F

படிப்போர்

Friday, 14 September 2012

76.தகர நறுமலர்

தகர நறுமலர் பொதுளிய குழலியர்
          கலக கெருவித விழிவலை படவிதி
        தலையி லெழுதியு மனைவயி னுறவிடு       வதனாலே
தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர்
         சுரபி விரவிய வகையென நினைவுறு
        தவன சலதியின் முழுகியெ யிடர்படு               துயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிட
         இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
        அரக ரெனவல னிடமுற எழிலுன                 திருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற
         கிரண அயிர்கொடு குருகணி கொடியொடு
        அழகு பெறமர கதமயில் மிசைவர           இசைவாயே
சிகர குடையினி னிரைவர இசைதெரி
        சதுரன் விதுரனில் வருபவ னளையது
         திருடி யடிபடு சிறியவ னெடியவன்              மதுசூதன்
திகிரி வளைகதை வசிதநு வுடையவ
        னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
        திமித திமிதிமி யெனநட மிடுமரி                மருகோனே
பகர புகர்முக மதகரி யுழைதரு
        வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
        பரம குருபர இமகிரி தருமயில்               புதல்வோனே                      
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
        நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
        பழநி மலைவரு புரவல அமரர்கள்          பெருமாளே.
-76 பழநி

பதம் பிரித்து உரை

தகர நறு மலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழி வலை பட விதி
தலையில் எழுதியும் மனைவி இல் உறவிடு அதனாலே

தகர = மயிர்ச் சாந்தும் நறு மலர் = மணமுள்ள மலர்களும் பொதுளிய = நிறைந்த குழலியர் = கூந்தலுடைய (விலை) மகளிரின் கலக = குழப்பம் தரும் கெருவித = செருக்கு உற்ற விழி வலை பட = கண் வலையில் பட விதி தலையில் எழுதியு(ம்) = தலையில் எழுதப்பட்டு மனைவி இல் உற விடுவதனால் = இல்லற வாழ்க்கையில் இருக்க வேண்டி அமைந்த படியால்.

தனயர் அ(ன்)னை தமர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகை என நினைவு உறு
தவனம் சலதியில் முழுகியே இடர் படு துயர் தீர

தனயர் = மக்கள் அ(ன்)னை = தாய் தமர் = சுற்றத்தார் மனைவியர் = மனைவியர் சினெகிதர் = நண்பர்கள் சுரபி விரவிய வகை என = பசு முதலாய பல வகை என்ற நினைவு உறு = சிந்தனை வர தவனம் சலதியின் = ஆசைக் கடலில் முழுகியே = முழுகி இடர் படு = துன்பம் உறுகின்ற துயர் தீர = துயரம் நீங்க.

அகர முதல் உள பொருளினை அருளிட
இரு கை குவி செய்து உள் உருகிட உருகியே
அரகர என வலன் இடம் உற எழில் உனது இரு பாதம்

அகர முதல் உள = அகர எழுத்தை முதலாகக் கொண்ட பொருளை = (பிரணவப்) பொருளை அருளிட = (நீ) உபதேசிக்க இருகை குவி செய்து = இரண்டு கைகளையும் குவித்து உள் உருகிட உருகியே = மனம் உருக உருகி அரகர என = அரகர அரகர எனக் கூறி வலன் இடமுற = (உனது) வலப் புறத்தும் இடப் புறத்தும் இருந்து எழில் = அழகிய உனது இரு பாதம் = உன்னுடைய இரண்டு திருவடிகளை.

அருள அருளுடன் மருள் அற இருள் அற
கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே

அருள = தந்தருளவும் அருளுடன் = அங்ஙனம் பெற்ற அருள் பேற்றால் மருள் அற = (என்) மயக்கம் நீங்க இருள் அற = அஞ்ஞானமும் நீங்க கிரண அயி(ல்) கொடு = ஒளி வீசும் வேலும் குருகு அணி கொடியொடு = கோழிக் கொடியும் விளங்க அழகு பெற = அழகாக மரகத மயில் மிசை வர = பச்சை நிற மயிலின் மீதில் வர இசைவாயே = நீ இசைந்தருளுக.

