F

படிப்போர்

Sunday, 9 September 2012

54. விந்ததினூறி

விந்ததி னூறி வந்தது காயம்
     வெந்தது கோடி         யினிமேலோ
விண்டிவி டாம லுன்பத மேவு
     விஞ்சையர் போல       அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
     வண்சிவ ஞான              வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
     வந்தருள் பாத            மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
     யென்கணி லாடு         தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
     ரெங்கள் சுவாமி        யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
     தன்றிரு மார்பி       லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
     கந்தசு ரேசர்                 பெருமாளே
-    திருச்செந்தூர்

பதம் பிரித்து உரை

விந்து அதின் ஊறி வந்தது காயம்
வெந்தது கோடி இனி மேலோ

விந்து அதின் ஊறி வந்த =  சுக்கிலத்தில் ஊறி வந்த  
காயம் = இந்த உடல்  வெந்தது கோடி = வெந்து போனது பல கோடி முறைகள்  இனி மேலோ =  இனி மேலாவது

விண்டு விடாமல் உன் பதம் மேவு
விஞ்சையர் போல அடியேனும்

விண்டுவிடாமல் =  உன்னை விட்டு நீங்காமல் உன் பதம் மேவு =  உனது திருவடிகளை விரும்புகின்ற விஞ்சையர் போல கற்றோர் களைப்போல்  அடியேனும் =  அடியேனாகிய நானும்.

வந்து விநாச முன் கலி தீர
வண் சிவ ஞான வடிவாகி

வந்து =  (நல்வழிக்கு) வந்து விநாச =  அழிக்கும்  முன் கலி தீர = 
பழைய வினை என்னும் கேடு தீரும்படி வண் =  வளப்பம்
பொருந்திய சிவ ஞான வடிவாகி =  சிவஞான வடிவை அடைந்து

வன் பதம் ஏறி என் களை ஆற
வந்து அருள் பாத மலர் தாராய்

வன் =  நிலையான பதம் ஏறி =  பதவியை அடைந்து என் களை =  எனது (பிறப்பு, இறப்பு என்னும்) களைப்பு ஆற =  நீங்க வந்து அருள் பாத மலர் தாராய் =  வந்து உனது திருவடி மலரைத் தந்து அருள் வாயாக.

எந்தன் உள்ளே ஏக செம் சுடராகி
என் க(ண்)ணில் ஆடு தழல் வேணி

எந்தன் உள்ளே =  என் மனத்தினுள்ளே ஏக =  ஒப்பற்ற  செம் சுடர் ஆகி =  ஒரு செஞ்சோதியாக விளங்கி  என் கண்ணில் =  என் கண்களில் ஆடும் தழல் =  பொலிந்துத் திகழும் நெருப்பு நிறமான
வேணி =  சடையை உடைய .

எந்தையர் தேடும் அன்பர் சகாயர்
எங்கள் சுவாமி அருள் பாலா

எந்தையர் =  என் தந்தையும் தேடும் அன்பர் சகாயர் =  தம்மைத் தேடும் அடியார்களுக்கு உதவுபவரும் எங்கள் சுவாமி =  எங்கள் சுவாமியுமான சிவபெரு மான் அருள் பாலா =  ஈன்ற பாலனே.

சுந்தர ஞான மென் குற மாது
தன் திரு மார்பில் அணைவோனே

சுந்தர =  அழகும் ஞானம் =  ஞானமும் மென் =  மென்மையும் உடைய குற மாது தன் =  குறப் பெண்ணாகிய வள்ளியின் திரு மாரிபில் =  அழகிய மார்பில்  அணைவோனே =  அணைபவனே.

சுந்தரமான செந்திலில் மேவு
கந்த சுரேசர் பெருமாளே.

சுந்தரமான =  அழகு வாய்ந்த  செந்திலில் = திருச் செந்தூரில் மேவும் =  வீற்றிருக்கும் கந்த =  கந்தனே  சுரேசர் (சுர ஈசர்) =  தேவேந் திரர்களுக்கு பெருமாளே =  பெருமை மிக்கவரே.

