ஓருருவாகிய தாரகப் பிரமத்
தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
ஒன்றா யொன்றி
யிருவரிற் றோன்றி மூவா தாயினை
இருபிறப் பாளரின் ஒருவன் ஆயினை
ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
நான்முகன்
குடுமி இமைப்பினிற் பெயர்த்து
மூவரும்
போந்து இருதாள் வேண்ட
ஓருசிறை விடுத்தனை
ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
முந்நீ ருடுத்த
நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
ஒருகைப்
பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
மும்மதன்
தனக்கு மூத்தோ னாகி
நால்வாய்
முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக்
கிளையோ னாயினை
ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
முக்கட்
சுடரினை இருவினை மருந்துக்
கொருகுரு
வாயினை
ஒருநாள் உமைஇரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன்
நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன்
அறுமுக னிவனென
எழுதரு மழகுடன்
கழுமலத் துதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத்
தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி
யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத் தந்தணர்
அடியிணை போற்ற
ஏரகத் திறைவ னென
இருந்தனையே.
பதம் பிரித்து உரை
ஓர் உருவாகிய தாரக பிரமத்து
ஒரு வகைத் தோற்றத்து இரு மரபு எய்தி
ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை
இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை
ஓராச் செய்கையின்
இருமையின் முன் நாள்
நான் முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
மூவரும் போந்து இரு தாள் வேண்ட
ஒரு சிறை விடுத்தனை
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின்
முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம் செய்தனை
நால் வகை மருப்பின் மும்மதத்து இரு செவி
ஒரு கைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒருவகை வடிவினில் இரு வகைத்து ஆகிய
மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி
நால் வாய் முகத்தோன் ஐந்து கைக் கடவுள்
அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை
ஐந்து எழுத்து அதனில் நான் மறை உணர்த்தும்
முக்கண் சுடரினை இரு வினை மருந்துக்கு
ஒரு குரு ஆயினை
ஒரு நாள் உமை தரு இரு முலைப் பால் அருந்தி
முத்தமிழ் விரகன் நால் கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறு முகன் இவன் என
எழு தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை
அறு மீன் பயந்தனை ஐந் தரு வேந்தன்
நான் மறைத் தோற்றத்து முத்தலை செம் சூட்டு
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை
காவிரி வட கரை மேவிய குரு கிரி இருந்த
ஆறு எழுத்து அந்தணர் அடி இணை
ஏரகத்து இறைவன் என இருந்தனையே.
பொருள்
வரிசை 1
வரிசை 1
ஓருருவாகிய தாரகப் பிரமத்
ஓர் உருவாகிய
= ஒரு
பொருளாகிய ( ப்ரம்ம ஸ்வரூபமாம் பெருருவ
மாகிய ஓர் உருக்
கொண்ட)
தாரக = பிரணவமாகிய.
பிரமத்து
= முழு
முதற் பொருளில்.
வரிசை 2 எண்கள்
(இடமிருந்து வலம்)--- 1,2,1
ஒரு வகைத் தோற்றத்து இரு மரபெய்தி ஒன்றாய்
1 = ஒரு வகைத் தோற்றத்து
ஒரு வகைத் தோற்ற = ஒரு வகையான உதயத்தில்
2 = இரு மரபெய்தி
இரு மரபு எய்தி = சக்தி,
சிவம் என்னும் இரண்டின் ஸம்ப்ரதயாத்தில்
( வழியில்)
1 = ஒன்றாய்
ஒன்றாய் = ஒரே வடிவாமாக
வரிசை 3 எண்கள்
(இடமிருந்து வலம்)--- 1,2,3,2,1
ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை இரு பிறப்பாளரில் ஒருவன் ஆயினை
1 = ஒன்றி
ஒன்றி = அமைவுற்று (பொருந்தி)
2 = இருவரில் தோன்றி
இருவரில் தோன்றி = அந்தச் சத்தி-சிவம் எனப்படும்
இருவராலும்
உண்டாகி
3 = மூவாது ஆயினை
மூவாது ஆயினை = மூப்பு இல்லாத இளையவனாக விளங்குகின்ற
வன் ஆனாய்
2 = இரு பிறப்பாளர்
இரு பிறப்பாளரின் = இரு பிறப்பாளர் என்னப்படும்
அந்தணர்
மரபில்
1 = ஒருவன் ஆயினை
ஓருவன் ஆயினை = ஒப்பற்றவனாகத் திகழ்ந்தாய்
வரிசை 4 எண்கள் (இடமிருந்து வலம்)--- 1,2,3,4,3,2,1
ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள் நான் முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை
1 = ஓராச் செய்கையின்
ஓரா = (பிரணவத்தின் பொருளை) அறியாமல்.
