F

படிப்போர்

Sunday 9 September 2012

53. வரியார்

வரியார் கருங்கண்                  மடமாதர்
     மகவா சைதொந்த               மதுவாகி
இருபோ துநைந்து                மெலியாதே
     இருதா ளினன்பு                தருவாயே
பரிபா லனஞ்செய்             தருள்வோனே
     பரமே சுரன்ற                னருள்பாலா 
அரிகே சவன்றன்                 மருகோனே
     அலைவா யமர்ந்த          பெருமாளே.
- 53   திருச்செந்தூர்

பதம் பிரித்து உரை

வரி ஆர் கரும் கண் மட மாதர்
மகவு ஆசை தொந்தம் அதுவாகி

வரி ஆர் =  இரேகைகள் உள்ள கரும் கண் =  கரிய கண்கள் உடைய மட மாதர் = பேதமை பெண் களிடமும்  மகவு  =  குழந்தைகளிடமும் ஆசை =  ஆசையாகிய  தொந்தம் =  பந்தத்தில் அதுவாகி =  ஆசைபட்டவனாகி

இரு போது நைந்து மெலியாதே
இரு தாளின் அன்பு தருவாயே

இரு போதும் =  இரண்டு வேளைகளிலும் நைந்து =  மனம் வருந்தி  மெலியாதே =  நான் உடல் மெலிவு அடையாமல்  இரு தாளின் அன்பு தருவாயே= உனது இரண்டு திருவடிகளின் மீது  அன்பு தருவாயே =  அன்பைத் தந்து அருளுக.

பரிபாலனச் செய்து அருள்வோனே
பரமேசுரன் தன் அருள் பாலா

பரிபாலனம் செய்து அருள்வோனே =  காத்து அளித்து அருள் வோனே பரம ஈசர் தன் அருள் பாலா=  பரம சிவன் தந்தருளிய குழந்தையே

அரி கேசவன் தன் மருகோனே
அலைவாய் அமர்ந்த பெருமாளே.

அரி கேசவன் தன் மருகோனே =  அரி கேசவனாகிய திருமாலின் மருகனே ( கேசி எனற அரக்கனை கொன்றதனால் கேசவன்) அலை வாய் =  திருச்சீரலைவாய் என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே =  வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

இரேகைகள் கொண்ட கண்களை உடைய மாதர்கள், குழந்தைகள், என்னும் பந்தத்தால் நான் அகப்பட்டவனாகி, பகல், இரவு ஆகிய இரண்டு பொழுதுகளிலும் மனம் வருந்தி உடல் மெலிந்து போகாமல், உனது இரு திருவடிகளின் மீது அன்பைத் தந்து அருளுக. உலகைக் காத்து அருள்வோனே. பரம சிவன் அருளிய குழந்தையே. திருமாலின் மருகனே.
கடல் அலைகள் மோதும் திருசீரலைவாய் என்னும் திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே, உன் தாளில் நான் இடையறாது வளரும் அன்பைத் தருவீர்.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published