சுருக்க உரை

சுக்கிலத்தில் ஊறி எடுத்தக் கோடிக் கணக்கான உடல்கள் வெந்து போக இனி மேலாவது உன்னை விட்டு நீங்காமல், உன்னுடைய திருவடியை விரும்பும் கற்றோர்கள் போல அடியேனும் நல் வழிக்கு வந்து, பழைய வினைகள் தீரும்படி, வளப்பம் பொருந்திய சிவ ஞான வடிவை அடைந்து, என் பிறவிகள் என்னும் களைப்பு நீங்க உனது திருவடியைத் தந்து அருளுக.

என் உள்ளத்தின் உள்ளே ஒப்பற்ற செஞ்சோதியாக விளங்கி, என் கண்களில் பொலியும் உன் நெருப்பு நிறமான சடைகளை உடையவரும், என் தந்தையுமாகிய சிவபெருமான் பெற்ற பாலனே, அழகும், ஞானமும், மென்மையும் உடைய குறப் பெண்ணை அணைபவனே, அழகிய திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தனே, தேவேந்திரர்களுக்குப் பெருமாளே, என் வினைகளும் பிறவிகளும் ஒழிய உன் திருவடிகளைத் தந்தருளுக.

விளக்கக் குறிப்புகள்
விஞ்சை – வித்தை. விஞ்சையர் – வித்வான், புலவர்.
அ. என் கண்ணில் ஆடு தழல் வேணி...
(கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின்
கருமணியே மணி ஆடு பாவாய் காவாய்)......................திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை 6.47.1.
(ஆறு திரு எழுத்தும் கூறு நிலைகண்டு
நின்தாள் புகழுநர் கண்ணுட் பொலிந்தோய்)......................................................கல்லாடம் 50

ஆ. என் களை ஆற...
(எல்லாப் பிறபும் பிறந்து இளைதேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்)..............................திருவாசகம் (சிவபுராணம்)விரிவுரை குகஸ்ரீ ரசபதி

இரு கண்ணும் புருவ நடுவை இடையறாது நோக்குமேல் உலக பத நோக்கம் ஒழியும் ஒரே நோக்கும் உருவாகும். வாய்ப்பான இந்நிலை வளர வளர , நலம் துரும் வஜ்ர தம்பம் நாட்டியது போல் செவ்விய போரொளி வெள்ளம் உச்சி முதல் உள்ளங்கால் வரை நெடிதாகி கால் ஊன்றி நிற்கும். அதன் பின் ஆடாமல் அசையாமல் செயலற்று விடுகிறது ஆக்கை. அலையில்லா கடல் போல் வீசும் காற்றில்லா இடத்து விளக்கு போல் அமைதி அடைகிறது ஆன்மா.

அந்நிலையில் இதய சிற்சபையிலும்பறு நோக்கிலும் நிமல தெய்வம் நிழலாடுகின்றது. அந்த சொரூப தெய்வம் தடத்த மேனியும் தாங்குகிறது. ஆம், மாபெரும் சடையும் தீ மயம், திருமேனியே தெய்வத் தீ மயம்.அமல விமல நிமல அவரே எமது பரம பிதா என்று அறிந்து மகிழ்கின்றார் அனுபவிகள்.

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி                                                                                                                                                                           உற்று உற்று பார்க்க  ஒளி விடும் மந்திரம்                                                                                                                                                                            பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திடம்                                                                                                                                                                     சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே -  என்று  குறிப்பாக இந்த அனுபவத்தைக் கூறுகின்றார் திருமூலர்.- ஒரு செழும் சுடர் எழுந்தது. தொழும் தகையது ஆரும் அளவோ - என்று பாரதத்தில் சொரூபத்தைப் பார்த்து மகிழ்ந்தவன் தனஞ்சயன். - இடர் கெடுத்து என்னை    ஆண்டு கொண்டு  என்னுள் இருள் பிழம்பற எழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும் தூய நல் ஜோதியுள் ஜோதி  - என்கிறார் திருமாளிகைத் தேவர். தின்தாள் புகழினர் கண்ணுள் பொலிந்தோய் - என்கிறார் கல்லாடர். - கண்ணே கரு மணியே மணியாடு பாவாய் காவாய் -  என்று அலறுகிறது அப்பர் திருமறை.