செய்கையின் = (பிரமன்)
விழித்தக் காரணத்தால்
2 = இருமையின்
இருமையின் = பெருமையுடன்
3 = முன்னாள்
முன்னாள் = முன்பு ஒரு நாள்
4 = நான் முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து
நான் முகன் = பிரமனுடைய.
குடுமி = குடுமியை
இமைப்பினில் = இமைப் பொழுதில்
பெயர்த்து = கலையச் செய்து
3 = மூவரும் போந்து
மூவரும் போந்து = சிவன்,
விஷ்ணு, இந்திரன் ஆகிய மூவரும்
(உன்னிடம் வந்து
2 = இரு தாள் வேண்ட
இரு தாள் வேண்ட = உனது இரண்டு திருவடிகளைப் பணிந்து
முறையிட்டு வேண்ட.
1 = ஒரு சிறை விடுத்தனை
ஒரு சிறை
விடுத்தனை = (நீ
இட்ட) சிறையினின்றும் அந்தப்
பிரமனை விடுவித்தாய்.
வரிசை 5
எண்கள் (இடமிருந்து வலம்)--- 1,2,3,4,5,4,3,2,1
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர்
உடுத்த நானிலம் மும்மதத்து இரு செவி ஒரு கைப்
பொருப்பன் மகளை வேட்டனை
1 = ஒரு நொடி அதனில்
ஒரு நொடி அதனில் = ஒரு நொடிப் பொழுதில்
2 = இரு சிறை மயிலின்
இரு சிறை மயிலில் = இரு பெரிய சிறகுகளை உடைய
மயில் மீது ஏறி.
3 = முந்நீர் உடுத்த
முந்நீர்
உடுத்த = (ஊற்று
நீர், ஆற்று நீர், மழை நீர் மூன்றும் கலக்கும்) கடலை ஆடையாக உடுத்துள்ள
4 = நானிலம் அஞ்ச
நானிலம் அஞ்ச = குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல்
எனப்படும் நால் வகைத்தான பூமி
5 = அஞ்ச நீ வலம் செய்தனை
அஞ்ச நீ வலம் செய்தனை = பயப்படும்படி
நீ அதை வலம் வந்தாய்
4 = நால் வகை மருப்பின
நால்
வகை மருப்பின் = நான்கு வகைத் தந்தங்களையும
3 = மும்மதத்து
மும்மதத்து = கர்ண,
கபோல, பீஜ மதங்கள் என்னும் மூன்று
வகை மதங்களையும்
2 = இரு செவி
இரு செவி = இரண்டு
காதுகளையும்
1 = ஒரு கைப் பொருப்பன் மகளை வேட்டனை
ஒரு கை = ஒப்பற்ற துதிக்கை ஒன்றையும் கொண்ட
பொருப்பன் = மலை போன்ற ஐராவதத்தை உடைய
இந்திரனுடைய
மகளை
= மகளாகிய
தேவசேனையை
வேட்டனை = மணம் செய்து கொண்டாய்
வரிசை 6
எண்கள் (இடமிருந்து வலம்)--- 1,2,3,4,5,6,5,4,3,2,1
ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன்
தனக்கு மூத்தோன் ஆகி நால்வாய் முகத்தோன ஐந்து
கைக் கடவுள் அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை
ஐந்து எழுத்து அதனில் நான் மறை உணர்த்து முக்கண்
சுடரினை இரு வினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை
இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை
1 = ஒரு வகை வடிவினில்
ஒரு வகை வடிவினில் = ஒரு வகையான யானை வடிவில்
2 = இரு வகைத்தாகிய
இரு வகைத்து ஆகிய = முது
களிறு, இளங்களிறு என இரண்டு
வகையாகவும் வந்து காட்சி தந்த
3 = மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி
மும்மதன் தனக்கு = மும்மதத்துடன் வந்த யானைக்கு.
மூத்தோனாகி = மூத்தவனாகி
விளங்கி.
