர். ஓயாது ஆடுகிறீர். நோகாதா ?, தாள் நோகாதா ?. ஆட்டம் நின்றால் அகில சராசரமும் அழிந்துவிடும். அதனை அடியேன் அறிவேன். ஊன்றிய திருவடியை உயர்த்தும். உயர்த்திய திருவடியை ஊன்றி ஆடும் உமாபதே என்று கலகல என கண்ணீர் பெருக்கி கதறினார். அதை அறிந்த வெள்ளி அம்பலவர் காவலர் விரும்பியபடி கால் மாறி ஆடும் கற்பகம் ஆயினர். அதுகண்டு பூமாரி சொரிந்தது பொன்னுலகம்.
  ஏராரு மாட கூட மதுரையில்                                                                                                                                                                                மீதேறி  மாறி ஆடு  இறைவர் -   என்று புளகிதம் எய்தி அன்பர்கள்
போற்றி புகழ்ந்தனர். தனிப்பொருள் தந்தார் சண்பகப் பாண்டியர் ஒருநாள் சங்கப் புலவர்களை சந்தித்தார். பொருள் அல்லாதவற்றைப் பொருள் என்று உரைப்பது மருள்.  வீணான அம்மருள் விலக இன்பப் பொருள் இலக்கணத்தை இயற்றுங்கள் என்று வேண்டினார்.
அரசே, மண் , பெண், பொன்னைத்தான் பொருள் என்று மதித்துளது நம் மனம். அது மருள் தான். மெய்ப்பொருளை மெய்ப்பொருள் தான் அறிவிக்க வேண்டும் என்று பாவலர்கள் பதில் கூறினர். வேந்தர் சிறந்த புலவர்களுடன் சென்றார். முதல்வர் திருமுன் முறையிட்டார்.  சுந்தரேசர் வாழ்விக்கும் சுவடி ஒன்றை பலிபீடத்தில் வைத்தார். காவலர் முதலானோர் கண்டனர். மகிழ்ந்தனர். எடுத்தனர், படித்தனர்.
அன்பின் ஐந்திணைகளவென்படுவது அந்தணர் அருமறை மன்றல் பெட்டியினுள் கந்தர்வ வழக்கம் என்பனோர் புலவர் - என்பது முதலாக  60 சூத்திரங்களாக இருந்தது அந்த அருள் நூல். சிவ ஜீவ சம்பந்தம் அந்த நூல் பொரள். அப்பேரருளை அடைவது வாழ்வின் குறிக்கோள். அந்தணர் வகுத்த எண்வகை மணத்துள் இது களவு மணம். சொற்பிரபஞ்ச பொருள் பிரபஞ்ச சூழ்நிலை கடந்து ஆணவாதி அகன்று  அரிசாதி வர்க்கம் தாண்டி அந்தரங்க சந்திப்பு பலதாம் நடத்தி அருள் நிழல் எய்தி, சாந்தி மகோத்சவ சால்பு காணல் எனும் நுட்பங்களை  கந்தர்வம் எனும் பெயரால்  ஒரு கதை போல் போகிறது அதன் போக்கு.
அகப் பொருளான அப்பாற்கடலை கவிஞர் தம் மதி கொண்டு கடைந்தனர். எவரும் தத்தம் உரையை ஏற்றம் என்றனர். மூலமுதலே, அருளாளா, நீர் தந்த மூலத்திற்கு உரிய உரை எந்த உரை??? அருளுக ஐயா, என்று அரசர் அழுது வேண்டினர்.
அன்பனே, வணிகர் வீதியில் உப்பூரி குடிகிளார் மைந்தர் ஒரு ஊமை. பெயர் ருத்திர ஜென்மன். 10 வயது பாலன். முருகனின் அம்சமானவன். பல உரைகளை அவன் முன் படித்தால் அவனே தீர்பளிப்பான் என்று ஆலயத்தில் பிறந்தது அசிரீரி.
ஒரு காலத்தில் பிரளயத்தால் அழிந்தது உலகம். உலகம் மீண்டும் உருவான போது மதுரைக்கு உரிய நாற்பங்கு எல்லையை நம்பர் திருமுடிப் பாம்பு ஒன்று வாயுள் வாலை கவ்வி வட்டமிட்டு காட்ட வம்ச சேகரப் பாண்டியர் அங்கு தலைநகர் அமைக்க அன்று முதல் மதுரை ஆலவாய் எனும் பெயரை எய்தியது. அந்த ஆலவாய் எனும் கோவிலுக்கு  ஊமைப்பிள்ளையை அழைத்து வந்தனர். ஆறு கலச பீடத்தில் அமர்த்தி அர்ச்சித்தனர். ஒவ்வொருவராக தத்தம் உரையை ஒப்பித்தல் ஆயினர்.
சிலர் உரையைக் கேட்ட சிரித்தது ஊமை. சிலர் உரைக்குத் திருமேனியைச் சொரிந்து கொண்டது.  பலரது விதண்ட உரைகளை வெறுத்தது. கபிலர் பரணர் உரைகளில் களிப்பை சில இடங்களில் காட்டியது. மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர். அவர் உரையில் உள்ள சொற்களை, பொருட்சுவைகளை முழுதும் உணர்ந்து அனுபவித்தது. கரகம்பம், சிரகம்பங்களை பல இடங்களிலும் காட்டியது. பொருளின் பதிப்பை உறைத்துக் காட்டிய மாற்றுறைக்கல்லாக ருத்திர ஜன்மரை உலகம் இன்றும் உணர்கிறது.. இறையனார் அகப் பொருள் என்பது அந்நூலின் பெயர்.
