F

படிப்போர்

Tuesday, 4 September 2012

39.பஞ்ச பாதக

பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி 
        குஞ்சி கூர்விட மதர் விழி பிலவக 
        பங்க வாண்முக முடுகிய நெடுகிய         திரிசூலம் 
பந்த பாசமு மருவிய கரதல 
        மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு 
        பண்பி லாதொறு பகடது முதுகினில்     யமராஜன் 
அஞ்ச வேவரு மவதர மதிலொரு 
        தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும் 
        அன்பி னாலுன தடிபுக ழடிமையெ        னெதிரேநீ 
அண்ட கோளகை வெடிபட இடிபட 
        எண்டி சாமுக மடமட நடமிடும் 
        அந்தி மோகர மயிலினி லியலுடன்        வரவேணும் 
மஞ்சு போல்வள ரளகமு மிளகிய 
        ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென 
        வந்த தூயவெண் முறுவலு மிருகுழை    யளவோடும் 
மன்றல் வாரிச நயனமு மழகிய 
        குன்ற வாணர்த மடமகள் தடமுலை 
        மந்த ராசல மிசைதுயி லழகிய                மணவாளா 
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை 
        விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து 
        திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் மகமேரு 
செண்டு மோதின ரரசரு ளதிபதி 
        தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு 
        செநதில் மாநக ரினிதுறை யமரர்கள்     பெருமாளே.

- திருச்செந்தூர்

பதம் பிரித்து பதவுரை 

பஞ்ச பாதகம் உறு பிறை எயிறு எரி 
குஞ்சி கூர் விட(ம்) மதர் விழி பிலவக 
பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம் 

பஞ்ச பாதகம் உறு = (கொலை, களவு, பொய், கள் குடித்தல், குருநிந்தை) எனப்படும் ஐந்து பாதகமும் குடி கொண்டது போல் பிறை எயிறு = பிறைச் சந்திரன் போல் (வெளுப்பும், வளைவும்)உள்ள பற்கள் எரி குஞ்சி = நெருப்புப் போன்ற தலை மயிர் கூர்விட மதர் = கொடிய விஷம் ததும்பும்   விழி = கண் பிலவக = குரங்கு போன்ற. (குகையின் உட்புறம் போன்று) பங்க = பயங்கரமான வாள் முகம் = ஒளி வீசும் முகம் முடுகிய = விரைந்து செல்ல வல்ல நெடுகிய = நீண்ட திரி சூலம் = முத்தலைச் சூலம்

பந்த பாசமும் மருவிய கர தலம் 
மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு 
பண்பி(ல்)லாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் 

பந்த பாசமும் = கட்டுதற்கு வைத்துள்ள பாசக் கயிற்றை மருவிய கொண்டுள்ள கரதல = கையை உடையவன்  மிஞ்சி = மிகுத்து  நீடிய நீண்ட கரு முகில் உருவொடு = கரிய மேகம் போன்ற உருவம்  பண்பிலாத ஒரு = அழகு இல்லாத ஒரு பகடு அது முதுகினில் = எருமையின் முதுகில் யமராஜன் = யமன். 

அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு 
தஞ்சம் ஆகிய வழிவழி அருள் பெறும் 
அன்பினால் உனது அடி  புகழ அடிமை என் எதிரே நீ 

அஞ்சவே = (நான்) பயப்படும்படி வரும் = வருகின்ற அவதரம் அதில் = அந்தச் சமயத்தில் ஒரு = ஒப்பற்ற தஞ்சமாகிய = உனக்கே அடைக்கலமாய் வழிவழி = தலைமுறை தலைமுறையாக அருள் பெறும் = உனது திருவருளைப் பெறவே விரும்பும் அன்பினால் = அன்பு கொண்டு உனது அடி புகழ = உன் திருவடியைப் புகழும் அடிமை என் எதிரே நீ = அடிமையாகிய என் எதிரே நீ

அண்ட கோளகை வெடிபட இடிபட 
எண் திசா முகம் மடமட நடம் இடும் 
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும் 

அண்ட கோளகை = அண்ட முகடு வெடிபட இடிபட = வெடி படவும், இடி படவும் எண் திசை முகம் = எட்டுத் திக்குப் பக்கங்களும் மடமட நடமிடும் = மடமட என்று நடனம் செய்ய  அந்த மோகர = அந்த உக்கிரமான மயிலினில் = மயிலின் மேல்  இயலுடன் வருவேணும் = அன்புடன் வரவேண்டும்

மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய 
ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என 
வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும் 

மஞ்சு போல் = (கரிய) மேகம் போல் வளர் = வளர்ந்துள்ள அளகமும் = கூந்தலும் இளகிய = மெல்லிய ரஞ்சித =  இன்பகரமான அம்ருத = அமிர்தம் போன்ற வசனமும் = பேச்சும்.  நிலவு என வந்த = நிலவைப் போல் விளங்கும் தூய = பரிசுத்தமான வெண் முறுவலும் = வெண்மையான பற்களும் இரு குழை அளவோடும் = இரண்டு குழை (காது) அளவும் ஓடுகின்ற.