4 = நால்வாய் முகத்தோன
நால் வாய் முகத்தோன் = தொங்கும் முகத்தை உடையவனாகிய
5 = ஐந்து கைக் கடவுள்
ஐந்து கைக் கடவுள் = ஐங்கரக் கடவுள்
6 = அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை
அறுகு சூடிக்கு = அறுகம்
புல்லைத் தரித்தவனாகிய கணபதிக்கு
இளையோன் ஆயினை = தம்பியாக திகழ்கின்றாய்
5 = ஐந்து எழுத்து அதனில்
ஐந்து எழுத்து அதனில் = ஐந்தெழுத்தாகிய
பஞ்சாக்ஷரத்தின் மூலமாக
4 = நான் மறை உணர்த்து
நான் மறை உணர்த்தும் = நான்கு வேதங்களும் பரம்பொருள் இவரே
என உணர்த்தும்
3 = முக்கண் சுடரினை
முக்கண் சுடரின் = சூர்யன்,
சந்திரன், அக்னி என மூவரையும் தமது
கண்களாகக் கொண்ட
ஐ = தனிப்பெரும் தலைவரும்
2 = இரு வினை மருந்துக்கு
இரு வினை = நல் வினை, தீ வினை (புண்யம், பாபம்)
என்னும் இரண்டு வினைகளையும் ஒழிக்கும்
மருந்துக்கு = மருந்தாய் விளங்கும் அருமருந்தான சிவபெருமானுக்கு
1 = ஒரு குரு ஆயினை
ஒரு = ஒப்பற்ற
குரு ஆயினை = குருவாக அமைந்தாய்
வரி சை 7
எண்கள் (இடமிருந்து வலம்)--- 1,2,3,4,5,6,7,6,5,4,3,2,1
ஒரு நாள் உமை இரு முலைப்பால்
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் ஐம்புலக்
கிழவன் அறுமுகன் இவன் என
எழில் தரு அழகுடன் கழுமலத்து உதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான் மறைத்
தோற்றத்து முத்தலை செம் சூட்டு அன்றில் அங்கிரி
1 = ஒரு நாள்
ஒரு நாள் = முன்னர் ஒரு நாளில்
2 = உமை இரு முலைப் பால் அருந்தி
உமை இரு முலைப்பால் = உமா தேவியின் பெருமை வாய்ந்த முலைப் பாலை
அருந்தி = பருகி
3 = முத்தமிழ் விரகன்
முத்தமிழ் விரகன் = இயல்,
இசை, நாடகம் என்னும் முத்தமிழில்
வல்லவனாய்
4 = நாற்கவி ராஜன்
நாற் கவி ராஜன் = ஆசு,
மதுரம், சித்திரம், விஸ்த்தாரம் என்னும் நான்கு
விதமான கவி பாடுவதிலும் வல்லவனாய்
5 = ஐம்புலக் கிழவன்
ஐம்புலக் கிழவன் = சுவை,
ஒளி, ஸ்பரிசம், சப்தம், மணம் முதலியவற்றை
அறியும் ஐம்புலன்களையும் தன் வசத்தில் உடையோனாய்
(ஜிதேந்திரியனாய்)
6
=
அறுமுகன் இவன் என
அறு முகன் இவன் என = ஆறுமுகக் கடவுளே இவன் என்று யாவரும்
சொல்லிப் பரவும் படியாக
7 = எழில் தரு அழகுடன் கழுமலத்து உதித்தனை
எழில் தரும் அழகுடன் = இளமை விளங்கும் அழகுடனே.
