F

படிப்போர்

Sunday 9 September 2012

52. வந்து வந்து

வந்து வந்து முன்த வழ்ந்து
     வெஞ்சு கந்த யங்க நின்று
     மொஞ்சி மொஞ்சி யென்ற ழங்கு ழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்
     விண்ட லம்பி ளந்தெ ழுந்த
     செம்பொன் மண்ட பங்க ளும்ப  யின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்த
     ழைந்து குங்கு மந்த யங்கு
     கொங்கை வஞ்சு தஞ்ச மென்று  மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு
     பைங்க டம்பு தண்டை கொஞ்ச
     செஞ்ச தங்கை தங்கு பங்க        யங்கள்தாராய்
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
     மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
     கந்த ரம்பை செண்ப தங்கொள்   செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று
     பண்க டங்க டர்ந்த இன்சொல்
     திண்பு னம்பு குந்து கண்டி         றைஞ்சுகோவே
அந்த கன்க லங்க வந்து
     கந்த ரங்க லந்த சிந்து
     ரஞ்சி றந்து வந்த லம்பு            ரிந்தமார்பா
அம்பு னம்பு குந்த நண்பர்
     சம்பு நன்பு ரந்த ரன்த
     ரம்ப லும்பர் கும்பர் நம்பு          தம்பிரானே.
-   52  திருச்செந்தூர்

பதம் பிரித்து உரை

வந்து வந்து முன் தவழ்ந்து
வெம் சுகம் தயங்க நின்று
மொஞ்சி மொஞ்சி என்று அழும் குழந்தையோடு

வந்து வந்து = அடிக்கடி வந்து முன் தவழ்ந்து =  முன்னே தவழ்ந்து வந்து  வெம் சுகம் =  விரும்பத்தக்க இன்பம்  தயங்க = விளங்க நின்று =  நின்று  மொஞ்சி, மொஞ்சி என்று= பாச்சி பாச்சி என்று அழும் குழந்தையோடு =  அழுகின்ற குழந்தையும்

மண்டலம் குலுங்க அண்டர்
விண் தலம் பிளந்து எழுந்த
செம் பொன் மண்டபங்களும் பயின்ற வீடு

மண்டலம் குலுங்க  பூதலமே குலுங்கும்படி அண்டர் = தேவர்கள் விண் தலம் பிளந்து =  விண்ணுலகம் பிளந்து  எழுந்த = அளாவி எழுந்த செம் பொன் மண்ட பங்களும் =  செம்பொன்னாலாகிய மண்டபங்களுடன் பயின்ற வீடு =   கூடிய வீடு.                            

கொந்து அளைந்த குந்தளம்
தழைந்து குங்குமம் தயங்கு
கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம்

கொந்து அளைந்த = பூங்கொத்துக்கள் கூடிய குந்தளம் = கூந்தல் தழைத்து =   செழிப்புற்று குங்குமம் தயங்கும் குங்குமம் விளங்கும் கொங்கை=கொங்கையை உடைய வஞ்சி=வஞ்சிக் கொடி போன்ற மனைவியும் தஞ்ச மென்று=  (நமக்கு) ஆதரவு என்றிருந்த (அறிவும்) மங்கும் காலம் = மங்கு  கின்ற சமயத்தில் (இறக்கும் போது).

கொங்கு அடம்பு கொங்கு பொங்கு
பைம் கடம்பு தண்டை கொஞ்ச
செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய்

கோங்கு =  கோங்கு  அடம்பு =  அடம்பு என்னும் கொடிப்பூ கொங்கு பொங்கு = மணம் மிக்க பைங் கடம்பு =   பசிய கடம்பு தண்டை =  தண்டை கொஞ்ச = (இவைகள்) கொஞ்சுவது போல் ஒலிக்க செம் சதங்கை =  செவ்விய சதங்கை தங்கும் = தங்கும் பங்கயங்கள் = 
தாமரை போன்ற உனது திருவடி களை  தாராய் =   தந்து அருளுக.

சந்து அடர்ந்து எழுந்து சென்று அரும்பு
மந்தரம் செழும் கரும்பு
கந்தரம்பை சேண் பதம் கொள் செந்தில் வாழ்வே

சந்து =  சந்தனமரம் அடர்ந்து எழுந்த =   அடர்த்தி யாகத் தோன்றி அரும்பும் =  அரும்பு விடும்  மந்தரம் =   மந்தாரம் செழும் கரும்பு =   செழிப்புள்ள கரும்பு  கந்த ரம்பை = கிழங்கோடு கூடிய வாழை சேண் பதம் கொள் = வான் அளாவி நிற்கும் செந்தில் வாழ்வே =   திருச்செந்தூரில் வாழ்பவனே.

