சீற லசடன்வினை
காரன் முறைமையிலி
தீமை புரிகபடி பவநோயே
தேடு பரிசிகன
நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி எவரோடுங்
கூறு மொழியதுபொய்
யான கொடுமையுள
கோள னறிவிலியு னடிபேணாக்
கூள னெனினுமெனை
நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் புரிவாயே
மாறு படுமவுணர்
மாள அமர்பொருது
வாகை யுளமவுலி புனைவோனே
மாக முகடதிரவீசு
சிறைமயிலை
வாசி யெனவுடைய முருகோனே
வீறு கலிசைவரு
சேவ கனதிதய
மேவு மொருபெருமை யுடையோனே
வீரை யுறைகுமர
தீர தரபழநி
வேல இமையவர்கள் பெருமாளே.
-73
பழநி
பதம்
பிரித்து உரை
சீறல் அசடன் வினைகாரன் முறைமை இலி
தீமை புரி கபடி பவ நோயே
சீறல் அசடன் = சீறுகின்ற சினம் உடைய மூடன் வினை
காரன்
= தீ வினைகளைப்
புரிபவன் கபடி = பாவங்களைச் செய்கின்ற வஞ்சகன் பவ
நோயே தேடு பரிசி
= பிறவி
நோயையே தேடுகின்ற தன்மை உடையவன்.
தேடு பரிசி கன(ம்) நீதி நெறி முறைமை
சீர்மை சிறிதும் இலி எவரோடும்
கன(ம்) நீதி நெறி முறைமை சீர்மை = பெருமை, நீதி, நன்னெறி, நேர்மை, சிறப்பு (இவை யாவும்)
சிறிதும்
இலி
= சிறிதேனும்
இல்லாதவன் எவரோடும் = எவரோடும்.
கூறு மொழியது பொய்யான கொடுமை உள
கோளன் அறிவு இலி உ(ன்)னடி பேணா
கூறு மொழியது = பேசும் பேச்சில் பொய்யான கொடுமை உள கோளன்
=
பொய் என்ற கொடுமையைக் கொண்ட தீயவன் அறிவு
இலி
= அறிவில்லாதவன்
உன்
அடி பேணா = உன்
திருவடியைப் போற்றாத.
கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு
கூடும் வகைமை அருள் புரிவாயே
கூளன் = குப்பை போன்றவன் எனினும் = இருந்த போதிலும் எனை நீ உன் அடியாரொடு
= என்னை நீ
பொருட்படுத்தி உன் அடியார் கூட்டத்துடன் கூடும் வகைமை = கூட்டி வைக்கும் வழியை
அருள்
புரிவாயே = எனக்கு
அருள் புரிவாயாக.
மாறு படும் அவுணர் மாள அமர் பொருது
வாகை உள மவுலி புனைவோனே
மாறு படும் அவுணர் = எதிர்த்து வரும் அசுரர்கள் மாள
= இறக்கும்படி அமர் பொருது = போர் செய்து வாகை உள மவுலி புனைவோனே= வெற்றியுடன் கூடிய மகுடத்தைத் தரித்தவரே.
மாக முகுடு அதிர வீசு சிறை மயிலை
வாசி என உடைய முருகோனே
மாகம் முகடு = ஆகாயத்தின் உச்சி அதிர = அதிரும்படி. வீசு சிறை = இறக்கைகளை வீசிப் பறக்கும் மயிலை = மயிலை வாசி என உடைய = குதிரையாக உடைய முருகோனே = முருகனே.
வீறு கலிசை வரு சேவகனது இதய
மேவும் ஒரு பெருமை உடையோனே
வீறு = பெருமை மிகுந்த கலிசை வரு = கலிசை என்னும் ஊரில் வாழ்ந்த
சேவகனது
இதய மேவும்
= சேவக(வீர)
னாகிய மன்னனுடைய உள்ளக் கோயிலில் வீற்றிருக்கும் ஒரு
பெருமை உடையோனே
= ஒப்பற்ற
பெருமை உடையவனே.
வீரை உறை குமர தீரதர பழநி
வேல இமையவர்கள் பெருமாளே.
வீரை உறை குமர = வீரை என்ற திருத்தலத்தில் வாழ்கின்ற குமார சுவாமியே தீரதர = மனத் துணிவு உடையவனே பழநி வேல = பழனி வேலனே இமையவர்கள் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.
சுருக்க
உரை
பெருங் கோபம் உடைய அசடன், தீ வினை புரிபவன்,
ஒழுக்கம் இல்லாதவன், பிறவியாகிய நோயைத் தேடுபவன், நீதி, நெறி, நேர்மை, சிறப்பு இவை
சிறிதேனும் இல்லாதவன், உன் திருவடியைப் போற்றாத தீயோன், அறிவிலி, பயனற்றவன் என்று நான்
பல தீக்குணங்கள் படைத்தவனாக இருந்த போதிலும், உன் அடியார் கூட்டத்துடன் என்னைச் சேர்த்து
வைக்கும் வழியை அருள் புரிவாயாக.
போருக்கு எதிர்த்து வந்த அசுரர்கள் மாள
சண்டை செய்து வெற்றி முடி சூட்டியவனே. ஆகாயம் வரை அதிரும்படி, இறக்கையை வீசம் மயிலைக்
குதிரையாகக் கொண்டவனே, கலிசை என்னும்
ஊர் மன்னனின் மனக் கோயிலில் வீற்றிருக்கும் பெருமை உடையவனே,
வீரை
நகர் என்னும் தலத்தில் உறையும் குமரனே, பழநி வேலனே, தேவர்கள் பெருமாளே, என்னை உன் அடியார்களோடு கூட்டி வைக்க
அருள் புரிவாயாக.
விளக்கக்
குறிப்புகள்
அ.
வீரை உறை குமர....
வீரையூர்
என்னும் தலம் திருப்பெருந்துறைக்கு மேற்கே, பார்த்திபனூருக்கு அருகே உள்ளது
ஆ.
கலிசை வரு சேவகன்....
மனிதர்களைப்
புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடப் பட்ட மூவர் கலிசைச்
சேவகனார், (சீயுதிரமெங்கு, சீறலசடன் ,தோகைமயிலேக, கோல மதி வதனம், இருகனக மாமேரு
), பிரபுட தேவராஜன் (அதல சேடனாராட) , சோமநாதன் (ஒருவழிப்படாது).
இ.
சீறல் அசடன்.... தன்னையே தலை மகனாகப் பாவித்தல்.
ஈ.
எனினும் எனை நீ உன் அடியரொடு....
·
துரும்பனேன்
என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டு கண்டாய்.................................................... தாயுமானவர்
சுகவாரி
·
அடியார்வாழ்
சபையின் ஏற்றியின் ஞானபோதமும்
அருளி ஆட்கொள்ளும்).............................................................திருப்புகழ், நிருதரார்க்கொரு
இவ்வேண்டுகோள் அருணகிரியாருக்குப் பலித்தது.
போதமிலேனை
அன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா..............................கந்தர் அலங்காரம்

No comments:
Post a Comment
Your comments needs approval before being published