(எழுத அரும் - எழுதுவதற்கு
அரிய, ஓவியர்களால் வரையவொண்ணாத)
கழு மலத்து உதித்தனை = (பெயர் சொல்வதின் மூலம்
மும்மலங்களையும் கழுவ வல்ல) சீகாழியில்(ஞான சம்பந்தராகத்)
திரு அவதாரம்
செய்தனை
6 = அறுமீன் பயந்தனை
அறு மீன் = கார்த்திகை மாதர்களாகிய ஆறு நட்சத்திரங்களை
பயந்தனை = தாயாக்கின பேறு பெற்றாய்
5 = ஐந்தரு வேந்தன்
ஐந்தரு வேந்தன் = ஐந்து வகையான ( ஹரிச்சந்தனம்,
ஸந்தானம்,
மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்) தருக்களை உடைய பொன்னுல கத்துக்கு அரசனாக
4 = நான் மறைத் தோற்றத்து
நால் மறைத் தோற்றத்து = நாலு
வகை தோற்றங்களுள்
ஒன்றானதும் (ஸ்ராயுஜம், உத்பீஜம், அண்டஜம்,
ஸ்வேஜதம்)
(அண்டஜம் - முட்டையில்
தோன்றுவன - பறவைகள்,
மீன்கள், பாம்புகள், முதலியன; சுவேதஜம் -
அழுக்கில்,
வேர்வையில் தோன்றுவன பேன், கிருமி முதலியன; பீஜம்- விதை, வேர்,
கிழங்கு இவற்றில் தோன்றுவன, மரம்,
செடி, கொடி முதலியன; சராயுஜம்- கருப்பையில்
தோன்றுவன விலங்கு,
மனிதர், முதலியவை;)
3 = முத்தலைச் செம் சூட்டு அன்றில் அங்கிரி
முத்தலை = முப்பிரிவுகளைக்
கொண்ட ( சூலத்தை போன்று)
செம் சூட்டு = செவ்விய உச்சிக் கொண்டையை
உடையதுமான
அன்றில் = அன்றில்
பறவையின் பெயர் கொண்ட
அங்கிரி =
கிரௌஞ்ச மலை
(கிரரெளஞ்ச மலை ஒரு பறவையின் பெயரைக்கொண்டது. அந்த பறவை பிறப்பு வகை நான்கில்
ஒன்றான முட்டையிலிருந்து வெளி வந்தது)
2 = இரு பிளவாக
இரு பிளவாக = இரண்டு பிளவு ஆகும்படி
1 = ஒரு வேல் விடுத்தனை
ஒரு வேல் விடுத்தனை = ஒப்பற்ற வேலைச் செலுத்தினாய்
ஈற்றுப் பகுதி
காவிரி வட கரை மேவிய = காவிரியின் வட கரையில் உள்ள
குரு கிரி = குரு மலை எனப்படும் சுவாமி மலையில்
இருந்த = வீற்றிருக்கும்
ஆறு எழுத்து அந்தணர் = ‘குமாராய நம’ என்ற சடக்கர மந்திரம்
ஓதும்
அந்தணர்கள்
அடியினைப் போற்ற = உனது திருவடிகளைப் போற்ற
ஏரகத்து இறைவன் என இருந்தனையே = திருவேரகத்து இறைவன் என
வீற்றிருக்கிறாய்
‘சடக்ஷரம்’
என்று சொல்லப்படும் ஆறெழுத்து மந்திரம். ‘நமோ குமாராய’ என்பதே ஆறெழுத்து மந்திரம் என்பார் திருமுருகாற்றுப்படைக்கு உரை
எழுதிய நச்சினார்கினியர். ‘சரவண பவ’
என்பதே அந்த
மந்திரம் என்று சிலர் கூறுவர்.
குமாராயநம
என்றும் சிலர் கூறுவர். ‘பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள்தாக நவில்சரவண பவ’ ( சுருதி முடி
– பழநி திருப்புகழ்) என்று அருணகிரியார் கூறியிருப்பதிலிருந்து
அவர் எண்ணத்தில் இதுவே ஷடாக்ஷரம் என்பது எங்கள்
கருத்து. பாம்பன் ஸ்வாமிகல் இயற்றி உள்ள
குமாரஸ்தவதில் ஒரு நாமாவளி ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:. இதற்கு விளக்கம் அளிக்கும்
பொழுது ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் எழுதுவது: சரவணபவன் என்பதே ஆகமதரீதியான வழக்கு.)
சுருக்க
உரை
(முருகா) நீ பிரணவப் பொருள். முழு முதலில்
ஐந்து முகத்தோடு அதோ முகமும் சேர்ந்த சிவத்தின் தோற்றத்தில், சத்தி-சிவம் என்ற இரண்டின் இலக்கணமும் கொண்டு, மூப்பு இல்லாத இளையவனாக ஆயினை. இருபிறப்பாளரான அந்தணர் குலத்தினில்
ஒப்பற்றவனாயினை. பிரணவத்தின் பொருளை அறியாத காரணத்தால் பிரமனைத் தண்டித்தாய். அரி, அரன், இந்திரன் ஆகிய
மூவரும் உன்னிடம் முறையிட,
அந்தப் பிரமனைச் சிறையினின்றும் விடுவித்தாய்.
ஒரு நொடிப்
பொழுதில் மயிலின் மேல் ஏறி கடல் சூழ்ந்த உலகை வலம் வந்தாய். மும்மதங்களைக் கொண்ட ஐராவதத்தை
உடைய இந்திரன் மகளான தேவசேனையை மணந்தாய். யானை முக விநாயகனுக்கு இளையவனாக விளங்குகின்றாய்.