சிகர குடையில் நிரை வர இசை தெரி
சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது
திருடி அடி படு சிறியவன் நெடியவன் மது சூதன்

சிகர குடையினில் = (கோவர்த்தன) மலையாகிய குடையின் கீழே நிரை வர = பசுக் கூட்டம் வந்து சேர இசை = (குழல்) இசையை தெரி சதுரன் = காட்டிய சமர்த்தன் விதுரன் இல் வருபவ = விதுரனுடைய வீட்டுக்கு (தூதுவராக) வந்தவன் அளை அது திருடி = வெண்ணெயைத் திருடி அடி படு = அடிபட்ட சிறியவ = சிறியவன் நெடியவன் = (திரிவிக்ர ரூபம் கொண்ட) பெரியவன் மது சூதன் = மது என்ற அசுரனைக் கொன்றவன்

திகிரி வளை கதை வசி தநு உடையவன்
எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை
திமித திமி திமி என நடம் இடும் அரி மருகோனே

திகிரி = சக்கரம் வளை = சங்கு கதை = தண்டம் வசி = வாள் தநு = வில் உடையவன் = (முதலிய ஐந்து ஆயுதங்களை) உடையவன் எழிலி வடிவினன் = மேக நிறம் கொண்டவன் அரவு = (காளிங்கன் என்னும்) பாம்பின் பொன் முடி மிசை = அழகிய முடியின் மேல் திமித....என = பல ஒலிகளுடன் நடமிடும் அரி = நடனம் செய்கின்ற திருமாலின் மருகோனே = மருகனே.

பகர புகர் முக மத கரி உழை தரு
வனிதை வெருவ முன் வர அருள் புரி குக
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே

பகர(ம்) = அழகிய. புகர் முக = புள்ளியைக் கொண்ட முகத்தை உடைய. மத கரி = மதம் கொண்ட யானையாகிய (கணபதியை). உழை தரு வனிதை = மான் பெற்ற மங்கையாகிய வள்ளி. வெருவ = அஞ்சும்படி. முன் வர அருள் புரி = முன்னே வரச் செய்தருளிய. குக = குகனே. பரம குருபர = மேலானவனே, குருபரனே. இமகிரி தரு மயில் = இமவான் பயந்தருளிய மயில் பொன்ற உமையின். புதல்வோனே = மகனே.

பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய
நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ்
பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே.

பலவின் முது பழம் = பலாவின் பழுத்த பழத்தினின்று விழைவு செய்து ஒழுகிய = கனிந்து ஒழுகிய நறவு நிறை = தேன் நிறைந்த வயல் = வயல்களும் கமுகு அடர் = கமுகு மரங்களும் அடர்ந்த பொழில் திகழ் = சோலைகள் விளங்கும் பழநி மலை வரு = பழனி மலையில் எழுந்தருளி உள்ள புரவல = அரசே அமரர்கள் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.

சுருக்க உரை

மயிர்ச் சாந்தும், நறு மணமும் கொண்ட மலர்களும் நிறைந்த கூந்தலை உடைய விலை மகளிரின் கண் வலையில் பட என் தலையில் எழுதப்பட்டு, இல்லற வாழ்க்கையில் இருந்து, தாய், மனைவி, மக்கள் முதலிய சிந்தனைகள் வர, ஆசைக் கடலில் மூழ்கி இடர்ப்படும் என் துயரம் நீங்க, பிரணவப் பொருளை எனக்கு உபதேசித்து அருளவும். இரு கைகளையும் கூப்பி அரகர என்று போற்ற உன் திருவடிகளையும் தந்து அருள்க. அங்ஙனம் உன் அருள் பெற்றால், என் மயக்கம் விலகும், அஞ்ஞானம் நீங்கும். நீ கோழிக் கொடியுடன் அழகிய மயிலின் மேல் வந்தருள இசைவாயாக.

கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு பசுக் கூட்டங்கள் அங்கு வந்து சேரக் குழலை ஊதிய சமர்த்தன். விதுரனுடைய வீட்டுக்கு விரும்பிச் சென்றவன். வெண்ணெயைத் திருடிய சிறுவன். மூவுலகை அளந்த பெரியவன். சங்கு, சக்கரம், கதை, வாள், வேல் ஆகிய ஆயுதங்களை உடைய மேக வடிவினன். காளிங்கன் என்னும் பாம்பின் மீது நடமிடுபவன். இத்தகைய திருமாலின் மருகனே. வள்ளி பயப்படும்படி, கணபதியை மத யானையாக வர அழைத்த குகனே. இமவான் மகளாகிய பார்வதி பெற்ற மகனே. தேன் ஒழுகும் பலாப் பழங்களும், வயல்களும், கமுக மரங்களும் நிறைந்த சோலைகள் விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. என் முன்னே மயில் மீது வர இசைவாயாக.

விளக்கக் குறிப்புகள்

அ. குருகு = கொழி.

ஆ. விதுரனில் வருபவன்.....
   விதுரன், திருதராட்டிரன் பாண்டு இவர்களுக்குத் தம்பி. துரியோதனனிடம் தூது சென்ற
   போது கண்ணபிரான் விதுரன் வீட்டில் தங்கினார்.

இ. உழை தரு வனிதை = மான் பெற்ற வள்ளி நாயகி.
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published