F

படிப்போர்

Friday 21 September 2012

90.வரதாமணி

வரதா மணிநீ               யெனவோரில்
       வருகா தெதுதா       னதில்வாரா
திரதா திகளால்                    நவலோக
          மிடவே கரியா           மிதிலேது
சரதா மறையோ             தயன்மாலும்
         சகலா கமநூ                லறியாத
பரதே வதையாள்                தருசேயே
       பழனா புரிவாழ்         பெருமாளே.
-       90 பழநி
துதித்தால் வரும் பேறு இத்திருப்புகழில் சொல்லப்படுகிறது
 
பதம் பிரித்து உரை

வரதா மணி நீ என ஓரில்
வருகா(த)து எது தான் அதில் வராது

வரதா= வேண்டுவோர் வேண்டுகின்ற வரங்களை அளிப்பவனே மணி நீ = (கண்) மணியே என ஓரில் = என்று துதித்து ஆராய்ந்து பார்த்தால் வருகாதது எது = கை கூடாதது எது உண்டு? எது தான் அதில் வாராது = எந்தக் காரியம் தான் அங்ஙனம் துதித்தால் கை கூடாது?

இரத ஆதிகளால் நவ லோகம்
இடவே கரியா(கு)ம் இதில் ஏது

இரத ஆதிகளால் = இரசவாதம் முதலியவைகளால் நவலோகம் இடவே = ஒன்பது உலோகங்களை இட்ட கூட்டுறவால் கரியாகும் இதில் ஏது = (இறுதியில்) கரியாவதன்றி வரும் பயன் என்ன? (ஒன்றுமில்லை அல்லவா)

சரதா மறை ஓதும் அயன் மாலும்
சகல ஆகம நூல் அறியாத

சரதா = மெய்யனே மறை ஓதும் = வேதம் ஓதுகின்ற அயன் = பிரமனும் மாலும் = திருமாலும் சகல ஆகம = எல்லா ஆகமங்களும் நூல் =  மற்ற ஞான நூல்களும் அறியாத = கண்டறியாத

பர தேவதையாள் தரு சேயே
பழனா புரி வாழ் பெருமாளே.

பர தேவதையாள் = பர தேவதையாகிய பார்வதி தரு சேயே = அருளிய குழந்தையே பழனா புரி வாழ் பெருமாளே = பழனி நகரில் வாழ்கின்ற பெருமாளே.

சுருக்க உரை

வேண்டுவோர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருபவனே. கண்மணியே. உன்னைத் துதித்து, ஆராய்ந்து பார்த்தால் கை கூடாதது என்ன?  
இரசவாதம் முதலியவைகளால் நவ லோகங்களையும் இட்டு கூட்டுவதால் வரும் பயன் என்ன? ஒன்றுமில்லை.

மெய்யனே, வேதம் ஓதும் பிரமனும், திருமாலும், சகல ஆகமங்களும், ஞான நூல்களும் கண்டறியாத பர தேவதையாகிய பார்வதி அருளிய குழந்தையே, பழனி நகரில் வாழும் பெருமாளே, உன்னைத் துதித்தால் வராதது என்ன?

விளக்கக் குறிப்புகள்

அ. வருகா தெதுதா னதில் வாராது....
வருகா(த)து எது? எது தான் அதில் வராது? எனப் பிரிக்கவும்.

ஆ. ஓர்தல் = ஆராய்ந்து அறிதல்.

இ. நவ லோகங்கள்....  பொன், செம்பு, இரும்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா(கலப்பு உலோகம்) , துத்தநாகம், வெண்கலம்.

Meaning and explanations provided by Dr. C.R.  Krishnamurti,  
Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada
Compilation and Editorial additions by  Shantha and Sundararajan
  
” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published