மிதிலையில் உள்ள  கன்யா மாட மாளிகையின் மேல் நிமல சீதை நிற்கின்றாள். வீதி வழியே சென்ற இராகவன் நிமிர்ந்து மேற்புறம் நோக்கினான். காளையின் கண்கள் கன்னியைக் கண்டன. நங்கையின் விழிகள் நம்பியை நோக்கின. கண்ணும் கண்ணும் கலந்தன. - மருங்கில் மங்கையும் வசையில் ஐயனும் பொருந்திய இரண்டுடற்கு உயிர் ஒன்றாயினர். கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய் பிரிந்தவர்  கூடினால் பேச வேன்டுமா - என்று  ரூபாலாங்காரமாக கம்பர் குறிப்பிடும் ராம ஜானகி அனுபவத்தை ஊன்றி உணர்ந்தால் உள்புறம் விளங்கும். இதனையும் காமரசமாக்கி கதை சொல்வாரை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். பிறகு ராமன் பிரிந்து செல்லும் சூழ்நிலை பிறக்கிறது. அப்பிரிவு பொறாத பிராட்டி, - என்னுளே இருந்த போது யாவர் என்று தேர்கிலேன் கண்ணுளே இருந்த போதும் என் கொல் காண்கிலாதவே – இந்த அனுபவத்தை, எந்தனு ளேக செஞ்சுட ராகி யென்கணி லாடு  தழல்வேணி எந்தையர் எனக் கூறி இன்புறுகிறது அடியேன் இதயம்.

நான் எனும் முனைப்பு அடியவர்க்கு இல்லை. இந்நிலையில் பரமன் பிரிவு பொறாத அப்பெருமக்கள், பிரான் பிரான் என்று சிவபிரானை அகத்தும் புறத்தும் தேடி அங்கலாய்க்கின்றனர். குரலெடுத்து கூவி கூவுகின்றனர். அழைக்கும் இடமெல்லாம் வந்துஅவர்கட்கு அருள்கின்றார் அத்தர். அவரை தேடும் அன்பர் சகாயர் என்று தௌiகின்றார் மேலோர்.

சுவாமி எனும் வட சொல் அருட் செல்வர் எனும் பொருளை அறிவிக்கும் . ஆம், ஆடல் பல காட்டி அருளும் பரமரை எங்கள் சுவாமி என்று உரிமை தோன்ற உரைக்கின்றார் நல்லோர். ஏக செஞ்சுடர் ஆனார், என் கண்ணில் ஆடுகின்றார், எந்தையர், அன்பர் சகாயரான இறைவரது அருள் விழியிலிருந்து உதயமான நின்னை, எங்கள் சுவாமி அருள் பாலா என்று வீரிட்டுக் கூவி நாங்கள் விளிக்கின்றோம்.

மாதர் எனும் சொல்லிற்கு காதல் வெளியீட்டும் பெண்டிர் என்று வித்தக  யொல்காப்பியர் பொருளை விரித்தளர்.  அன்பே சிவமாக்கும்காதல் சிவத்தில் கலப்பிக்கும் , அது அருள் நூல்களின் அறிவிப்பு.

அழகு இருக்கும் அறிவு இராது,அறிவிருக்கும் அழகிராது, இந்த இரண்fடும் இருக்கும் மென்மை இராது.  இது பெண் உலக பெரும் செய்தி. குறவர் குல வள்ளி அம்மையோ சுந்தர மாது. ஞான மாது, மென்மை மாது. அவர் செந்திலின் கடர்க் கரை குகையில் அன்றும் இன்றும் அரும் தவக் கோலம் கொண்டுளர்.  அவரது அருள் மார்பை நீ அணைதல் புனித உயிரை புணர் செய்தி. அந்த அருமையை அறிந்தோம். சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி லணைவோனே என்ற குறிப்பு வெளிப்பட கூவுகின்றோமே.
செந்தில் பதியின் சுந்தரம் , சொல்லி முடிவது இல்லை . வதனாரம்பம் எனும் கடல் கரையின் அலை மந்திர நாதத்தைக் காதலித்து அதன் கரையில் சுந்தர மாதுடன் அருள் மணம் வெளிப்பட அமர்ந்த நின்னை கந்தா என்று கூறி கதறுகின்றோமே

