F

படிப்போர்

Friday, 28 September 2012

107 தெருவினில்

தெருவினில் நடவா மடவார்
      திரண்டொ றுக்கும்                   வசையாலே
தினகர னெனவே லையிலே
       சிவந்து திக்கும்                            மதியாலே
பொருசிலை வளையா இளையா
        மதன்தொ டுக்குங்                 கணையாலே
புளகித முலையா ளலையா
        மனஞ் சலித்தும்                      விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
       யுரம்பு குத்தும்                            வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
      யுகந்து நிற்கும்                         முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
        தெரிந்து ரைக்கும்                   புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
        விலங்க விழ்க்கும்                  பெருமாளே.
-107 திருவேரகம்
பதம் பிரித்தல்

தெருவினில் நடவா மடவார்
திரண்டு ஒறுக்கும் வசையாலே

தெருவினில் நடவா= தெருவில் நடக்கும். மடவார்= மாதர்கள் திரண்டு  = ஒன்று கூடி. ஒறுக்கும் = கடிந்து பேசும். வசை யாலே = பழிப்புச் சொல்லாலும்.

தினகரன் என வேலையிலே
சிவந்து உதிக்கும்  மதியாலே

தினகரன் எனவே=சூரியன் என்று சொல்லும்படி வேலையிலே = கடலில் சிவந்து = சிவந்தநிறத்துடன் உதிக்கும் = உதிக்கின்ற மதியாலே = நிலவாலும்.

பொரு சிலை வளையா இளையா
மதன் தொடுக்கும் கணையாலே

பொரு சிலை = சண்டை செய்ய வல்ல வில்லை வளையா = வளைத்து இளையா = சோர்வு இல்லாத மதன் = மன்மதன் தொடுக்கும் = செலுத்துகின்ற. கணையாலே = மலர்ப் பாணத்தாலும்.

புளகித முலையாள் அலையா 
மனம் சலித்தும் விடலாமோ

புளகித = புளகாங்கிதம் கொள்ளும். முலையாள் = கொங் கையை உடைய (இப்பெண்) அலையா = வருந்தி மனம் சலித்தும் விடலாமோ  = மனம் சோர்வு அடையலாமோ?

ஒரு மலை இரு கூறு எழவே
உரம் புகுத்தும் வடிவேலா

ஒரு மலை = ஒப்பற்ற (கிரௌஞ்ச) மலை இரு கூறு எழவே = இரண்டு கூறுபட உரம் புகுத்தும் = (அதன்) வலிமையான பக்கத்தில் புகவிட்ட. வடிவேலா = கூரிய வேலை ஏந்தியவனே

ஒளி வளர் திருவேரகமே
உகந்து நிற்கும் முருகோனே

ஒளி வளர் = புகழ் மிகுந்து ஓங்கும் திருவேரகமே உகந்து = திரு வேரகத்தில் மகிழ்ச்சியுடன். நிற்கும் = வீற்றிருக்கும். முருகோனே = முருகனே.

அரு மறை தமிழ் நூல் அடைவே
தெரிந்து உரைக்கும் புலவோனே

அரு மறை = அரு மறையான வேதப் பொருளை தமிழ் நூல் அடைவே = தமிழ் நூல் முறையில் தெரிந்து உரைக்கும் = உணர்ந்து உரைத்த புலவனே = தமிழ்ப் புலவனே.

அரி அரி பிரமாதியர் கால் 
விலங்கு அவிழ்க்கும் பெருமாளே.

அரி = இந்திரன் அரி = திருமால் பிரமாதியர் = பிரமன் முதலா னோர் கால் விலங்கு = காலில் இடப்பட்ட விலங்கை அவிழ்க்கும் பெருமாளே = அவிழ்த்து உதவிய பெருமாளே.