மன்றல் வாரிச நயனமும் அழகிய 
குன்ற வாழ் நர் தம் மடமகள் தட முலை 
மந்தர அசல மிசை துயில் அழகிய  மணவாளா 

மன்றல் = நறு மணம் உள்ள வாரிசத = தாமரை போன்ற நயனமும் = கண்களும் அழகிய = அழகுள்ள குன்ற வாழ்நர் தம் = குன்றில் வாழும் வேடர்களின் மட மகள் = மட மகளாகிய வள்ளியின் தட முலை = பருத்த கொங்கைகளாகிய மந்தர அசலம் மிசை = மந்தர மலை மீது துயில் = தூங்கும் அழகிய மணவாளா = அழகிய கணவனே

செம் சொல் மா திசை வட திசை குட திசை 
விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து 
திங்கள் வேணியர் பல தளி தொழுது  உயர் மக மேரு

செம்சொல் மாதிசை = தமிழ்த் திசை (தெற்கு) வட திசை = வடக்கு குட திசை = மேற்கு விஞ்சு = மேலான கீழ்த் திசை = கிழக்கு சகலமும் = முதலிய திக்குகள் எல்லாவற்றிலும் இகல் செய்து = போர் செய்து திங்கள் வேணியர் = நிலவை அணிந்த சடை முடியராகிய சிவபெருமானுடைய பல தளி = பல கோயில் களையும் தொழுது = தொழுது உயர் மக மேரு = உயர்ந்த பெரிய மேரு மலையின் மீது

செண்டு மோதினர் அரசருள் அதிபதி 
தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு 
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே. 

செண்டு மோதினர் = செண்டை எறிந்த அரசருள் அதிபதி = அரசர்களுக்கு அதிபதியே தொண்டர் ஆதியும் = தொண்டர் முதலானோர் வழிவழி = வழிவழி அடிமையாக இருந்து நெறி பெறு = முத்தி பெற (அருளிய) செந்தில் மா நகரில் = திருச்செந்தூரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே = இனிது வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. 

சுருக்க உரை 

பஞ்ச மா பாதகமும் குடிகொண்ட மாதிரி பயங்கரமான பற்களும், நெருப்புப் போன்ற கண்களும், குரங்கு போன்ற முகமும், முத்தலைச் சூலமும், பாசக் கயிறும் கொண்டு, எருமையின் மீது வரும் யமன், நான் அஞ்சும்படியாக வருகின்ற அந்தச் சமயத்தில், உன்னையே நான் புகலிடமாகக் கொண்டு, உனது திருவடியைப் புகழும் அடிமையாகிய என் எதிரில், நீ,  அன்புடன் மயில் மீது ஏறி வரவேண்டும்.

மேகம் போன்ற கரிய கூந்தலும், இனிய பேச்சும், நிலவு போல் வெளுத்த பற்களும், இரண்டு குழைகளும், நறு மணம் உள்ள தாமரை போன்ற கண்களும் உடையவளாய், வள்ளி மலைக்  குன்றில் வாழும் குறப் பெண்ணாகிய வள்ளியின் பருத்த தனங்களின் மேல் உறையும் அழகிய  கணவனே. பல திசைகளிலும் போர் செய்து, சிவபெருமானுடைய கோயில்களையும் தொழுது, உயர்ந்த மேரு மலையின் மேல் செண்டை எறிந்த அரசருக்கு அரசே. தொண்டர்கள் வழி வழி அடிமையாக இருந்து, முத்தி பெற அருளிய திருச்செந்தூர் மாநகரில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே. யமன் வரும் சமயத்தில் மயில் மீது வரவேண்டும்.

விளக்கக் குறிப்புகள் 

அ. செண்டு மோதின ரரசரு ளதிபதி.... 
செண்டு = தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவி.
முருகன் உக்கிர குமாரனாய் அரசாண்ட போது பொன் பெற வேண்டி மேருமலையைச் செண்டாலடித்த திருவிளையாடலைக்  குறிக்கும். 
       (கனகந்திரன் கின்றபெ ருங்கிரி 
      தனின்வந்துத கன்தகன் என்றிடு 
      கதிர் மிஞ்சிய செண்டைஎ றிந்திடு   கதியோனே)....திருப்புகழ் (கனகந்திரள்). 

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published