ஐந்தெழுத்தின் மூலம் நான்கு வேதங்களும் கடவுள் இவனே என்று உணர்த்தும் சிவபெருமானுக்கு
ஒரு குருவாக இருந்து உபதேசித்தாய். உமா தேவியின் முலைப் பாலை உண்டு, நாற் கவி பாடும் வல்லவனாகவும், ஐம்புலன்களை அடக்க வல்லவனாகவும், ஆறுமுக
வேளே என்றும் யாவரும் கூறிப் புகழும் இளமையுடவனாகவும், கழுமலத்தில்
ஞானசம்பந்தராக அவதரித்தாய்.
கார்த்திகைப்
பெண்களுக்குப் புதல்வனாக விளங்கினாய். கிரௌஞ்சி மலையை இரு பிளவுகளாகப் பிளக்கும்படி
வேலைச் செலுத்தினாய். காவிரியின் வட கரையில் உள்ள சுவாமி மலையில் உனது திரு மந்திரமான
குமாராய நம என்னும் சடக்கரத்தை ஓதும் அந்தணர்கள் உன்னைப் போற்ற, ஏரகத்து இறைவன் என்னும் திருப்பெயருடன் வீற்றிருக்கின்றாய்.
மூவரும்
முழு முதற் பொருளுக்குத் தமக்கு உகந்த முறையில் திருநாமத்தைச் சூட்டி, அது ஒன்றானதே என்ற உணர்வை
வலியுறுத்தி உள்ளனர். இதே கருத்தை மணிவாசகரும் பகர்ந்துள்ளார்.
ஆசு, மதுரம்,
சித்திரம், விஸ்த்தாரம்
என்னும் நான்கு விதமான கவி பாடுவதிலும் வல்லவனாய்......
பொருளினைக்
கருவாய் உளத்தினில் கொண்டு அதனை உடனே வரிகளில் வடித்து நயமுடன் பாடுவது ஆசு கவி,
அழகுறு
சொற்களை எழிலுடன் சமைத்து எதுகையும் மோனையும் இயல்பாய் அமைத்து இலக்கியச் சுவையைக்
காட்டிடுவது மதுர கவி,
ஒரு சிறு
கருவை ஊதிப் பெருக்கி மலையென அதனை அழகுற வளர்த்து
ஒர் சித்திரம் வருவது போல் பாடிடுவது சித்திர கவி.
திருவெழுக்
கூற்றிருக்கை,
ஏகபாதம், கரந்துறை, கூடாசதுக்கம், கோமூத்திரி,
மாலைமாற்று போன்றவை பெரியதொரு கதையினை அங்கமாய்க் கொண்டு பக்திச்
சுவையை உள்ளே புகுத்தி புராணமாய் பாடிடுவது
வித்தார கவி,
தத்துவப்
பேருண்மை
ஒன்றான
மெய்பொருளின் இறை குணங்களையும் (விபூதிகளை) விளக்கியுள்ளார்கள். பகவத் கீதையில் கூறப்படும்
(10,
20-40)
விபூதிகளின் சுருக்கங்களையும் ஈண்டு காணலாம். மெய்ப் பொருளை
உணர ஐம்புலன்களை அடக்கி,
மூவாசைகளை ஒழித்து, அகந்தையை அகற்றி,
மும்மலங்களை நீக்கி, நன்னெறியில் ஒழுக வேண்டும்.
அருணகிரி
நாதர் தமக்கு மெய்ஞ்ஞானம் அளித்த முருகப் பெருமானை முழு முதற் பொருளாகக் கொண்டார்.
கணபதியின் தம்பி என்பதும்,
தான் பிரணவத்தை உபதேசித்த சிவனுக்கு மகன் என்பதும், பசு ஞானத்தால் மட்டும் இறை உணர்வு கிட்டாது, அதற்குப் பதி ஞானம் வேண்டும் என்னும் சித்தாந்தக் கருத்து பொதிந்து
கிடக்கின்றது. ஐந்தெழுத்து மந்திரத்தால் இரு
வினைகளைக் களையலாம் என்பதும் உணர்த்தப்பட்டது. திருமாலின் மருகனே என்பது சிவ-வைணவ ஒருமைப்பாட்டை
விளக்கும். சக்தி வேலைச் செலுத்தியது அஞ்ஞானத்தையும், அகந்தையையும் அழிப்பதைக் குறிக்கும். முருகனே திருஞான சம்பந்தராக
அவதரித்தார் என்பது,
முருகனுடைய தமிழ்ப் புலமையையும், ஐம்புலன் அடக்கும் திறனையும் குறிக்கும்.