சுருக்க உரை

தெருவில் நடக்கும் மாதர்கள் ஒன்று கூடிப் பேசும் பழிப்புச் சொற்களாலும், சூரியன் என்னும்படி சிவந்து உதிக்கும் சந்திரனாலும், சண்டை செய்ய வல்ல வில்லை வளைத்து மன்மதன் செலுத்தும் மலர்ப் பாணங்களாலும், புளகாங்கிதம் கொண்ட கொங்கைகளை உடைய இந்தப் பெண் மனச் சோர்வு அடையலாமோ

ஒப்பற்ற கிரௌஞ்ச மலை இரு பிளவாகும்படி வேலைச் செலுத்தியவனே, சுவாமி மலையில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் முருகோனே, அரிய வேதங்களைத் தமிழ் முறையில் சம்பந்தராக வந்து  உணர்ந்து, தேவாரப் பாடல்களாக உரைத்த புலவனே, இந்திரன், திருமால், பிரமன் ஆகியோரின் கால் விலங்கை அவிழ்க்க உதவிய பெருமாளே, இந்தப் பெண் காம நோயால் வாடி மனம் சலித்து விடாலாமோ?

இப் பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது (தலைவன், தலைவி பாவம்). 

அருமறை தமிழ்நூலடைவே...
இது இருக்க வேத சாரமாக முருகவேளின் கூறான சம்பந்தர் அருளிய தேவாரப் பாக்களைக் குறிக்கும். 

தென்னூல் சிவபத்தி
ருக்கு ஐயம் போக உரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே)            ...கந்தர் அந்தாதி  

 வேல்,  சுவாமிமலை,  வேதம்,  சம்பந்தர்,  திருமால்  பிரமன் ஏரகம்

ஞானசம்பந்தர்

திருஞான சம்பந்தர் சீர்காழியில்  சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகபிப் பிறந்தார்.  3-ம் ஆண்டில் உமையம்மையாரின் ஞனப்பால் உண்டு, பதிகள்தோறும் தோறும் சென்று பதிகம் பாடி, சைவ எழுச்சியூட்டி, திருமண நல்லூரில் திருமண நாளன்று மணமகளோடு கோவிலினுள் சென்று இறைவனுடன் கலந்தவர்.

இவர் திருநாவுக்கரசரரின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவர். திருநீல கண்ட யாழ்ப்பாணர் இவரோடு சென்று இவருடை பால்களை எல்லாம் யாழ் இசைத்தார். ஒரு முறையாவது யாழாலும் இசைக்கக முடியாத பண்ணைத் திருஞானசம்பந்தர் பாடினார். இதை உணர்ந்த திரு நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை முறிக்க முயன்ற போது இதைக் கண்ட சம்பந்தர் அதைத் தடுத்து யாழ்ப்பாணருக்கு றுதல் மொழி கூறினாராம்.  அன்றில் இருந்து இதை யாழ்முறிப்பண் என்பார்களாம். ஆனால் தற்சமயம் சிலர் நீலாம்பரி" என்பர், சிலர்  அடாணா" என்பர்.

சம்பந்தர் 16.000 பாடல்களைப் பாடினதாக வரலாறு கூறுகிறது. ஆனால் இன்று நமக்கு கிடைதிருப்பதோ 4181 பாடல்களே..
  
இவை இனிய ஓசைகளுடன் கூடிய இசைப்பாக்கள் ஆகும். யமகம். திரிபு, மொழிமாற்று, அடிமாற்று எனச் சொல்லணிகள் இப்பாக்களில் கையாளப்பட்டுள்ளன. சிவபெருமானின் உருவ அழகிலும், திருக்குணங்களிலும் ஈடுபட்டுத் தலைவி நிலையில் நின்று பாடிய பாக்கள் பலவகை. எல்லாப் பாக்களும் இனிய, எளிய சொல்லால் இன்னோசை ததும்பும் வண்ணம் அமைந்துள்ளன.  சோழ நாட்டில் சைவசமையத்தை உறுதி பெறச்செய்து பாண்டிய நாட்டை சமணர் படியில் இருந்து மீட்ட பெருமையும் சப்பந்தரையே சாரும்.  திருமுருகனின் அவதாரம் என்று அருணகிரி சுவாமிகள் பல இடங்களில் கூறியிருக்கிறார்.

பதிகம் தோறும் சிவன் இராவணன் செருக்கை அடங்கியதையும், சிவனுக்கு மாலும் அயனும் தாழ்ந்ததையும் கூறுவதோடு, சமணக் கொள்கைகளையும் சாடுகின்றார். பதிய இறுதியில் தன் பெயரை இணைத்துப்பாடி புதுமுறையினைப் புகுத்தியுள்ளார்.

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published