பெரியர்க்கு எல்லாம் பெரியனாம் நின்னை, சுர ஈசர் பெருமாளே எனாமல் வேறு எப்படி அழைப்பது?. பாலனாய்மணவாளனாய், கந்தனாய், சுரேசர் பெருமாள் எனும் செல்வமே எம் கேண்மை முறையைக் கேட்டருள் பிரபோ,
இருள் நெறி ஒளி நெறி என இரு வழிகள் இருக்கின்றன. அளவிலாத தீமை செய்த ஆன்மா, மரணத்தின் பின் மனம் நொய்யும். இருள் வழியிலே செல்லும். அளவிலா துன்பங்களை நரகத்தில் அனுபவிக்கும். ஓயாது புண்ணியம் செய்த உயிர் சிறந்த ஒளி வழியில் செல்லும்.       இனிய பூத சார உடம்புள் புகுந்து அமர உலகில் புகுந்து அமர உலக இன்பத்தை அனுபவிக்கும். அதன் பின் எஞ்சிய வினைகளைஅனுபவிக்க மழை வழியே இந்நிலம் நோக்கி இறங்கும். காய் கனி தான்யாதிகளில் கலக்கும். அவைகளை உண்ணும் ஆண் உடல்களை அடைக்கலம் என்று அடையும். கடுகடுத்து அவர்களது எழு வகை தாதுக்களில் கலக்கும். பிறகு, தேக சாரமான வெண்பாலில் கலங்கும். ஊறுகாய் பாண்டத்தில் ஊறுவது போல் அவ்வெண்பாலில் ஊறி இருக்கும். வாய்த்த பக்குவத்தில் புழு உருவில் வளரும். கண்கட்கு புலனாகாத அணுவுடல் முதல் மிகப் பெரிய உடல்கள் வரை எந்த உடலிலும் ஏராளமான உயிர்கள் தங்கி இருக்கின்றன. இப்படி கோடிக்கணக்கான உயிர்களை தன்னுள் கொண்டிருக்கிறது ஒரு ஆண் உடல். இந்நிலையில் விதி காமத்தை விளைவிக்க , ஒரு மட மாதும் ஒருவனுமாகி இன்ப சுகம் தரு  அன்பு பொருந்தி உணர்வு கலந்து ஒழுகிய பெண் பால் பெண்ணின் நுண் கருவுள் நுழையும். அவ்வெண்பாலில் உள்ள பல புழுக்கள் தாய்க்கருவில் தங்க பொரு பொருத்து தமக்குள் போட்டியிடும். அவைகளில் ஒன்று மற்றவைகளை புறம் தள்ளிதான் முன்னேறி கருவுள் தங்கும். மற்ற புழுக்களுக்கு அஞ்சி அபயம் அபயம் என்று அலறும். இயற்கையின் இரக்கம் மிக்க தாய்க்கரு தன் மஞ்சள் நிறத்திலிருந்து தூய வெண் தோலை உடனே தோற்றுவித்து தன்னுள் பிற பொருட்கள் மோதி வந்து நுழையும் வழியை மூடிவிடும். இச்செயலால் மற்ற புழுக்க   ள் மடிந்துவிடும். இப்படியே எந்த உடலிலும் இடம் கிடைக்காத ஆன்மாக்கள் ஒரு கோடி. இடம் பிடித்தவை வெகு சிலவே.