தண் கடம் கடந்து சென்று
பண்கள் தங்க அடர்ந்த இன் சொல்
திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே

தண் =   குளிர்ந்த கடம் கடந்து சென்று =  காட்டைக் கடந்து போய்  பண்கள் தங்கி அடர்ந்த =  பண் இசைகள் தங்கி நெருங்கியுள்ள. இன் சொல்=   இனிய சொற்களை உடைய (வள்ளியம்மை இருந்த) திண் =   திண்ணிய  புனம் புகுந்து = தினைப் புனத்தில் சென்று  கண்டு =  அவளைப் பார்த்து இறைஞ்சு கோவே =   வணங்கிய தலைவனே.

அந்தகன் கண் கலங்க வந்து
கந்தரம் கலந்த சிந்துரம்
சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா

அந்தகன் கலங்க வந்து =   யமன் (நெருங்க) அஞ்சும் படியாக வந்து கந்தரம் =  (அன்பர்களுடைய இருதய மாகிய) குகையில் கலந்த = கலந்த சிந்துரம் =  தெய்வ யானை அம்மை சிறந்து வந்து =   சிறப்புடன் வந்து  அலம் புரிந்த =   (மகிழ்ந்து) திருப்தியுடன் பொருந்தும்  மார்பா =   மார்பனே.

அம் புனம் புகுந்த நண்பர்
சம்பு நல் புரந்தரன் தரம்
பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே.

அம் =   அழகிய புனம் புகுந்த =   தினைப் புனத்தில் உன் பொருட்டுப் புகுந்த நண்பர் = உனது நண்பராகிய நாரதரும்  சம்பு =   சிவபெருமானும் நல் புரந்தரன் = நல்ல இந்திரன் தரம் பல் உம்பர் =   சிறப்புற்ற பல தேவர்களும் கும்பர் = கும்ப முனிவராகிய (அகத்தியரும்) நம்பு தம்பிரானே =  விரும்புகின்ற தனிப்பெரும் தலைவரே

சுருக்க உரை

அடிக்கடி முன்னே தவழ்ந்து வந்து இன்பம் விளங்க நின்று, முலைப் பாலுக்கு அழுகின்ற குழந்தை, பூதலம் குலுங்க, விண்ணுலகம் வரை அளாவி எழுந்த மண்டபங்கள் கூடிய வீடு, பூங்கொத்துக்கள் நிறைந்த கூந்தல், குங்குமம் விளங்கும் கொங்கையை உடைய மனைவி, தனக்கு பற்றுக் கோடாக இருந்த அறிவு இவை யாவும் மங்கும் சமயத்தில், கோங்கு, அடம்பு, கடம்பு, செவ்விய சதங்கை ஆகியவை தங்கும் தாமரைத் திருவடிகளைத் தந்து அருளுக.

சந்தனம், மந்தரம், கரும்பு, வாழை ஆகியவைகள் வான் அளாவி நிற்கும் திருச் செந்தூரில் வாழ்பவனே, காட்டைக் கடந்து சென்று, வள்ளி அம்மை இருந்த புனத்திற் சென்று, அவளைக் கண்டு வணங்கிய தலைவனே, யமன் நெருங்க அஞ்சும்படியாக அன்பர்கள் மனக் குகையில் வீற்றிருக்கும் தெய்வயானை சிறப்புடன் பொருந்தும் திருமார்பனே, தினைப் புனத்தில் உன் பொருட்டுப் புகுந்த உனது நண்பராகிய நாரதரும், சிவபெருமானும், இந்திரன் முதலான தேவர்களும், அகத்தியரும் விரும்புகின்ற தம்பிரானே. சதங்கைகள் தங்கும் உன் திருவடிகளை எனக்குத் தருவாயாக.

விளக்கக் குறிப்புகள்

அ. மொஞ்சி =  முலை. வெஞ் சுகம் =  விருப்பமாகிய இன்பம். கொங்கு =  கோங்கு. அடம்பு =  ஒருவிதக் கொடிப்பூ. கந்த அரம்பை =  கிழங்கோடு கூடிய வாழை. கந்தரம் =  (அன்பர்களுடைய இருதயமாகிய குகை).  அலம் =  திருப்தி.

ஆ. புனம் புகுந்த நண்பர் ...   =  அரண்யவாசிகளாகிய தபோதனர்கள். நாரதர் என்று இங்கு குறிக்கப்பட்டுள்ளது.
(நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார் புகல் குறமாதை)………………………......................…...திருப்புகழ் (ஏவினைநேர்)
 (சீலமு லாவிய நாரதர் வந்து உற்று
ஈதவள் வாழ்புன மாமென முந்தி)…………………..........................திருப்புகழ் (தோலொடுமூடி)
(நாலுவேத நவிற்று முறைப்பயில்
வீணை நாதனு ரைத்தவ னத்திடை
நாடி யோடிகு றத்தித னைக்கொடு)……………….....................…..திருப்புகழ் (ஆலகாலமென)

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published