     ஏழு பேர்கள் கூற வருபொருளதிகாரம்
     ஈடாய  ஊமர் போல வணிகரில்
     ஊடாடி ஆலவாயில் விதி செய்த லீலா  -  என்ற உணர்ந்து இவ்வரலாறை ஓதும் போதே  கல்லான மனமும் கரைகிறதே.
விதியை விதித்தாய். ஓம் பொருட்டு மெய்யுரை செய்தாய்.  தீர்த்த உரை இது என்று தீர்ப்பளித்தாய். விசார தீர வரதர குருநாதா என்று உணர்வு உன்னை நோக்கி விரைகிறதே.
ஆழியை ஏவி பருதியை மறைத்து விஜயனைக் காத்த பரந்தாமர் மருகர் நீர். திருமகள் விலாசம் திகழ்பவர் நீர்.  உணர்ந்தோம்.  கோபாலராயரது திருமருகோனே எனறு கூவி உம்மைக் கும்பிடுவோம்.
வற்றாத ஜீவ நதி காவேரி. முப்போகமும் தருவேன் , கனிவோடு மக்களைக் காப்பேன் எனும் குறிப்பு வெளிப்பட ஆரவாரித்து அலைவீசுகின்ற அந்த ஆறு வாவிப் பாய்ந்து வளம் பெறுகின்ற ஊர் வயலூர்.  மருத நிலமான இன்ப அத் திருப்பதியில் இருக்கின்றீர்.
கொங்கு நாட்டில் உள்ளது கோனாடு. அந்நாட்டின் நடுவில் விண்ணளாவி உளது விராலி மலை. அக்குறிஞ்சியையும் மருதத்தையும் இடமாகக் கொண்டு பரமம் எனும் பெரிய பொருளான நீர் தடத்த திருவுருவில் பெரியோன் என்பது பெரிது இன்ப வடிவமாக எழுந்தருளி இருக்கின்றீர்.
அகில அண்டங்களுக்கு அதிபர் நீர். அதை உமது மணிமகுடங்களே அறிவிக்கின்றன. அவைகளை எவரும் தாங்க முடியாதே. அது அத்தனை பாரம். அத்தனை மகிமை. அதனை அறிகிறேன். அத்திருமுடிகளைச் சுமந்த உமது திருமுக மலர்கள். ஆஹா என்ன அற்புதம்.
வீரமகளின் விலாசமாய் பயனளிக்கும் உமது திருத்தோள்கள் பன்னிரண்டு. வண்டுகள் மொய்க்காத மலர்கள் செண்பகம் என்பர். அத்தெய்வீக மலர்கள் அர்ச்சனை முறையில் அருளார் திருவடிகளில் அமர்ந்து அழகு செய்கின்றன. வேத தேவதைகள் வண்டுகளாய் ஸ்ரீராகம் பாடி உமது இரு திருக்கால்களையும் இறஞ்சியபடியே இருக்குமே.
இறையனார் அகப் பொருளில் களவு கற்பு எனும் இரு இயல்புகள் இருக்கின்றன. களவியல் விளைவிற்கு உதாரணமாக இருமையில் ஒருமை உண்டாக்கும் அடங்காத தமது வேட்கையை வலத்திலிருந்து காட்டுகிறார் வள்ளியார். கற்பியல் தாகத்தை இடத்திலிருந்து தேவயானையார் எண்ண வைக்கிறார். அகில உலகையும் தாங்கும் அந்த ஆதார சக்திகள் இருவரும் உமக்கு இருபுறத்தும் தழுவி உளர். அத்துடனே வளமார்ந்த அத்வைத வாழ்வு.
இறையும் உயிரும் இணையும் இயலை நினைப்பூட்டுகிறது அந்த நிலை. இறையனார் அகப் பொருள் சுருதி அனுபவம். வள்ளி தேவயானை சமேத வாழ்வு ப்ரதியட்ச  பிரமாணம். ஊன்றி இதை உணராமல் பெற்றோர் மற்றோர் உடன்பாடின்றி கண்ட இடத்தில் காண்பித்து சுதந்திர  புத்தியில் சுகிப்பது  தமிழர் மதம். இதற்கு எடுத்துக் காட்டு இறையனார் அகப் பொருள் என்று எவரேனும் எண்ணுவாரேல் திருவார் குமாரா, நீர் தான் அவரைத் திருத்த வேண்டும்.
விதி விலக்குகளை அறிவிக்கும் புத்தகம் வேதம். அந்த நியதிகளை எவ்வளவு பின்பற்றுகிறது ஆன்மா. பாழும் ஆணவம் தான் அறிவை எப்படி எப்படி பாதிக்கிறது.  அந்த இருள் அகல எவ்வெவ்வகையில் முன் வந்து உயிர் முயலுகிறது என்று பேசா உருவில் வேலும் பேசும் உருவில்  மயிலும் சிறக்க ஆய்வு செய்யும்மே.
விந்து தத்துவ மயிலில் விளங்கி  எடுப்பான ஞான வேலை ஏந்தி சத்தும் சித்துமான அழகிய உமது திருவுருவம் தாபம் தந்து ஆன்மாக்களை தழுவிக் கொள்ளுமே.
அபராதியான அடியேன் வாழ்க்கையில் விரயம் ஆகாதபடி  மகுடம் அணி ஆறுமாமுகம், பன்னிரு திருத்தோள்கள், இருசூடிகள், இருதேவியருடன் மயிலில் ஏறி வேல் ஏந்திய மெய் ஞான வேட்கை மேவ வைக்கும் உமது கேசாதி பாதங்களை  என்றும் அடியேன் எண்ண அருள். பொன்னோ, பொருளோ, விண்ணோ பிறவோ வேண்டா. பெரும, இந்தத்தியானம் ஒன்றே போதும் என்று வினயம் மிகுந்து விண்ணப்பித்தபடி.
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published