அவைகளிலும் அக்ரிணைக் கருவில் ஆயிரம். உயர் திணைக்கருவில் ஒரு நூறு. உயிர் திணையிலும் நாற்பால் குலத்துள் மேற்பால் குலத்தில் நாலைந்து. கீழ்பால் குலத்தில் பெரும் பான்மை. விதி செயும் விளையாடல் பல. அவைகளை உணரும் போதே நடுங்குகிறது நம் உடல்.
கருவில் தங்கிய உயிர் வர வர வளர்ந்து குழப்பிய கொழுப்பு நீரில் குளித்து, இருண்ட அவ்விடத்தில் இடர் பட்டு, வேக வைக்கும் உதரத்  தீயில் வெந்து  கசிவு அழுக்கில் உருவான கிருமிகளால் கடியுண்டு பத்து மாதம் வரை படாத பாடு பட்டு, எட்டாம் மதியில் அங்ஙங்கள் எல்லாம் நிரம்பி உந்தி வழி மட்டார் குழல் சாய் உணவு ரசம்  மருவ முகர்ந்து முட்டா முன்ன பவ நினைப்பு நெஞ்சில் முளைப்ப  நிரையத்தின் மட்டாள்பவரின் நினைவருந்தி பாங்கு பெற இங்ஙனம் நினையும் போது இப்பிறவித் தொல்லை. பிறந்த பின் பிரானை வழிபடுவேன்,   துன்பம் தொலைவேன். எம்மான் அடி நிழலில் இன்புறுவேன் என்று ஆன்மா  எண்ணுகிறது.

பத்துத் திங்கள் பிறக்கிறது. பிரசூத வாயு தலை கீழாக்கி சேயைத் தள்ளுகிறது. இந்நிலையில் பெறுகின்ற தாயும் பிறக்கின்ற சேயும், அம்மவோ அம்மா என்று அலறித் துடித்து அலறி அழுகின்றனர். பிறக்கின்றது பிள்ளை.  போதுமடா அப்பா இந்த வாழ்வு எனும் எண்ணம் இப்போது பிறக்கிறது.

இப்படி விந்ததின் ஊறி வந்தது காயம். இதன் பின் வளர்க்கும் படலம் வளர்கிறது. வளர்ச்சியின் ஆரம்பத்தில் அறியாமையினால் வரும் இடர்கள் ஆயிரம், பள்ளிப் படிப்பில் பல தொல்லை.பருவத்தில் காமப்  பசி, மயங்கும் பருவத்தில் மணம். இது தான் சொர்க்கம் என்ற நினைவு, மனம் கெட்ட வாழ்க்கையில் மகப்பேறு. இடையில் வந்தேன் என்று நரை, திரை, மூப்பு பிணி வருகிறது. இன்னும் பல காலம் இருப்பம் என்று இட்ட திட்டங்கள் பலப் பல. அது நிறைவேறுவதற்குள் திடிரென்று ஒரு நாள் உடலிலிருந்து உயிர் ஓடி விடுகிறது. விட்ட உடனே உடலை சுட்டு விடுகின்றனர் சுற்றத்தார். யாவரும் கை விட, எவையும் கை விட, பண்ணிய புண்ணிய பாவம் மட்டும் போன உயிர்க்கு துணையாக தொடர்ந்து போகிறது புண்ணியமும் பாவமும்.  பிறகு பழைய படி நரக சொர்க்கம். அதன் பின் நிலம் நோக்கி விழுதல். ஆணில் தங்கி பெண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த பின் உடலை எரிக்கிfறார் உலகர். அட பாவமே, என்ன ஜனனம் இது???. இப்படியே தொடர்ந்து வெந்தது கோடி உடல்கள். ஓரிடத்தில் இறப்பது வேறொரிடத்தில் பிறப்பது இப்படியே விண்டு போவதும் வேறோரிடத்தில்

பிறப்பதும் யுகம் யுகமாக நிகழ்கிறதே. மட்ட ரகமான மதி இப்பரிபவத்தை மறந்து விடுகிறதே. சுவாமி அருள் பாலா, வள்ளி மணாளா, கந்தா, பெருமாளே, அடியேன் அறிஞர் பெறும் சாலோகம் சார்ந்து , அணுக்கர் பெறும் சாமீபம் கண்டு, சிவஞானப் பிழம்பாய் திருவுருவம் சிறந்து ஏற்றம் தரு சாயுடசியம் எய்தி ஓயாது இறந்து பிறந்து உற்ற களை ஒழியுமாறு வா ஐயா, திருமலர் அடி நிழல் தா ஐயா என்று வெம்பி அழுது விண்ணப்பித்த படி.
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published